1.போரில் இறந்தவர்களின் நடுகற்கள்
2.புலியுடன் சண்டையிட்டு இறந்தவர்களின் நடுகற்கள்
3.தலைபலி கொடுத்தவர்களுக்கான நடுகற்கள்
4.ஆநிரை கவர்தலில் இறந்தவர்களின் நடுகற்கள்
5.ஆநிரை மீட்டலில் இறந்தவர்களின் நடுகற்கள்
என பண்டைய தமிழர்களின் எச்சங்கள் இன்றும் பல மாவட்டங்களின் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி உயிர்ப்புடன் உசிலம்பட்டி பகுதிகளின் இன்றும் உள்ளது.
செம்பட்டி :
தொல்லியல் துறையினால் இந்த பகுதியில் இரும்புகாலத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்ட கருவிகள் இங்கு கிடைக்கப் பெறுகிறது.விலங்கு எழும்புகள், சங்கு, வளையல், கலவை பூசப்பட்ட மண் பானை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வட்டெழுத்துடன் கூடிய மதகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொக்கதேவன் பட்டி
3 நடுகற்கள் வரிசையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த நடுகற்கள் வாலாந்தூர் நாட்டு கள்ளர்களுக்கும், பாப்பாபட்டி கள்ளர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் இறந்தவர்களுக்காக எழுப்பப்பட்டது.
நடுகல் : 1
வீரனின் கையில் ஆளுயர ஈட்டி உள்ளது, இடுப்பில் பண்டைய போர் கருவியான வளரி உள்ளது.
நடுகல் : 2
குதிரை மீது வீரன் அமர்ந்து வலது கையை உயர்த்தியவாறு அதில் கூர்வாளும், இடது கையில் குதிரையின் கடிவாளமும் பிடித்தவாறு உள்ளது. வீரனின் வலதுபுறத்தில் குடை பிடித்தவாறு ஒருவர் நிற்கிறார் மற்றும் இடதுபுறத்தில் மங்கள சின்னங்களுடன் இரண்டு பெண்கள் உள்ளனர்.
நடுகல் : 3
குதிரையின் மீது வலது கையில் கையை உயர்த்தியவாறு வாள் ஏந்தி வீரன் நிற்கிறார். அருகில் மங்கள சின்னங்களுடன் இரு பெண் நிற்கிறார்.
குப்பணம்பட்டி
நடுகல் : 4
தங்கைக்கு உதவி செய்ய சென்ற போது இறந்த வீரனின் நடுகல் இருகறம் கூப்பி வணங்குவது போல் உள்ளது. அருகில் அவரது தங்கையோ உள்ளார்.
நடுகல் : 5
வீரனின் கையில் ஆளுயர ஈட்டி உள்ளது, இடுப்பில் பண்டைய போர் கருவியான வங்கி உள்ளது.(சொக்கத்தேவன் பட்டியில் உள்ள நடுகல் :1ஐ ஒத்துள்ளது)
நடுகல் : 6
வீரனின் இருபுறமும் அவரது மனைவிகளுடன் உள்ளார், மூவரும் வணங்கியவாறு உள்ளனர்.
கன்னியம்பட்டி
நடுகல் : 7
குதிரையில் வாள் ஏந்திய பாரு வீரனும், அருகில் குடை பிடித்தவர் ஒருவரும் உள்ளார்.
குறிப்பு:
வளரியை வங்கி என்று பிழையாக உள்ளது, அதனை காட்சிப் படத்துடன் வளரி என குறித்துள்ளேன்.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு