ஐயா வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் வீரக்குடி கள்ளர் நாட்டின் முதற்கரை வாண்டான் விடுதி, நாட்டின் பொதுத்தலம் திருமணஞ்சேரி ஆகும்.
வீரக்குடி நாடு தனது பெயரிலேயே வீரம் தாங்கிய பூமி. வீரக்குடி கள்ளர் நாடு ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு புன்றில் கூற்றம் என அழைக்கப்பட்டது.
வீரக்குடி நாட்ட்டில் உள்ள முதன்மையான ஊர்கள் சில
திருமணஞ்சேரி
வாண்டான் விடுதி ,
கருக்காக்குறிச்சி,
வாணக்கன்காடு
பெரியவாடி
பட்டத்திகாடு
முதற்கரை
வாண்டான் விடுதி
வாண்டையார் பட்டம் உடையவர்கள்
அடுத்த அடுத்த கரைகார்ர்களாக வடக்குதெரு, தெற்குதெரு, கீழ தெருவில் உள்ளவர்கள் வருகிறார்கள்.
இருக்களார்
வாச்சார்
வாணக்கர்
தேவர்
மாதுரார்
இந்த மண்ணின் மைந்தர் கரை படியாத செம்மல் ஐயா SC சுவாமிநாதன் தேவர் 1991 ஆம் ஆண்டு புதுக்கோட்டை MLA வாக காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன.
பொன்னன்விடுதி, வீரக்குடி நாட்டுக்கள்ளர்களுக்கும், பொன்னபன்றிகுட்டி நாட்டுக்கள்ளர்களுக்கும் பாத்தியப்பட்ட ஊர். இவ்விரு நாடுகளும் வாராப்பூர் நாட்டின் உள்நாடுகள் (Manual of Puthukottai;Vol.2. Part 2 Page:971).
திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகவும். இந்த ஊர் பெயர் கோவில் காடு என்று அழைக்கப்பட்டது.
இந்த கோயில் கல்வெட்டில் விசையபாலன் சென்னண்டார் என்பவரிடம் கொண்ட நிலத்தினை பற்றி உள்ளது. சென்னண்டார் மரபினர் கள்ளராகவே இன்றும் உள்ளனர்.
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகவும். இந்த ஊர் பெயர் கோவில் காடு என்று அழைக்கப்பட்டது.
இந்த கோயில் கல்வெட்டில் விசையபாலன் சென்னண்டார் என்பவரிடம் கொண்ட நிலத்தினை பற்றி உள்ளது. சென்னண்டார் மரபினர் கள்ளராகவே இன்றும் உள்ளனர்.
இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கமாக அருள் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் நந்தி தேவர் கோவிலுக்குள் கொடிமரம் அருகில் இருப்பார் ஆனால் இத்தலத்தில் ராஜகோபுரம் அருகில் இருப்பது சிறப்பு.
மேலும் இது ஸ்தல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பு பெற்றது. இக் கோவிலில் இருந்து சங்கு ஒலி கேட்கும் தூரத்தினுல் கிணறு வெட்ட முற்பட்டால் தடைபடும் என்பது ஐதீகம்.
தீராத வியாதிகளை இக்கோயில் இறைவன் தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. நவக்கிரக தோஷ நிவர்த்தித் தலமாகவும் உள்ளது.
சித்திரை, வைகாசி, ஆடி, மார்கழி, தை, மாசி போன்ற மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
இக் கோவிலில் வழிபடுபவர்களுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால்
இக்கடவுளுக்கு திருமணநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
நெய்வேலி எட்டு குடி அரையர்கள் கோயிலுக்கு நிலங்கள் வழங்கியுள்ளனர்.
நெய்வேலி ஊரில் கள்ளரில் 12 கரைகள் உள்ளனர். ஊரின் அம்பலகாரர் கலியராயர் பட்டம்
செல்லங் கலியராயர்
மாச்சான் கலியராயர்
வெள்ளை யானை கலியராயர்
பச்சையன் கலியராயர்
பட்டயன் கோயில் வகையறா
ஆவா மன்னவேளார்
நவனப்ப மன்னவேளார்
திருவ மழவராயர்.
சித்த மழவராயர்
அடைக்க மழவராயர்
கரையினர் மரபினர் உள்ளனர்.
நெய்வேலி மருதப்பா கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைப்பெறும்.
நெய்வேலி எட்டு குடி அரையர்கள் கோயிலுக்கு நிலங்கள் வழங்கியுள்ளனர்.
செல்லங் கலியராயர்
மாச்சான் கலியராயர்
வெள்ளை யானை கலியராயர்
பச்சையன் கலியராயர்
பட்டயன் கோயில் வகையறா
ஆவா மன்னவேளார்
நவனப்ப மன்னவேளார்
திருவ மழவராயர்.
சித்த மழவராயர்
அடைக்க மழவராயர்
கரையினர் மரபினர் உள்ளனர்.
நெய்வேலி மருதப்பா கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைப்பெறும்.
கருக்காக்குறிச்சி
கருக்காக்குறிச்சி ஸ்ரீவீரையாசுவாமி, ஸ்ரீசெல்லியம்மன்சுவாமி கோயில் பாலி எடுக்கும் திருவிழா
வீரக்குடிநாடு பெரியவாடி கிராமத்தில் முருகன் கோவில் திருவிழாவில் வள்ளி திருமணம் நாடகம்
வீரக்குடி நாட்டார்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு
நன்றி: திரு. ராம. சுந்தர் ராஜ் இருங்களார்