திங்கள், 12 மார்ச், 2018

தென்னமநாடு - கள்ளர் நாடு




தென்னம நாடு தஞ்சை கள்ளர் நாட்டில் ஒன்று, `தென்னம நாடு' என்பது ஒரத்தநாடு தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராம ஊராட்சி. ஆனாலும், அழகிய வரலாறு ஒன்று இதற்கு இருக்கிறது. 

கி.பி. 883ஆம் ஆண்டில், பாண்டிய மன்னன் பாண்டி உண்டான், இங்கு ஒரு சிவன் கோவிலை கட்டினான். பிறகு, பாண்டியர்களின் பெயரான `தென்னவன் நாடு' என்று அழைக்கப்பட்டு, இப்போது தென்னமநாடு என்று அழைக்கப்படுகிறது.



பல்லவராயர், நந்தியன் என்ற கள்ளர்கள் பட்டங்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. 

இப்பட்டமுடையோர்  தென்னமநாட்டில் மிகுதியாக வாழுகின்றனர். மேலும் , புள்ளவராயன்  பட்டமுடையோர், தற்போது சேதிராயர் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும் , திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர். 




தென்னமநாடு அச்சுத்தேர் 






ஐயா கோவிந்தராஜன் தென்கொண்டார் அவர்களின் தென்னமநாட்டின் பழைய நினைவுகள்.


தென்னமநாட்டில், தற்போது சொசைட்டி, நூலகம், ஊராட்சி மன்ற  அலுவலகம் உள்ள இடத்தில் ஒரு ஓட்டு கட்டிடம் இருந்தது. அதில் இரண்டு பெரிய அறை + ஒரு சிறிய அறை இருந்தது. சிறிய அறை  ஆபீஸ் ரூம். ஒரு பெரிய அறையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிளாசும், இன்னொரு பெரிய அறையில்  மற்றவர்களின் கிளாசும் நடந்தது. தீண்டாமை இருந்ததால் அப்படி ஒரு ஏற்பாடு.
அது ஒரு போர்டு ஆரம்ப பள்ளி (Board Elementary School).

நான் 1940 ல் பிறந்தவன். அந்த பள்ளியில் சேர்த்து விட்டார்கள். நான் சேர்ந்த ஒரு வாரத்திற்குள், தலித் மாணவர்களும், மற்ற மாணவர்களும் தொட்டுக் கொண்டது பெரிய பிரச்சனை ஆனது. அதனால் அந்த பள்ளிக்கூடம் இழுத்து மூடப்பட்டது. அந்த பள்ளிக்கூடத்தை தலித்துகள் வாழும் பகுதியில் அமைத்து , தேவையானால் அங்கே போய் படியுங்கள் என சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த பள்ளிக்கூடத்திற்கு தலித்ததுகளைத் தவிர வேறு யாரும் தங்கள் குழந்தைகளை அங்கே  அனுப்ப மறுத்து விட்டார்கள்.  அந்த பள்ளி தான் தற்போது தோகைமலை அய்யனார் கோவிலுக்கு வடபுறம் உள்ளது.

ஆகவே, நாங்கள் எல்லாம் ஜாலியாக மாடு மேய்க்க கிளம்பி விட்டோம். நாட்கள் ஓடின.
அப்போது வயதான, ஓய்வு பெற்ற, ஆசிரியர்,  ஒரு அய்யங்கார் (பெயர் சீனிவாச அய்யங்கார் என ஞாபகம்), இங்கு பள்ளிக்கூடம் இல்லாததை அறிந்து ,  அப்போது ஊர் பெரியவராக இருத்த  அண்ணாமலை தென்கொண்டாரை சந்தித்து, இங்கு பள்ளிக கூடம் இல்லாததால்  நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன். அதற்கான வசதிகளை செய்து தாருங்கள் என கேட்டிருக்கிறார். உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருகிறேன். தங்கிக் கொள்ளுங்கள். ஆனால் படிப்பதற்கு  எவனும் வரமாட்மான். அதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என அண்ணாமலை தென்கொண்டார் சொல்லியிருக்கிறார்.  அந்த வயதான அய்யங்கார் வீடு வீடாக சென்று, கஷ்டப்பட்டு ஒரு சிலரை பிடித்து வந்து மணலில்,  ஆள்காட்டி விரலால் அ னா ஆ வன்னா எழுத கற்றுக் கொடுத்தார். அப்படி அவரிடம் மாட்டிக கொண்டவர்களில் நானும் ஒருவன்.

அந்த அய்யங்காரின் முயற்சியால், அண்ணாமலை தெனகொண்டாரை தாளாளராக கொண்ட அரசு உதவிபெற்ற "ஸ்ரீ ராமவிலாஸ் ஆரம்ப்ப்பள்ளி" உறுதி செய்யப் பட்டு, முன்பு பூட்டப்பட்ட அந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு  அங்கே இந்த "ஸ்ரீ ராமவிலாஸ் எலிமெண்ட்ரி ஸ்கூல்" நடந்தது. அந்த பள்ளிக்கு அண்ணாமல தென்கொண்டாருக்கு பிறகு அவருடைய மகன் நாராயணசாமி தென்கொண்டார் தாளாளராக இருந்தார்.அந்த பள்ளயில் நான் 5 வது வரை ( 1946-47 to 1950-51) படித்தேன். "கட்ட வாத்தியார்" என்ற ஆசிரியர் இருந்த ஞாபகம் இருக்கிறது.


அந்த கால கட்டத்தில் திரு. சிவசாமி மாதுறாயர், திரு. வரதராஜன் மாதுராயர் ஆகிய இருவரும் ஆசிரியர் பணிக்காக  மண்டலக்கோட்டைக்கு நடந்து செல்வதை பார்த்திருக்கிறேன். மேலத்தெருவில் இருந்து திரு அம்மையப்பன் சேதுறாயர் ஆசிரியராக பணியில் இருந்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன். நான் ஒரத்தநாடு பள்ளிக்கு சென்ற பிறகு தான் (1950-51 க்கு பிறகு) ஸ்ரீ ராமவிலாஸ் பள்ளியின் தாளாளராக திரு சிவசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு பள்ளிக்கூடமும் தற்போது உள்ள  இடத்திற்கு மாற்றப்பட்டது. அண்ணன் என்று எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு. சிவசாமி அவர்கள், பல, பல இன்னல்களுக்கிடையே தான்  இந்த பள்ளியை நடத்தி வந்தார் என்பது தான் உண்மை. அவருக்கு நினைவகம் அமைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , இந்த பள்ளயின் ஆரம்ப கால மாணவன் என்ற முறையில், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொளகிறேன். மேலத்தெருவில் உள்ள பள்ளிக்கூடம் பிற்காலத்தில் தான் வந்தது.











தோ.தனசேகரன் ராஜப்பிரியர்



தென்னவை கீழ்பாதி மக்களால் கிராமத்து கோவிலுக்கு வழங்கப்பட்ட குதிரை வாகனம்






ஶ்ரீ ஊமை வீரனார் ஆலயம், தென்னமநாடு







தென்கொண்டார், சாளுவர், முனையதிரியர் ஆகிய பட்டப்பெயர் கொண்டவர்களின் குலதெய்வம் ஶ்ரீ ஊமை வீரனாருக்கு புதிய இடத்தில்,புதிய ஆலயம் அமைக்கும் பணி 2010 -ம் ஆண்டு தொடங்கிய,சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் சிலவில் இரண்டு நிலை கோபுரத்துடன் கூடிய அற்புதமான ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் .




தென்னமநாடு 1960 காலகட்டத்தில் தற்போது உள்ள சிவன் கோவில் புத்தாக நிர்மாணிக்கப்பட்டபோது பங்குனி உத்திர திருவிழாவில் 


காலில் பாதிரி கட்டையுடன் வேல்காவடி அ.கோபாலசாமி தென்கொண்டார், பால் குடம் கோ,கலியபெருமாள் சாளுவர்.




1962 ல் திமுக நடத்திய விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு மாதம் திருச்சி ஜெயிலில் இருந்து திரும்பியபுலவர் த. தோழப்பன் சேதுராயர், து. வெள்ளச்சாமி சேதுராயர், கி.குமரசாமி சேதுராயர் ஆகியோருக்கு தென்னமநாடு வல்லம் ரோட்டில் வரவேற்பு கொடுத்து, ஊர்வலமாக அழைத்து சென்று, துரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதுசமயம் எடுத்தவை 













வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்