திங்கள், 12 மார்ச், 2018

வல்லநாடு வரலாறு - வல்லநாட்டு கள்ளர்


புதுக்கோட்டை அரையர்கள் வல்லநாடு கள்ளர்கள் .

திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர் காலத்து அரங்குளலிங்கம் - பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீஅரங்குளலிங்கம் அம்பாள் வல்லநாட்டுதெய்வம். 

வல்லநாட்டு கள்ளர்களின் நாட்டு அம்பலமான வாண்டாகோட்டை அம்பலம் குடும்பத்திற்கே முதல் மரியாதை.


நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலும் வல்லநாட்டு கள்ளர்களின் நாட்டம்பலம் அதிகாரி என்ற பட்டமுடைய குடும்பம் மற்றும் வல்லநாடு பூவரசகுடி அம்பலம் குடும்பத்திற்கும்  சிறப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.


வல்லநாடு ஊரம்பலம் இராவ் சாஹிப் அருணாச்சல முட்டியாரின் சேவையை பாராட்டி மன்னர் தொண்டைமானால் இம்மரியாதை கொடுக்கப்பட்டது. 


புதுக்கோட்டை எனும் பெயர் 17 ஆம் நூற்றாண்டில் தான் தொண்டைமான்களால் உருவாக்கப்பட்டது, ஆனால் புதுக்கோட்டை எனும் பெயர் கல்வெட்டுகளில் (IPS618) பாண்டியர் காலத்தில் கிபி 1335 முதலே காணப்படுகிறது.


படைப்பற்று என்பது ஒரு நாட்டின் படைவீரர்களின் குடியிருப்புகள் என்பதை நாம் அறிந்ததே. வீரபாண்டிய தேவர் காலத்தில் பொ.ஆ 1335  ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் (IPS618) வல்லநாட்டில் இருந்த படைபற்றை பற்றி கூறுகிறது.

இந்த படைபற்றில் சிங்கமங்கலத்து அரையர்களுக்கும் புதுக்கோட்டை அரையர்களுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி கூறுகிறது.



கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்க சோழ மங்கல நாடாள்வான்


கள்ளப்பால் நாடு


பரகேசரி வர்ம சோழ ஆட்சி காலத்தில் கிபி 909 ல் புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட கல்வெட்டு (IPS 38) " வல்லநாட்டு கவிற்பா கள்ளப்பால் நாடாய் இசைந்த இந்நாட்டோம் கற்குறிச்சி " என வல்ல நாடு கள்ளர் நாடாக இருந்ததை குறிக்கின்றது.

                    திருக்கட்டளை - கற்குறிச்சி- 9 ஆம் நூற்றாண்டு




 பல்லவராயன்
கள்ளப்பால்
வல்லநாட்டு

வல்லநாட்டு கள்ளர்கள் 36 பட்டங்களுடன் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்கின்றனர். 

பட்டங்கள் :

வல்லநாட்டு கள்ளர் சமுதாய பட்டங்கள்: 

1), கண்டுவார்,

2), முட்டியார்,
3), சூரியர்,
4), சாமந்தர், 
5), வகுத்தான் , 
6), அகத்தியன், 
7), அதிகாரி, 
8), வெங்களப்பன், 
9), மாளுசுத்தியார்
10), விராசர் , 
11), நாட்டரையர், 
12), மழவராயர், 
13), சிவன்தாக்கியர், 
14), மன்னஞ்சேரி, 
15), கருப்பக் கள்ளன், 
16), சேரி, 
17), வன்னியர், 
18), நரங்கியர், 
19), வில்வராயர்....


வல்லநாட்டு கள்ளர் சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் கிராமங்கள் மற்றும் பட்டங்கள்:

தலைமைக் கிராமம்: பூவரசகுடி என்ற வல்லநாடு கிராமம்: கண்டுவார், முட்டியார், சூரியர் , சாமந்தர், வகுத்தான், வில்வராயர்...

வாண்டாகோட்டை கிராமம்:
அகத்தியன், அதிகாரி, விராசர்,

அழகம்பாள்புரம் கிராமம்:  
மாளுசுத்தியார், வெங்களப்பன்...

வல்லத்திராகோட்டை கிராமம்:  மாளுசுத்தியார், சிவன்தாக்கியர், சாமந்தர்...

பாலவாக்கம் கிராமம்: 
சாமந்தர், சிவன்தாக்கியர், கருப்பக் கள்ளன்...

ஆவுடையார்பட்டி கிராமம்: கண்டுவார், சிவன்தாக்கியர்...

கத்தக்குறிச்சி கிராமம்:
கண்டுவார், மன்னஞ்சேரி, சாமந்தர், சேரி, சிவன்தாக்கியர்...

முத்துப்பட்டினம் கிராமம்: கண்டுவார், வன்னியர்...

பாலையூர் கிராமம்: 
கண்டுவார், வன்னியர்,
மன்னஞ்சேரி...

கைக்குறிச்சி கிராமம்: 
நாட்டரையர், சூரியர்...

வம்பன் : சிவன்தாக்கியர், நரங்கியர், மழவராயர்...

மணியம்பலம் கிராமம்: மால்சுத்தியார், அதிகாரி, கருப்பக் கள்ளன், சூரியர்...

பெருங்குடி கிராமம்:  கண்டுவார், முட்டியார், சூரியர், சாமந்தர், சிவன்தாக்கியர்...

ஆதனூர்: கண்டுவார்...
வல்லநாட்டு கள்ளர்கள் வாழும் கிராமங்கள் .

பூவரசகுடி 
(தாய்கிராமம்-வல்லநாடு)

கைக்குறிச்சி, 

அழகம்பாள்புரம், 
வாண்டாகோட்டை, 
வல்லத்திராகோட்டை, 
மணியம்பலம், 
கூடலூர், 
பாலக்குடிப்பட்டி, 
பாலவாக்கம், 
நம்புகுழி, 
ஆவுடையாபட்டி, 
கத்தக்குறிச்சி, 
முத்துப்பட்டிணம், 
பாலையூர், 
மழவராயன்பட்டி, 
மாஞ்சன்விடுதி, 
வீரடிப்பட்டி, 
வம்பன்,
தம்பாக்குடிப்பட்டி (கொத்தக்கோட்டை), 
திருவரங்குளம், 
மிரட்டுநிலை, 
முனசந்தை, 
பெருங்குடி, 
ஆதனூர், 
மருதம்பட்டி,
திருவுடையப்பட்டி,
மணியம்பளம்,
வாண்டார்கோட்டை,
வல்லத்திராக்கோட்டை, 
மாஞ்சான்விடுதி 

வல்லநாட்டு கருப்பர் கோயில் :- இலங்கை அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டைமானின் குலதெய்வக் கோவில். 


வல்லநாட்டு கள்ளர் குல முட்டியார் உபயம்! 

வல்ல நாடு நாட்டார்கள்

வல்லநாட்டு கள்ளர்கள் திருவரங்குளம் அரங்குளமுடையார் கோயிலில் கூடி சபைகளை நடத்துகின்றனர். இக்கோயிலில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய செலவுகளை ஏற்கின்றனர்.( Manual of pudukkottai state 1910) 



சிவகங்கை சீமையில் உள்ள கள்ளர் நாடுகளுள் ஒன்றான பட்டமங்கல நாட்டார்கள் கிபி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாட்டில் இருந்து பட்டமங்கலத்தில் குடியேறி வாழத்தொடங்கினர்.

பட்டமங்கலத்தில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் சூரியத்தொண்டைமான். சிவகங்கை சீமை வரலாற்றில் புகழ்பெற்ற வைத்தியலிங்க தொண்டைமானின் தந்தையாவார்.

சூரியத்தொண்டைமான் வளர்ந்தவுடன் தனது முன்னோரின் வரலாற்றை தெரிந்து கொண்டு, வல்லநாட்டில் உள்ள கருப்பரை தரிசித்து, கருப்பரின் நினைவாக சில ஆயுதங்களை பட்டமங்கலத்துக்கு எடுத்து சென்று கருப்பராக நினைத்து வழிபட்டார். இன்றும் அவர் வணங்கிய ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறுகிறது. வல்லநாட்டு கருப்பர் கோயில் திருவிழாக்களிலும் இவரது வாரிசுகள் பங்கு கொள்கின்றனர்.


பட்டமங்கலம்நாடு பெரிய அம்பலகாரர் தெய்வத்திரு சூரியன் அம்பலம் வைத்திலிங்க தொண்டைமானின் நேரடி வம்சாவளி.

பட்டமங்கலம் நாட்டில் வல்லநாட்டுக்கள்ளருக்கே முதல் மரியாதை. முட்டியார் பட்டம் உடையவர்கள் அதை பெறுகிறார்கள். இவர்கள்   புதுக்கோட்டை பூவரசகுடி (வல்லத்திராக்கோட்டை பக்கத்தில்) பகுதியில் வசிக்கிறார்கள்.


கவி நாடு மற்றும் கற்குறிச்சி நாடுகள் கள்ளர் நாடான வல்லநாட்டின் பகுதிகள் என குறிக்கப்படுகிறது.  கவிராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இங்கு வாழ்கின்றனர். கவி நாட்டின் அரையர்கள் ஆவார்கள்.


வல்லநாட்டுக்கருப்பர் கோவிலில் மாவீரர் வைத்திலிங்கத்தொண்டைமானின் சிலை















பட்டமங்கலம் புறவி எடுப்பு திருவிழா வல்லநாட்டுக்கள்ளர் தலைமையில்


கவிர்நாட்டு கண்மாய்:










புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய கண்மாய் இது. அப்பகுதியில் மிகப்பெரிய பாசனத்திற்கு இக்குமிழித்தூம்பு உதவியிருக்கிறது. முற்கால பாண்டியரான மாறஞ்சடையனின் கல்வெட்டு இக்குமிழியில் உள்ளது. இக்கல்வெட்டு அப்பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி 772 ல் வெட்டப்பட்டுள்ளது. இந்தமடையினை வல்லநாட்டு கவிர்பால் மூதாண்டி பெருந்திணை வெண்கண் எனும் பெருந்தகை ஒருவர் இக்குமிழியை ஊருக்காய் அமைத்து தருகிறார்.

இக்காலத்திய பாண்டியர்களின் கல்வெட்டு வட்டெழுத்திலேயே இருக்கும், ஆனால் இக்கல்வெட்டு தமிழிலேயே உள்ளது தனிச்சிறப்பு. பொதுவாய் ராஜராஜசோழன் தான் பாண்டிமண்டலத்தில் வட்டெழுத்தை ஒழித்து வரிவடிவத்தை மாற்றியதாய் கூறுவர். ஆனால் அவருக்கு 200 வருடம் முன்பே பாண்டியர் தமிழ் வரிவடிவத்தில் எழுதியுள்ளனர்.

இக்கண்மாய் குறித்த ராஜராஜன் கல்வெட்டு திருக்கோகர்ணம் கோவிலில் உள்ளது. இக்கண்மாய் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்கிறார். மேலும் அவ்வறப்பணியை தொடர்ந்து செய்வோர் பாதம் என் தலைமேல் என்றும் கூறுகிறார்.

கல்வெட்டு வாசகம்:
1.ஸ்ரீ கோமா
2.றஞ் சடையர்கு
3.யாண்டு
4.7 வது
5.வல்லநாட்டு
6.கவிர்பால்
7.மூதாண்டி பெ
8.ருந்திணை
9.வெண்கன் சேவித்தது.

இன்றும் இவ்வூர் கவிநாடு என்று அழைக்கப்படுகிது. மேலும் புதுக்கோட்டையில் வடகவிர, தென்கவிர என்றுநாடுகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வூர் மக்கள் இக்கண்மாயின் அருகே ஓர் கல்லெழுப்பி வழிவழியாய் வணங்கி வருகின்றனர். இக்கல் இம்மடை திறப்பில் மக்களுக்காக உயிரிழந்த "மடையர்" எவரேனும் இருக்கலாம்.

நன்றி: யாஊயாகே 

ஆய்வு : திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார் 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்