திங்கள், 12 மார்ச், 2018

பெருங்களூர் வரலாறு - பெருங்கநாடு - பெருங்களூர் நாடு - கள்ளர் நாடுகள்





பல்லவராயர்கள் பெருங்களூரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தனர். தங்களது கல்வெட்டுகளில் பெருங்களூர் அரசு என்றே குறித்துள்ளனர். 



(Colas Vol.2. Prof.Sastri).

கூழிப்பட்டி (பெருங்களூர்) வைத்தூருக்கு அருகில் உள்ளது. பெருங்களூர் கல்வெட்டு, இலக்கியங்களில் "கூழி" என அழைக்கப்படுகிறது.  கூழியர் என்பது சேர மன்னர்களில் பட்டங்களில் ஒன்று.  "பனங்காடு நாட்டு பெருங்களூர் அரசு" நிலைக்கு உயர்ந்துள்ளனர். ( புதுக்கோட்டை கல்வெட்டு 713,714) 





பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மற்றும் வைத்தூர் ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின் சில பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். 

கிபி 1387 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பல்லவராயர் திருக்கோகர்ணம் கோயிலுக்கு, விளக்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை அளித்தார்

கிபி 1462 ல் பெருங்களூர் ஸ்ரீரங்க பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு பல்லவன் சந்தி வழிபாட்டுக்காக நிலங்களை அளித்தார்

கிபி 1466 ல் பெருங்களூர் மிலிச்சர் பிள்ளை பல்லவராயர் என்பவர் குளத்தூர் சிவன் கோயிலுக்கு கொடை அளித்துள்ளார்.

கிபி 1481 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பிள்ளை பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு ஆட்டங்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை கொடையாக அளித்தார்.

பெருங்களூர் கோனேரிராய பல்லவராயர் என்பவர் குண்ணன்டார் கோயிலில் உள்ள கோயில்களுக்கு கொடைகள் அளித்துள்ளார்.

பெருங்களூர் ஆவுடை நயினார் பல்லவராயர் கீழக்குடியில் உள்ள கோயிலுக்கு நிலக்கொடை அளித்துள்ளார். (General history of pudukkottai state page R aiyar pg - 100-101)

விஜய ரகுநாதராய தொண்டைமான்( 1730-1769) ஆட்சி காலத்தில் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது • இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)




பனங்காட்டு நாட்டு கள்ளரான புதுக்கோட்டை பல்லவராயர், பிற்காலத்தில் பெருங்களூரை தலைமையாக கொண்ட ஐந்து கரை கள்ளர் நாட்டார்களால் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

ஐந்து பட்டத்தார்:- 

சிந்துரார், 
கொம்பியார், 
கூழியர், 
சேப்பிளார், 
பம்பாளியார் 

ஐந்து கரைகளில் பல்லவராயர்கள் வரமாட்டார்கள், ஆனாலும் பெருங்களூரில் உள்ள அனைத்து கோயிலுகளிலும் பல்லவராயர்களே இன்று வரை முதல் மரியாதை பெற்று வருகின்றனர் அவர்கள் வராத பட்சத்தில் சிந்துரார் பெற்றுக் கொள்கின்றனர். உருமநாதர் கோவில் துரை.குமரப்பன் கூழியார் தலைமையில் மறுசீரமைப்பு செய்தபோது பல்லவராயரில் ஒரு சிலர் வந்துள்ளனர் குதிரை செய்வதற்க்கான ஏற்பாடுகள் ஆரம்ப கட்ட வேலையான பூமி பூஜை போட்டுள்ளனர். பெருங்களுர் பகுதிகளிலிருந்து பல்லவராயர்கள் குடிபெயர்ந்து வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டனர் உருமநாதர் கோவிலில் பல்லவராயர்களுக்கு ஒரு குதிரை சிலை ஒன்று இருந்துள்ளது காலப்போக்கில் இடிந்துவிட்டது.






புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சி செய்த பெருங்களூர் கள்ளர் குல ஐந்து கரை நாட்டார்கள்(சிந்துரார், கொம்பியார், கூழியர், சேப்பிளார், பம்பாளியார்) உபயம்



துரை குமரப்பன் கூழியர் தலைமையிலான ( ஐந்து கரை பெருங்களூர் நாட்டார்கள் :- சிந்துரார், கொம்பியார், கூழியர், சேப்பிளார், பம்பாளியார்)



பெருங்களூர் நாட்டு சிந்துரார்




கல்வெட்டுகளில் இவ்வூர் பெருங்கோழியூர் என்று அழைக்கப்படுகிறது .  இங்குள்ள குலோத்துங்க சோழீச்சுரம் - சிவன்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும் . 

பெருங்கொண்டார் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இங்கு உள்ளனர். பெருங்கொளி எனும் பெரும்நிலப்பரப்பை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வெற்றி கொண்டதால் (பெருங்கொளி+கொண்டார் ) பெருங்கொண்டார் என அழைக்கப்பட்டனர். ருங்கொளி என்பது தற்போதை பெருங்களுர் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் ஆகும். பெருங்கொண்டார்கள் தற்பொழுது பெருங்களுர் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களின் பட்டத்தை தாங்கிய பெருங்கொண்டான்விடுதி எனும் ஒரு ஊரும் உள்ளது. பிடாரியம்மன் கோவில் முந்தைய காலக்கட்டத்தில் கூரையில் அமைந்துள்ளது அந்த கோவிலை நல்லக்குட்டி பெருங்கொண்டார் தலைமையில் அந்த கோவில் மறுசீரமைப்பு செய்து கோவிலை விரிவுபடுத்தியுள்ளார். பிடாரியம்மன் கோவிலில் தற்பொழுதுவரை பெருங்கொண்டார்களுக்கே முதல்மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. மங்களநாயகி அம்மன் கோவிலுக்கென்று ஒரு பெரிய வீட்டை கொடுத்துள்ளனர் அதனை பசுமடம் என்று அழைப்பார்கள். அந்த வீட்டில் பசுமாடுகரக்கும் பாலில்தான் அம்மனுக்கு விசேஷ காலங்களில் அபிஷேகம் செய்துள்ளனர். அந்த வீட்டில் திருவிழா காலங்களில் பெருங்கொண்டார்கள் இருந்துவிட்டு திருவிழா முடிந்ததும் வீடு திரும்புவார்களாம் அந்த வீடு பெருங்கொண்டார்களுக்கு அடையாளமா இருந்து வந்தது. 
வைத்திக்கோவிலில் தேர் இழுக்கும் வடத்தை முதலில்  தொட்டுக் கொடுக்கும் உரிமையைய் பெருங்கொண்டாரும் பம்பாளியாரும் வைத்து இருந்துள்ளனர் ( தற்போதைய காலக்கட்டத்தில் இல்லை).




பெருங்களுர் நாட்டின் முதல்பட்டதாரி N.ராமசாமி பெருங்கொண்டார் என்பவர் ஆவார் ( பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உத்திர பிரதேசம் ). 200 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 500 முதல் 700 ஏக்கர்கள் கொன்ட பெரும் நிலக்கிழார்களாக வாழ்ந்துள்ளனர் இவர்களுக்கான நிலங்கள் பல ஊர்களில் அந்த காலக்கட்டத்தில் இருந்துள்ளது. புகைப்படத்தில் உள்ள வீடானது 1838 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக இருக்கலாம் அந்த வீட்டில் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்கொண்டான்விடுதி எனும் ஊரில் இந்த வீடு கம்பீரமாக காட்சியளிக்கிறது. பெருங்கொண்டார்களின் திருமண உறவுமுறைகள் குறிப்பாக  கூழியார், தவிடர், பத்தவெட்டியார் இந்த மூன்று பட்டங்களுடன் பெண் எடுப்பினை கொடுப்பினையில் அதிகமாக  இருந்துள்ளனர்.

நல்லக்குட்டி பெருங்கொண்டாரின் தந்தை இராமசாமி பெருங்கொண்டார் இலங்கையில் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை பஹலகதுருகமுவ என்ற கிராமத்தில் 1882 ம் ஆண்டளவில் காணிகளை வாங்கி அவற்றில் தேயிலை பயிரிட்டார். அன்றைய காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடைபெற்ற போதிலும் அவர் Ross A Wyllie என்ற ஸ்கொட்லாந்து வெள்ளைக்காரர் ஒருவருடன் சேர்ந்து தேயிலை பயிரிட்டுள்ளார். N.R.M . Nallacooty Peruncondar என அறியப்பட்ட அவர் பின்னர் அந்த தேயிலை தோட்டத்தின் -Kapuwatta tea estate - கப்புவத்த தோட்டம் - (பின்னர்  Ganesh land கணேஷ் லேன்ட் என்றும் அழைக்கப்பட்டது) தனி உரிமையாளராக இருந்துள்ளார்.( History of Ceylon tea) இலங்கையில் 1800 களில் காணிகளை வாங்கிய இராமசாமி பெருங்கொண்டார் இலங்கை ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை நகரில் கதிர்வேலாயுத சுவாமி கோயிலை 1905 ம் ஆண்டளவில் கட்டி முடித்துள்ளார்.

இராமசாமி பெருங்கொண்டார் அவருக்கு பின்னர் நல்லக்குட்டி பெருங்கொண்டார் அவருக்கு பின்னர் இராமசாமி பெருங்கொண்டார் (எனது தந்தை) . 
இராமசாமி பெருங்கொண்டார் நல்லக்குட்டி பெருங்கொண்டார் என்ற இரண்டு பெயர்களும் மாறி மாறி (பாட்டனின் பெயர் பேரனுக்கு என.) பேரன்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையை வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்தில் அவர்களுக்கு இணையாக  தேயிலை தோட்டங்களை உருவாக்கிய ஒருசில தமிழர்களில் இராமசாமி பெருங்கொண்டார் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

எனது தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தை நிருவகித்த காலத்தில் 1972 ம் ஆண்டில் எனது தந்தை ராமசாமி பெருங்கொண்டார் - (பெருங்களூரின் முதல் பட்டதாரி )- இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின்னர் மீண்டும் இலங்கையில் வசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

பெருங்களூர் நாடாள்வான் மகன் குன்றன் கொப்பிலி சிங்கதேவன் இரண்டு மலை நாட்டுப் பிள்ளை, வியாபாரி அம்பலவன் கோவிஞ்சாண்டான், பெரும்புலியூரைச் சேர்ந்தவர்களான பிள்ளான் திருந்தான், வியாபாரி அம்பலவனத்தாண்டான், காத்தானான ராஜராஜ முத்தரையன், சோழன் பொன்னன், பெரியகோன் மக்கள், பலபடாரர் ஆகியோர், துவரங்கோட்டை யைச் சேர்ந்த பொன்னதுண்டராயன், இளங்கத்தரையன் மகன் பிள்ளாண்டான், கிளிநல்லூரைச் சேர்ந்தவர்களான மூவரைசியார், மாதன் நிலையான், பேரையர் மக்கள் அரச பண்டாரம் சேயான் பொன்னன், சோழன்காரி ஆகியோர், தெற்றியூரைச் சேர்ந்த பாலையூர் நாடாள்வான் மகன்கள் கயிலாண்டான், எழுவன், வெழச்சிக்குடி சாத்தனான உத்தமசோழ நாடாள்வான், தென்மாவூர் தேவாண்டாரான மழவராயர், மூவன் குன்றந்தை எனும் பத்தொன்பது பேர் தூண் கொடையாளிகளாகக் கல்வெட்டுகள் வழி வெளிப்படுகின்றனர்

வல்லத்திராக்கோட்டை அரையர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள். கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு இதுவரை காணப்படாத அறிய வகையில் காணப்பட்டுள்ளது. இதுபற்றி புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவனர் புலவர். பு.சி.தமிழரசன், செயலாளரும், தொல்லியல் ஆர்வலருமான பெருங்களூர் மு.மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் இணைந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள குறுக்கு வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 




இப்பகுதியில் ஏராளமான இரும்பு தாதுக்கள் கிடைப்பதால் அவற்றை உருக்கி இரும்பு ஆயுதங்கள் தயாரித்துள்ளது தெரியவருகிறது. இப்படி தயாரிப்பதற்கு துளையிட்ட சுடுமண் குழாய்கள் மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைத்திருக்கிறது. தற்பொழுது குளிப்பதற்கு இப்பகுதியைப் பயன்படுத்தி வரும் மக்கள், முன்பு இப்பகுதியில் தண்ணீர் கிடைத்ததாலும், செம்புராங்கற்கள் நிறைந்த மேட்டுப்பகுதியாக இருந்ததாலும் சின்ன மோடு, பெரிய மோடு என மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் மக்கள் வசித்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது. 

நாகரீகமடைந்த மனித இனம் இரும்பின் பயன்பாட்டை அறிந்து போர் கருவிகளை செய்வதற்கு இப்பகுதியில் இரும்பு உருக்காலைகளை நிறுவியிருக்கலாம். இப்பகுதி பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு காலமாகவும் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். மேலும் இரும்பை பிரித்தெடுத்து கருவிகளாக உருவாக்கியவர்களுக்கு 'வல்லத்திராக்கோட்டை அரையர்கள்' வரிகள் வாங்கியதை திருவரங்குளம் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இரும்பு தாதுக்களை உடைத்துப் பொடி செய்து அவற்றை ஊது உலையிலிட்டு, உருக்கி இரும்பை பிரித்து எடுத்திருக்கிறார்கள். இத்தாதுக்களை உருக்குவதற்கு அதிகளவு வெப்பம் தேவைப்படுவதால், தற்பொழுது கொல்லுப் பட்டறையில் காற்றை செலுத்தப் பயன்படுத்தப்படும் துருத்தி போன்ற அமைப்பால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளையிட்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு வட்ட வடிவமாக தாழி போன்ற அமைப்புடன் உலைக்கலன்கள் புதைந்த நிலையில் கட்டுமானத்துடன் உள்ளது. இரும்பு உலையில் வாய்ப் பகுதியான விளிம்பின் மேல் பகுதியில் இரும்பு தாதுக்கள் வழிந்தோடும் வகையில் வெளிவட்டத்திலும், உள்வட்டத்திலும் பள்ளமான அமைப்புடன் உருக்கு உலைக்கலன்கள் காணப்படுகின்றன. 



இதுபோன்ற உருக்காலையின் தடயங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஏற்கனவே பொற்பனையான்கோட்டையில் ஆய்வு செய்து அர்மேனியா போன்ற வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் தடயங்களுக்கு நிகராக இருந்ததை வெளிப்படுத்தியதை போலவே தற்போது இக்கண்டுபிடிப்பானது வழிந்தோடும் இரும்பு தாதுக்களை கீழ் தளத்தில் சேமித்ததற்கான உலையின் மேல் பகுதி மற்றும் மூக்கு பகுதி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. 

உருக்கிய இரும்பு தாதுக்களின் எஞ்சிய பகுதி ஆங்காங்கே செம்புராங் கல்லுடன் இறுகிய நிலையில் திரட்டுத்திட்டாகக் காணப்படுகிறது. மேலும் “தென்பனங்காட்டு நாட்டு பெருங்கோளியூர்” எனப் இப்பகுதி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் பனை மரங்கள் நிறைந்த இவ்விடங்களில் எஞ்சிய இரும்பு கழிவுகளை கொட்டும் போது பனைக்குருத்தின் மையப்பகுதியிலிருந்து ஓலை விரிந்த நிலையில் இரும்பு தாதுக்கள் அதன் மீது கொட்டப்பட்டு குருத்தோலை விரிந்த நிலையில் அச்சு வார்ப்பாக செம்புராங் கற்களின் மீது படிந்துள்ளது. 2000 வருடங்களுக்கு முற்பட்ட இவ்வமைப்பு தற்போதுள்ள நவீன கருவிகளின் அச்சு வார்ப்பு போன்று அழகாகவும், பழமையான தொல்லியல் சான்றாகவும் உள்ளது. 


இவ்விடத்திலிருந்து மேற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் பெருங்கற்கால ஈமத் திட்டைகள் 6 மீட்டர் விட்டத்தில் வெள்ளை நிற பளிங்கு கற்களால் உள்ளது. இவற்றின் காலம் (கிபி 200 - 150) என்பது குறிப்பிடத்தக்கது. 


பெருங்களூர் உருமநாதர் கோயில் சிறப்பு 

2000 ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 18 சித்தர்களின் ஒருவரான சிவப்பாக்கிய சித்தர் விஷ்ணு பகவானை வேண்டி கடும் தவமிருந்தார். அவரது தவத்தைக் கலைக்க அசுர காளிகள் அங்கு வந்து பல்வேறு தடைகளைச் செய்து வந்தனர். 



கடும் தவத்தில் மூழ்கிய சிவவாக்கிய சித்தர் மகாவிஷ்ணுவை வேண்டி கடும் தவத்தில் ஈடுபட்டார். அவரின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து தவத்திற்கு இடையூறாக இருந்த அசுர காளிகளை வதம் செய்தார். மகாவிஷ்ணு உருமாரி நரசிம்ம அவதாரம் எடுத்து வந்த அசுர காளிகளை வதம் செய்தமையால் இக்கோயிலில் உள்ள விஷ்ணு பகவான் உருமநாதர் என்ற நாமத்தில் வழங்கப்பட்டு வருகின்றார். 

கோயில் வளாகத்திலேயே உரும நாதருக்கு அருகில் சிவவாக்கிய சித்தருக்கு மண்டபம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது. சித்தரின் தவத்திற்கு இடையூறு இல்லாமல் கோயிலைச் சுற்றி பாக்கு வெட்டி முனி, மந்திர மகாமுனி, செவிட்டு முனி, மாசற்ற முனி, சுழி முனி, முத்து முனி, முத்துமணி, பில்லி முனி, கும்பமுனி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன. 

இங்குள்ள உருமணாச்சி நாமத்தில் அருள்பாலித்து வருகின்றார். மேலும் இக்கோயிலில் கருப்பர், காளி, ஆஞ்சநேயர், முத்தாள் ராவுத்தர் ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். மேலும் இக்கோயிலின் உட்பிரகாரத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. 

இக்கோயிலில் உள்ள சகுனம் கேட்கும் யானை முன்பு நின்று தனது வேண்டுதல்களைக் கேட்கும்போது அங்கிருந்த உத்தரவு கிடைத்தால் அந்த வேண்டுதல்கள் வெற்றி பெறும் என்பது ஐதீகம் அவ்வாறு வெற்றி பெறுபவர்கள் யானை சிலையை வேண்டுதல் காணிக்கையாகக் கொண்டு வந்து வைக்கின்றனர். 

ஆதலால் கோயிலில் யானை சிலைகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இக்கோயிலில் பல்லவ மன்னர்கள் வழிபட்டதால் அப்போது அவர்கள் அஷ்வமேத யாகம் நடத்தியதாகவும், அதற்கு ஆதாரமாகக் குதிரை சிலையும் உள்ளது. இங்குள்ள அம்மாச்சி அம்மனும் அந்த இடத்தில் பிரசன்னமாகி அருள்பாலித்து வருவதாகவும் கூறப்படுகின்றது..
































வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்