வெள்ளி, 30 மார்ச், 2018

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆர். வி. சுவாமிநாதன்


சிவகங்கை மாவட்டம், தென்பாண்டி சிங்கம் "வாளுக்குவேலி அம்பலகாரரின் வாள்கோட்டை நாட்டில் வரலாற்றுப் புகழ் கொண்ட பாகனேரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வெள்ளையப்பத் தேவருக்கும், முனியாயி அம்மாளுக்கு 1910, ஆகஸ்ட் 5 இல் மகனாக ஆர்.வி.சுவாமிநாதன் பிறந்தார்.


சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னுடைய 19ஆம் வயதிலேயே தன்னை முழு மூச்சுடன் இணைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய உண்மையான உழைப்பாலும், நேர்மையாலும் காங்கிரஸ் தொண்டராக இருந்து படிப்படியாக உள்ளூர் காங்கிரஸ் கமிட்டி முதல், தாலுகா கமிட்டி, மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி என்று பதவி உயர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் விவசாயத்துறை துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் திறமையாகப் பணிபுரிந்து, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருடைய அன்பை பெற்றவர்.


1934  காந்தியடிகள் பாகனேரிக்கு வருகைதந்து  ஆர். வி. சுவாமிநாதன் விருந்தினராக தங்கி சிவகங்கையில் கோகலேஹால் முன் கூட்டத்தில் சொற்பொழிவு நடத்தினர். இவரின் பாகனேரி இல்லத்திற்கு காந்தியடிகள்-1941ல் வருகைபுரிந்தது தனிச்சிறப்பு.


சிவகங்கைதனி மாவட்டமாக சிவகங்கை 1985ல் உருவாக்கப்பட்டது. ஆனால், சிவகங்கை சட்டமன்ற தொகுதி 1952ம் ஆண்டிலிருந்தே தேர்தலை சந்தித்து வருகிறது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணமாக இருந்த போது 1952ல் நடந்த முதல் தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டு தேர்தலில் ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றிபெற்று சிவகங்கை தொகுதியை மீண்டும் கைப்பற்றினார்.


மேலும் 1971, 1977 இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1980 சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்தும் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவராக இருந்து திறம்படசெயல்பட்டவர்.

1961ஆம் ஆண்டு தமிழக முதல்வர் பதவிக்குப்போட்டியிட்டு திரு.பக்தவச்சலம் அவர்களிடம் சொற்பவாக்கில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். 1980ஆம் ஆண்டில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய விவசாய இணைஅமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆர்.வி.சுவாமிநாதன் சிவகங்கையில் காங்கிரஸை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருந்தார்.

1959-ம் வருடம் ஏப்ரல் 15-ல் நேருஜியும் வந்தார். ஆர். வி. சுவாமிநாதனால்  குன்றக்குடியில் மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குற்றப் பரம்பரை கொடுமையான சட்டத்தை நீக்குவதற்காக 1947-48  குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிப்பேசியவர்.  

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்தபோதோ, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கிடைக்காத பெயரும், புகழும், விளம்பரமும் இவர் செய்த ஒரு வீரதீர சாகசத்தினால் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. திறந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திரா காந்திமீது கல்லும், தடிகளும் வீசப்பட்டன. கும்பல் அருகில் வந்து தாக்கவும் தொடங்கினர். அவர் இருந்த ஜீப் மீது கற்கள் விழுந்து கொண்டிருந்தன. அப்பொது அருகில் இருந்த ஆர்.வி.சுவாமி நாதனும், மதுரை நெடுமாறனும், இந்திரா காந்திமீது கற்கள் விழாமலும், அவர் அடிபடாமலும் அவருக்குக் கேடயமாக இருந்து காப்பாற்றினார்கள். அந்த செய்தி மறு நாள் செய்தித் தாள்களில் வந்தபோது ஆர்.வி.சுவாமி நாதனுக்கு அதுவரை கிடைக்காத பெயரும், புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன.

இந்திய பாராளுமன்ற குழுவோடு இவர் நியுசிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, கொரியா, பிலிப்பனிஸ் போன்ற நாடுகளுக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகள் எனப்படும் டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அகில உலக விவசாய மானாட்டுக்காகவும் இவர் வெளினாடு பயணம் செய்திருக்கிறார்.

ஆர்.வி.சுவாமி நாதன். அரசியலில் நுழைந்த நாள் முதல் தனது கடைசி மூச்சு ஓயும் வரையிலும் ஒரு சுத்தமான காந்தியவாதியாகவும், காந்தி விரும்பிய உண்மையான காங்கிரஸ்காரராகவும், உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர்.

1984 அக்டோபர் 4 ஆம் நாள் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையிலேயே காலமானார்.





நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்களை எடுத்த இவரது பேரன் ராஜமார்த்தாண்டனிடம், அவருடைய பெற்றோர்கள் ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள். “எனக்கு மாடு வேண்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது குடும்பம். தொடர்ந்து படித்துப் பொறியாளராகவும், ஜாம்ஷெட்பூரிலிருக்கும் புகழ்பெற்ற XLRI கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ.வும் படித்து முடித்தார்.

“மதுரை சட்டப்பேரவை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகியான என்னுடைய தாத்தா ஆர்.வி.சுவாமிநாதன். அவர்தான் எனக்கு முன்மாதிரி. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தாத்தாவின் பண்ணையில் இருந்தன. தாத்தாவை என்னுடைய ஆதர்சமாகக் கருதுவதால்தான் எம்.பி.ஏ. முடித்துவிட்டு மாட்டுக்கார வேலன் ஆனேன்” என்னும் ராஜமார்த்தாண்டன், தன் வாழ்க்கைக்கான அடித்தளமாகவே மாட்டுப் பண்ணையையும் விவசாயத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை அருகே திருப்போரூரில் நாட்டு மாடுகள் பண்ணை மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவருகிறார்.






திருமதி இந்திராகாந்தி (பிரதமர்), புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்(முதல்வர்)., பாகனேரி தியாகி அய்யா திரு.ஆர்.வி.சுவாமிநாதன்(மத்தியவேளாண் அமைச்சர்)

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்