வெள்ளி, 30 ஜூன், 2023

பட்டங்கள் சாதியாகி



கள்ளன், மறவன், அகம்படியான், குறவன், பறையன், பள்ளன், பள்ளி, சாணான், வெள்ளாளன், வலையன் என்பதே சாதி, ஆனால் இன்று தங்கள் குல உயர்வுக்காக புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதையாக பட்டங்களை சாதியாக மாற்றிக்கொள்கின்றனர்.
தேவன்,
வன்னியன்,
கவுண்டன்,
முதலியான்,
செட்டி,
முத்தரையன்,
சேர்வை,
அம்பலம்,
பிள்ளை,
படையாச்சி,
நாடன்,
சேனைத்தலைவன்
என்பன அனைத்தும் பட்டங்களே,

ஆனால் இன்று தேவன் என்ற பட்டத்தை தவிர்த்து, மற்றவைகள் அனைத்தும் இன்று சாதியாக நிற்கின்றது. பட்டங்களை சாதியாக மாற்றி, அதை தங்கள் வரலாறாகவும் கூறிவருகின்றனர்.

கள்ளர்களில் தஞ்சை பகுதியில் பாப்பாநாட்டு குறுநிலமன்னர்கள் விஜயதேவர்  பட்டம் தாக்கியவர்கள் மற்றும் உக்கடை ஜமீன்கள் தேவர் பட்டம் தாக்கியவர்கள். மதுரை பகுதியில் எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் தலைவர்கள் தேவர் பட்டம் தாக்கியவர்கள். ஆனாலும் தங்களை கள்ளர் குடியினராகவும், தேவர் என்பதை பட்டமாகவும் மட்டுமே பார்கிறார்கள். உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர்கள். 

கள்ளர்பட்டங்களில் சில :-  தேவர், சோழங்கதேவர், விஜயதேவர் , சோழகர், தொண்டைமான், பல்லவராயர், வாண்டையார், கடாரம்கொண்டார், ஈழத்தரையர், கொல்லத்தரையர், வல்லத்தரையர், தஞ்சிராயர், மழவராயர், நாட்டார், வன்னியன், சோணாடுகொண்டார், பாண்டியர், பழுவேட்டரையர், போர்க்கட்டியார்  என பல ஆயிரம் பட்டங்கள் கொண்டவர்கள். 



கள்ளர்கள் "தேவர்" என்ற தமிழக அரசின் சாதி அரசாணையை எதிர்த்தவர்கள் (12.11.45). 



புதுக்குடியான ராஜெந்திர சொழமங்கலத்துக்‌ காணி (நிலம்) உடைய கள்ளரில்‌ 
பெருமன்‌ அழகனான மணவாள முத்தரயன்‌



கள்ளர்களை பொறுத்த மட்டும் "தேவர்" என்பது கள்ளர்களின் உயரிய பட்டம் மட்டுமே.  தேவர் என்ற பட்டம் தமிழகத்தை பொறுத்தவரை முக்குலமான கள்ளர் மறவர் அகமுடையார் மட்டும் உரித்தான பட்டமாகும். இந்த மூவரும் தங்களை தங்களது பழைய மரபு பெயரான கள்ளர், மறவர், அகமுடையார் என்று அழைப்பதை மட்டும் இன்றும் விரும்பிகிறார்கள்.

ஏசியன் எஜிகேசனல் சர்வீஸ் என்பதன் மூலமாக வெளியிடப்பட்ட மதுரை வரலாறில் கள்ளர்களை பற்றிய செய்தி “கள்ளர்கள் தங்களுடைய இனத்தின் பெயரை சொல்லுவதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை, தங்களுடைய நாட்டை பாதுகாக்க அவர்கள் எடுத்து வைக்கும் வாதம், இங்கிலாந்தில் வாழ்ந்த ஏழை பங்காளன் ராபின் ஹுட் போல உள்ளது” என குறிப்பிடுகின்றனர்.
Madura A Tourist guide illustrated 


தென்கிழக்கு இந்தியாவில் உள்ள கிராமப்புற சமூகம் (Rural society in southeast India) என்ற நூலில் 

ஒரு சாதியைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் சாதியுடன் தொடர்புடைய பட்டத்தை அல்லது சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை ஜாதியுடன் குடும்பப்பெயராகப் பயன்படுத்தினர். சில நேரங்களில் இந்த பெயர் சாதியின் பெயராக இருந்தது (உதாரணமாக, படையாச்சி, பொறையர் அல்லது வண்ணான்). சில சமயங்களில் ஐயர் (சைவ பிராமணர்கள்), அய்யங்கார் (வைணவ பிராமணர்கள்), பிள்ளை (பெரும்பாலான வேளாளர் மற்றும் அகம்படியர் பிரிவுகள்), முதலியார் (உயர்ந்த துணை சாதியினருக்குப் பயன்படுத்தப்பட்டது) போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாதிகள் அல்லது துணை ஜாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புப் பட்டமாகும். தொண்டைமண்டலம் வெள்ளாளர்கள், ஆனால் நெசவாளர்கள் அல்லது கைக்கோளர்கள் அல்லது பணிக்கர் (பள்ளர்கள் மற்றும் பறையர்கள்) என்ற சாதியினருக்கும். கள்ளர் மற்றும் மறவர் சாதியினர் ஒரு காலத்தில் மதுரை மற்றும் இராமநாதபுரத்தில் அரைசுதந்திரத் தலைமைகளை உருவாக்கினர், சேர்வை, நந்தியார், கண்டையர் அல்லது நாட்டார் போன்ற தங்கள் குலங்களின் பட்டங்களை பயன்படுத்தினர்.





வன்னியன்
~~~~~~~~~~~~~

வன்னியன் என்ற சொல் போர்வீரன் என்றும், வன்னிய நாயன் என்பது போர் விரர்களின் தலைவன் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டது. வன்னியன் சாதியாக குறிப்பிடப்படவில்லை.
வன்னியப்பற்று - படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப்பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் - படை வீரர்)



வன்னியன் பட்டம் உள்ள சாதிகள் :- 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• குறவர் பட்டம் - கூடைகட்டி வன்னியன்
• இருளர்கள் பட்டம் - தேன் வன்னியன்
• பள்ளி – வன்னியன்
• மறவர் பட்டம் – வன்னியன், வன்னி குட்டி, வன்னியடி (வன்னிக்கொத்து)
• கள்ளர் பட்டம் - வன்னியர், வன்னிகொண்டார், வன்னியமுண்டார், வன்னியனார், நல்லவன்னியர்
• வலையர் பட்டம் – வன்னியர்
• அகமுடையர் பட்டம் - வன்னிய முதலியார், வன்னிய பிள்ளை
• துளுவ, கொங்கு வெள்ளாளர் - வன்னியர் கவுண்டர்
• பார்க்கவ குலத்தார் - வன்னிய மூப்பனார்
• பரவர், கரையர் - வன்னியர்
.

கள்ளரில் வன்னியர் பட்டம்  தமிழ் அகராதி 



கவுண்டர் 
~~~~~~~~~~~

ராஷ்டரகூட அரசர்கள், நுளம்ப பல்லவ வேந்தர்கள், ஆட்சியில் நாடு அல்லது ஊர் அதிகாரம் பெற்றவர்கள் காமுண்டன் எனச் சொல்லப்பட்டார். இப்பெயர் கன்னட தேசத்து அதிகமிருக்கிறது. அவ்வரசர்கள் இத் தென்னாட்டும் புகுந்து ஆண்டிருக்கிறார்கள். காமுண்ட – காமிண்ட என்னும் பெயர், கிராமப் பெரிய தனக்காரர்கள் பெற்று நாளடைவே காவண்ட - காவுண்ட என்று, பின் கவண்ட - கவுண்ட என்று மருவிற்று என்பது சாசன பரிசோதகர்கள் கருத்து. இது போலவே கன்னட தேசத்தார் கவுடு என்று வழங்குகிறார்கள். கவுண்டிக்கை என்பது ஊர்ப்பெரிய தனத்தைக் குறித்ததாக வழக்கத்திலிருக்கிறது.

கவுண்டன் பட்டம் உள்ள சாதிகள்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• வேளாளர் பட்டம் – கவுண்டன்
• வேட்டுவர் பட்டம் - கவுண்டன் 
• பள்ளி பட்டம் – கவுண்டன்
• கள்ளர் பட்டம் – கவுண்டன்
• ஊராளி பட்டம் – கவுண்டன்
.
கள்ளர் நாட்டை சேர்ந்த கள்ள அரையர் (கள்ளரைய) கரையப்பக்கவுண்டர், அன்னியப்ப கவுண்டர் 




முத்தரையன்
~~~~~~~~~~~~~~~

முத்தரையர் வேளிர் மரபினர், பழைய அரச குடியினர். ஆனால் இன்று முத்தரையன் என்பது ஓர் பட்டமே.


முத்தரையன் பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


• கள்ளர் பட்டம் - முத்தரையன், செம்பியமுத்தரையன், மானமுத்தரையன், வங்காரமுத்தரையன்
• வலையர் பட்டம் – முத்தரையன், முத்திராசு, 
• பள்ளி பட்டம் – முத்தரையன்
• மறவர் பட்டம் – முத்தரையன்
• வடுகர் பட்டம் – முத்தரையன்
• வேட்டுவர் பட்டம் – முத்தரையன்
.
கள்ளரில் முத்தரையர் 




செட்டி 
~~~~~~~

எட்டுதல் என்பதன் வினையெச்சம். எட்டத்தில் உள்ள பொருளைக் கிட்டத்தில் கொண்டுவந்து தருபவன் எட்டி. எட்டியை இக்காலத்தில் செட்டி என்பர். பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.


செட்டி பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~


• நாயுடு பட்டம் – செட்டியார்
• தேவாங்கர் பட்டம் – செட்டியார்
• கள்ளர் பட்டம் - செட்டிரையன், செட்டியன் (செட்டிபட்டி ஊரில் மற்றும் பல பகுதிகளில் உள்ளனர்) 
• அகமுடையார் பட்டம் – செட்டியார்
• வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).
• வாணியச் செட்டி (செக்காட்டி எண்ணெய் விற்றல்)
• நாட்டுக் கோட்டைச் செட்டி ( வட்டிக்குப் பணம் கொடுத்தல்)
• நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்)
• காசுக்காரச் செட்டி (பொன்மணி வாணிகம், காசுமாற்று)
• பேரிச் செட்டி (ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்)
• கரையான் (பட்டணவன், பரவன்) செட்டி- கடல் வாணிகமும் மீன் வாணிகமும்
• மளிகைச் செட்டி (பலசரக்கு விற்பனை)


படையாட்சி
~~~~~~~~~

படையாட்சி என்றால் படைவீரன் என்று பொருள் படும்.


படையாட்சி பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• பள்ளி பட்டம் – படையாட்சி
• சவளைக்காரர் பட்டம் – படையாட்சி
• கள்ளர் பட்டம் – படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
• இருளர் பட்டம் – தேன் படையாட்சி
.


நாயகன், நாயக்கன் (அ) நாயகர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நாயகன் என்பது சிறந்த கடல் வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம். இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன் பட்டம் நாயகன் (சுக்கிர. 74.) மற்றும் பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன் பட்டம் நாயகன் (சுக்கிர. 27.) (ஒரு தலைமை உத்தியோகஸ்தன்)

நாயகன், நாயக்கன் பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


• வடுகர் பட்டம் – நாயக்கன்
• பள்ளி பட்டம் – நாயக்கன்
• இருளர் பட்டம் – நாயக்கன்
• கள்ளர் பட்டம் - நாயகவடியார் (நாயகன் + வாடியார்), சோழநாயகன், சோமநாயக்கன், சோமணநாயக்கன், சோநாயகன், தண்டநாயகன்.
• அகமுடையார் பட்டம் - நாயக்கன் 
• தேன்குறுமர் (காட்டுநாயக்கன்) பட்டம் - வேட்டைக்காரன் நாயக்கன், வேட நாயக்கன், சிகாரி நாயக்கன், நாயக்கன்
• வேட்டுவன் பட்டம் – நாயக்கன்

கள்ளரில் நாயக்கர் ( அய்யம்பேட்டை கள்ளர் ஜமீன் சாவடி நாயக்கர் பட்டம் உடையவர்கள் )




முதலியான்
~~~~~~~~~

சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும். இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது.

தஞ்சாவூர் சிங்கவளநாட்டில்  உள்ள அரசுக்காரத்தெரு கள்ளர் மரபை சேர்ந்த முதலியார்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சன்னாசியம்மன் கோயில் நாட்டு திருவிழாவில் நாட்டு அரசு என்ற மரியாதை சுழற்சி முறையில் தரப்படுகிறது. மேலும் சோழ பேரரசர்கள் கட்டிய கோயில் தஞ்சை காவல் தெய்வமாக தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும்   மரியாதை தரப்படுகிறது.

முதலியார் பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• இலங்கை அரசாங்கத்தார் வழங்கும் ஒரு பட்டப்பெயர்
• வேளாளர் பட்டம் – முதலியார்
• செங்குந்தர் பட்டம் – முதலியார்
• ஜைனர் பட்டம் – முதலியார்
• கள்ளர் பட்டம் - முதலியார் (முதலிப்பட்டி மற்றும் பல பகுதிகளில்)
• அகமுடையார் பட்டம் - முதலியார்
.
கள்ளரில் முதலியார் ( தொண்டைமான் மன்னரின் படை தளபதியாக இருந்த சுப்ரமணிய முதலியார்)


உடையார் 
~~~~~~~~~

உடையவன், உரிமைக்காரன், அரசன், தலைவன் என்று பொருள். உடையான் என்ற சொல் உடைமைப் பொருளைச் சுட்டினாலும், நிலம் உடையவன் என்ற அளவிலேயே கல்வெட்டுக்களில் பயின்றுவருகிறது. கோயில்களில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களும் உடையார் என்ற சிறப்புப்பட்டதைப் பெற்றிருந்தமையும் கல்வட்டுகளில் காணலாம். அரசர்கள் தங்களை உடையார் என்ற சிறப்பு பெயராலேயே அழைத்துக்கொண்டமை நிலவுடமைப் பகுதியின் முதல்வனாக மன்னர்கள் விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன. முதலாம் ராசராசன் காலத்தில் தொடங்கி, முதல் குலோத்துங்கன் ஈறாக " உடையார் " என்ற சொல்லை பெயருக்கு முன்னர் பயன்படுத்தினர்.

உடையார் பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• நத்தமான், மலையமான் பட்டம் – உடையார்
• கள்ளர் பட்டம் - உடையார், உடையவர், அரசுக்கு உடையார், அன்ன உடையார், உலகு உடையார், உழுவு உடையார், பனை உடையார், பசை உடையார், வேணு உடையார்.
• அகமுடையார் பட்டம் - உடையார்
• மறவர் பட்டம் – உடையார், உடையணர்


சேர்வை
~~~~~~~

சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை எனவும், அரசு சேவகம் (சேவை) என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் கோசாலைக்காவல், கணக்காயர், பண்டாரக்காவல், படிக்காவல், மேல்காவல், சாலைக்காவல் ஆகிய வேலைகளை செய்தவர்கள் கோசாலைக்காவல் சேர்வை, பண்டாரக்காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர். அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு. சேர்வைக்காரர் பட்டம் உள்ளவர்களின் சமுதாயத்தை பொருத்து அவர்களின் பதவியும், பதவியை பொருத்து அவர்களின் அதிகாரமும் மாறுபடும்.


சேர்வை என்ற பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


• கள்ளர் பட்டம் – சேர்வை, சேர்வைகாரர் (சேர்வைக்கட்டளை, சேர்வைக்காரங்கட்டளை மற்றும் பல பகுதிகளில்)
• மறவர் பட்டம் – சேர்வை
• வலையர் பட்டம் – சேர்வை
• கோனார் பட்டம் – சேர்வை
• அகமுடையார் பட்டம் – சேர்வை
• தொட்டிய நாயக்கர் பட்டம் – சேர்வை
• சாணார் பட்டம் – சேர்வை
• பள்ளி பட்டம் – சேர்வை

கள்ளரில் மாவீரர் கருவபாண்டியன் சேர்வை



அம்பலகாரன்
~~~~~~~~~~~
அம்பலகாரன் கிராம சபைத் தலைவன் ஆவான்.


அம்பலகாரன் என்ற பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• கள்ளர் பட்டம் – அம்பலகாரன், அம்பலம், சோழங்க தேவ அம்பலம்
• மறவர் பட்டம் – அம்பலகாரன்
• வலையர் பட்டம் – அம்பலகாரன்
.
உஞ்சனை இராம. இராமசாமி அம்பலகாரர்



பிள்ளை
~~~~~~~

மன்னர் ஆட்சிக்காலத்தில் கணக்கெழுதி வந்த கணக்கர்கள் ‘பிள்ளை’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையிலேயே ‘கணக்கப்பிள்ளை’ என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. ஆர் விகுதியிட்டு ‘பிள்ளையார்’ என்ற பதவிப்பெயர் இருந்ததை சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. பிள்ளை என்ற பட்டத்தை மரியாதைக்குரியதாகக் கருதி பெயருடன் சேர்த்து பிள்ளைவாள் என்றும் விளிப்பதுண்டு.

பிள்ளை என்ற பட்டம் உள்ள சாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

• கோனார் பட்டம் - பிள்ளை 
• இசை வேளாளர் பட்டம் – பிள்ளை
• ஆதிதிராவிடர் பட்டம் – பிள்ளை
• பள்ளி பட்டம் – பிள்ளை
• அகமுடையார் – பிள்ளை
• கள்ளர் - பிள்ளை, அரியப்பிள்ளை, கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை, பிள்ளைராயர்
• மறவர் பட்டம் – மறவ பிள்ளை
.
கள்ளரில் அறந்தாங்கி நகரசபை உறுப்பினர் திரு. பாவாடை கண்டபிள்ளை, புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை




பட்டங்கட்டியார்
~~~~~~~~~~~~

பட்டஞ்சூடிய அதிகாரி, தலைவருக்குரிய பட்டம்.


பட்டங்கட்டியார் பட்டம் உள்ள சாதிகள் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடசர் பட்டம் - பட்டங்கட்டியார்
பரதவர் பட்டம் - பட்டங்கட்டியார்
கள்ளர் பட்டம் - பட்டங்கட்டியார்
மறவர் பட்டம் - பட்டங்கட்டியார்



நாட்டார்


நட்டாழ்வார், நாட்டார், நாட்டான், நாடாவி  என்பது கள்ளரில் ஒரு பட்டம் 


நாடான் பட்டம் பூண்டு திருச்சி, முசிறியில் வாழும் கள்ளர்கள்:- (1906,Trichy Gazetteer).  காசிநாடான், சோமநாட்டான், நாடாள்வான், சக்கரையப்பநாடாள்வான், அருமைநாட்டார், அருவநாட்டார், அல்லிநாடாள்வார், ஊமத்தநாட்டார், ஊரத்திநாட்டார், சிங்கநாட்டார், சேனைநாட்டார், சோழங்கநாட்டார், நாடாவி என்ற பட்டம் உடையவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். லால்குடி அருகில் உள்ள மேட்டுப்பட்டி,லால்குடி,நத்தம், மாங்குடி இன்றளவும் வாழ்கிறார்கள்.




சானவராயர்




சேனைத்தலைவன் :  என்பது இன்று சாதியாக உள்ளது. ஆனால் இதுவும் பல சாதியினர்க்கு பட்டமாகவும் உள்ளது.

நம்முடைய கள்ளர் குலத்திலும் சேனைகொண்டான், சேனைத்தலைவன், சேனைநாடான் என்ற பட்டம் உடையவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

பட்டங்களை சாதியாகி மாற்றியுள்ளனர். அப்படி சாதியாகாமல் இன்றும் வேறு வேறு சாதிகளுக்கு இடையில் வழக்கத்திலுள்ள பட்டங்களை சாதிப் பெயராகக் கருதமுடியாது.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்