செவ்வாய், 20 மார்ச், 2018

முனைவர் ஐயா திரு. மா. நடராசன் மண்ணையார்


சொல், செயல், நிலை, நினைப்பு இவை அனைத்திலும் தமிழ் மொழி உணர்வு, தமிழ் இன உணர்வு என்று நூனி முதல் அடி வரை நுரை ததும்பி பொங்கி வடிந்த தமிழ்தாயின் தலைமகன் முள்ளிவாய்க்கால் முற்றம் தந்த முத்தான மனிதர் ஐயா நடராசன் மண்ணையார். 

‘புதிய பார்வை, தமிழரசி’ ஆசிரியரும், மருதப்பா அறக்கட்டளை நிறுவனரும் ஆவார். தமிழ் இனத்தின் மிகச் சிறந்த ஆளுமை ஐயா நடராசன் மண்ணையார்.


தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அக்.23, 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார். இவருடைய பெற்றோர் மருதப்பா மண்ணையார், தாய் மாரியம்மாள் ஆவர்.

நடராசன் மண்ணையார் குழந்தையாக இருந்தபோது, அவரின் சேட்டையைத் தாங்க முடியாமல் பள்ளியில் சேர்த்தார், தாய் மாரியம்மாள். அந்தக் காலத்தில், ஆறு வயது நிரம்பியவர்களைத்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வார்கள். நான்கு வயது நடராசனுக்கு ஆறு வயது எனப் பொய் சொல்லி பள்ளியில் சேர்த்துவிட்டனர். இதனால், பள்ளிச் சான்றிதழில் நடராசன் மண்ணையார் பிறந்த நாள் 1942 அக்டோபர் 23-ம் தேதி என்று இருக்கும்.


மாணவர் பருவத்தில் தமிழ் மீது ஐயா நடராசன் மண்ணையார்க்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்.

நடராசன் குழந்தையாக இருந்தபோது, அவரின் சேட்டையைத் தாங்க முடியாமல் பள்ளியில் சேர்த்தார், தாய் மாரியம்மாள். அந்தக் காலத்தில், ஆறு வயது நிரம்பியவர்களைத்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வார்கள். நான்கு வயது நடராசனுக்கு ஆறு வயது எனப் பொய் சொல்லி பள்ளியில் சேர்த்துவிட்டனர். இதனால், பள்ளிச் சான்றிதழில் நடராசனின் பிறந்த நாள் 1942 அக்டோபர் 23-ம் தேதி என்று இருக்கும்.



கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார். 

1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் நாளே கலைஞர் கைது செய்ய பட்டார். அவருக்கு பின் அவரது நம்பிக்கை உரியவரான எல்.கணேசன்(கள்ளர்) என்பவர் இரண்டு நாள் போராடி கைதானார்.




அதற்கு பின் இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தஞ்சை மாவட்ட மாணவரணி தலைவரும் கலைஞர் மற்றும் எல்.கணேசனின் மானசீக சீடனுமான ஐயா நடராசன் மண்ணையார் களத்தில் குதித்தார். 



சுமார் 15-நாட்கள் போலிஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடுமையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். பின் கைதாகி பயங்கர சித்ரவதைக்கு ஆளாகி சுமார் ஆறு மாத காலம் வரை சிறையில் இருந்தார்.

1967 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது தீவிர போராட்டத்தில் கலந்து கொண்ட இவரின் சமகால மாணவர்கள் தான் வைகோவும் துரைமுருகனும். 

அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார். அரசியல் சதுரங்க ஆட்டத்தில்  திரைக்கு உள்ளேயே காய் நகர்த்தும் கலையின் சூத்திரதாரி தான் ஐயா நடராசன் மண்ணையார்.










அண்ணா தி.மு. கழக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். மன்னை நாராயணசாமி ஏற்பாட்டில் இவரது திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.


திராவிடர் இயக்கம் மாணவர் அணியிலே தொண்டாற்றி வந்த ஐயா நடராசன் மண்ணையார், தமிழ்நாடு அரசு ஊழியராகவும் பணி புரிந்தார். அவர் ‘தமிழரசி என்ற வார இதழுக்கு ‘அமுத சுரபி’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியரான விக்ரமன் அவர்களைப் பொறுப்பாசிரியராக்கி நடத்தி வந்தார். ஐயா நடராசன் மண்ணையார்அந்த வார இதழின் ஆசிரியராவார்.

தமிழ் அரசி, புதிய பார்வை என்று இரண்டு பத்திரிகைகளையும் நடத்திக் கொண்டிருந்தார். புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்துமாதம் இருமுறை வெளியாகிறது. 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இவ்விதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக ஐயா நடராசன் மண்ணையார் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் ஆவார்.

எம்ஜிஆர் இறந்தவுடன் தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலையை முடக்கி அன்றைய காங்கிரஸ் ஆட்டம் காட்டிய கால கட்டத்தில் சேடப்பட்டி முத்தையா தலைமையில் ஒரு அணியையும் எம்ஜி.சேகர் தலைமையில் ஒரு அணியையும் தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தி புகழ்பெற்ற வக்கீல் கபில் சிபலை வைத்து வாதாடி இரட்டை இலையை மீட்டவர்.

எப்போதெல்லாம் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் தேசிய தலைவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கை  பயன்படுத்தி டெல்லியில் லாபி செய்தவர்.



தமிழக மற்றும் இந்திய அரசியல் களத்தில் ராஜதந்திரம் என்ற வார்த்தையை நடராஜ தந்திரம் என்று மாற்றி எழுதும் வகையில் மாபெரும் வித்தகராகத் திகழ்ந்தவர். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் கூறும் போது பிராமணர்கள் மட்டுமே அரசியல் சாணக்கியர்கள் என்ற அரிச்சுவடியை மாற்றி எழுதியவர் நடராஜன் என்று குறிப்பிடுவார்.



தமிழ் அரசி இதழில் இந்திய சினிமா பிதாமகன் அமிதாப் பச்சன் ஒருமுறை சிறந்த நண்பர்களில் நடராஜன் ஒருவர் என்று பேட்டி அளித்தார். ஐயா நடராசன் மண்ணையார் அவர்கள் நடத்திய விழாவுக்கு அமிதாப் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஜாதகத்தை எதிரிகள் கணித்துவிடுவார்கள்’ என்பதால், தனது பிறந்தநாளை வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார், நடராசன். வீட்டிலேயே கேக் வெட்ட, நெருக்கமானவர்கள் மட்டும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் 2012-ம் ஆண்டு, நடராசனின் பிறந்தநாள் வெளியுலகம் அறிய அமர்க்களப்பட்டது. காரணம், அந்த ஆண்டு நடராசனுக்கு 70-வது பிறந்தநாள். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம், வாணவேடிக்கை எனப் பிறந்த நாளை பிரமாண்டப்படுத்திவிட்டார்கள்.



அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, தன் கைப்பட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருந்தார். இந்தியாவில் இருக்கிற பெரிய அரசியல் புள்ளிகளின் பிறந்த நாளுக்குக்கூட இப்படி வாழ்த்துகள் வந்தது இல்லை. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்குக் கிடைக்காத அமெரிக்க அதிபரின் வாழ்த்துகூட நடராசனுக்குக் கிடைக்கிறது என்றால், கடல் கடந்தும் நடராசனின் ஆதிக்கம் விரிந்திருக்கிறது என அர்த்தம்.

முதல் முறையாக புதிய பார்வை இதழில்தான், கேரளாவின், தேவிக்குளம், பீர் மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்.

பூலித்தேவருக்கு பெரிய அளவிலான விழா எடுத்தவர், அதற்கு வகை செய்தவர். புலித்தேவர் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது சொந்த செலவில் தேவர் வரலாற்று ஆவணப்படம் எடுத்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பசும்பொன் தேவர் ஆய்வு மையத்தில் 1 லட்சம் ரூபாய் செலவில் புலித்தேவர் பெயரில் அறக்கட்டளையை  ஏற்படுத்தியவர். பசும்பொன்னில் உள்ள அமர்ந்து இருக்கும்படியான தேவர் சிலையை நிறுவியவர். ஜெயலலிதா தேவருக்கு தங்க கவசம் சூட்ட காரணமாக இருந்தவர். தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய பார்வையில் நூற்றாண்டு மலர் வெளியிட்டார். பிறகு அது பசும்பொன் தேவர் சரித்திரம் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை, பெரியார் திடலில் நடந்த விழாவில், ‘பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புதுப்படைத் தலைவா’, ‘தமிழர்களின் இதயக்கனி’, ‘தமிழினத்தின் முகவரி’ என்றெல்லாம் பேனர்கள் வைத்து அசத்தினார்கள். ‘இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் புகழஞ்சலிகள் வேறு.


‘‘ஆனந்த நடராசனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும், நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்கு (ஜெயலலிதா) தெரியவில்லையே’’ என அந்த விழாவில் பன்ச் வைத்தார் கவிஞர் நந்தலாலா. கவிஞர் கிருதியாவோ, ‘‘உன் வீட்டில் எப்போதும் ‘ஜெ.ஜெ’ எனக் கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களைக் காப்பாற்றும் புத்த தேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்குப் பூலித்தேவன்" எனச் சீறினார். "ஏ.டி.எம் எந்திரம் நீ. உன்னைச் சொருகுகிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்" என்றார், கவிஞர் இனியவன்.

பொங்கல் விழாவில் பேசும் நடராசன்



உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதனை தமிழ் செயற்பாட்டாளர் ஐயா நடராசன் மண்ணையார் நினைவு முற்றத்திற்குத் தேவையான நிலத்தை வழங்கினார். தஞ்சை விளார் ரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தன் மூன்று கார்களையும் ரோலக்ஸ் கடிகாரத்தையும் மேடையிலேயே ஏலம் விட்டு 46 லட்சத்தை வழங்கியவர்.




ஜனவரி 15 முதல் 17 வரை தஞ்சாவூரில் பொங்கல் கலை இலக்கிய பெருவிழா ஐயா நடராசன் மண்ணையார் அவர்களால் வருடா வருடம் நடைபெறும்.





தஞ்சை இராமநாதன் ரவுண்டானாவில் உள்ள சிவாஜியின் முழுஉருவ வெண்கல சிலையை ₹25லட்சம் செலவில் அமைத்தவர்.  சிலையை  நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

சிலை அமைப்பு குழுவினர்: (அனைத்தும் சோழவளநாட்டு கள்ளர் நாடுகள்)

காச வளநாடு நாட்டவர்கள்
கீழ்வேங்கை நாடு நாட்டவர்கள்
சுந்தரவளநாடு நாட்டவர்கள்
வாகரநாடு நாட்டவர்கள்
குழந்தை வளநாடு நாட்டவர்கள்

எவனுக்கும் பயப்படமாட்டேன்ஆனால் இரண்டு பேர் பேச்சை மட்டும் தட்டாமல் கேட்பேன் என்று பகிரங்கமாக சொல்லும் அந்த இருவரில் ஒருவர் மனைவி மற்றோருவர்  பழ நெடுமாறன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்