செவ்வாய், 27 மார்ச், 2018

வளரி : திகிரி / கள்ளர் தடி / வளரி

வளரி என்பது தமிழர்கள் ஆயுதமாக குறிப்பிட்டாலும், குறிப்பாக இதை பயன்படுத்தியவர்கள் முக்குலோத்தோர் மற்றும் வலையர்கள் மட்டுமே.


1) காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, முல்லைத் திணை தலைவன் மால் எனப்படும் மாயோன் 'கள்வன்'. அவன் ஆயுதம் வளரி. (கலித்தொகை)

2) மால் எனப்படும் சோழன் “வளரி படை” உடையவன். (சிலப்பதிகாரம்)

3) கள்ளர்களின் பெயராலேயே “கள்ளர் தடி” என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)4) வளைதடி - கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது (British archaeologist Robert Bruce)


5) ஆங்கிலேயர்கள் கள்ளர்களின் பெயராலேயே "COLLERY” என்று அழைத்தனர். (Mr.Welsh)

6) புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது. (புதுக்கோட்டை வரலாறு)

7) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியை கொண்டு கள்ளர்கள் "பெருங்காம நல்லூரில் " தாக்கியதால் வளரி பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டது. (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

8)கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்னும் மீண்டுவரும் - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

“வளரியை உருவாக்கியவனும், வீசியவனும், அதை இந்த மண்ணை விட்டு மறைய செய்தவனும் கள்ளனே”
மேலூர் -சிவகங்கை பகுதிகளில் வாழும் கள்ளர்களின் கோவில்களிலும் வீடுகளிலும் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வளரிகள்திகிரி, கள்ளர் தடி, வளரி, வளைதடி, பாராவளை, எறிவளை என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன், ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


வளரியை கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில கள்ளர் மற்றும் மறவர் இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம். பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர்.


# திருமால் 'கள்வன்' ஆயுதமாகக் கலித்தொகை சுட்டுகிறது.
“மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (134:1-4)


பொருள்: யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும்.
Vishnu, 12th century. His wheel was used a returnable weapon (like boomerang) and his conch was used to initiate war - Thanjavur Royal Palace

# சோழ மன்னன்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்”பொருள்: சோழ மன்னன் பொன்னால் செய்த அழகிய வளரி என்னும் போர்ப்படையை உடையவன்

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 1.5


பொருள்: காவிரியை உடைய சோழனது சக்கரம்போல் பொன்போல் தோற்றமளிக்கும்.

இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.


பொன்புனை திகிரி

# நடுகல் கல்வெட்டில்கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனிரையைக் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்ளர் குலத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். புறநானூறு பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்று உள்ளது. கூடல் நகர் ஆட்சி செய்த அகுதை என்ற குறுநிலத் தலைவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது.
கிபி1311ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார். அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர் குடியின் வீரத்தேவர், கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால் பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர். அந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால் அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை பார்க்கலாம். இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடையம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் உள்ள கள்ளர் பெருமக்கள் பாண்டியராஜன் சாமி என்று பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.

# கலிங்கத்துப்பரணி

“களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே” (கலிங்கத்துப்பரணி:418)


# புறநானூற்றில்

“எரிகோல் அஞ்சா அரவின் அன்ன “(புறம்.89-5) எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது.
வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக் “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது.


# ஐங்குறுநூற்று


மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)


வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.
பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்கள் கள்ளரின் மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்களுக்கு இடையில் வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார்.


பொதுவாக தமிழ் சமூகத்தில் உள்ள இனத்தவர்கள் திருமணம் நிச்சயிக்கும் போது தட்டு மாற்றிக் கொள்வது வழக்கம். அப்படி அவர்கள் தட்டு மாற்றி கொள்ளும் போது தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழை, புடவை, வேட்டி, சட்டை, குங்குமம் வைத்து இருவீட்டார்களும் தட்டை மாற்றி கொள்வர். ஆனால் நாட்டார் கள்ளர்களாகிய சிவகங்கை ஏழுகிளை கள்ளர் நாட்டார்கள் தங்களது திருமண நிச்சயத்தின் போது இருவீட்டார்களும் வளரியை மாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.மேலும் இது அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை நிச்சயத்தில் மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுபோக “send the valari and bring the bride👰” அதாவது வளரியை அனுப்பி பெண்னை கொண்டு வா என்று பெண் கேட்டுள்ளனர்.

கண்டதேவி செம்பொன்மாரி நாதர் ( சொர்ணமூர்த்தி ஈசுவரர்- பிற்காலப் பெயர்) கோயில் தேரோட்டத்தின் போது கள்ளர்கள் வளரி வீசும் போட்டி நடைபெறும். ஒருசிலர் வீசும் வளரி அந்த பெரிய குளத்தையே ஒரு சுற்று சுற்றிவரும். அந்த அளவிற்கு திறன் உள்ளவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.


# புதுக்கோட்டை மன்னர்கள்

புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது.Castes and tribes of southern India (Volume 3) - Page 70


வளரியை யார் கடைசிவரை வைத்திருந்தனர்,எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதி வைத்தது புதுக்கோட்டை தொண்டைமான் மரபினர் என்பது ஆணித்தனமான உன்மையே. ஏனென்றால் புதுக்கோட்டை அரசர்களான தொண்டைமான்கள் வளரியை எப்போதும் வைத்திருந்தார்கள் என்று ஆவணமாக உள்ளது.

தொண்டைமான் அரசர்களின் பல ஆயுதங்களில் ஒரு வளரி மட்டும் எப்போதும் வைத்திருப்பார்கள், அந்தளவுக்கு வளரியின் பாரம்பரியம் தொண்டைமான் வம்சாவழியினருக்கு வழி வழியாக இருந்துள்ளது.

இராமச்சந்திர தொண்டைமான் இராஜா யானை தந்தத்தில் செய்த 2  வளரியை பரிசாக அளித்துள்ளார். ஒன்று 11473cm பரப்பளவு கொண்ட ஒருபுறம் குவிந்திருக்கும் வளரி மற்றொன்று 11534cm பரப்பளவு கொண்ட இருபுறமும் குவிந்த மேற்பரப்புகள் மற்றும் பரந்த முடிவும் இருக்கும்.

அது சென்னை மியூசியத்தில் இன்றும் உள்ளது (தொண்டமான் என்பதே யானையை அடக்குவர்கள் தானே). அது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியும் உள்ளார்.

1.வளரி என்பது மரத்திலும்,இரும்பிலும் செய்யக்கூடிய ஆயுதமாகும்.
2.வளரி ஆயுதம் பிறை வடிவில் இருக்கும்.
3.ஒரு முனையானது மறு முனையை விட கனமானதாக இருக்கும்.
4.வளரியை லேசான எடையுள்ள முனையை கையில் பிடிக்க வேண்டும்.
5.எறிவதற்கு முன்பாக வளரியை தோல்பட்டை அளவு தூக்கி நன்றாக சுழற்ற வேண்டும்.
6.சுழற்றிக்கொண்டிருக்கும் போதே குறிவைத்துள்ள பொருளின் மீது உத்வேகத்துடன் வீச வேண்டும்.

இப்படியாக திவான் விஜய இரகு நாத பல்லவராயர் வளரியை எப்படி எறிய வேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

வளரியை புதுக்கோட்டை அரச தொண்டைமானார்கள் இறுதிவரை தங்களுடன் வைத்திருந்தனர்.

தன்னரசு கள்ளர்கிபி1650வாக்களில் திருமலை நாயக்கர் பாண்டியமன்னர்கள் முற்றிலும் அழிந்த காலத்தில் மதுரையை தனது முழுகட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் போது. மதுரை எல்லை அரணில் வாழ்ந்த கள்ளர் பெருமக்கள் நாயக்கருக்கு எதிராக கலகம் செய்தனர். அப்போது திருமலை நாயக்கரால் அவர்களை கட்டுப்படுத்தமுடியாத போது திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு வீரையன் சேர்வை மூலமாக ஒழிக்க நினைக்கிறார். இதனை பற்றி மதுரை வீரன் அம்பானை விளக்கும் போது வீரையன் சேர்வையை ஆனையூர் பத்து நாட்டு தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைகள் வளரியும்,வேலையும் வைத்து சண்டையிட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்க தொண்டைமான் :

சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது வைத்தியலிங்க தொண்டைமான் அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

சேதுபதி மன்னர்கள் :

தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு வளரி போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது.

“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).கள்ளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40).


மருது சகோதரர்கள் :

ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வளரியை பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் சண்டையிட்டார்கள்.

கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதம் வளரியாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).


வங்காருத்தேவன்தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை அவரகள் :
தென்னிந்தியாவுக்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவிற்றான் முதன்முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின் ஆதிகுடிகள் எனவும் லெமூரியக் கொள்கையினர் கருதுவர். லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தென்னிந்திய மக்களுள் சில குலத்தினரும் மரபினரும் போற்றும் வழிபாட்டுச் சின்னங்களையும்  அவர்களுள் கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்னும் மீண்டுவரும் வேட்டைக் கத்தியையும் இந்தோனேசீயாவிலும் பாலினீசியாவிலும் வாழும் ஆதிகுடிகளிடம் காணலாம். 


வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் நாட்டில் பயன்படுத்த பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி
திரு. சே. முனியசாமி - முனைவர்பட்ட ஆய்வாளர்
திரு. சர்மலான் தேவர் - Klang Valley Mukkulathor Association
திரு. சோழபாண்டியன், ஏழுகோட்டை நாடு
திரு.  சியாம் சுந்தர் சம்பட்டியார்


செவ்வாய், 20 மார்ச், 2018

முனைவர் ஐயா திரு. மா. நடராசன் மண்ணையார்


சொல், செயல், நிலை, நினைப்பு இவை அனைத்திலும் தமிழ் மொழி உணர்வு, தமிழ் இன உணர்வு என்று நூனி முதல் அடி வரை நுரை ததும்பி பொங்கி வடிந்த தமிழ்தாயின் தலைமகன் முள்ளிவாய்க்கால் முற்றம் தந்த முத்தான மனிதர் ஐயா நடராசன் மண்ணையார். 

‘புதிய பார்வை, தமிழரசி’ ஆசிரியரும், மருதப்பா அறக்கட்டளை நிறுவனரும் ஆவார். தமிழ் இனத்தின் மிகச் சிறந்த ஆளுமை ஐயா நடராசன் மண்ணையார்
தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அக்.23, 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார்.இவருடைய பெற்றோர் மருதப்பா மண்ணையார், தாய் மாரியம்மாள் ஆவர்.

மாணவர் பருவத்தில் தமிழ் மீது ஐயா நடராசன் மண்ணையார்க்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்.


கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார். 

1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் நாளே கலைஞர் கைது செய்ய பட்டார். அவருக்கு பின் அவரது நம்பிக்கை உரியவரான எல்.கணேசன்(கள்ளர்) என்பவர் இரண்டு நாள் போராடி கைதானார்.அதற்கு பின் இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தஞ்சை மாவட்ட மாணவரணி தலைவரும் கலைஞர் மற்றும் எல்.கணேசனின் மானசீக சீடனுமான ஐயா நடராசன் மண்ணையார் களத்தில் குதித்தார். 


சுமார் 15-நாட்கள் போலிஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடுமையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். பின் கைதாகி பயங்கர சித்ரவதைக்கு ஆளாகி சுமார் ஆறு மாத காலம் வரை சிறையில் இருந்தார்.

1967 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது தீவிர போராட்டத்தில் கலந்து கொண்ட இவரின் சமகால மாணவர்கள் தான் வைகோவும் துரைமுருகனும். 

அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார். அரசியல் சதுரங்க ஆட்டத்தில்  திரைக்கு உள்ளேயே காய் நகர்த்தும் கலையின் சூத்திரதாரி தான் ஐயா நடராசன் மண்ணையார்.
அண்ணா தி.மு. கழக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். மன்னை நாராயணசாமி ஏற்பாட்டில் இவரது திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

திராவிடர் இயக்கம் மாணவர் அணியிலே தொண்டாற்றி வந்த ஐயா நடராசன் மண்ணையார், தமிழ்நாடு அரசு ஊழியராகவும் பணி புரிந்தார். அவர் ‘தமிழரசி என்ற வார இதழுக்கு ‘அமுத சுரபி’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியரான விக்ரமன் அவர்களைப் பொறுப்பாசிரியராக்கி நடத்தி வந்தார். ஐயா நடராசன் மண்ணையார்அந்த வார இதழின் ஆசிரியராவார்.

தமிழ் அரசி, புதிய பார்வை என்று இரண்டு பத்திரிகைகளையும் நடத்திக் கொண்டிருந்தார். புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்துமாதம் இருமுறை வெளியாகிறது. 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இவ்விதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக ஐயா நடராசன் மண்ணையார் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் ஆவார்.

எம்ஜிஆர் இறந்தவுடன் தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலையை முடக்கி அன்றைய காங்கிரஸ் ஆட்டம் காட்டிய கால கட்டத்தில் சேடப்பட்டி முத்தையா தலைமையில் ஒரு அணியையும் எம்ஜி.சேகர் தலைமையில் ஒரு அணியையும் தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தி புகழ்பெற்ற வக்கீல் கபில் சிபலை வைத்து வாதாடி இரட்டை இலையை மீட்டவர்.

எப்போதெல்லாம் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் தேசிய தலைவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கை  பயன்படுத்தி டெல்லியில் லாபி செய்தவர்

தமிழக மற்றும் இந்திய அரசியல் களத்தில் ராஜதந்திரம் என்ற வார்த்தையை நடராஜ தந்திரம் என்று மாற்றி எழுதும் வகையில் மாபெரும் வித்தகராகத் திகழ்ந்தவர். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் கூறும் போது பிராமணர்கள் மட்டுமே அரசியல் சாணக்கியர்கள் என்ற அரிச்சுவடியை மாற்றி எழுதியவர் நடராஜன் என்று குறிப்பிடுவார்.


தமிழ் அரசி இதழில் இந்திய சினிமா பிதாமகன் அமிதாப் பச்சன் ஒருமுறை சிறந்த நண்பர்களில் நடராஜன் ஒருவர் என்று பேட்டி அளித்தார். ஐயா நடராசன் மண்ணையார் அவர்கள் நடத்திய விழாவுக்கு அமிதாப் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் முறையாக புதிய பார்வை இதழில்தான், கேரளாவின், தேவிக்குளம், பீர் மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்.

பூலித்தேவருக்கு பெரிய அளவிலான விழா எடுத்தவர், அதற்கு வகை செய்தவர். புலித்தேவர் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது சொந்த செலவில் தேவர் வரலாற்று ஆவணப்படம் எடுத்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பசும்பொன் தேவர் ஆய்வு மையத்தில் 1 லட்சம் ரூபாய் செலவில் புலித்தேவர் பெயரில் அறக்கட்டளையை  ஏற்படுத்தியவர். பசும்பொன்னில் உள்ள அமர்ந்து இருக்கும்படியான தேவர் சிலையை நிறுவியவர். ஜெயலலிதா தேவருக்கு தங்க கவசம் சூட்ட காரணமாக இருந்தவர். தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய பார்வையில் நூற்றாண்டு மலர் வெளியிட்டார். பிறகு அது பசும்பொன் தேவர் சரித்திரம் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதனை தமிழ் செயற்பாட்டாளர் ஐயா நடராசன் மண்ணையார் நினைவு முற்றத்திற்குத் தேவையான நிலத்தை வழங்கினார். தஞ்சை விளார் ரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தன் மூன்று கார்களையும் ரோலக்ஸ் கடிகாரத்தையும் மேடையிலேயே ஏலம் விட்டு 46 லட்சத்தை வழங்கியவர்.
ஜனவரி 15 முதல் 17 வரை தஞ்சாவூரில் பொங்கல் கலை இலக்கிய பெருவிழா ஐயா நடராசன் மண்ணையார் அவர்களால் வருடா வருடம் நடைபெறும்.

தஞ்சை இராமநாதன் ரவுண்டானாவில் உள்ள சிவாஜியின் முழுஉருவ வெண்கல சிலையை ₹25லட்சம் செலவில் அமைத்தவர்.  சிலையை  நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

சிலை அமைப்பு குழுவினர்: (அனைத்தும் சோழவளநாட்டு கள்ளர் நாடுகள்)

காச வளநாடு நாட்டவர்கள்
கீழ்வேங்கை நாடு நாட்டவர்கள்
சுந்தரவளநாடு நாட்டவர்கள்
வாகரநாடு நாட்டவர்கள்
குழந்தை வளநாடு நாட்டவர்கள்

எவனுக்கும் பயப்படமாட்டேன்ஆனால் இரண்டு பேர் பேச்சை மட்டும் தட்டாமல் கேட்பேன் என்று பகிரங்கமாக சொல்லும் அந்த இருவரில் ஒருவர் மனைவி மற்றோருவர்  பழ நெடுமாறன்.


அரசியலின் சூத்திரதாரி, தமிழ்மொழி பற்றாளர், ஈழத்தமிழனின்தோழமை


தமிழ் இனப் பற்றை, அவர் ஏற்றிய தமிழ் இன சிந்தனை தீபத்தை அணையாமல் காத்திட சூளுரை ஏற்போம்.

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...