அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு

கள்ளர் மரபை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பாகனேரி நடராஜ தேவர், பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. பில்லப்பா அம்பலம், பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம் (வெள்ளையர்கள் காலத்தில் ஜில்லாபோர்டு தலைவராக இருந்த முன்னோடி), ஆர்.வி. சுவாமிநாதன் தேவர் (மத்திய இணையமைச்சர், குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் முதல் தீர்மானம் கொண்டுவந்தவர்)
பாகனேரி நாட்டில் வழக்கத்தில் உள்ள புல்வநாயகி அம்மன் தல வரலாறு கூறும் ஒலைச்சுவடியில் எட்டாம் நாள் மண்டகப்படி வாளுக்குவேலிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் அம்பலம் மற்றும் உடையப்பா அம்பலம் ஆகியோரும் நடத்தும் உரிமை உடையவர்கள். மண்டகப்படியின் போது " முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே" எனும் வாசகம் வாசிக்கப்படுகிறது.
ராமநாதபுர மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் ஜாம்பவான்கள், பெரும் வள்ளல் பாகனேரி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் அவர்கள் இல்லம்.

1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாகனேரியை சேர்ந்த உ.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இவர் 1984 முதல் 1987 வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். 1996ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உ.சுப்பிரமணியன் மகன் சுப.உடையப்பன் 1998 வரை எம்பியாக இருந்தார்.