புதன், 29 நவம்பர், 2017

கள்ளர்கள் மன்னர்களா / கள்ளன் மன்னராமன்னர்கள் எப்படி திருடர்களாக இருப்பார்கள் என்றும், கள்ளர் என்றாலே திருடர்கள் தான் என்று சிலர் அறியாமையிலும் சிலர் காழ்புணர்ச்சியிலும் கேட்கின்றனர். கள்ளர் , கள்வர் என்பது வெட்சி மறவன், கிருஷ்ணன், அரசன், இறைவன், மறைதல், கருமை என்று பல பொருள் கொண்ட ஒரே சொல் என்பதை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளின் மூலமும் நாம் அறிந்ததே.
சரி அவர்கள் கூற்றின் படி மன்னர்கள் எப்படி திருடர்களாக இருப்பார்கள் என்றால் சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள், நம் மன்னர்கள் பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.


சங்க இலக்கியங்களில் போர் முறைகள் ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம்.


படைத்தொழில் வலிமையுடைய மறவர்களே இதில் ஈடுபடுவர். வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர் எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனவும் அழைப்பர்.

1) " ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்”: பசுக்களைக் கவர்ந்து வரும் கள்வர்கட்கு முதல்வன் ஆகிய பாண்டியன்.
2) " புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கது"
பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான சோழன்.
3) " முனையூர்ப் பல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன்" ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற மலையமான்.
மேலும்
படை இயங்கு அரவம் : போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை : ஊரை சுற்றி முற்றுகை இடல்.
முற்றிய ஊர் கொலை : போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.
ஆ கோள் : ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்
பூசல் மாற்றே : கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.
எரி பரந்து எடுத்தல் : பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல்.
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் : பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல்.
பொருளின்று உய்த்த பேராண் பக்கம் : பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல்.

“சோழன் கரிகாற் பெருவளத்தான்“ : 

சோழன் கரிகாலன் சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும்
முதற்காரணமானவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். சான்றோர்களால் பட்டினப்பாலை பாடப்பெற்றவன்.

இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனார்

“மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய வெறுழ் முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல “

இப்பாட்டின்கண் பகைவரின் நாடுகள் புதுவருவாய் நிரம்பிப்
பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். “நீயோ இரவும்
பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி,அவர
தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும்
ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; அதனால் அந்நாடுகள்
நலமிழந்து கெட்டன காண்.சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

பாடியவர் - பாண்டரங்க கண்ணனார்

"விளை வயல் கவர்பூட்டி “
“எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்”

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே"

கிள்ளியிடத்தே ஆற்றல் மிக்க பெரும்படை ஒன்று இருந்தது. பகைவர் நாட்டை விரைந்து குதிரை மேற்சென்று வென்று அவர்தம் நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டி, காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழித்து கொடும் போர்புரியும் திறம் மிகுந்தது அப்படை. அது சென்ற பகைவர் நாடு சுடு நெருப்பால் வெந்து செக்கர் வானைப் போல செந்தீ ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும். துணை வேண்டாது தனித்தேப் போரிடும் பெரிய படையினது வலுவும், புலால் நாற்றம் நாறும் கொலை வாளும், பூசிப் புலர்ந்த சாந்தும், முருகனைப் போன்ற வெஞ்சினமும் உடைய அச்சம் ஊட்டுந் தலைவனே.

“இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்“ :

இப்பாண்டிவேந்தன், ஒருகால் பகைவர் மேற் போர் குறித்துச்
செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக்காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், “வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; “என்கிறார்.

“பாண்டியன் நெடுஞ்செழியன்” :

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை எரியூட்டினான். பகைநாட்டில் உள்ள விளைந்த வயல்களையும், சோலைகளையும் நகப்புறங்களையும் எரியூட்டியதால் அதன் ஓசையும் அதனால் எழுந்த அவலக்குரலும் எங்கும் கேட்டது. மக்கள் சமைக்கும் நெருப்பைப் பெருநெருப்பு அழித்ததால், சமையல் தொழிலும் அந்நாட்டில் ஒழிந்தது. கொல்லப்பட்ட மன்னனின் மனைவியும் அவர்தம் மக்களும் உயிர் வாழ்வதற்காக வேளைக்கீரையைக் பறித்து உண்டனர். அம்மன்னனின் ஆட்சிமுடிவிற்கு வந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் காவற்காட்டிலுள்ள காவல் மரங்கள் கூரான கோடாரியால் பிளக்கப்பட்டு விறகாக்கப்பட்டன.

“சேரன் செங்குட்டுவன்” :

கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் பகைவர் ஊர்களை எரியூட்டியதைப் பார்வையிட்டான்.. அப்போது அவன் அணிந்திருந்த மாலையின் இதழ்கள் ஊரையெறியூட்டியதால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் கருகிப்போயின. அவன் மார்பில் பூசிய சந்தனம் உலர்ந்து விழுந்தது (பதி. 48/ 10-12)
பெருஞ்சேரவிரும் பொறை சிந்தெழுந்து சென்று வைத்த போர் எரி பகைவர் ஊரைக் கவர்ந்து அடுதலால் எழுந்த புகை திசையை மறைத்தது (பதி. 71/9,10)
சேரனின் படை எரி நிகழ்ந்தன்ன நிறுத்தற்கரிய சீற்றத்தையுடையது (பதி. தி. 1-7)
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் தான் அழிக்கக் கருதிய நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி பகைவர் நாட்டை எரியூட்டினான். (பதி. 15/ 1,2)

"நரசிம்மவர்மன்" :

மகேந்த்ரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன.இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து அங்கு உள்ள மொத்த செல்வங்களையும் கொள்ளையடித்தனர்.

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவர் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.

இராஜராஜ சோழன்

922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

"இராசேந்திர சோழன்" :

இராஜராஜனின் தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்;
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது

ராஜாதிராஜன் (1018- 1054)

இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048 இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. 

முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120)

 இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1219 இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.
அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.
கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.
தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.
சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).

இரண்டாம் ராஜேந்திர சோழன்

கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது:
"கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு.

மூன்றாம் இராஜேந்திரன்

இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான். சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர்.

இரண்டாம் இராசாதிராச சோழன்

சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது

இராசராச சோழனுலா

“சோழன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் “

கிழக்குத் திக்கில் உதயமலைவரை சென்று வென்று வந்த சோழன் கவர்ந்து கொண்டது வரையர மகளிர் சிலர். குபேரனுடைய அளகையை வென்று அந்நகரில் உள்ள பல மகளிரை அவர்க்குரிய மனையோடும் செல்வத்தோடும் கவர்ந்துகொண்டு வந்தான் ஒரு சோழன் எனவும் அவனாற் கொள்ளப்பட்டமகளிர் சிலர் என்க. அரம்பையர் வானுலக மங்கையர். வரையர மகளிர் - மலையில் வாழ் தெய்வ மகளிர், நீரரமகளிர் - நீருக்குள் வாழும் தெய்வமகளிர், நாககன்னியர் - பாம்புலகில் வாழும் தெய்வமகளிர். சோழர் குலந்தோன்றிய காலமுதல் அம் மரபிற் பிறந்த சிறந்த மன்னர்களாற் காதலாலும் வீரத்தாலும் கவர்ந்துகொண்டு வரப்பட்ட பல்வேறு குலமங்கையர் என்க.

கருணாகரத் தொண்டைமான்

கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான். அதனால் சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். அத்தலைவனுடன் சென்ற படை பாலாறு, பொன்முகரி, பழவாறு. கொல்லியாறு, வட பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குன்றியாறு, ஆகியவற்றைக் கடந்து கிருஷ்ணையையும் தாண்டியது; பிறகு கோதாவரி, பம்பையாறு, கோதமை ஆறுகளைக் கடந்து கலிங்க நாட்டை அடைந்தது; அங்குச் சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறை ஆடியது. படையெடுப்பைக் கேட்ட கலிங்க அரசன் சினந்து, தன் படைகளைத் திரட்டினான். அப்பொழுது எங்கராயன் என்னும் அமைச்சன், சோழன் படை வலிமையைப் பல சான்றுகளால் விளக்கிச் சந்து செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினான். அரசன் கேட்டானில்லை. இறுதியில் போர் நடந்தது. கலிங்க அரசன் தோற்றோடினான். அவனைக் கருணாகரத் தொண்டைமான் தேடிப் பிடிக்க முடியாது, பெரும் பொருளோடு சோணாடு மீண்டான்.
"கோப்பெருஞ்சிங்கன்":

கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் மூன்றாம் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.

மேலே உள்ள அனைத்து மன்னர்களும் பிற நாட்டில் உள்ள செல்வங்களை கைப்பற்றி கொண்டு வருவதையே பெருமையாக நினைத்துள்ளனர். இதன் மூலம் இங்கு களவும் , காவலும் பெருமையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு இந்த சான்றுகள் போதுமானது.

செவ்வாய், 28 நவம்பர், 2017

விருமாண்டி தேவர்கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி என்ற சொல்லிற்கு இலக்கணமாய் வாழும் முக்குலத்தின், கள்ளர் குலத்தில் உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் விருமாண்டி தேவர் .

ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டி, மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் வாழ்கின்றார்.

மனிதகுல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிச்சையப்பன் குழுவினர் 1996ஆம் ஆண்டில், உசிலம்பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.

இதனை பற்றி அவர் கூறுவது :

"மற்ற மாணவர்களைப் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடுதான் நானும் குருதி கொடுத்தேன். 5 ஆண்டு கழிச்சுதான் முடிவு வந்திச்சு. எம் 130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக்கள் எல்லாரும் நம்ம விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி ஆப்பிரிக்காகாரனுக்குப் பிறந்தவனாம் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சாங்க" நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப் பார்த்தார் விருமாண்டி.
விரல்களால் வகிடெடுத்து வாரி முடித்த கொண்டை, கல் பதித்த இரட்டை மூக்குத்தி. வரப்பில் உட்கார்ந்தபடி பேசத் தொடங்கினார் விரமாண்டியின் தாய் அமராவதி. "நான் பெத்த மகன் உடம்புல அவன் அப்பன் ரத்தம் தானே ஓடணும். அவன் பாட்டன்... முப்பாட்டன் ரத்தம் தானே ஓடணும்... ஒரு பிறமலை கள்ளனுக்குத் தான் நான் புள்ளைப் பெத்தேன். ஆனா ஊர்ல இருக்கிற பலபேரும் என் காதில படுற மாதிரி டேய் கொரங்குக்குப் புள்ளைப் பெத்தவ போறாடா. ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு புள்ளைப் பெத்தவ போறாடானு பேசுனாங்க. எப்பிடி இருக்கும் இந்தக் கள்ளச்சி மனசு? என்ன பாடு பட்டிருப்பேன்... யாரு பேச்சையும் நம்பிறாதீய. அந்த பதினெட்டாம்படியான் மேல சத்தியம் பண்ணிச் சொல்றேன். உங்களுக்குப் பொறந்த மகன் தான் விருமாண்டி. அப்பிடீன்னு எம்புருஷன்கிட்ட எத்தனை நாள் சண்டை போட்டிருப்பேன்... அப்பாடா... இப்ப அந்த அமெரிக்க விஞ்ஞானி வந்து சொன்ன பிறகுதான் நானும் என் குடும்பமும் தலைநிமிர்ந்து நடக்கிறோம்" விருமாண்டியின் தாய் அமராவதியின் முகத்தில் இப்போது பெருமிதம் மின்னுகிறது.

"என்னய்யா நீங்க ஒண்ணம் பேசாம இருக்கீங்களே?" விருமாண்டியின் தந்தை ஆண்டித் தேவரின் முகத்தைப் பார்த்தோம். "மத்தவுக விமர்சனம் நாலஞ்சு வருஷமா எங்களை பெரும்பாடு படுத்திப்பிடுச்சு.

புயலுக்கு பிறகு அமைதிங்கிற மாதிரி இப்ப ரொம்ப பூரிப்பா இருக்கோம். என் மகன் விருமாண்டியால எனக்கு இப்ப எவ்வளவு பெருமை? ஊர் தெரியாத, பெயர் தெரியாத, மொழி தெரியாத பிற நாட்டானெல்லாம் கேமராவை தூக்கிட்டு வந்து பேட்டி எடுக்கிறான். வெள்ளைக்காரர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் குழுவாக வந்து என் வீட்ல 10 நாள் தங்கியிருந்து ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிட்டு, உலகத்தின் முதல் மனித வம்சம் உங்க குடும்பம். அதுக்காக பெருமைப்படுங்கய்யானு சொல்லிட்டுப் போனார். உண்மையில் எனக்குப் பெருமைதான்யா உலகில் தோன்றிய முதல் மனித இனம் தமிழினம். முதல் குடும்பம் எங்க குடும்பம்ங்கிறது பெருமைதானே" இடுப்பில் வேட்டியும் தோளில் துண்டுமாக வியர்வை வடிய நின்ற ஆண்டித்தேவரின் கம்பீரமான முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.

1996இல் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் மரபணு மற்றும் காசநோய் ஆய்வை மேற்கொண்ட மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மரமணுப் பிச்சையப்பன், உசிலம்பட்டி மாணவர் விருமாண்டியின் உடலில் தொன்மையான எம்.130 என்ற மரபணு இருப்பதை மதுரைப் பல்கலைக்கழக வலைப்புலத்தில்வெ ளியிட்டார்.

ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிர மாயிருந்த ஸ்பென்சர் வெல்சு இந்த வலைப்புல முடிவைப்பார்த்ததும் உற்சாகம் கொண்டார். முதல் மனிதன் ஆப்பரிக்காவில் தான்தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது சில ஆராய்ச்சியாளர்கள் முடிவு. ஆனால் சில ஆய்வுகள் நாகர்களில் இருந்து தோன்றி பிரிந்து போனவர்கள் நீக்ராய்டுகள். இவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்தவர்கள் அல்ல இந்தியாவும் அப்ரிக்காவும் ஒட்டி இருந்த பகுதி கடற்கோளாள் பிரிந்தது என்ற கருத்தும் உள்ளது. எப்படி ஆனாலும் நாமே இந்த மண்ணின் முதல் குடிகள்.

ஆப்பிரிக்க மனித இனத்தின் மரபணு உசிலம்பட்டியில் ஒரு தமிழனுக்கு இருப்பதைக் கண்ட டாக்டர் ஸ்பென்சர் வெல்சு (https://en.m.wikipedia.org/wiki/Spencer_Wells ), உடனே புறப்பட்டுத் தமிழகம் வந்தார். "உசிலம்பட்டிப் பகுதியில் பல கிராமங்களிலும் எங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். சோதிமாணிக்கம் கிராமத்தில் 15 குடும்பங்களில் ஆய்வுசெய்தோம். எல்லாரும் விருமாண்டியின் சொந்தக்காரார்கள்தான். அவர்கள் உடம்பிலும் ஆப்பிரிக்க ஆதிமனிதனின் உடம்பிலுள்ள எம் 130 வகை மரபணு.

விருமாண்டி உடம்பிலும் உறவினர்கள் உடம்பிலும் உள்ள மரபணுபின் மூலம் முதல் மனித இனம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் இன்னும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பது உறுதியாகி விட்டது" என்கிறார் மரபணுப் பேராசிரியர் பிச்சையப்பன். பேராசிரியர் பிச்சையப்பன் தனது ஆராய்ச்சியை தொடர்வதற்காகச் சுமார் 6 கோடி ரூபாய் நிதியை டாக்டர் ஸ்பென்சர் வெல்சு அளித்திருக்கிறார்.
மனிதன் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

திங்கள், 13 நவம்பர், 2017

சோழ நாடாள்வான் கள்ளன்
நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்பது முற்காலத்தில் சிற்றரசர்களையோ அல்லது அந்த பகுதியின் தலைமையையோ குறிக்கும் மற்றும் பேரரசுக்கு கட்டுப்பட்ட அரசின் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். இது பிற்பாடு நாட்டார் என்றும் நாட்டு அம்பலம் போன்ற பதவி பெயராக மறுவியது இது.

வெள்ளாற்றின் வழக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம் , உறத்தூர் கூற்றம் என மூன்று கூற்றங்களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10,11-வது நூற்றாண்டுகளில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது.

கள்ளரும் மறவரும் அரையர் பட்டத்தை போலவே நாடாழ்வான் பட்டங்களில் அதிமாக காணப்பட்டனர் .

கள்ளரில் முடிகொண்ட சோழ நாடாள்வான், குலோத்துங்க சோழ நாடாள்வான், அம்புகோவில் நாடாள்வான் முதலிய நாடாள்வான் என்றும் மறவரில் அதளையூர் நாடாள்வான், அரசு மிகா நாடாள்வான், ஏழகபடை மிகா நாடாள்வான், கன்னிறைந்தான் இராசசிங்க நாடாள்வான், கல்வாயில் நாடாள்வான், சோணாடு கடலாண்ட நாடாள்வான் மற்றும் இள மறவரில் செருத்திமலை நாடாள்வான், திருக்கொடுங்குன்ற நாடாள்வான், கொடும்பை நாடாள்வான் என கல்வெட்டு உள்ளது.

இன்னும் காவிரி வடதமிழகத்தை எடுத்துக்கொண்டால் பார்க்கவ மூப்பனார்களுக்கும், உடையார்களுக்கும் நாடாள்வான் சீமை நாடாள்வான் அல்லது (சீமை நாட்டார்) என்ற பெயர்களிலே கல்வெட்டு செப்பேடு அதிகமாக காணலாம். காவிரியின் வடபுறத்திலிருந்து எடுத்துக்கொண்டால் இவர்களை மட்டுமே நாடாள்வானாக இனம் காண முடியும்.

இன்றும் நாட்டார்களாக நாட்டம்பலங்களாக, நாட்டாண்மைகாரர்களாக உள்ள தலைவர்களுக்கு சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் அந்த அந்த கோயில்களில் பல கரைக்காரர்கள் (கரையாளர்கள்) கரை அம்பலக்காரர்கள் முன்னிலையில் அவர்களுக்கு நாட்டு அரசு கட்டி, பரிவட்டம், வாள் முதலிய சின்னம் வழங்கி எந்த கோவிலில் நாட்டு அரசு கட்டுகிறார்களோ அந்த இறைவனின் திருநாமத்தை நாட்டார்(நாடாள்வார்)களுக்கு சூட்டி மரியாதை செய்வது வழக்கம். இதில் அவர்கள் பணக்காரர் ஏழை என்று பார்ப்பதில்லை, பரம்பரையாக வரும் வழக்கம்.

திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.

கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது.

குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,
‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)
என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)

விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க்குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன.

ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக்கோள முதலிகள் சிலர் அவ்வூர் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழைய ஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன.

கோப்பரகேசரின் (முதற்பராந்தகனின்) திருக்கட்டளைக் கல்வெட்டில் வல்லநாட்டுக் கவிர்ப்பால் கள்ளப்பால் நாடாய் இசைந்த நாட்டோமும் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இதே இடத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கனின் கல்வெட்டில் தென்கவி நாட்டுக் கள்ளப்பால் கற்குறிச்சி எனும் செய்தி கூறப்படுகிறது.


இக்கல்வெட்டுக்களில் இடம் பெரும் கள்ளப்பால் எனும் சொல் கள்ளர் வாழும் பகுதி என விளக்கம் பெறும். மேற்குறிப்பிடப்பட்ட கல்வெட்டில் (232 ) இவ்வூர் (கற்குறிச்சி) க் கள்ளன் பாப்பான் சேந்தனான குலோத்துங்க சோழ நாடாழ்வான் எனும் கள்ளர் தலைவனின் பெயர் கூறப்படுவது.

ராஜராஜ வளநாடு தென்கவி நாட்டு கள்ளபால் கல்குறிச்சி மகாதேவருக்கு இவ்வூர் கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான் இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி திருகற்றளி மகாதேவருக்கு வைத்த திரு நந்தா விளக்கு ..' (முதலாம் குலோத்துங்க சோழனின் 48 வது ஆச்சி ஆண்டு ,கிபி 1118,IPS-232,புதுகோட்டை ஆலங்குடி தாலுகா )கள்ளர் வாழும் பகுதியே கள்ளர்பால் எனும் கருத்தை உறுதிப்படுத்தும். கற்குறிச்சியும் (711 ) சிங்கமங்கலமும் (683 ) படைபற்றுக் குடியிருப்புக்கள் எனக் கூறப்படுகின்றன. இவை கள்ளர் படைகள் நிலைபெற்றிருந்த குடியிருகள் எனக் கருதலாம்.


மாறன் சுந்தரனின் நெய்வாசற் கல்வெட்டில் (260 ) திருத்தியூர் முட்டத்தாரான வண்டாக்குடிக் கள்ளர் பக்கல் விலைகொண்ட வண்டாங்குடி எனக் கூறப்படுகிறது. இங்கு வண்டாங்குடி என்பது ( வெள்ளான் வகை போன்று ) கள்ளரின் கூட்டுரிமை நிலத்தைக் குறிப்பதாகும். கள்ளர் பற்று எனும் குறிப்பும் இதே பொருளைத் தரும்.
வெள்ளைநல்லூர் (வெள்ளனூர்)ச் சிவாலயத்தின் அர்த்த மண்டபத்தைக் கட்டிய சிறுவாயில் நாடன் முடிக்கொண்ட சோழ நாட்டாழ்வான் என்பான் ஆலியர் கோன் எனக் கூறப்படுகிறான் (115). ஆலி நாட்டுக் கள்ளர் குழுவின் தலைவனான (ஆலியர்கோன்) இந்நபர் புதுகைப் பகுதியில் சோழரின் உயர் அலுவலராகப் பணிபுரிந்துள்ளான் எனக் கருதலாம். கற்குறிச்சி வரகுணவதி அரையனான நக்கன் செட்டி என்பவன் பிச்சை எடுத்து (உஞ்ஞட்டு) திருவப்பூர் (திருக்கோகர்ண)ச் சிவாலயத்திற்க்கு அறக்கோடை வழங்கியுள்ளான் (239). கள்ளர் குடியிருப்பான கற்குறிச்சி அரையனான இவர் கள்ளர்க்குலத்தவர் எனவும் வணிகத்தில் ஈடுப்பட்டமையால் செட்டி எனும் பிற்சொல்லைப் பெருவதாகவும் கருதலாம்.
கிபி 1462 ல் புதுக்கோட்டையின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஸ்ரீரங்க பல்லவராயரின் கள்ளர் படைபற்று!! கள்ளப்பால் கற்குறிச்சி பற்று!!!! என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.


பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்.
♡ நன்றி
உயர் திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

திங்கள், 6 நவம்பர், 2017

கள்ளர் குல அரையர்கள்


அரசன் - அரைசன் - அரையன் – ராயன். அரையன் என்பது அரசனை (சிற்றரசர்களை) குறிக்கும்.

(அரையனா யமருலக மாள்வதற்கு – தேவாரம்)

“ தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான் “
என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம்.

புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். தொண்டைமானால் குறிக்கப்ட்டுள்ள பல தாம்பிர சிலாசாசனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்புநாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர்,கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம்.

அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும்,அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்றும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலில் கூறியுள்ளார்.

சோழ ஆட்சி நிலைதளரந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக்கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும்,அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கின. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர், சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்த தொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும்,பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன, கூற்றமும்,நாடும் பின்காட்டப் பெறும். 


ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர்,பாணாதிராயர், கொங்குராயர்,விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர். இந்த பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சிறப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.


அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புலவயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டுவகை அரையர், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலியரையராகிய கடாரத்தரையர், குலோத்துங்க சோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லையெனத் தெரிகிறது.

இராஜராஜ வளநாட்டுச் செங்காட்டு நாட்டு இரண்டு வகையில் அரையர்கள் இந்தநாட்டுக் குளக்குடி (களக்குடி)க் கள்ளர் பற்றில் சிவப்பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கியுள்ளனர் (425). செங்காட்டு நாட்டில் வாழ்ந்த இரு கள்ளர் பிரிவுகளின் தலைவர்களான அரையர்களே இங்கு இரண்டு வகையில் அரையர்கள் எனக் கூறப்படுவதாகப் பொருள் கொள்ளலாம். கள்ளரின் கூட்டுரிமையான கள்ளர்பற்றில் இக்கள்ளர் தலைவர்களால் பிராமணர்க்கு நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டிற்குரிய அம்புக் கோவில் கல்வெட்டில் (522) அழும்பில் அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்புக் காணப்படுகிறது. இங்கு அஞ்சுக்குடி அரையர் எனும் குறிப்பு  அம்பு நாட்டு கள்ளர் சமூகத்தின ஐந்து உட்குழுக்களின் அரையர்களை குறிப்பதாகும்.

இரண்டாம் இராஜராஜனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் (135 ) சுட்டப்படும் சார் அரையன் இராஜேந்திரனான குலோத்துங்க சோழக் கடம்பராயனும் மூன்றாம் குலோத்துங்கனின் காரையூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் (157 ) தந்நன் தெங்கனான குலோத்துங்க சோழக் கடம்பராயனும் ஒரே குடும்பத்தவர் என அறிய முடிகிறது.நான்குபட்டி  வட்டத்திலுள்ள (மடத்துக்கோவில் ) மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டில் (௧௬௯) காணப்படும் " இந்தநாட்டுச் சார் அரையர்களில்" எனும் தொடரைக் கவனத்திற்கொண்டால் கடம்பராயன் எனும் குடும்பப் பெயரைப் பெறும் மேற்கூறிய மூன்று அரையர்களும் கோனாட்டில் சார் அரையர்களாகப் பணிபுரிந்தனர் . சோழரின் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய இவ்வரையர்கள் தம்மை உயர் தகுதி பெற்றவராக காட்டிக் கொள்ள முனைந்தனர். அரசர்கள் அஞ்சப்பிறந்தான் (178 ), வயலக நாட்டுப் புல்வயல் அரசு தேர்பொலிய நின்றாரான கடம்பராயன் (479 ) எனும் பெயர்கள் இவ்வரையர்கள் தன்னாட்சி பெற்ற குற்றரசுகளாகச் செய்ல்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. 


தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார்.


"பெரையூர் நாட்டு பனையூர் அரையன் (அரசன்) கள்வன்"
கள்ளிக்குடி என்பதனை கள்ளர் இனக்குழுச்சமூகம் வாழ்ந்த இடமாகக் கருத வாய்ப்புள்ளது.  கள்ளர் இனச்சமூகம் வாழ்ந்த பகுதி களைக் குறிக்க கள்ளப்பால் என்ற சொல் பிற்காலத்திய கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளன. 

'ராஜராஜ வளநாடு தென்கவி நாட்டு கள்ளபால் கல்குறிச்சி மகாதேவருக்கு இவ்வூர் கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான் இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி திருகற்றளி மகாதேவருக்கு வைத்த திரு நந்தா விளக்கு ..' (முதலாம் குலோத்துங்க சோழனின் 48 வது ஆச்சி ஆண்டு ,கிபி 1118,IPS-232,புதுகோட்டை ஆலங்குடி தாலுகா ). கள்ளர் வாழும் பகுதியே கள்ளர்பால் என்னும் கருத்தை உறுதிப்படுத்தும் கற்குறிச்சியும் சிங்கமங்கலமும் படைபற்றுக் குடியிருப்புக்கள்  எனக் கூறப்படுகின்றன. இவை கள்ளர் படைகள் நிலை பெற்றிருந்த குடியிருப்புக்ககள் என கூறலாம்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் களத்தூரில் கிடைத்தை கல்வெட்டு
கால்ம்:9-ஆம் நூற்றாண்டு வாசகம்:

“ ஸ்ரீய் யாண்டு கொங்கரையர் கள்ளப்பெருமகனார்
தேவியர் கொங்கச்சியார் களத்தூரில் செய்வித்த தூம்பு” என்று உள்ளது.


திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:

‘ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது…………..(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ‘ அரையன் மகன்’ என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில்‘இவன்’ உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்’என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.

கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் (மாலிக்கபூர்) முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லாற்றிலும் ஒருபங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300 வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும்,நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர்.

திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3,பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.

அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள் என்பதை அறிவோம். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.. இவை ஓன்று இருந்தாலே அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கும் சாதிகள் இருக்கும் தமிழகத்தில் இணையில்லா தஞ்சை கள்ளர் குலத்தின் பட்டங்களை பாருங்கள் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்.

1 பாண்டியராயர்,
2 பல்லவதரையர்,
3 பல்லவராயர்
4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
6 தஞ்சைராயர்
7 பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் )
8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம்,ராஜேந்திர சோழன் தாய்
9 வல்லத்தரையர்
10 முத்தரையர்
11 கொல்லத்தரையர்
12 கலிங்கராயர்
13 கொங்குராயர்
14 செம்பியதரையர்
15 கேரளராயர்
16 ஈழ்த்தரையர்
17 கச்சியராயர்
18 காடவராயர்
19 கடாரத்தரையர்
20 கச்சைராயர்
21 கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
22 கலிங்கராயதேவர்
23 களப்பாளராயர்
24 குறும்பராயர்
25 சோழகன்னகுச்சிராயர்
26 காலிங்கராயர்
27 செம்பியமுத்தரையர்
28 சம்புராயர்
29 சோழரையர்
30 சேதுராயர்
31 செம்பியரையர்
32 சோழதரையர்
33 சீனத்தரயைர்
34 சோழதிரையர்
35 சிங்களராயர்
36 தஞ்சிராயர்
37 செழியதரையர்
38 சிந்துராபாண்டிராயர்யர்
39 தேவராயர்
40 தமிழுதரையர்
41 தெலிங்கராயர்
42 தென்னதிரையர்
43 தென்னரையர்
44 தென்னறையர்
45 தென்னவராயர்
46 பாண்டுராயர்
47 மூவரையர்
48 மூவேந்த்ரையர்
49 மானமுத்தரையர்
50 மீனவராயர்
51 மலையராயர்
52 மழவராயர்
53 முனைதரையர்
54 மலையராயர்
55 மலையரையர்
56 வங்கத்தரையர்
57 வங்கராயர்
58 வடுகராயர்
59 நாகராயர்
60 வாணாதிராயர்
61 வல்லவராயர்
62 வில்லவதரையனார்
63 வில்லவராயர்
64 வெங்கிராயர்
65 வாணரையர்
66 வாண்டராயர்
67 வண்டைராயர்
68 வேங்கைராயர்
69 வெங்கிராயர்,
70 அங்கராயர்.
71 ஆக்காட்டரையர்.
72 அன்கராயர்.
73 ஆற்காட்டரையர்.
74 அனகராயர்
75 அங்கதராயர்
76 ஆச்சராயர்
77 ஆச்சாண்டார்
78 உழுவாண்டார்.
79 அச்சிராயர்
80 அச்சுதராயர்
81 உமத்தரையர்
82 அத்திராயர்
83 அத்தியரையர்
84 ஆலத்தரையர்.
85 அமராண்டார்
86 அம்பராண்டார்
87 ஆற்க்காடுராயர்
88 அம்மையத்தரையர்
89 இராதராயர்
90 இராமலிங்கராயதேவர்
91 இராலிங்கராயதேவர்
92 ஓந்திரையர்
93 ஓந்தரையர்
94 ஓமாந்தரையர்
95 ஓமாமரையர்
96 இருப்பரையர்
97 அண்ணவசல்ராயர
98 கொங்கரையர்
99 கொங்ககரையர்
100 கொங்குதிரையர்
101 கொடிராயர்
102 காசிராயர்
103 கொடிக்கிராயர்,
104 கொடிக்கவிராயர்
105 கஞ்சராயர்
106 கொடும்பராயர்,
107 கொடும்பைராயர்
108 கடம்பராயர்
109 கொடும்புராயர்
110 கடம்பைராயர்
111 கொடும்மளுர்ராயர்
112 கொடும்பிராயர்,
113 கொடும்பையரையர்
114 கார்யோகராயர்
115 கட்டராயர்
116 கொழுந்தராயர்
117 கொற்றப்பராயர்
118 கொத்தப்பராயர்
119 கொற்றரையர்
120 கண்டராயர்
121 கண்டவராயர்
122 கோட்டரையர்
123 கோட்டையரையர்
124 கண்ணரையர்
125 கரம்பராயர்
126 கீழரையர்
127 கைலாயராயர்
128 கையராயர்
129 கரும்பராயர்
130 குச்சராயர்
131 குச்சிராயர்
132 குச்சியராயர்
133 குமதராயர்
134 கலிராயர்
135 குருகுலராயர்
136 குழந்தைராயர்
137 கொழந்தைராயர்
138 கொழந்தராயர்
139 கொழுந்தைராயர்,
140 களப்பாள்ராயர்,
141 கனகராயர்
142 கூத்தப்பராயர்
143 கன்னகொண்டார்
144 கொத்தப்பராயர்
145 கன்னக்குச்சிராயர்
146 கன்னராயர்
147 கன்னிராயர்
148 கேளராயர்
149 சக்கரையர்
150 சாக்கரையர்
151 சக்கராயர்
152 செம்பரையர்
153 சக்காராயர்
154 சங்கரராயர்
155 சோழுதிரையர்
156 சோதிரையர்
157 செல்லரையர்
158 செனவராயர்
159 சன்னவராயர்
160 சனகராயர்
161 சன்னராயர்
162 சென்னிராயர்
163 சன்னவராயர்
164 சாணரையர்
165 சாத்தரையர்
166 சாமுத்தரையர்
167 சாமுத்திரையர்,
168 சேண்ராயர்
169 செனவராயர்
170 சிங்கராயர்
171 சேந்தராயர்
172 சிந்துராயர்
173 சிறுநாட்டுராயர்
174 சிறுராயர்
175 சேறைராயர்
176 சேற்றூரரையர்
177 சுக்கிராயர்
178 சுக்கிரபராயர்
179 சுக்கிரியராயர்
180 சுந்தரராயர்
181 சொரப்பரையர்
182 சோதிரையர்
183 தேசுராயர்
184 தனஞ்சராயர்
185 திருக்காட்டுராயர்
186 தம்பிராயர்
187 தனராயர்
188 தோப்பைராயர்
189 தலைசைராயர்,
190 துண்டராயர்
191 தனசைராயர்
192 துண்டுராயர்
193 துண்டீரராயர்
194 தனிராயர் ,
195 நண்டல்ராயர்
196 நந்திராயர்
197 நந்தியராயர்
198 நாட்டரையர்
199 நாட்டறையர்
200 நரசிங்கராயர்
201 நெடுந்தரையர்
202 நன்னிராயர்
203 நெல்லிராயர்
204 பகட்டுராயர்
205 பூழிராயர்
206 பூவனையரையர்
207 பங்களராயர்
208 பாச்சிராயர்
209 பேரரையர்,
210 பேதரையர்
211 பாண்டராயர்
212 பஞ்சராயர்
213 பஞ்சந்தரையர்
214 பஞ்சநதரையர்
215 பாப்பரையர்
216 பொய்ந்தராயர்
217 போய்ந்தராயர்
218 போய்ந்தரராயர்
219 பட்டுராயர்
220 பொன்னவராயர்
221 பாலைராயர்
222 பால்ராயர்
223 பிச்சராயர்
224 பதுங்கராயர்
225 பதுங்கரார்
226 பிரமராயர்
227 பிலியராயர்
228 பயிற்றுராயர்
229 பரங்கிலிராயர்
230 பரங்கிராயர்
231 பருதிராயர்
232 புள்ளராயர்
233 பிள்ளைராயர்
234 போதரையர்
235 பூராயர்
236 பனைராயர்
237 மாதராயர்
238 மாதைராயர்
239 மாதுராயர்
240 மாத்துராயர்
241 மங்கலராயர்
242 மாதவராயர்
243 மாந்தராயர்
244 மாந்தையரையர்,
245 மாந்தரையர்
246 மட்டைராயர்
247 மேனாட்டரையர்
248 மணிராயர்
249 மண்டலராயர்
250 மண்டராயர்
251 மாவாளியார்
252 மண்ணிராயர்
253 மணிக்கராயர்
254 மாளுவராயர்
255 மானத்தரையர்
256 மருங்கராயர்
257 பருங்கைராயர்
258 கைராயர்
259 விக்கிரமத்தரையர்
260 விசயராயர்
261 வங்கனராயர்
262 விசையராயர்
263 வங்காரமுத்தரையர்
264 விசராயர்
265 விசுவராயர்
266 வங்கானமுத்திரையர்
267 விசுவரார்
268 வஞ்சிராயர்
269 வாஞ்சிராயர்
270 விஞ்சிராயர்
271 விஞ்சைராயர்
272 வடுராயர்
273 விசலராயர்
274 வடுராயர்,
275 விசுவராயர்
276 வல்லவரையர்
277 விண்டுராயர்
278 வீண்டுராயர்
279 விருதுளார்
280 விலாடத்தரையர்
281 வில்லவதரையர்
282 வில்வராயர்
283 விழுப்பாதராயர்
284 விற்பன்னராயர்
285 வீணதரையர்,
286 வெட்டுவராயர்
287 வணதரையர்
288 வாணதிரையர்
289 வாணாதரையர்
290 வீணாதரையர்
291 வீனைதிரையர்
292 வெங்கிராயர்
293 வாலிராயர்
294 வேம்பராயர்
295 வாளுவராயர்
296 வேள்ராயர்
297 வாள்ராயர்
298 வைகராயர்
299 வையராயர்
300 வைராயர்
301 வயிராயர்
302 பிள்ளைராயர்
303 கழுத்திரையர்
304 செட்டரையர்
305 தழிஞ்சிராயர்

நடுக்கல்லில் மற்றும் கல்வெட்டில் வரும் அரையர் :

1) தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கைலாவரம் எனும் ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு ( தரும. கல். 5/1973) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீ கட்டிணை பருமற்கு யாண்டு முப்பத்தே / ழாவது கந்தவாணதிஅரையர் புறமலை நாடாள அருட்டிறையர் தொறுக் கொண்ட ஞா / ன்று அமர நீலியார் சேவகர் / பையச்சாத்தனார் தொ / று மீட்டு / பட்டார் கல்

கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய முப்பத்தேழாவது ஆட்சி (757 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வாண அரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அருள் திறையன் என்பான் (இக்காலக் கைலாபுரப் பகுதியில்) ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது கைலாபுரப் பகுதியின் வேள் அமரநீலி என்பானுடைய படைவீரன் பையச்சாத்தன் என்பான் அவ் ஆநிரைகளை மீட்டான். அப்பூசலில் அவன் வீர சாவு எய்தியதன் நினைவில் நிறுவப்பட்ட நடுகல் என்பது செய்தி.

2) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் சின்னட்டி என்ற ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (நடு. பக். 498) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டிணை பந்மற்கு யாண்டைந்தாவது / வேட்டுவதி அரையர் சேவர் குமாரபம்மர் / மக்கள் மாகற்நாகஅவர் தம்பி இருவரும் / வேளூர் தொறு மீட்டுப்பட்டார்

கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய ஐந்தாவது ஆட்சி (730 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வேட்டுவனான அதிஅரசன் எனும் பொறுப்பு கொண்ட வேளுக்கு படையாள் குமாரபம்மன் என்பவன் பெற்ற பிள்ளைகள் மாகற்நாகன் மற்றும் அவன் தம்பி இருவருமாக பகைவர் கவர்ந்து சென்ற வேளூர் கால்நடைகளை மீட்டு அப்பூசலில் வீர சாவு எய்தினர்.

தொறு எருமை, ஆடு, மாடு ஆகியவற்றை குறிக்கும். கட்டாணை பருமன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் சிவமாற வர்மனின் தந்தையான ஸ்ரீ புருஷனே என்பர் அறிஞர். குமாரபம்மன் எந்த நாடன்,ஊரன் என்ற செய்தி இல்லை.

3) நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.

4) படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர். கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர். அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம், ஊரவையர்,நாடாள்வார், அரையர், பேரரையர், நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்
சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12 ""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"
பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13 : ""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"


5) ஐராவதீஸ்வரர் திருக்கோயில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை
செய்ததாக ஐதீகம். இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் ""ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது .இக்கோயிலைக் கட்டுவித்தவன் ""சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராசன்'' ஆவான் (காலம் கி.பி.1253),
6) ராஜேந்திரன் சோழனின் அரசியல் ஆலோசகன் மாராயன் அருண்மொழி,காலாட்படை தலைவன் உத்தமச்சோழன் கோன், பிரதம அமைச்சர் உத்தமச்சோழ பல்லவராயன், கப்பல்படைத் தலைவன் ஜயமூரி நாடாள்வான், தலைமைத் தளபதி அரையன் ராஜராஜன்.

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...