ஞாயிறு, 11 மார்ச், 2018

புதுக்கோட்டை கள்ளர் நாடுகள்



நாடு : வடமலைநாடு

பொதுக்கோவில்: பர்வதகிரீஸ்வரர் சிவாலயம். இக்கோவில் குடைவரைக்கோவில்களில் ஒன்று. தொல்லியல் துறையால் பேணப்படுவது. ஆயிரங்கால் மண்டபமும் உள்ளது.





இக்கோவிலில் கள்ளர்குல பல்லவராயர் முதல் பல பழமையான கல்வெட்டுக்கள் உள்ளன. முக்கியமாக கோவில் பாதுகாப்பில் தன் உயிரையே விட்ட கள்ளரான பட்டவன் வத்தனாக்கோட்டை கொழுந்திரார் சிலையும் உள்ளது.




கொள்வினை கொடுப்பினையானது திருக்காட்டுப்பள்ளி, தந்திநாடு,
விசாங்க நாடு (அன்பில்) கூத்தாப்பல்நாடு, பெரிய சூரியூர் கள்ளர்நாடு, திருவையாறு, செங்கிப்பட்டி (கொற்கைநாடு) , திருவெறும்பூர் கள்ளர்களோடு உறவு கொண்டுள்ளனர்.











ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன.


அம்பலகாரர்: தெம்மாவூரில் உள்ள நரங்கியர்

காணப்படும் பட்டங்கள்: 
காடவராயர்
கொழுந்தியர்
தென்கொண்டார்
மட்டையர்
உத்தமுண்டார்
நரங்கியர் 
தொண்டைமான்
சோழையர்
உத்தமுண்டார்
சேப்பிளையார்
தொண்டைமானார் Etc...

உள்ளடங்கிய கிராமங்கள் :

குன்னான்டார்கோவில்
வத்தனாக்கோட்டை
அங்குராப்பட்டி
கூகூர்
பாலார்பட்டி
முள்ளத்திப்பட்டி
இராக்காத்தான்பட்டி
தெம்மாவூர் Etc...

வடமலை ,தென்மலை நாட்டுக்கள்ளர்கள் இணைந்த பொதுக்கூட்டம் அண்டகுலத்திலும் நடைபெறும். இவ்விரண்டு நாட்டு கள்ளர்களால் ஏற்படும் இழப்பிற்கு பொதுக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டு அக்காலத்தில் இழப்பீடு திருச்சியில் இருந்து வருவோர்களால் நிச்சயிக்கப்படும்.


நகைகள் திருமணம் ஆன பின் திருச்சி கள்ளர்களால் இந்நாட்டு கள்ளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்.



கிபி-1194- குலோத்துங்க சோழ கிடாரத்தரையராக குறிக்கப்பட்டுள்ள குன்றியூர்நாட்டு அரையர். கிடாரத்தரையர் என்பது இன்றும் கள்ளர் பட்டமாக உள்ளது.

(PSI ,139 திருவேங்கைவாசல், 141&159 பின்னங்குடி)

தற்பொழுது (குன்னான்டார்கோவில்) வடமலைநாடு பெருவயல்நாட்டிற்கும் அரையராக குன்றியூர்நாட்டு அரையர் விளங்கியுள்ளார். கி.பி.1867 வரை குன்றியூர்நாடு அதன் நாட்டு அமைப்பால் ஆளப்பட்டுவந்துள்ளது.

தற்பொழுதும் வடமலைநாட்டிற்கு அம்பலக்காரராக தெம்மாவூரில் வாழும் நரங்கியர் பட்டந்தாங்கிய கள்ளரே விளங்குகிறார். வடமலைநாடு + தென்மலைநாடு =
இருமலைநாடு என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.


பிறமலை நாட்டுப்பகுதியில் கொக்குளநாட்டின் ஆதி பாட்டன் நரங்கித்தேவர் என்பது குறிப்படத்தக்கது.

நரங்கியர் பட்டம் பூண்ட கள்ளரின் பெயரிலே தற்பொழுதும் இயங்கும் தெம்மாவூர் ஊராட்சிமன்ற அலுவலகம்
.








பெரியகுரும்பட்டி : 

புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர் வட்டம், பெரியகுரும்பட்டியில் மொத்தம் எட்டு கரைகள் உள்ளன

1.கள்ளர்கரை
2.நாயக்கர்கரை
3.செட்டியார்கரை
4.தெற்குபண்ணை (கோனார்)
5.பாப்பான்வயல் கோனார்
6.கட்டத்திக்கன் கோனார்
7.கட்டக்கன்பண்ணை கோனார்
8.குட்டப்பன் கரை கோனார்

கள்ளர்களில் இராங்கிபிரியர் பட்டம் பூண்டோரே முதல்கரை மற்றும் அதிகமாக உள்ளனர்.

மழவராயர்
பாண்டுரார்
கரடி 

போன்ற பட்டம் பூண்ட கள்ளர்களும் உள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்துள்ள பெரியகுரும்பட்டி காயாம்பு அய்யனார், கருப்புசாமி கோயில் காளைக்கு, அந்தக் கோயிலின் முன்புறமே சமாதி அமைக்கப்பட்டு, ஆடி மாத திருவிழா வின் போது காளையின் சிலைக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்படுகிறது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கோயிலின் நிர்வாகிகளில் ஒருவருமான சுப்பிரமணியன், ‘‘இலுப்பூர் சந் தையில் சுமார் 50 வருஷத்துக்கு முன்னால 190 ரூபாய்க்கு வாங்கி, கோயில் காளையா விடப்பட்டது இது. சாகும் வரை ஒரு ஜல்லிக்கட்டுல கூட யாரும் இந்தக் காளையை அடக்கியது இல்லை. அதான் தெய்வமா வணங்கறோம்’’ என்றார்.












இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ராப்பூசல் முனியாண்டி கோயில், சாத்தம்பட்டி பாலாயி அம்மன் கோயில்களிலும் வளர்க்கப்பட்ட காளைகளுக்கு தனியாக சமாதி அமைக்கப்பட்டு, அதன் மீது காளை சிலை வைத்து வழிபடப்படுகிறது.

இந்த சாத்தம்பட்டியில் பாண்டுரார், மழவராயர் பட்டம்தரித்தோர் உள்ளனர்!
பாண்டுரார்கள் பெரிய சூரியூர் கள்ளர் நாட்டிலிருந்து (சின்னபாண்டுரார் பட்டி) பகுதியிலிருந்து இங்கு குடியேறியுள்ளனர்.

இக்காளைகள் எவ்வித போட்டியிலும் அடக்கப்படாமல் நிறைய பேரை கொன்றுள்ளது.

பெருமாநாடு





பெருமாநாட்டில் வாழும் கள்ளர்கள் கண்டர்மாணிக்கநாட்டிலிருந்து வந்தோர்.


இங்கு இவர்கள் 32 கிராமங்களாக பரவி வாழ்கின்றனர் இது பழுவஞ்சி பெருமாநாடு என அழைக்கப்படுகிறது.

தந்தைவழியில் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.




சோழ வகை,
சங்கட்டான் வகை,
ஆண்டிவகை,
நாட்டரசன் வகை,
வழங்கினான் வகை எனப்பல வகைகள் ...

ஒரே வகையைச் சார்ந்தவர்கள் பங்காளிகளாக கருதப்படுகின்றனர்.


இவர்கள் சீதேவி வகைதிரும்பியர் வகை  என  தாய்வழி கிளை கள்ளராக இருக்கிறார்கள்.  தாய்வழிச்சமூகமாக இருந்த இவர்களில், சிலர் மிகச்சமீபத்தில் கிளைகள் மறைந்து தந்தை வழிச் சமூகமாக மாறியுள்ளனர். 



புதுக்கோட்டை உஞ்சனைநாட்டு




ஐந்துநிலைப்பற்று எனப்படும் உஞ்சனைநாட்டு "கள்ளர்படைப்பற்று" புதுக்கோட்டையில் சேர்வை அல்லது சேர்வைக்காரர் என பெரும்பாலும் கள்ளர்களே குறிப்பிடப்படுவார்கள். 

ஐந்துநிலைப்பற்று சர்தார்கள் என கிபி 16,17,18 ல் குறிப்பிடப்படுகிறார்கள்.

IPS 744- சிறுவயல் நாட்டு கள்ளர் படைபற்று--விசங்கி நாட்டு கள்ளர்கள்:-வீரபிரதாப­­­­­ன் மகாராயர் (விஜயநகர), கிபி 1537, குளத்தூர் தாலுகா (கீரனூர்), நார்த்தாமலை சீமை,வடசிறுவயல் நாடு படைபற்று கீரனூர் உடையவர்க்கு என விஜயநகர மன்னன்,; சிறுவயல் நாட்டு படைபற்றிலுள்ள ஆலயத்திற்கு அளித்த கொடைகளை பற்றி கூறுகிறது. இந்த வடசிறுவயல் நாடு புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்று..சிறுவயல் நாட்டு கள்ளர்கள், கீரனூர் மற்றும் நாரத்தாமலை, சிவன் கோயில்களில் கூடுவது வழக்கம். இந்த சிறுவயல் நாட்டு, விசெங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் பகுதியின் ஒரு பிரிவாகும்.குளத்தூர்­­­­­­ தாலுக்காவில் வாழும் உஞ்சனைநாட்டு கள்ளர்கள், அஞ்சுநிலைப­­­­­­்பற்று சர்தார்கள் (அ) சேர்வைகாரர்கள் என அழைக்கப்பட்டு கிபி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டைமான் படையில் பணியாற்றினர்.


நாங்குப்பட்டியில் இருந்த சேர்வைக்காரர்கள் முன்பு தீவிரமாக குளத்தூர் தொண்டைமானை ஆதரித்து வந்தார்கள். பின்பு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான்களை ஆதரித்தனர். இவ்வூரில் உள்ள சேர்வைக்காரர்களில் ஒருவர் மருது சகோதரர்களை பிடிப்பதற்கு உதவியுள்ளார். இவ்வூரில் தொண்டைமான்களுடைய உறவினர்களும் வாழ்ந்துள்ளார்கள்.


நாங்குபட்டி சேர்வைக்காரர்கள் "உஞ்சனை நாட்டு கள்ளர்களாக " அறியப்படுகிறார்கள்.






16,17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் "அஞ்சுநிலைப்பற்று" என்றும் அதாவது போரில் தீவிரமாக சண்டையிடும் வீரர்கள் இங்குள்ள ஐந்து கிராமங்களில் 



நாங்குப்பட்டி,


பெரம்பூர்,


மருதாம்பட்டி,


பாக்குடி 


மற்றும் 


சரணக்குடி வாழ்கிறார்கள். 



இவை முன்பு பெரம்பூர் மற்றும் கட்டளூர் அரையர்களுக்கு கீழ் இருந்துள்ளது. (கட்டலூர், பெரம்பூர் நரசிங்க தேவர் மற்றும் அழகியமணவாளத்தேவர்)



ஆய்வு : உயர்திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்