வியாழன், 23 செப்டம்பர், 2021

கரூர் கள்ளர் தேச காவல்


கரூர் மாவட்டம் கரூர் தாலுக்காவின் தேச காவல் உரிமை ஆங்கிலேயர் காலத்தில் #கள்ளர் சமூகத்தினரிடம் இருந்துள்ளது.காவல் தொழிலிலே மிக உயர்ந்த காவல் முறையாக தேச காவல் அன்று விளங்கியது.தேச காவல் புரிபவர்களை இன்றைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரோடு (Superintendent of Police) ஒப்பிடலாம்.

• கரூரின் தென்மேற்கு பகுதியில் குறவர் பழங்குடிகள் காவல் செய்து வந்தனர்.ஆனால் அதே பகுதியில் காளை மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு மட்டும் கள்ளர்களே காவலர்களாக இருந்தனர்.

• கரூர் மாவட்டத்தில் , ஒவ்வொரு கள்ளர் நாட்டார் காவல் பொறுப்பிலும்  3 முதல் 10 கிராமங்கள் வரை இருந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களின் காவல் பொறுப்பு கள்ளர் சமூகத்தினரிடமே இருந்துள்ளது.

• அனைவரிடம் ஒரே அளவில் காவல் வரியை  கள்ளர் காவல்காரர்கள் வசூலிக்கவில்லை.பணக்காரர்களிடம் கூட நியாமான அளவில் தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.பணக்காரர்களோடு ஒப்பிடும் போது ஏழைகளிடம் கம்மியாக தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.ஆங்கிலேயரை போல் ஏழை மக்களின் உழைப்பை வரி என்ற பெயரில் சுரண்ட கள்ளர் சமூக காவல்காரர்கள் விரும்பவில்லை.





ஆதார நூல்:- MADRAS DISTRICT GAZETTEERS - TRICHINOPOLY - VOLUME 1 - BOOK PAGE NUMBER 256.

நார்த்தேவன் குடிகாடு கூத்து - இரணிய நாடகம்

தஞ்சாவூர் நார்த்தேவன் குடிகாடு கூத்து ; ஆர்சுத்திப்பட்டு கூத்து : 

கள்ளர் சாதியினர் , ( இரட்டை வேடங்களில் பாத்திரங்கள் 

தோன்றி நடித்தல் ) தஞ்சைப் பகுதிகள் . 

கள்ளர் சாதியினர் தஞ்சைப் பகுதிகளில் நிகழ்த்தும் 

கூத்து மட்டும் சடங்குசார் கூத்துக் கலை வடிவமாக இன்று 

காண முடிகிறது . பிற யாவும் குறிப்பிட்ட சாதியினரால் 

சடங்கு நிறைவேற்றும் முகத்தான் கூலி பேசித் 

தொழில்முறைக் கலைஞர்களால் நிகழ்த்தப் படுபவையாக 

விளங்குகின்றன .

இங்கு கள்ளரின் பட்டம் நார்த்தேவர்




 ஆர்சுத்திப்பட்டு, நார்தேவன் குடிகாடு, வடக்கு நத்தம், சாலியமங்கலம் முன்பு பனையக்கோட்டை ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடகங்கள் பிரபலமானவை. இவ்வூர்களில் அமைந்துள்ள நரசிம்மர் வழிபாடு சடங்கியலாக நடைபெறுகிறது. இரவில் மூன்று முதல் நான்கு நாட்கள் இக்கலை நிகழ்ச்சிகள் (நாடகம்) கொண்டாடப்படுகின்றன.

பங்கேற்பாளர்கள்

இந்நாடக நிகழ்ச்சியில் உள்ளுர்க்காரர்கள் மட்டுமே நடிகராகப் பங்கேற்பர். சிலர் வேண்டுதலின் அடிப்படையில் வெளியூர்க்காரர்களும் பங்கேற்பர். அவர்கள் நாடகத்தில் நடிப்பதற்கு வரி கொடுத்துப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். பிற ஊர்களில் சென்று நாடகம் நடத்தும் வழக்கம் இல்லை. நாடக நடிகர்கள் பெரும்பாலும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலேயே நடிக்கின்றனர். முப்பது நாட்கள் பயிற்சி பெற்ற பின் தான் நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

பயிற்சித் தொடங்கும் நாள்

நரசிம்ம செயந்தி நாளில் வளர்பிறை வாரத்தில் நரசிம்மர் கோவிலில் பயிற்சிப் பள்ளி தொடங்கும். நாடக நடிகர்களாக ஏழு வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவோரின் குரல் வளம், நடிக்கும் திறன் ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கேற்ற பாத்திரம் ஒதுக்கப்படும். அண்மைக்காலம் வரை ஆண்கள் மட்டுமே நடத்தினர். தற்போது 12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் நடிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி அளித்தல்

பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடகம் முழுவதும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பர். இதனை ‘அட்டவணை’ என்று அழைப்பர். இந்த அட்டவணை நாடக வாத்தியாரிடமே இருக்கும். நடிகர்களுக்கு அவரவர் ஏற்கும் பாத்திரங்களின் பகுதிகள் மட்டும் எழுதப்பட்டு நோட்டு கொடுக்கப்படும்.

நாடகம் தொடங்கும் நாள்

நாடகம் தொடங்கும் நாள் மாலையில் நரசிம்மர் கோவிலில் பூசை நடைபெறும். அதற்குப் பின்பு கோவிலிருந்து நரசிம்மர் முகமூடியைக் கூத்து நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்வர். முகமூடியைச் ‘சிரசு’ என்று அழைப்பர். ஊர்வலத்தின் போது மக்கள் அனைவரும் கற்பூரமேற்றிச் சிரசினை வழிபடுகின்றனர். நாடக மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கு ஒப்பனை அறையில் வைக்கப்பட்டு இருக்கும். அதன் பின் நடிகர்களுக்கு ஒப்பனை செய்யப்படுகிறது.

இரவு பத்து மணிக்கு விநாயகர் பூசையுடன் நாடகம் தொடங்குகிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் இரண்டு பேர் ஒரே நேரத்தில் ஏற்று நடிப்பர். இருவருடைய ஒப்பனையும், அசைவுகளும் ஒத்து அமையவேண்டும். இவ்வாறு இரட்டை இரட்டையாகத் தோன்றுவது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.

பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள்

இந்நாடகத்தில் ஆர்மோனியம், தபேலா, சால்ரா (ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் கொண்டு இசைக்கப்படுகிறது. இந்நாடகத்தில் பாடல்கள் மிகுதியாகக் காணப்படும். பெரும்பாலும் உள்ளூர் மக்களே பார்வையாளர்களாக இருப்பர். அருகிலுள்ள ஊர்மக்களும் சில நேரங்களில் கலந்துக்கொள்வர்.

கடைசி நாள் விழா

நாடகத்தின் இறுதி நாளன்று கதையின் பட்டாபிசேகம் பகுதி நிகழ்த்தப்படுகிறது. இரணியனை நரசிம்மமூர்த்தி ‘சம்காரம்’ (சம்ஹாரம்) (அழிக்கும்) செய்யும் நிகழ்வு நாடகத்தில் மிகவும் முக்கியமான பகுதியாகும். நரசிம்ம வேடம் புனைந்தவரை இருவர் தாங்கிப் பிடித்து இருப்பர். அவருக்குள் இறைவன் இருப்பதாகவும், அருள் வந்துவிட்டது என்றும் இரணியனை வதம் செய்யும் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது. இவை சடங்கியலாகவே நடைபெறுகிறது.

விடையேற்றி

நாடகம் முடிந்தபின் ஒப்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட முகமூடியை ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு செல்வர். இந்நிகழ்ச்சியை ‘விடையேற்றி’ என்றழைப்பர்.

நம்பிக்கைகள்

இரணிய நாடகம் நடத்துவதன் மூலம் அன்றைய தினமே மழைபொழியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். எனவே வறட்சிக் காலங்களில் மழை வேண்டி இக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

இக்கூத்து இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாத்திரமும் இரண்டு இரண்டாகத் தோன்றி வருவது இந்தப் பகுதி நாடகத்தின் தனித்தன்மைகளாகும். நார்த்தேவன் குடிக்காடு, ஆர்சுத்திப்பட்டு நாடகக் குழுவினர் வெளிநாடுகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் சென்று நாடகம் நிகழ்த்தி வருகின்றனர். வடக்கு நத்தம் கிராமத்தில் நடைபெறும் நாடகத்தில் இரண்டிரண்டு பாத்திரங்கள் மட்டுமின்றி பெரும்பாலும் இளம் சிறார்களே நடிகராக இருக்கின்றனர்.

முனைவர் சி.சுந்தரேசன்

துறைத்தலைவர்

நாட்டுப்புறவியல் துறை

ஆண்ட பரம்பரையினர்

பிரிட்டீசார் குறிப்பிடும் Real ஆண்ட பரம்பரையினர்.


கிபி 1891 ஆம் ஆண்டு பிரிட்டீசார் வெளியிட்ட Census of india - Madras எனும் நூலில் போர்க்குடிகளை " Agriculturists formerly Dominant and millitary castes என குறிப்பிட்டுள்ளனர்.

மெட்ராஸ் பிரசிடென்சி எனும் பெயரில் ஒருங்கிணைந்திருந்த தென்னந்திய மாநிலங்கள் பற்றிய தகவல் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.  

போர்குடிகளை பற்றிய குறிப்புகளில் தமிழகத்தின் போர்குடிகளாக கள்ளர் மறவர் அகமுடையார் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தென்னந்திய போர்குடிகள் மொத்த மக்கள் தொகையில் 6.5%  இடத்தை பெற்று இருந்தனர் என்றும்,  இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்ட பரம்பரையினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர்களை " Formerly which have been ruling tribes"  என ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர்.


Census of india 1891: Madras : 214



வேளுக்குடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். இந்த கோவில் கள்ளர்களின் மாளுசுத்தியார், வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது.

தொன்மை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று, 11 Dec 2022 கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜையில் நிறைவாக மஹா பூர்ணாஹதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்த கடன்களை தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து ஆலயத்தின் கோபுர விமான கலசம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர விமான கலசத்தின் மீது புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்து கோபுர கலசங்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் தருமைஆதினம் 27வது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் அருளைபெற்றனர்.

















































































































































































































































































































































































வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்