திங்கள், 29 ஜனவரி, 2018

கள்வன் /கள்ளன் / கல்லன் - பெயர்க்காரணம்கள்ளர் என்று ஏன் பெயர் வந்தது?

கள்ளர் குடியினர் பாலை நிலத்தில் தோன்றியவர்களாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதாக கூறிகிறார்கள். ஆனால் பாலை என்பது தனி நிலம் அல்ல. இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை நிலம் கோடை காலத்தில் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"சிலப்பதிகாரம்

தமிழ்நாட்டு நிலம் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது.

குறிஞ்சியில் மக்கள் உழவில்லா வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். இதனால் தான் முல்லை நிலத்தினை அடிப்படையாக கொண்டு கள்ளர்கள் "காட்டுப்படை" என்று சில ஆய்வாளர்கள் எழுதுவதைக் காணமுடிகிறது.

முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது.

முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின.

"களவு" மணம் (காதல்) என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் (பெற்றோர் நடத்தி வைக்கும்) ஏற்பட்டது. இன்று வரை கள்ளர்கள் காதல் திருமணத்தை ஆதரிப்பதில்லைை என்பதை நாம் அறிந்த்தே.
கலித்தொகையில் முல்லைக்கலியி ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல், அந்த நடைமுறை கடந்த நூற்றாண்டு வரை கள்ளர்களிடம் இருந்த பழக்கமாகும்.  இன்றும் இடையர்கள் (கோனார்) ஏறு தழுவுதலில் யாரும் ஈடுபடுவதில்லை, அதற்கு மாற்றாக ஏறு தழுவுதலில் ஈடுபடும் காளைகளை அதிகம் வளர்பவர்களாக உள்ளனர். இன்றும் ஏறுதழுவல் (மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு) தமிழகத்தில் கள்ளர் வாழும் பகுதில் 70  சதவீதத்திற்கு அதிகமா நடைபெறுகிறது. ஆதாரங்கள் : 👉👉👉 கள்ளர் ஜல்லிக்கட்டுதனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான்.

ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. 

"ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்" - அகநானூறு - 342. குறிஞ்சி - பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு தலைவன் பாண்டியன் என்ற குறிஞ்சி பாடல் நமக்கு இதனை உணர்த்தும்.

வெட்சிப்போர் முல்லை நிலத்தில் தோற்றம் கொண்டது போன்றே நடுகல் எடுக்கும் வழக்கமும் இந்நிலத்திலேயே தோற்றம் பெற்றது. தமிழர் பழக்கமாக இருந்தாலும் அதிகமாக கள்ளர்கள், நடுகல் எடுக்கும் பழக்கம் தஞ்சை, மதுரை உசிலம்பட்டி பகுதியில் நாம் காணமுடியும். குறிஞ்சி மற்றும் முல்லை நிலப்பகுதியான தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வெட்சிப்போர் நடுகல்லில் "கள்ளர் " என்ற வருவதை காணமுடிகிறது.   
தருமபுரி நடுகல்


தருமபுரி நடுகல்

தஞ்சை கள்ளர் நாடு "தந்திநாடு” – ஆலம்பாக்கம்சிவகங்கை, கள்ளர் நாடு, கீழக்கோட்டை குப்பான் அம்பலகாரர்ஆரியபட்டி மாவீரர் கருத்தனஞ்சித்தேவன்

இதுபோல் பல நடுகல்கள் கள்ளர் நாடுகளில் கள்ளர்களுக்கு உள்ளன.

தமிழகத்தில் சிற்றரசர்களும், வேளிர்களும் உருவானது முல்லை நிலத்தில்தான். அதனால் தான் தமிழ் மொழியில் முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையே அதிகம்.

புறப்பொருள் வெண்பாமாலை ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்பதன் உண்மைப் பொருள், ‘கல் என்ற குறிஞ்சி வாழ்வு தோன்றி, மண் என்ற மருத, நெய்தல் வாழ்வு தோன்றாத காலத்தில் தோன்றியது’ என்பதாகும்.

குறிஞ்சிநிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும் கொண்டனர், இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்.

முல்லைநிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர்.; இதனாலேயே, திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்) , இவர்கள் தான் ஆதி குடிகளின் இனத் தலைமை.

முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்

குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

"மால்" = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு. வி. கலியாணசுந்தரனார் கூறுகிறார். சோழர்களுக்கு "மால்" எனும் பட்டங்கள் வழங்கலாயிற்று. கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று "மால்"


மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி.

முல்லைக்குரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது. “ மாயோன் மேய காடுறை உலகமும் “ என்பது நூற்பா, திருமாலின் பெயர் கள்வன் (கருமை ).

கள் - கள்வன் = கரியவன்.
கள் - காள் - காழ் = கருமை.

காள் - காளி. காளி - வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது

கள்ளர்கள் போர்களில் தங்கள்  வெற்றிக்கு வணங்கிய தெய்வம் கொற்றவ்வை (காளி). கள்ளர்களுக்கு "கொற்றவர்" என்று பெயர் என்பதை நாம் அறிந்த்தே.

பெரியாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்."வெள்ளைவிளிசங்கு வெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் 

உள்ளவிடம் வினவில் உமக்கு இறைவம்மின்சுவடுரைக்கேன் 
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று 
கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர் "

மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனன்,  கள்ளப்படை கொண்டு அதாவது கிருஷ்ணரின் படை கொண்டு வெற்றி பெறுகிறார்.

அதாவது கிருஷ்ணர் / திருமால், இங்கு கள்ளர் என்ற திருநாமம் பெறுகிறான். 

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலை நிலத்தில் கள்ளகள் தோன்றியதாக கூறப்பட்டாலும், கள்ளர்கள் முல்லை நில மக்களே. அதனால் தான் குறிஞ்சியின் அடர்காட்டின் நிறமான கருமையையும், குறிஞ்சியின் தெய்வமான திருமாலின் பெயரையும் குறிக்கும் கள்ளர் என்ற பெயர் பெற்றனர். கள் + அர் ==> கருமை + மக்கள்.

முல்லை காட்டின் அடர் “கருமை" யை அடிப்படையாக கொண்டு தோன்றிய சொற்களே மாயோன் (திருமால்), கொற்றவை (காளி), கள்வன் (கள்ளன்) ஆகும். 

கள்ளர்கள் சைவ சமயமாக இருந்தலும், சில கள்ளர் பிரிவுகள் வைணவ சமயத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள். 

"தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்" என்று வள்ளி நாயகியைக் கள்ளச் சிறுமியென்று கூறுகிறார்  - அருணகிரியார். 


மறைந்து நிற்பவர்களைக் கள்ளர் என்று சொல்வது ஒரு வழக்கம். திருமாலுக்குப் பெண்ணாகப் பிறந்தவள் வள்ளி. அவள் இப்போது குறவர்களுக்கு  இடையில் மறைவாக இருக்கிருள். திருமாலினுடைய மகளாகிய வள்ளி நாயகி தன்னலே ஆட்கொள்வதற்குரியவள் என்று முருகன் அறிவான். அந்தப் பொருள் மறைவாக வள்ளி மலையில் இருக்கிற தென்பதை நாரத முனிவர் வந்து கூறுகிறார். மேலும் கள்ள சிறுமி என்பதை திருமாலினுடைய மகள் என்பதையும் குறிக்கும்.

இன்று கள்ளர் என்பதை திருடன் என்று இழிவாக கூறினாலும், அன்று கரியவன், திருமால், கவர்தல் (வெட்சித் திணை -பகை நாட்டினரின் ஆ நிரைகளை கவர்ந்து வந்து காத்தல் ) என்றே பொருள்.

கள்ளர்கள் மன்னர்களாக,  அரையர்களாக, பாளையகாரர்களாக, ஜமீனகளாக, அம்பலக்கார்ர்களாக  இருந்தபோதும் மேலும் ஆங்கிலேயரின்  ஒடுக்குமுறையான குற்றபரம்பரை சட்டம் கொண்டுவந்த போதும் கள்ளர்கள் தங்கள் குடியின் பெயரை மாற்றங்கள் செய்யவில்லை. தங்கள் குடி பெயர் இழி சொல்லாக இருந்திருந்தால், தங்கள் குல உயர்வுக்காக தங்கள் பெயரை மாற்றம் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை. மேலும் தமிழக அரசு கள்ளர்களுக்கு "தேவர்" என்று சாதி அரசாணை இயற்றிய போதும் அதை தடுத்து நிறுத்தியவர்கள் கள்ளர்கள்.

கள்வன் என்பது உயர் சொல்லாக இருந்ததாலேதான் மன்னர்கள் அதை உயர்வாக தங்கள் முன் சேர்த்துக்கொண்டனர்.


1) கள்வர் கோமான் புல்லி

2) கள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்)

3) ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்

4) ஸ்ரீ கள்ள சோழன்,

5) ஸ்ரீ கள்வன் ராஜராஜன்

6) ஸ்ரீ கள்ள திருமங்கையாழ்வார்

7) நீகார்யம் - உடையார் உடையான் கள்வன் சோழன்

8) ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரி வேங்கை குத்தியது

9) கள்ள பெருமானார்

10) கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான்


முல்லைத் திணைக்கும் கள்ளர்களுக்குமான தொடர்பு:- 

முல்லைத் நிலத்தலைவர்கள்: 


குறும்பொறை நாடன், தோன்றல் என அழைக்கப்பட்டனர்; 
கள்ளர்களின் பட்டங்களான காவிரிநாடன், அருமைநாடன், அருவநாடன், ஊமத்தநாடன், ஊரத்திநாடன், காசிநாடன், சிங்கநாடன், சேனைநாடன், சோமநாடன், விசல்நாடன், பாலைநாடன், மழநாடன், மாநாடன், மேல்நாடன், நாகநாடன், தளிநாடன், பூழிநாடன், பழைசைநாடன், பல்லவநாடன் என்பது இதன் தொடர்ச்சியாகவே அமைந்தது.


முல்லை நில மக்கள்:-


உயர்ந்தோர்:-
குறும்பொறைநாடன், அண்ணல், தோன்றல் மனைவி, கிழத்தி, 


தாழ்ந்தோர்:- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர், பொதுவியர், கோவித்தியர்


தொல்காப்பியர் "ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர். ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே" என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.


இடையர், இடைச்சியர் என்பது கோனார்களை குறிக்கும். ஆனால் ஆயர், ஆய்ச்சியர் என்பது முல்லை நில மக்களின் பொது பெயரே. ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் என வரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர்களாகும் என்று தன்னுடைய தொல்காப்பியம் வரலாறு என்ற நூலில்  குறிப்பிடுகிறார், அண்ணுமலைப் பல்கலைக்கழகம் தமிழாராய்ச்சித் துறையின் தலைவர், வித்வான் க. வெள்ளைவாரணன்


ஆ < ஆய் < ஆயர் = பொதுவர், ஆ’ என்பது பசு. ‘ஆயம்’ என்பது ‘பசுத்திரளை ஓம்பி வாழ்ந்தவர்’ மற்றும் பசுத்திரளை பற்றி வாழ்ந்தவர்.குறிச்சி, முல்லை நில மக்கள் கள்ளர்கள் என்பதற்கு ஏற்ப, முல்லை நில மக்களின் பெயரான "ஆய்" என்ற பெயர்களை கள்ளர் இன ஆண்கள், பெண்கள் இன்றும் கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் பத்தினி பெயர் ராணி ரெங்கம்மாஆய், ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பத்தினி பெயர் ராணி ஆயிஅம்மாள் ஆய் ஆகும். கள்ளர் வீட்டு பெண்களை ஆய், நாச்சியார் என்றே வீட்டில் அழைப்பது வழக்கமாகும்.

ஆய் குழி அகுசி ஏற்று, ஆய் அடும்பன், ஆய் நெடுஞ செட் சோழ தகையன், ஆய் கீழ் நன்னனால், ஆய் பேருண் தோன்னொஞ்சி, ஆய்வே நலங்கிள்ளி என்ற பெயருடைய சோழ மன்னர்களும் இருந்தனர்.

ஆய் என்ற மன்னன் பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர். வேள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறான். பொதியமலை வாழ்ந்த கள்ளர்கள் விசங்குநாடு கள்ளர் என்று அழைக்கப்பட்டனர். கள்ளர்களின் பட்டங்களில் ஒன்று பொதியர்.
ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் தாத்தாவின் அப்பாவுக்கு சீயான் என பயன்படுத்துகின்றனர். தமிழ் அகராதி சேயோன் மருவி சியான் என்று ஆனது என்கிறது . சீயான் என்ற சொல் கள்ளர் மக்களிடம் மட்டுமே இன்றும் வழக்கத்திலுள்ளது.


ஆய் சாம்ராட்சியம்
சேர நாடான வேநாட்டு பல்லவரால் ஆட்சி செய்யப்பட்டதனால் அவர்கள்  பெயர் கேரள பல்லவ அரையர் எனப்பட்டது. அவர்கள் வேள நாட்டார் என்றும் , பல்லவரின் ஆண் வாரிசாக வேள நாட்டார் (வேளிர்) இன குழுவிலும், சோழரின் பெண் வாரிசாக ( சூரிய குலம், சந்திர ஆதித்த குலத்திலும் ) வருகிறார்கள். ராஐ ராஐ சோழனின் தகப்பனார் உத்தம சோழன் கொல்லத்தின் மன்னனின் மகள் வேளிர் குல இளவரசியை மணந்தார். இதன் பின் இப்பகுதி ஆய் சாம்ராட்சியம் எனவும் ராஐராஐ தென்னாடு எனவும் ஆனது.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கள்ளர் குலத்தினரின் மக்கள் தொகை

முக்குலோத்தோரில் கள்ளர் குல மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் 

1) தஞ்சாவூர்

2) மதுரை 3) புதுக்கோட்டை 


4) திருநெல்வேலி 5) இராமநாதபுரம்

முக்குலத்தோர் மக்கள் தொகை பொதுவாகஇந்திய நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அப்போதைய பிரிட்டிஸ் கவர்னர் ஜென்ரல் ஆப் இந்தியா ரிப்பன் பிரபுவால் கிபி1881ல் வெளியிடப்பட்டது.

முதன் முதலாக இந்தியாவில் எத்தனை பழங்குடிகள்,சாதிகள் மற்றும் அவர்களின் உட்பிரிவுகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த தொகுதியின் முதல் பகுதியின் முதல் பாகத்தில் கள்ளர்,மறவர்,அகம்படியர்களை பற்றிய தகவல்

கள்ளர். : 3,97,873
மறவர் : 2,56,304
அகம்படியர்: 3,02,338

மொத்தம் : 9,56,515

அப்போதைய இந்திய மக்கள் தொகை : 25,38,91,121

அதில் சதவீத அடிப்படையில்

கள்ளர். : 1.567%
மறவர். :1.009%
அகம்படியர் : 1.190%

மொத்தம் : 3.766%


1891 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மறவர் அதிகபடியாக கூடியும், அகம்படியர்கள் அதிகப்படியாக குறைந்தும் ஆவரேஜாக உள்ளனர். அதேபோல் கள்ளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து அந்த கணக்கு அப்படியே அகம்படியர்களுக்கு கூடுகிறது.

நன்றி
Census of British India 1881நன்றி 

உயர் திரு. சியம் குமார் சம்பட்டியார் 
உயர் திரு. சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

புதன், 24 ஜனவரி, 2018

விசங்குநாட்டுக்கள்ளர் / ஈசநாட்டுக்கள்ளர் / ஈசங்க நாட்டுக் கள்ளர் / ஈசநாட்டு கள்ளர்
ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர்.

இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக கள்ளப்பற்றும் & கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஆதாரமாக கள்ளர் பட்டங்களும் மற்றும் இங்கே உள்ள எல்லா பாளையக்காரர்களும் கள்ளர்களே. சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர்.

இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர்.

கொடி விளங்கும் தேரினையுடையவன் பாண்டிய மன்னன் ஆவான். அவனுடைய மலையென்று உரிமையுடன் போற்றப்பெறுவது பொதியமலை ஆகும். அகத்தியனார் இருந்து தமிழ்வளர்த்த பெருமை உடையது அது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர். சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய், திதியன் , ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர். 

நெடுஞ்செழியன் வெற்றி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இந்தப் பொதியமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். ஆய் அரசன் ஆண்ட பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாட்டுக் காட்டும். ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும் ( சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167). களக்காடு (சோரகாடவி) புலிகள்  சரணாலம் இங்கே உள்ளது. 

கிளை முறைகள் இல்லாத ஆறுபங்குநாட்டார்கள் எனப்படும் மறவர்கள் களக்காடு பகுதியில் என்றும் வாழ்கின்றனர். கரை முறைகளை வைத்தே உறவுமுறைகளை அறிந்துகொள்கிறார்கள். களக்காட்டில் பழமையான ஸ்ரீ நீலகண்ட சாஸ்தா அய்யனார், ஸ்ரீ வென்னி உடையார் சாஸ்தா (அய்யனார்) கோவில்கள் உள்ளன. 


மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக் களந்தை என்று அழைக்கப்பட்டது. களப்பாளன் (கூற்றுவன்) என்ற கள்ளர் குல குறுநில மன்னன் ஆடிமாதம் திருவாதிரை நட்சத்தில் பிறந்தவன்.சிறந்த சிவ பக்தியும் வீரமும்,கொடைத் தன்மையும் கொண்டவன். தன் வசமிருந்த நாடுகளை கூற்றங்களாக பிரித்து நல்லாட்சி வழங்கியமையால் கூற்றுவன் என்னும் சிறப்புப் பெயர் கொண்டான். களர் என்னும் தேவார சிவதலத்தையும், களமங்களம்,களக்குடி, களக்காடு முதலிய ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் வழிவந்த கள்ளர்கள் மரபோர் களப்பாளி, களப்பாளன், களந்தையாண்டான், கிளாக்கடையன், இருங்கள்ளன்என்ற பட்டங்களை கொண்டனர்.

இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். இங்கே வாழ்ந்த  மக்கள் (கள்ளர்கள்)  அங்கு மட்டுமே வாழ்ந்த அன்னத்தின் (விகங்கம்) பெயரால் விகங்கம் / விசங்கம் என்றும் மருவி பின்  விசங்குநாடு, ஈசங்கநாடு, ஈசநாடு கள்ளர் என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது.

அறந்தாங்கி தொண்டைமானாரின் முன்னோர் வாள்விட்ட பெருமாள் தொண்டைமானார் தன்னை விசங்க நாட்டு தொண்டைமானாக குறித்துள்ளார்.

கள்ளர்களின் பட்டங்களான பொதியர், அகத்தியர் என்பது அகத்தியரின் பொதியமலையின்,  பழைய எச்சங்களின் மிச்சமாக இருக்கலாம். பொதியர், அகத்தியர் பட்டமுடைய கள்ளர்கள் சோழமண்டலத்தில் என்றும் வாழ்ந்துவருகின்றனர்.


ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் -

தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), சோழங்கதேவர், இராசாளியார், பல்லவராயர், மழவராயர், நாட்டார், வன்னியர், அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், முத்தரையர், ஒண்டிப்புலியார், கடாரம்கொண்டார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்கொண்டர், நாடாவி என்று ஈராயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பட்டங்களை பெற்றுள்ளனர்..

சம்பட்டியார் என்பது ஒரு சாராருக்கு பட்டமென்றால், அவர்கள அதே சம்பட்டியார் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டார்கள். ஒரே பட்டம் உள்ளவர்கள் பங்காளிகள்.

குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன்), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:


கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917 ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது அதில் ஈசநாட்டுக்கள்ளர் பற்றி :


பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டு.தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...