திங்கள், 12 மார்ச், 2018

துளசி மகாநாடு - கள்ளர் நாடுகள்




துழாய் என்றால் துளசி. இதை துழாய்க்குடி என்று, இங்கு உள்ள கோயிலில் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறுகிறது. துளசிமாநாட்டுக்குத் தலைமை கிராமம் துழாய்க்குடி. இப்பொழுது மாற்றமடைந்து துவாக்குடி யாக மாறிவிட்டது.

துவாக்குடி,
அசூர்,
எலந்தபட்டி,
ஏற்றன்டார்பட்டி,
பொய்கைகுடி,
காந்தலூர்,
பழங்கனாங்குடி

ஆகிய ஏழு ஊர்களும் சேர்ந்தது துளசி மகா நாடு ஆகும்.

துளசி மகா நாடு அம்பலகாரர்கள் மாளுசுத்தியார்கள் பட்டமுடைய கள்ளர்கள் ஆவார்கள். இவர்களுக்கே இந்த நாட்டில் உள்ள கோயில்களில் முதல் மரியாதை.


தெய்வதிரு. T. ஆறுமுகம் மாளுசுத்தியார்



ஆ. ராமசாமி மாளிச்சுற்றியார்


மாள்சுத்தியார், மாளுசுத்தியார், மாளிசத்தியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். மாள் என்றால் சோழன், சோழரை சுற்றி நின்ற போர் மரபினரோ. மாளுவம் என்றால் நாடு, மாளுவ நாட்டை வென்ற மரபினரோ. மாளி என்றால் மாளிகை, சோழ மாளிகை சுற்றி நின்ற காவல் மரபினரோ. இன்றும் மாளுசுத்தியார் கந்தர்வக்கோட்டை நாடு, துளசி மகாநாடு அம்பலகாரர்களாக உள்ளனர்.

துளசி மகா நாடு 8 1/2 கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1) முதல்கரை : மாளுசுத்தியார்
2) இரண்டாவது கரை : கீழ தொண்டமார்
3) மூன்றாவது கரை : மானமுத்தரையர்
4) நான்காவது கரை : வாணாதிராயர்
5) ஐந்தாவது கரை : பத்தாளர்
6) ஆறாவது கரை : மாளிச்சர்
7) ஏழாவது கரை : மேற்க்கொண்டர்
8) எட்டாவது கரை : மேல தொண்டமார்
9) 1/2 : ஈழத்திரியர்



மேலும் 


துரையார்
மங்காதேவர்
மாலையிட்டார்
காடுரார்
மழவராயர்
பல்லவராயர்

என்ற பட்டமுடைய கள்ளர் மரபினரும் உள்ளனர்.

இத்த ஊருக்கு தவடி என்றும் ஒரு பெயர் உண்டு இப்பெயரில் இலங்கையிலும் ஒரு ஊர் உண்டு. தாவடி விளக்கம் சண்டைநடக்கும் இடம் சைனியத்தை நிருத்தி வைத்த இடம் என அர்த்தமுண்டு. அரசர் ஆயிர மக்களோடு தாவடி போயினர்' என்பது ஒர் உதாரணம். போர் செய்யப் புகுந்த அரசர் ஆயிரம் பேர்களோடு சென்ருர் என்பது இதன் பொருள். தாவடி போதல் என்பது முறையாக அடியிட்டுத் தாவிச் செல்லுதல் (Maching).

துளசி மகாநாடு, திருச்சி தஞ்சைக்கு இடையே திருச்சியிலிருந்து்16 கிமீ தொலைவில் உள்ளது. புஞ்சைகாடுகளும் வனங்களும் நிரைந்த ஊர். விவசாயம் தான் முக்கிய தொழில் பல ஏறிகள் உண்டு மழைபெய்தால்தான் விவசாயம் நல்ல மழைபெய்தால் நஞ்சை சிறு மழைபெய்தால் புஞ்சை. இங்கு தான் பாதர மிகு மின் நிலையம் உள்ளது பல சிறு தொழிற்சாலைகளும் உண்டு.


இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இரணுமுகாம் இங்கும் வைத்திருந்தனர் மக்களின் புஞ்சை நிலங்களில் அதற்கு குத்தகையாக ஏக்கருக்கு ஒரு அணா. அவர்கள் குளிப்பதற்கு ஒரு மூங்கிலை இரண்டாகப் பிளந்து பிஸ்கட் டின் இரண்டிலும் தண்ணீர் எடுத்து காவடி போல கொண்டு கொடுப்பர் ஒரு டின் தண்ணீருக்க அரையணா காசு. ஆனால் அன்று இருந்து வெள்ளைய இராணுவத்தினர் ரொப்பவும் கெளரவமாக நடந்தனர். ஒரு முறை கிராமத்திற்குள் சில படையினர் வர, மக்கள் பட்டாளத்தான் என சத்தம் போட ஆங்கிலம் தெரிந்தவர்கள் வந்து,' இங்கு கிராமத்திற்குள் நீங்கள் வரக்கூடாது' என எடுத்துச் சொல்லவும் அவர்கள் சென்று விட்டனர். அதற்கு பிறகு யாரும் வரவில்லை.

துப்பாக்கித் தொழிற்சாலைக்கும் பரதமிகுமின் நிலையத்திற்கம் இடையே கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு குளங்களுக்க தண்ணீர் கொண்டு வரப்பட்டது காமராசர் ஆட்சியில். இதற்கு பிறகு தான் மழையில்லையென்றாலும் நஞ்சை சாகுபடி செய்யப்பட்டது, 20 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 11 ரூபாய் நாங்கள் அரசுக்கு பெட்டர்மெண்ட் லெவியாக செலுத்தி வந்திருக்கிறார்கள் அதாவது விவசாயத்திற்கு அரசு செலவழித்த பணத்தை இவர்களிடமே வசூல் செய்து விடும்.

துளசி மகாநாடு துவாக்குடியில் நல்ஏர் கட்டிய போது





அருள்மிகு ஸ்ரீ முனியாண்டவர் திருகோவில்






ஸ்ரீ முனியாண்டவர் பரம்பரை தர்மகர்த்தர்கள் - மாளிச்சுற்றியார்
நான்குபாகஸ்தர்கள்

ஆ. ராமசாமி மாளிச்சுற்றியார்
த. முத்துமணி மாளிச்சுற்றியார்
மு. பாபு மாளிச்சுற்றியார்
தங்கராஜ் மாளிச்சுற்றியார்
முத்தாலு தொண்டமார்


துளசி மாநாடு துவாக்குடி ஜல்லிக்கட்டு பரம்பரை அம்பலகாரர்களால் நடத்தப்படும்

தொடர்ந்து இரண்டு வருடமாக சிறந்த மாடுபுடி வீரராக தேர்வு செய்யப்பட்ட பழங்கனாங்குடி ஹரி சோழகர்.









துளசி மாநாடு துவாக்குடி அருள்மிகு அம்மை கூத்த அய்யனார், ஸ்ரீபெரியகருப்பு சுவாமி, ஸ்ரீசந்தனகருப்பு சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள்.
























முத்துமாரியம்மன் கோவில்















துளசிமகாநாட்டைசேர்ந்த முத்துமாரியம்மன் கோவில் துவாக்குடி, அசூர், ஏத்தண்டார்பட்டி(நட்ராஜபுரம்), இலந்தைப்பட்டி காந்தலூர், பொய்கைகுடி பழங்கனாங்குடி ஆகிய 7 கிராம மக்களுக்கும் பொதுவானதாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கழுகேற்றுதலும், அம்மன் குடிபுகுதலும், கிடாவெட்டு மற்றும் கோயில் சுற்றுதல், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கும்.

துளசிமகாநாட்டைசேர்ந்த முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா துளசி நாட்டார்களாள் மிகவும் பிரம்மான்டமாக நடக்கும், அதில் துவாக்குடி சார்பாக கரகாட்டம் வானவேடிக்கையுடன் அம்மன்னுக்கு பிரம்மான்டமாக பூ கொண்டு வந்து அதிகாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கும். இரவு காப்புகட்டுதல், கிடாவெட்டுதல், துளசி நாட்டார்கள் கோவில் சுற்றுதல் நடைப்பெறும்.

முத்து மாரியம்மனுக்கு பால் குடம், கரகம், காவடி எடுத்து கோயில் எதிரே உள்ள தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

தேரில்  முத்து மாரியம்மன் எழுந்தருளி கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் 7 கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர் உற்சவம் அன்று இரவு துவாக்குடி கிராமத்தின் சார்பாக வானவேடிக்கையுடன் பிரம்மான்ட முறையில், இரவு முத்து பல்லக்கு நிகழ்ச்சி நடக்கும்.




துவாக்குடி ஸ்ரீ செல்லாண்டியம்மன் (பிடாரி) கோயில்




















குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.

தமிழ்நாட்டில் ஏழு பெண்களை தெய்வமாக பாவித்து வழிபடும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழிபாடு சோழ மன்னர்கள் காலத்தில் கிராமிய வழிபாடாக மாறியதால், அவர்கள் ஊருக்கு வெளியே வடக்கு திசையில் சப்தமாதர் கோவில்களை உருவாக்கினர்.

சிந்து சமவெளி நாகரிகம் முதல் நம் நாட்டில் இருந்து வந்துள்ள வழிபாட்டு முறைகளில் ஒன்று, சப்த மாதர் வழிபாடு. பல்லவர் காலத்தில் சப்த மாதர்களை ஒரே கல்லில் வடிவமைத்து வழிபட்டு வந்துள்ளனர். சோழ மன்னர்கள் காலத்திலும், சாணக்கிய மன்னர்கள் காலத்திலும் சப்த மாதர் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து வந்துள்ளது.

சப்த மாதர்களுக்கான ஆலயம் துவாக்குடி என்ற கிராமத்தில் உள்ளது. ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலுக்கு முன்பாக வலதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே நுழைந்ததும் திருச்சுற்றில் தலவிருட்சமான வேப்ப மரம் உள்ளது.

அடுத்து சப்பாணி கருப்பு, மதுரை வீரன், பட்டவன், சந்தன கருப்பு, முனியாண்டவர், சன்னாசி கருப்பு, சாம்புவன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து மகாமண்டபத்தின் கிழக்கு திசையில் சங்கிலி கருப்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்டமான சுதை வடிவ துவாரபாலகர் திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

அடுத்துள்ள கருவறையில் சப்த மாதர் வரிசையாக காட்சித்தர, நடுவே உள்ள இந்திராணி ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். செல்லாண்டி அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை விளங்குகிறாள்.

மாதப்பிறப்புகள், ஆண்டின் முதல் நாள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பொங்கல், ஆடிப் பெருக்கு நாட்களில் அன்னைக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று அன்னைக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு மாவிளக்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, மொச்சை, தட்டைப்பயறு, சர்க்கரைப்பொங்கல் முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.


சோழீஸ்வரர்



இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில்.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.

அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.

கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.

தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.

பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர். ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.

ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்