ஞாயிறு, 11 மார்ச், 2018

மதுரை மண்டல கள்ளர் நாடுகள்

மதுரை கள்ளர் நாடுகள்

பாண்டிய மண்டலம்

மதுரை மேற்கு மண்டலம்


  • திடியன் நாடு
  • வாலாந்தூர் நாடு
  • புத்தூர் நாடு
  • கருமாத்தூர் நாடு
  • பாப்பாபட்டி நாடு
  • கொக்குளம் நாடு
  • வேப்பனூத்து நாடு
  • தும்மக்குண்டு நாடு
  • கீழக்குடி நாடு ((ஐயா வெங்கடசாமி நாட்டாரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)
  • சேது நாடு(மதுரை மேற்கில் உள்ளது, ஐயா வெங்கடசாமி நாட்டாரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது))
  • கற்பக நாடு (ஐயா வெங்கடசாமி நாட்டாரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)


மதுரை கிழக்கு மண்டலம்






நடுவிநாடு அல்லது பழைய நாடு 




கள்ளர் நாடுகளின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இது நடு நாடு அல்லது நடுவிநாடு என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து வந்த கள்ளர்கள் முதன் முதலில் குடியேறி உருவாகிய நாடு என்பதனால் இது பழைய நாடு எனவும் அழைக்கப்படுகின்றது.

இக்கள்ளர்நாடு பூர்வீகமாக 18 பட்டிகளை உள்ளடக்கியது.

அவை

1.மேலூர்
2.சொக்கம்பட்டி
3.மலயம்பட்டி
4.கட்டகன்பட்டி
5.ஒத்தவீடு
6.மேலத்தெரு
7.நடுவளவு
8.புதுசிக்காம்பட்டி
9.பழைய சிக்காம்பட்டி
10.பல்லவராயன்பட்டி

இதில் மேலூர் இந்நாட்டின் தலைமை கிராமமாகும் . இந்த பூர்வீக 18 பட்டிகள் இன்று பல கிராமங்களாக பெருகி உள்ளன.

இவர்கள் மத்தியில் தந்தை வழியில் 12 கரைகள் உள்ளன. இந்த 12 கரைகளும் ஏழுகரை , ஐந்து கரை என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை

1.சொக்கன் கரை
2.சேராப்புலிகரை
3.வலங்கைகரை
4.வீராச்சிகரை
5.கள்ளன்கரை
6.வெள்ளப்பரப்பயா கரை
7.வழுக்கன்கரை,

என ஏழுகரைகள் உள்ளது.

இதில் சொக்கன் கரை தலைமை கரையாகும். இந்த ஏழு அம்பலக்காரர் தலைமைக்கரையான சொக்கன் கரையிலிருந்து தேர்வு செய்யப்படுவார்.

இளமன்கரை,
வெள்ளநாதன்கரை,
ஓஞ்சிகரை,
வன்னியன்கரை,
கண்ணம்பட்டியான்கரை 

என ஐந்து கரைகள் ஒரு தொகுதியாக உள்ளது.

இதில் இளமன்கரை தலைமை கரையாகும்.இந்த ஐந்து கரைக்கும் ஒருபெரிய அம்பலக்காரர் இளமன் கரையிலிருந்து தெரிவு செய்யப்படுகின்றார்.

மேலூர் நகரத்தில் உள்ள காஞ்சிவனம் கோயில் இந்நாட்டின் பொதுக்கோவிலாகும்.இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதம்  குதிரை எடுப்புவிழா நடத்தப்படுகின்றது.

நாவினிப்பட்டி , சூரக்குண்டு, ஆட்டுக்குளம்,எட்டிமங்கலம் போன்றவை நடுவிநாட்டோடு சேர்ந்திருந்தன.சில முரண்பாட்டால் அவர்கள் பிரிந்துசென்றுவிட்டனர்.
ஆனால் இன்றும் அவர்கள் காஞ்சிவனம் கோவிலுக்கு வந்து சாமிகும்பிட்டு செல்கின்றனர்.

ஆய்வு : திரு . பரத் கூழாக்கியார்



நாட்டார்மங்கலம்




(நாட்டாமங்கலம் ஆதி சிவன் கோவில் )

வேடர் பயன் படுத்திய குளத்தை நாட்டார் (கள்ளர்) கைபற்றியதால் அந்த இடத்திற்கு நாட்டார் குளம் எனும் பெயர் அதுவே மருவி நாட்டாமங்கலம் என்றும் நாட்டாமங்கலத்துகாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் இன்று நாட்டாமங்கலம்

1.உலகாத்தேவர்
2.உண்டாந்தேவர்
3.ஒச்சாத்தேவர் எனும் மூன்று (கொத்து) பங்காளிகளாக உள்ளனர்.

இவர்களது பூர்வீகம் மதுரை கிழக்கு பகுதியில் திருவாதவூர் அருகில் உள்ள கொட்டகுடி எனும் பகுதியாகும்.

இவர்களது முன்னோர் மேலூர் அருகில் உள்ள வெள்ளரிபட்டியில் திருமண செய்து இன்றை நாட்டாமங்கலம் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

அங்கு ஏற்கனவே அந்த பகுதியில் பூர்வீகமா வாழ்ந்து வந்த வேட்டுவர்கள் புதிதாக குடியேறிய கள்ளர்களுக்கு தொந்தரவு செய்து பலவிதமான தொல்லைகள் கொடுத்தும் வந்தனர்.

நாட்டார்மங்கலம் பங்காளிகளும் ஊர்களும்

உலகாத்தேவர் (மூத்தவர்)

மக்கள்

1.கணக்கத்தேவர்
2.சின்னாண்டித்தேவர்
3.மொட்டையாண்டித்தேவர்

உண்டாத்தேவர்(இளையவர்)

மக்கள்

1.பெரியாண்டித்தேவர்
2.ஏரமாயத்தேவர்
3.நல்லாண்டித்தேவர்
4.சக்கரைத்தேவர்

1.பெரியவாகைகுளம்
2.சின்ன வாகைகுளம்
3.பெருங்காமநல்லூர்
4.நாட்டாமங்கலம்
5.அய்யம்பட்டி
6.சக்கரைபட்டி
7.நாகாலாபுரம்


வேட்டுவர்கள் பயன்படுத்திய குளத்தில் கள்ளர் வீட்டு பெண்கள் மண்பானையால் தண்ணீர் எடுக்கச்சென்றால் மரத்தின் மறைவில் இருந்து கவங்கல்கொண்டு பானைகளை ஓட்டை விழும்படி செய்து விடுவர் வேட்டுவர்கள்.

நடந்ததை தன் கணவனிடம் சொல்லாமல் ஓட்டை விழுந்த பானைகளை தனது வீட்டின் பின்புரத்தில் அடுக்கிவைத்துவிடுவாள்.
ஒரு சமயம் தனது மகளை காண வெள்ளிரிபட்டியில் இருந்து நாட்டாமங்கலம் வந்த தனது அப்பனிடம் நடந்ததை சொல்லி வருந்தி அழுதாள் தனது மகளின் நிலைமைக்கண்டு கொதித்து போன தந்தை தனது மகளை அழைத்து இங்கு உங்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு வாசலில் மட்டும் வேப்ங்கொழையை சொருகி வையம்மா நான் நம் ஆட்களை திரட்டி வருகிறேன் என்று கூறி வெள்ளரிபட்டி விரைந்தார்.

அங்கு தனது பங்காளிகளிடம் தனது மகளின் நிலமை சொல்லி வருந்தினார். அவரது உறவினர்கள் அவரை சமாதான செய்து படைதிரட்டி நாட்டாமங்கலம் விரைந்தனர்.

தனது அப்பன் கூறியவாரு தங்களுக்கு தொல்லை கொடுக்காத வீடுகளான வண்ணார்,நாவிதர்,பறையர் வீட்டு வாசலில் நடு இரவில் வேப்பங்கொழையை சொருகிவைத்தால்.

நாட்டாமங்கலம் வந்த கள்ளர் படை இரவு விடிவதற்குல் வேப்பங்கொழை சொருகாத வீடுகளில் உள்ள அனைத்து உயிர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டு துறத்தப்பட்டனர்.

வேட்டுவர் பயன்படுத்திய குளத்தை நாட்டார் மீட்டிக்கொடுத்ததால்தான் அவ்வூர்க்கு (நாட்டார்குளம்) நாட்டாமங்கலம் எனும் பெயர்.

இன்றும் அந்த குளம் நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயில் எதிரில் உள்ளது.







வாலாந்தூர் நாடு




நாட்டின் பெரிய தேவர் சின்னிவீரத் தேவர்


வாலாந்தூர் நாட்டினர் இரண்டு தாய் மக்கள் ஐந்து தேவர்கள் ஆவார்கள்.

இவர்களின் தகப்பன் பெயர் பேயபிள்ளை என்ற சடபுலித் தேவர்.இவரது மணைவிக்கு அதாவது மூத்த தாரத்திற்கு பிள்ளை இல்லை இவள் கீழ உரப்பனூர் திருமலை பின்னத்தேவர் வீட்டில் பிறந்தவள்.

இரண்டாவது தாரம் கருமாத்தூர் ஆறு பங்காளிகளில் மதயானை தேவருடன் உடன் பிறந்த சகோதிரி ஆவாள் இவளுக்கு பிறந்தவர்கள்.

1.அங்கயற்கண்ணி-சக்கரைபட்டி
2.மொந்தகுட்டி தேவர் -சங்கம்பட்டி, மணல்பட்டி
3.கட்டகிடாய்த் தேவர் - சொக்கத்தேவன்பட்டி
4.வெள்ளையாண்டி தேவர்-ச.குளம்

இவர்கள் நான்குபேர் பிறந்த பின்னர்தான் மூத்த தாரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவனே சின்னிவீரத்தேவர் இவர் மேல உள்ள நான்குபேருக்கும் இளைவர் ஆனாலும் மூத்த தாரத்திற்கு பிறந்ததால் நாட்டின் பெரிய தேவர் பட்டம் இவருக்குதான் கிடைத்தது இவரது தாய்மாமனான கீழஉரப்பனூர் பின்னத்தேவர் வீட்டிலேயே திருமணம் செய்தார் அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன அதில் மூத்தவனுக்கு அவனது அப்பன் பெயரையே வைத்தார்கள் அவர்கள்.

1.சின்னிவீரத்தேவர்-ஆரியபட்டி
2.சின்னக்காம தேவர்-கன்னியம்பட்டி.

இவர்களின் பொது குலக்கோயில் வாலாந்தூர் அங்காள ஈஷ்வரி கோயிலாகும் மேலும் இவர்களுக்கு தனித்தனி கோயிலும் உள்ளது.








கருமாத்தூர் நாடு கரிசல்பட்டி ஆறுபங்காளிகளில் ஆண்டரச்சான் கூட்டத்தை சேர்ந்த சப்பானி ஒச்சாத்தேவர் மகள் ஆண்டாயின்(சீதனம்) ஆபரணபெட்டியை உசிலம்பட்டி ஐந்து பூசாரிமக்கள்  பாப்பாட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சிகிழவி ஆண்டாயி திருக்கோயிலுக்கு அருளாடிகொண்டு தூக்கி செல்லும் காட்சி


வாலாந்தூர் நாடு கோவில்கள்

1.வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவில்










2.ஆரியப்பட்டி கல்யாணகருப்பு கோவில்

வாலாந்தூர் முதல்நாடு சின்னிவீரத்தேவருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கலியாணகருப்பு சாமி கோவில்


































3.ஆ.இராமநாதபுரம் கல்யாணகருப்பு கோவில்










4.சங்கம்பட்டி அங்காள ஈஸ்வரி கோவில்

மொந்தகுட்டித்தேவர் மக்கள் இரண்டு பங்காளிகளின் கோவில்



.


5.சொக்கத்தேவன்பட்டி அய்யனார் கோவில்

6.சக்கிலியங்குளம் பெத்தனசாமி கோவில்

7.கன்னியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில்



வாலாந்தூர் நாட்டைச் சார்ந்த ஆ. கன்னியம்பட்டி சின்னகாமத்தேவருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன்










திடியன் நாடு





பிறமலை நாட்டில் முதன் முதலில் நாடு உருவாக்கிய ஆதி துங்கதேவர். (முதல் நாடு திடியன் தாமரை யூரனி)



திடியன் நாடு கோவில்கள்


1.திடியன் கைலாசநாதர் கோவில்

2.திடியன் மலைராமன் கோவில்
3.திடியன் சோணை கருப்பு கோவில்
4.திடியன் வாலகுருநாதன் கோவில்
5.திடியன் தென்கரை முத்தையா கோவில்
6.உச்சப்பட்டி பதினெட்டான் கருப்பு கோவில்
7.உச்சப்பட்டி தென்கரை முத்தையா கோவில்
8.வலங்காங்குளம் அழகர் கோவில்
9.வலங்காங்குளம் கண்ணாத்தாள் கோவில்
10.வலங்காங்குளம் அரிகுரும்பன் கோவில்
11.மேலசெம்பட்டி கருப்பு கோவில்



புத்தூர் நாடு



புத்தூர் நாட்டின் தலைவர் : முதல் கரை துரை வெள்ளைபின்னத்தேவர்


புத்தூர் நாடு கோவில்கள்

1.புத்தூர் வாலகுருநாதன் கோவில்

2.நல்லுத்தேவன்பட்டி துர்க்கையம்மன் கோவில்

3.நல்லுத்தேவன்பட்டி பூங்குடி அய்யன் கோவில்





















நன்றி : படங்கள் - திரு. கருப்பு தேவன் 

4.புத்தூர் பாலகருப்பு கோவில்

5.வடுகப்பட்டி கருப்பு கோவில்

6.கவணம்பட்டி வீரா கோவில்

7.உசிலம்பட்டி சின்ன கருப்பசாமி






கருமாத்தூர் நாடு





கருமாத்தூர் நாட்டின் மன்னன் மதயானை மணிமுடியான் சின்னுடையான் இவர்களின் கீர்த்தி பெற்ற கருமாத்தூர் நாட்டின் தலைவன் பெரியகுரும்பத்தேவர்


பிறமலை கள்ளர் நாட்டின் கோயில் நகரமான கருமாத்தூர் நாட்டின் ஆறு பெரிய தேவர்கள் கருமாத்தூர் நாட்டின் பூர்வீக வம்சாவளினர்கள். ஆறு பங்காளிகள் வகையரா, ஐந்து தாய் மக்கள் வகையரா எனப்படும் இந்த இரண்டு வகையராக்களும் பூர்வீக மாமன் மைத்துனர் ஆவார்கள்.

ஆறு பங்காளிகள் வகையராக்கள்:



(திருத்தலத்தின் புகைபடம் -1948 எடுத்தது. நன்றி -லூயிஸ் டூமண்ட்)

பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்காள ஐயன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் மண்ணுலகாத் தேவர் மக்கள் ஆறு தேவர்கள்.

1.மன்னர் மதயானைத் தேவர்
2.மனிமுடியான் சின்னுடையாத் தேவர்
3.கொல்லி கருப்பத் தேவர்
4.கட்ராண்டித் தேவர்
5.மதயானை மகன் ஆண்டரசத் தேவர்
6.சின்னுடையான் மகன் புலித் தேவர்

ஐந்து தாய் மக்கள் வகையராக்கள்:-

கடசாரி நல்ல குரும்ப ஐயனை குல தெய்வமாக வணங்கும் நான்கு தேவர்கள்.

1.உடையான் குரும்பத் தேவர்
2.ஒய்யான் குரும்பத் தேவர்
3.பெரிய குரும்பத் தேவர்
4.பேக்காத்தி குரும்பத் தேவர்

கோட்டமந்தை கொத்தாள பெரிய கருப்பு கோயிலை குலக்கோயிலாக வணங்கும் விண்ணுலகாத்தேவர் இரண்டு மனைவி மக்கள் இரண்டு தேவர்கள்.

1.பருசபுலித் தேவார்
2.கேசத் தேவர்

காக்கும் வீரக்கருப்பு கோயிலை குலக்கோயிலை வணங்கும் இரணிய சோழத்தேவர் மக்கள் ஏழு தேவர்கள்

1.மங்காகழுவத் தேவர்
2.வெள்ளிக்கருப்பத் தேவர்
3.குள்ளக்கருப்பத் தேவர்
4.பேயக்கருப்பத் தேவர்
5.கோராண்டித் தேவர்
(இரண்டு பங்காளிகள் வாரிசுகள் இல்லை)

பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மனை கோயிலை சீதனக்கோயிலாக தாய்வழியில் பெற்று குலக்கோயிலாக வணங்கும் தடியத் தேவர் மக்கள் இரண்டு தேவர்கள்.

1.பெரிய தடியத்தேவர்


2. சின்ன தடியத்தேவர்



கருமாத்தூர் நாடு கோவில்


1.கருமாத்தூர் கழுவநாதன் கோவில்







2.கருமாத்தூர் ஆங்காள அய்யன் ஒச்சாண்டம்மன் கோவில்

3.கருமாத்தூர் கடசாரி நல்ல குரும்பன் கோவில்






4.கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பு கோவில்
5.கருமாத்தூர் விருமன்-பேச்சி கோவில்
6.கருமாத்தூர் காக்குவீரன் கோவில்
7.கருமத்தூர் நல்லமாயன் கோவில்
8.க.செட்டிகுளம் ஒச்சாண்டம்மன் கோவில்
9.க.செட்டிகுளம் கொடிப்புலி கருப்பு கோவில்
10.எழுவம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
11.கருமாத்தூர் ஒய்யண்டம்மன் கோவில்



பாப்பாபட்டி நாடு



கள்ளர் நாட்டின் சிறந்த சிலம்பாட்டம்,ஒயிலாட்ட வீரரும் பாப்பாபட்டி நாட்டின் தலைவரும் பகாத்தேவர்

1.பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்






















கொக்குளம் நாடு




நாட்டின் தலைவர் ஆறுகரை வெரியத்தேவர்

கொக்குளம் நாடு கோயில்கள்


1.கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோவில்
2.கொக்குளம் ஆதி சிவன் கோவில் (உசிலை ரோட்டின் வலதுபுறம்)
3.கொக்குளம் ஆதிசிவன் கோவில் (உசிலை ரோட்டின் இடதுபுறம்)
4.கொக்குளம் ஆதிசிவன் கோவில்
5.கொக்குளம் காமாட்சி அம்மன் கோவில்
6.தேன்கல்பட்டி மாயன் கோவில்


வேப்பனூத்து கள்ளப்பட்டி நாடு



நாட்டின் தலைவர் திருமலை நாயக்கரால் எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பன்ன உரிமைபெற்ற உரப்பனூர் திருமலை பின்னத்தேவரின் மகன் ஆதிவெள்ளைபின்னத்தேவர்.


வேப்பனூத்து கள்ளப்பட்டி நாடு கோவில்கள்

1.கள்ளப்பட்டி புன்னூர் அய்யன் கோவில்
2.கள்ளப்பட்டி வெண்டி முத்தையா கோவில்



தும்மக்குண்டு நாடு






கள்ளர் நாட்டின் புகழ்பெற்ற சல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் ஒன்றான சிந்துபட்டி கிராமத்தை உள்ளடக்கிய தும்மக்குண்டு நாட்டின் ஆதி தலைவர் சின்னாங்கி உடையாத்தேவர்.


தும்மக்குண்டு உடையான்பட்டி கொத்தாள பெரியகருப்பத்தேவர் மகன் எழுவம்பட்டி நல்ல கருப்பத்தேவர் இவர்தான் புறமலை நாட்டின் தட்டணை சட்டத்தை(எழுவம்பட்டி ஏட்டு சட்டம்)190 வருடங்களுக்கு முன்பு தொகுத்து தீராத வழக்குகளை தீர்த்து வைத்தவர் இவர்க்கு நான்கு மகன்கள் அவர்கள்

சந்தனகருப்பத்தேவர்
நாராயணத்தேவர்
அருணச்சலத்தேவர்
முத்துபாண்டித்தேவர்.


தும்மக்குண்டு நாடு கோவில்கள்

வைரவன்(பைரவர்) கோயில்


இது தாய்வழி சீதன கோயில் இக்கோயிலின் கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது.


கருமாத்தூர் கரிசல்பட்டி ஆறுபங்காளியை சேர்ந்த சின்னுடையாத்தேவர் மகனும் தும்மக்குண்டு நாட்டின் பெரிய தேவரான சின்னாங்கி உடையாத்தேவரின் மனைவியும் ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்ததேவர் மகளுமான மகமாயிக்கு சித்தாழையில் இருந்து தும்மகுண்டுக்கு துணைக்கு வந்ததால் அவர்களது வாரிசுகள் மூன்று தேவர்களுக்கும் தாய்க்கு காவலாக வந்த வைரவ(பைரவன்)னுக்கு தனிக்கோயில் கட்டி அதனை மூன்றுபேரும் பொதுக்கோயிலாக வணங்கிவருகின்றனர்.













2.உடையான்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்



3.தும்மக்குண்டு ஒச்சாண்டம்மன் கோவில்



தும்மக்குண்டு மூணுசாமி ஒச்சாண்டம்மன் கோவில் பெரியபூசாரி அ.தெய்வம் பூசாரி 

3.கரிசல்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
4.பழனிப்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
5.பிச்சம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
6.எஸ்.போத்தம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
7.கேத்துவார்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்

ஆறு தேவர்களின் பூர்வீக சம்பந்தக்காரர்களிள் ஒருவர் சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோவிலை வணங்கும் சுந்தத்தேவர் கூட்டமும் , கட்டவைரத்தேவர் கூட்டமும் ஆவர்.









கொக்குளம் நாடு எருதுகட்டு திருவிழா 

புற(பிற)மலைநாட்டின் ஆரூர்க்காரர்கள் என்று அழைக்கப்படு கொக்குளம் ஆறுகரை தேவர்களும் அவர்களது அக்கா மக்கள் என்று அழைக்கப்படும் பன்னியான்(பனியான்) மேலத்தெரு, கீழத்தெரு பங்காளிகளும் கலந்து கொண்டு வெற்றிலை மாற்றி எருதுகட்டு விழா தொடங்கப்பட்ட நிகழ்வுகள்.


















எருதுகட்டு - மண் எடுக்க போகுதல் 



















23 ஆண்டுகளுக்குப் பின் நடந்த
ஆ.கொக்குளம் கள்ளர் நாட்டு
எருதுகட்டுத் திருவிழா...! 
இடம்: பாறைப்பட்டி
























































நன்றி : 

உயர்திரு. ராஜேஷ் வல்லாளதேவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை 

உயர்திரு . நிவி நித்தி

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்