ஞாயிறு, 30 டிசம்பர், 2018

சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர் அரையர்களின் பட்டப் பெயரில் உள்ள கள்ளர் குடியினர் வாழும் ஊர்கள்


தமிழகம் பல மண்டலங்களாகவும், வளநாடுகளாகவும், நாடுகளாகவும், ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

மண்டலங்களும், அவற்றிற்குட்பட்ட வளநாடுகளும் அரசன் பெயராலும், அவன் பட்டப் பெயராலும் வழங்கப்பட்டன.
சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது. அவ் வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போல் பட்டப் பெயரால் அமைந்துள்ள, அதே பட்டங்கள் உடைய கள்ளர் இன மக்களே பரம்பரை பரம்பரையாக அதிகமாக வாழ்ந்து வருவதும், அந்த ஊர்களில்லெல்லாம் கள்ளர்களே முதன்மையானவர்களாகவும், அம்பலகாரர்களாகவும் , பட்டையர்களாகவும் உள்ளனர்.
* கள்ளந்திரி 
* கள்ளபெரம்பூர்
* கள்ளிக்குடி
* கள்ளம்பட்டி
* கள்ளகுறிச்சி


பட்டி

1. அங்கராயன் பட்டி - அங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
2 . ஆரமுண்டான்பட்டி – ஆரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் ( தஞ்சாவூர், புதுப்பட்டி ஊராட்சி)
3 . இராசாளிப் பட்டி - இராசாளியார் பட்டம் உடைய கள்ளர்கள் ( விராலிமலை, தஞ்சாவூர் பகுதி )
4 . இராயமுண்டான்பட்டி – இராயமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் ( தஞ்சாவூர், ஏரிமங்கல நாடு பகுதி )
5 . உலகங்காத்தான்பட்டி – உலகம்காத்தார் பட்டம் உடைய கள்ளர்கள் ( கள்ள(ர்)குறிச்சி பகுதி )
6 . உலங்காத்தான்பட்டி - உலங்கத்தார் பட்டம் உடைய கள்ளர்கள் ( கள்ள(ர்)குறிச்சி பகுதி )
7 . ஏத்தொண்டான்பட்டி – ஏத்தொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
8 . ஏற்றாண்டார் பட்டி - ஏற்றாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி, நடராசபுரம்)
9 . ஓசையன்பட்டி - ஓசையார், ஓசையர் பட்டம் உடைய கள்ளர்கள்
10 . கடம்பராயன் பட்டி - கடம்பராயர் பட்டம் உடைய கள்ளர்கள் ( புதுக்கோட்டை)
11 . கண்டியன்பட்டி – கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள் (அம்புகோயில், புதுக்கோட்டை)
12 . கருப்பட்டிப் பட்டி - கருப்பட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் (அம்புகோயில், புதுக்கோட்டை)
13 . கல்விராயன்பட்டி - கவிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஆலக்குடி)
14 . கலியராயன்பட்டி - கலியராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
15 . காங்கெயன்பட்டி - காங்கெயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
16 . காடவராயன்பட்டி - காடவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, புனல்குளம் வட்டம்)
17 . காவாலிப் பட்டி - காவாலியார் பட்டம் உடைய கள்ளர்கள் (ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர்)
18 . குச்சிராயன்பட்டி - குச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
19 . சம்புரான்பட்டி - சம்புராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை,ஆலக்குடி)
20 . சாணூரன்பட்டி - சானூரர் பட்டம் உடைய கள்ளர்கள்
21 . சாதகன்பட்டி – சாதகர் பட்டம் உடைய கள்ளர்கள்
22 . சாளுவராயன்பட்டி - சாளுவர் பட்டம் உடைய கள்ளர்கள்
23 . சுரக்குடிப்பட்டி - சுரக்குடியார் ,செம்பிய முத்தரையர்பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஏரிமங்கலநாடு)
24 . சேதிராயன்பட்டி - சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
25 . சேதுராப்பட்டி - சேதுராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி, திருவரங்கம் )
26 . சோழகன்பட்டி - சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தராக்கோட்டை)
27 . திராணிபட்டி – திராணியார் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, பெருங்களூர்)
28 . துண்டுராயன்பட்டி - துண்டுராயர் (துண்டீரராயர்)பட்டம் உடைய கள்ளர்கள்
29 . தென்னதரையன் பட்டி - தென்னதிரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
30 . தொண்டைமான்பட்டி – தொண்டைமான் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி திருவெறும்பூர்)
31 . நரங்கியன்பட்டி - நரங்கியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தராக்கோட்டை)
32 . பல்லவராயன்பட்டி - பல்லவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (மதுரை, தேனி, கந்தர்வகோட்டை
33 . பாண்டியராயன் பட்டி - பாண்டியராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
34 . பாண்டுராயன்பட்டி - பாண்டுராயர் பாண்டுரார் பட்டம் உடைய கள்ளர்கள் 
35 . பாப்பரையன்பட்டி - பாப்பு வெட்டியார், பாப்பு ரெட்டியார், பாப்பரையர் பட்டம் உடைய கள்ளர்கள்

36 . பாலாண்டான்பட்டி - பாலாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (குளத்தூர், புதுக்கோட்டை)
37 . பூலான்பட்டி - பூலார் பட்டம் உடைய கள்ளர்கள் ( அம்புநாடு, சிவகங்கை, சேலம், மதுரை )
38 . மங்கத்தேவன் பட்டி - மங்கத்தேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தர்வக்கோட்டை)
39 . மங்கலத்துப் பட்டி - மங்கலத்தான், மங்கலதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (பெருங்கலூர், புதுக்கோட்டை))
40 . மலையப்பட்டி - மலையர் பட்டம் உடைய கள்ளர்கள் (கந்தர்வக்கோட்டை)
41 . மலைராயன்பட்டி - மலையமான், மலைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
42 . மழவராயன் பட்டி - மழவராயன் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை)
43 . மாதரையன்பட்டி - மாதராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
44 . மாதவராயன்பட்டி - மாதவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (சிவகங்கை திருப்பத்தூர்)
45 . மாதைராயன்பட்டி – மாதைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
46 . முத்துவீரக்கண்டியன்பட்டி (திருவையாறு)
47 . முதலிப்பட்டி - முதலியார் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை)
47. முனையதிரியன் பட்டி - முனையத்திரியர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம்)
48 . வல்லாண்டான்பட்டி – வல்லாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
49 . வல்லாளப்பட்டி- வல்லாளத்தேவன் பட்டம் உடைய கள்ளர்கள் (மேலநாடு, மதுரை)
50 . வன்னியன்பட்டி - வன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை, பெருங்குடி)
51 . வாணதிரையன்பட்டினம் - வாணதிரையன் பட்டம் உடைய கள்ளர்கள் (அரியலூர் , ஜெயங்கொண்டம்)
52 . வாணராயன்பட்டினம் - வாணரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
53 . வாலியன்பட்டி (வாலியப்பட்டி) – வாலியர், வாலிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (திருச்சி)
54 . வில்லவராயன்பட்டி – வில்லவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (பூதலூர், தஞ்சாவூர்)
55 . வெண்டையன்பட்டி - வெண்டர், வெண்டாதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர், ஏரிமங்கல நாடு)

55. கொங்கரையன்பட்டி - கொங்கரையர் பட்டம் உடைய கள்ளர்கள்

விடுதி


56 . ஆரிச்சுத்திவிடுதி - ஆர்சுத்தியார் பட்டம் உடைய கள்ளர்கள்
57 . இராங்கியன்விடுதி - ராங்கியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )
58 . இராசளிவிடுதி - இராசளியர் பட்டம் உடைய கள்ளர்கள்
59 . இருப்பைவிடுதி - இருப்பரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
60 . உஞ்சிவிடுதி - பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
61 . கரம்பைவிடுதி - கரம்பையார் , கரம்பைகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
62 . கலிராயன்விடுதி - கலிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
63 . காடுவெட்டிவிடுதி - காடுவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் , திருவோணம்)
64 . காரியான்விடுதி - காரியார் பட்டம் உடைய கள்ளர்கள்
65 . சம்பட்டிவிடுதி - சம்பட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள்
66 . சென்னிவிடுதி - சென்னிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் திருவோணம்)
67 . தளிகைவிடுதி - தளிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (ஒரத்தநாடு, தஞ்சாவூர்)
68 . பணிகொண்டான் விடுதி - பணிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
69 . பன்னிகொண்டான்விடுதி - பன்னிக்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
70 . போத்தன்விடுதி - போய்ந்தராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
71 . மணிகராயன்விடுதி - மணிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
72 . மேனாட்டுராயன்விடுதி - மேனாட்டரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
73 . வன்னியன்விடுதி - வன்னியன் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை - ஆலங்குடி)
74 . வெட்டன்விடுதி - வெட்டுவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (புதுக்கோட்டை )
75 . வெள்ளைத்தேவன்விடுதி - வெள்ளதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் )
76 . வலங்கொண்டான்விடுதி - வலங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )
77 . வாண்டான்விடுதி - வாண்டாப்பிரியர் பட்டம் உடைய கள்ளர்கள் (கறம்பக்குடி )

குடிகாடு

78 . நார்த்தேவன் குடிக்காடு - நார்த்தேவர் பட்டம் உடைய கள்ளர்கள் (குழந்தை வளநாடு, தஞ்சாவூர் )
78 . உறந்தராயன் குடிகாடு - உறந்தராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
79 . கண்டியங்காடு - கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர் மதுக்கூர் வட்டம் )
80 . சேதிராயன் குடிக்காடு - சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
81 . சோழகன் குடிகாடு - சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சை, திருவோணம்)
82 . தெலுங்கராயன் குடிகாடு - தெலுங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
83 . நல்லவன்னியவன் குடிக்காடு - நல்லவன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சாவூர்)
84 . பழங்கொண்டான் குடிகாடு - பழங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
85 . புள்ளவராயன் குடிகாடு - புள்ளவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் (மன்னார்குடி )
86 . பொய்கையாண்டார் குடிகாடு - பொய்கையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
87 . பொய்யுண்டார் குடிகாடு - பொய்யுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (தஞ்சை, திருவோணம்)
88 . வீரமுண்டார் குடிகாடு - வீரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
89 . வேங்கிராயன் குடிகாடு - வேங்கிராயர்

பட்டம் உடைய கள்ளர்கள் கள்ளர் பட்டங்களில் உள்ள மற்ற ஊர்கள்

90 . ஆர்சுத்திப் பட்டு - ஆர்சுத்தியார் பட்டம் உடைய கள்ளர்கள்
91 . ஓமாம்புலியூர் - ஓமாமரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
92 . கங்கைகொண்டான் - கங்கைநாட்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
93 . கச்சிராயன் மங்கலம் (கச்சமங்கலம்) - கச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
94 . கண்டியன் பட்டு - கண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள்
95 . கண்டியூர் - இராசகண்டியர் பட்டம் உடைய கள்ளர்கள்
96 . கலிங்கராயன் ஓடை - கலிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
97 . களத்தில்வென்றான் பேட்டை - களத்தில் வென்றார் பட்டம் உடைய கள்ளர்கள்
98 . காளிங்கராயன் ஓடை - காளிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
99 . கொங்கராயநல்லூர் - கொங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
100 . கொடும்பாளூர் - கொடும்பாளுர்ராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
101 . கோனெரிராஜபுரம் - கோனெரிகொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
102 . சாளுவன்பேட்டை - சாளுவர் பட்டம் உடைய கள்ளர்கள்
103 . செம்பியன் மணக்குடி - செம்பியதரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
104 . செம்பியன்களர் - செம்பியத்தரசு செம்பியதரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
105 . துண்டுராயன்பாடி – துண்டுராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
106 . தென்கொண்டானிருப்பு – தென்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
107 . தொண்டராயன் பட்டு – தொண்டராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
108 . நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்) – நாயக்கர் பட்டம் உடைய கள்ளர்கள்
109 . வாண்டையான் குடியிருப்பு – வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்கள்
110 . வாண்டையானிருப்பு – வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்கள்
111 . வேங்கிராயன் உக்கடை - வேங்கைராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
112 . செம்பியன்மாதேவி
113 . செம்பின் மணக்குடி
114 . சேதுராயநத்தம்
115 . சேதுராயபுதூர்
116 . சேதுவராயகுப்பம்
117 . சேதுவராயன் ஏந்தல்
118 . சேந்தன்குடி
119 . சேர்வைக்கட்டளை
120 . சேர்வைக்காரங்கட்டளை
121 . தொண்டைமாங்கணம்
122 . தொண்டைமாங்குலம்
123 . தொண்டைமாந்துளசி
124 . தொண்டைமான்
125 . தொண்டைமான் ஏந்தல்
126 . தொண்டைமானந்தம்
127 . தொண்டைமான்நல்லூர்
128 . தொண்டைமானூர்
129 . தேவர்கண்டநல்லூர்
130 . நாட்டார்மங்கலம்
131 . நாய்க்கர்பாளையம் (சாவடி நாய்க்கர்)
132 . பல்லவராயன்பேட்டை
133 . பூண்டிபானமங்கலம்
134 . பூலான்குடியிருப்பு
135 . பூவனைக்குடி
136 . மணவாளநல்லூர்
137 . மணவாளம்பேட்டை
138 . மழவங்க்ரனை
139 . மழவந்தாங்கல்
140 . மழவராய நல்லூர்
141 . மழ்வராயணேந்தல்
142 . மழவராயன் நல்லூர்
143 . மழவராயனத்தம்
144 . வல்லாண்டான் பட்டு
145 . வன்னிப் பட்டு
146 . வாண்டையாரிருப்பு
147 . பல்லவராயன்பத்தை

கோட்டை - கோட்டை என்று முடியும் பல ஊர்கள் கள்ளர் பட்டங்களிலும் , கள்ளர் அம்பலகாரர்கள் கீழ் இன்றும் உள்ளது.


148 . அத்திக்கோட்டை
149 . அருப்புக்கோட்டை
150 . அருமலைக்கோட்டை
151 . ஆத்திக்கோட்டை
152 . ஆதனக்கோட்டை
153 . ஆய்க்கோட்டை
154 . ஆவணக்கோட்டை
155 . இடைங்கான்கோட்டை
156 . ஈச்சங்கோட்டை
157 . உச்சக்கோட்டை
158 . உள்ளிக்கோட்டை
159 . எயிலுவான் கோட்டை
160 . ஒளிக்கோட்டை
161 . கக்கரக்கோட்டை
162 . கண்டர்கோட்டை - கண்டர் பட்டம் உடைய கள்ளர்கள்
163 . கந்தர்வக்கோட்டை
164 . கரம்பயன்கோட்டை
165 . கரமுண்டான் கோட்டை - கரமுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
166 . கருக்காக்கோட்டை
167 . கரும்பூரான்கோட்டை - கரும்பூரார் பட்டம் உடைய கள்ளர்கள்
168 . கரைமீண்டார் கோட்டை – கரைமீண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
169 . கல்லாக்கோட்டை
170 . கள்ளிக்கோட்டை
171 . காசாங் கோட்டை
172 . காரிகோட்டை
173 . காரைக்கோட்டை
174 . கிள்ளிக் கோட்டை – கிள்ளிகண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
175 . கிள்ளுக்கோட்டை - கிள்ளியாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
176 . கீழாநிலைக்கோட்டை
177 . கீழைக்கோட்டை
178 . குன்னங் கோட்டை
179 . கூராட்சிகோட்டை
180 . சத்துருசங்காரக் கோட்டை
181 . சாக்கோட்டை
182 . சாய்க்கோட்டை
183 . சிறுகோட்டை
184 . சின்னபருத்திக்கோட்டை
185 . சுந்தரகோட்டை
186 . சூரக்கோட்டை
187 . செங்கோட்டை
188 . செஞ்சிக்கோட்டை
189 . சேண்டாகோட்டை
190 . சோணாகோட்டை
191 . தம்பிக்கோட்டை
192 . தர்மக்கோட்டை
193 . தளிக்கோட்டை
194 . தாமரங்கோட்டை
195 . தாமிரன்கோட்டை
196 . திருமக்கோட்டை
197 . திருமங்கலக்கோட்டை
198 . திருமலைக்கோட்டை
199 . தும்பதிக்கோட்டை
200 . துரையுண்டார்கோட்டை
201 . துறையாண்டார் கோட்டை

202 . தெற்குக் கோட்டை

203 . நடுவாக்கோட்டை
204 . நடுவிக்கோட்டை
205 . நம்பன்கோட்டை
206 . நள்ளிக்கோட்டை
207 . நாஞ்சிக்கோட்டை
208 . நாட்டரையர் கோட்டை – நாட்டரையர் பட்டம் உடைய கள்ளர்கள்
209 . நாயக்கர் கோட்டை
210 . நாயக்கான்கோட்டை - நாய்க்காவாடியார் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
211 . நெடுவாக்கோட்டை – நெடுவாண்டையர் பட்டம் உடைய கள்ளர்கள்
212 . நெல்லிக்கோட்டை

212. நெம்மக்கோட்டை- களரி பட்டம் உடைய கள்ளர்கள்
213 . பஞ்சநதிக்கோட்டை
214 . பட்டுக்கோட்டை – (பட்டு ) மழவராயர் பட்டம் உடைய கள்ளர்கள்
215 . பத்தாளன்கோட்டை – பத்தாளியார் பட்டம் உடைய கள்ளர்கள்
216 . பரக்கலகோட்டை
217 . பரங்கிலிகோட்டை
218 . பரமக்கோட்டை
219 . பரவாக்கோட்டை
220 . பராக்கோட்டை
221 . பருதிக்கோட்டை
222 . பழங்கொண்டான் கோட்டை – பழங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
223 . பனையக்கோட்டை
224 . பாச்சிற்கோட்டை
225 . பாதிரங்கோட்டை
226 . பாலபத்திரன் கோட்டை
227 . பாளைங்கோட்டை
228 . பிங்கலக்கோட்டை
229 . புத்திகழிச்சான்கோட்டை
230 . புதுக்கோட்டை
231 . பெரண்டார்கோட்டை - பெரன்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
232 . பெரியக்கோட்டை - கோபாலர் பட்டம் உடைய கள்ளர்கள்
233 . பெரியபருத்திக்கோட்டை
234 . பொய்கையாண்டார் கோட்டை – பொய்கையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
235 . பொய்யுண்டார் கோட்டை – பொய்யுண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
236 . பொன்னவராயன்கோட்டை
237 . மகிழங்கோட்டை
238 . மண்டலகோட்டை - மண்டலார் பட்டம் உடைய கள்ளர்கள் (மண்டலார் பட்டம் தாங்கியோர் வாராப்பூர் நாட்டிலும் உள்ளனர்.)
239 . மயிலாடு கோட்டை
240 . மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
241 . மருதக்கோட்டை
242 . மல்லாக்கோட்டை
243 . மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
244 . மாங்கோட்டை
245 . மானரராயன் புதுக்கோட்டை
246 . மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
247 . மூவரையன்கோட்டை (மூவரையர் பட்டம் உடைய கள்ளர்கள்)
248 . மேலைக்கோட்டை
249 . வத்தானக்கோட்டை
250 . வரவுக்கோட்டை
251 . வாகோட்டை
252 . வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை) - வாட்டாச்சியார் பட்டம் உடைய கள்ளர்கள் ( வீரக்குடி நாட்டில் உள்ளது)
253 . வாழவந்தான் கோட்டை
254 . வாளமரங் கோட்டை - வாளமரர் பட்டம் உடைய கள்ளர்கள் (சுந்தர வளநாடு)
255 . வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
256 . வெட்டுவாகோட்டை
257 . வெண்டாக்கோட்டை
258. வடுவூர் புதுக்கோட்டை - விஜயதேவர் பட்டம் உடைய கள்ளர்கள்
259. பாச்சிற்கோட்டை - பாச்சிண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் (வாராப்பூர் நாடு)
260. கோட்டையாண்டார்இருப்பு - கோட்டையாண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்
261. கடாரங்கொண்டான் - கடாரங்கொண்டான் பட்டம் உடைய கள்ளர்கள் ( திருவாரூர் )
262. வீரங்கொண்டார்கோட்டை - வீரங்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள்

புதன், 26 டிசம்பர், 2018

மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLAதேனி மாவட்டத்தில் கூடலூர் மிக உணர்வு மிக்க ஊர், சுமார் 70 சதவீதம் கள்ளர் குடியினர் வசிக்கும் பூமி. இங்கு கள்ளர் குடியில் பிறந்தவர் மொழிப்போரின் நாயகன், அண்ணாவின் போர்வாள் மாவீரர் ஐயா மா. ராஜாங்கம் தேவர். முல்லை பெரியாறு அணை புகழ் அண்ணல் பேயத்தேவரின் பேரனும் ஆவார். (பேயத்தேவர் பேத்தி வழி பேரன் ஆவார்).


25-2-65 ல் தமிழ் நாடெங்கும் உள்ள மாணவர்கள் இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து கண்டண ஊர்வலம் நடத்தத் தொடங்கினர்கள். மதுரையிலும் அந்த ஊர்வல ஏற்பாடு இருந்தது, ஊர்வலம் வடக்குமாசி வீதிக்குள் வந்து கொண்டிருந்தபோது வழியில் இருந்த காங்கிரஸ் காரியாலயத்திற்குள்ளிருந்து சிலர் அரிவாள்களுடனும், கத்திகளுடனும் வெளிக்கிளம்பி மாணவர்களைத் தாக்கியும் வெட்டியும் கல்லெறிந்தும் அராஜகம் விளைவித்தார்கள். மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கப்பட்டதை திட்டமிட்ட வெறிச் செயல் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் எழுதிக்குவித்தன.

இவைகளுக்கு மட்டுமா தீ. தங்களுக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சிலர் மாண்டு போனார்கள். கோடம்பாக்கத்தில் இருவர், கோவை மாவட்டத்தில் ஒருவர். திருச்சி மாவட்டத்தில் ஒருவர்-அவர் ஒரு தலைமை ஆசிரியர்! இந்தத் தியாகத் தீக்குளிப்புக் கேட்டு பிரதமர் லால்பகதூர் அதிர்ச்சியடைந்து விட்டதாக ரேடியோச் செய்தி அறிவித்தது.

ஒரு வாரம் தமிழகத்து அரசியல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒடியது. ஆனல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம் மொழிக் கிளர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டன. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.

தென்வியட்நாம் போராட்டத்தைப்போல், அரங்கநாதன், சிவலிங்கம் தீக்குளித்து விட்டார்கள். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களைச் சிலர் தீக்குளிக்க வைத்து விட்டார்கள்.

கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. மதுரை மாவட்டம், கூடலூரிலும் நடைபெற்றது.

1965 ல் நடந்த இந்தி போரட்டத்தில் அன்றைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த டி.என்.சேஷன் தனது சுயசரிதையில்,

மா. ராஜாங்கம் தேவர் தலைமையில் போராட்டம் நடந்த போது கலெக்டர் சேஷன் சுட உத்தரவு கொடுத்தார். ஐந்து பேர் இறந்தனர். பத்து பேர் கை,கால்களை இழந்தனர். சுட்டவுடன் கூட்டம் ஓடி விடும் என்று நினைத்த சேஷன் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு பிறகு தான் போராட்டகாரர்கள் வெறி கொண்டு திருப்பி தாக்கி இரண்டு போலிஸ்காரர்களை கொன்று விட்டனர்.

ஐயா மா. ராஜாங்கம் தேவர் M.L.A. அவர்கள்தான் 13-2-65 கூடலூர் கிளர்ச்சிக்குக்காரணம் என்று போலீசார் கருதினர்கள். காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி அளித்துக்கொண்டிருந்த ராஜாங்கம் திடீரென்று கைதுசெய்யப் பட்டார். அதோடு மட்டுமல்ல, அவரை ஒரு அறையில் போட்டு முதுகில் மின் இயக்கத்தைச் சாடவைத்து போலீசார் வேதனைப்படுத்தினார்கள். மேலும் பல கொடுமைகள் செய்தனர்.

இதனை பற்றி சிவகங்கை பகுதியின் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்த எஸ். எஸ். தென்னரசு தன்னுடைய "பெண்ணில்லாத ஊரிலே" என்ற தன் சுயசரிதையில் ஐயா மா. ராஜாங்கம் தேவர் பற்றி

ராஜாங்கம் வெறும் பிரஜைமட்டுமல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவருக்கே இந்தக்கதி என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்க வேண்டுமா.

ஏண்டா ராஜாங்கம், நூறு வருஷம் போராடினலும் இந்தியை ஒழிக்கமுடியுமா உங்களால் போலீஸ் அதிகாரியின் கேள்வி இது.

ஆயிரம் ஆண்டுகளானலும் இந்தியை எதிர்த்தே சாவோமே தவிர அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' இது ராஜாங்கத்தின் பதில். இப்படியும் வாக்குவாதம் நடந்திருக் கிறது.

இதுபோல் நூற்றுக்கணக்கானவரைபோலிசாரும் இராணு. வத்தினரும் தொல்லைப்படுத்தியிருக்கிருர்கள். ', தி.மு.க. தான் இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது" என்று சொன்னல் விட்டு விடுவதாகப் போலீசார் அவர்களையெல்லாம் மிரட்டியிருக்கிருர்கள். ராஜாங்கம் என்ன சிறு பிள்ளையா? அடிக்குப் பயந்து புதிதாக எதையாவது சொல்லு வதற்கு?

இராஜாங்கத்தோடு கைதான 200-க்கு மேற்பட்டவர்கள் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்கள். வலை பின்னியதுபோல் முதுகெல்லாம் பிரம்படி. சதை கயிறு கயிருகப் பிய்ந்திருந்தது. ராஜாங்கத்தின் அண்ணன் பாண்டித் தேவரும் கூடலூர் ஊராட்சித் தலைவர் கருப்பணத் தேவரும்கூடத் தாக்கப்பட்டிருந்தார்கள்.


ஊராட்சித்தலைவர் கைகளில் அணிந் திருந்த ஆறு மோதிரங்கள் போலீசாரால் கையாடப்பட்டன. விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, காது கேட்பதற்காக வைத்துக்கொள்ளும் இயந்திரம் ஒன்று, விலை மதிப்பு ஆறு நூறு ரூபாய் - எல்லாம் உடைத்துத் தவிடாக்கப்பட்டுவிட்டன, எல்லோர்ையும் போலிசார் லாரியில் ஏற்றும்போது "போங்கடா வரும்போது கையோட முட்டைப்பூச்சி மருந்தும் வாங்கிவாங்க, இங்கே வந்ததும் உங்க பெண்சாதி புள்ளைகளைப் பார்த்ததும் நீங்க தற்கொலை பண்ணிக்கவேண்டியதுதான்' என்று போலீசார் கொக்கரித்து அனுப்பியிருக்கிருர்கள். அதை நினைத்து நினைத்து ஒவ்வொருவரும் கண்ணிர் வடித்தார்கள்.

ராஜாங்கத்தை தினசரி பார்ப்பேன். காலை "பெட் காபி' அவருக்கு என் அறையில்தான் தயாராகும். முரசொலி', 'நம்நாடு' இதழ்களும் இங்கிருந்து நான்தான் அனுப்புவேன். அவர் வெளிக் கொட்டடியில் இருந்தார், நான் உள்ளே இருந்தேன்.

கலைஞர் அவர்களுக்கு சிறையில் இடம் இல்லாததால், ராஜாங்கம் இருந்த இடத்தில் அடைக்க முடிவுசெய்து, சூப்ரெண்ட் உடனே ராஜாங்கம் இருந்த கொட்டடிக்குப் போய், என்ன மிஸ்டர் ராஜாங்கம் உங்களுக்கு தலைவலி என்றீர்களே. வேண்டு மானால் இன்று ஆஸ்பத்திரி வார்டில் படுத்துக்கொள்ளுங்கள்' என்று அன்பாகப் பேசுவதுபோல் அவரிடம் பேசி கோட்டைச் சுவர் ஒரமாக இருட்டில் ராஜாங்கத்தைச் ஒரு சந்து வழியாக பாதுகாப்புட்ன் ரகசியமாக சிறை மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டு அந்த அறைக்கு கலைஞரை இன்னொரு முக்கிய வழியாக அழைத்துப் போனார்கள்.

காலை 7 மணிக்கு ராஜாங்கம் அவரது அறைக்கு வந்த பிறகுதான்-கலைஞர்அவர்கள் நேற்று இரவு மதுரை வந்தது, தனது அறையில்தங்கியது, அதற்காகத்தான் தன்னை மருத்துவ மனைக்கு வஞ்சகமாக அழைத்துப் போனது - எல்லாமே அவருக்குத் தெரிய வந்திருக்கின்றன.

புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறையப் பழங்கள் வாங்கி வந்தார். ராஜாங்கத்திற்குத் தைரியம் சொல்லுங்கள் என்றேன்".

- "ராஜாங்கத்திற்கு இது ஒரு நல்லகாலம். நல்லவர்களுக்கு வரும் துன்பம் அவர்களது வளர்ச்சிக்கு ஒரு முன்னறிவிப்பு. எனக்குக் கால் முறிந்த கட்டத்திற்குப் பிறகுதான் நல்லகாலம் தொடங்கியது. எப்போதுமே நியாயமும் உண்மையும் உள்ள வர்களுக்கு இப்படி ஒரு கட்டம் வந்தே தீரும். வந்தால்தான் அவர்களது வாழ்வு சிறக்கும்" என்ருர்,


மதுரை முத்து, இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர்., ராஜாங்கத்தை பலமுறை பார்த்து சென்றனர். இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர். அவர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. நண்பர் ராஜாங்கத்திற்கு அடிக்கடி தைரியம் கூறும்படி எழுதியிருந்தார்.


ராஜாங்கத்திற்கு தைரியம் கூறவேண்டும்? அவர் கலங்கா உள்ளத்தினர். எந்தத் துயரத்தையும் சிரித்துக்கொண்டே கழித்துப் பழக்கப்பட்ட்வர். எப்போதுமே அவர் குமிழ்ச் சிரிப் புடன்தான் காணப்படுவார். தி. மு. க. ஒரு தற்காப்புமிகுந்த இயக்கம். விரும்புவோரை அது அணைக்கும்; ஒதுங்குவோரைக் கண்டால் ஒதுக்கும். ஆனல் யாராவது அதை அழித்துவிட நினைத்தால் அவர்களை அது ஒழிக்காமல் விடாது.” என்று ராஜாங்கம் அடிக்கடி சொல்லுவார். ஆளுல் ராஜாங்கத்தை நான் எப்போதாவதுதான் மருத்துவ மனைக்கு வரும்போது சந்திப்பேன்.


MLA  வாக இருந்த இவர், பிறகு திண்டுக்கல் 1971-1973 MP...யாக இருக்கும் போது தான் இறந்தார். அப்போது அந்த இடை தேர்தலில் தான் மாயத்தேவர் (கள்ளர்) போட்டியிட்டு வென்று அதிமுக...விற்கு இரட்டை இலை சின்னம் வாங்கி கொடுத்தார். DMK மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.இதில் இடது புறம் ராஜாங்கம் சமாதி. வலது புறம் அவரது அம்மா அங்கம்மாள் சமாதி (அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார்)
அங்கம்மா பேயத்தேவர் பேத்தி ஆவார். இது ராஜாங்கம் அம்மா கல்லறை கல்வெட்டு. பேயத்தேவர் மகன் வள்ளநாட்டுதேவர். வள்ளநாட்டுதேவர் மகள் அங்கம்மாள். அங்கம்மாள் என்பவரை மாயாண்டிதேவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். மாயாண்டி தேவர், அங்கம்மாள் மகன் தான் மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர்.மாவீரர் மா. ராஜாங்கம் தேவர் நினைவாக சிலை மற்றும் இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் பள்ளி அமைத்தார்கள். வைகோ இந்த ஊருக்கு வந்தால் இவரது கல்லறை சென்று வணக்கி விட்டு தான் செல்வார்.


ராஜாங்கம் எம்பிக்கு வாரிசு இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாங்கம் மனைவி மிகவும் கஷ்டத்தில் இருந்தார். அதனால் அவர் தனது வீட்டை விற்று வாழ்க்கை நடத்தினார்.
1 ஏக்கர் நிலம் கொண்டது ராஜாங்கம் சமாதி நிலம். ராஜாங்கம் மனைவி கடைசி  கால காலத்தில் சமாதியில் 10 செண்ட் போக, மீதி 90 சென்ட் நிலத்தை தலித் கிருஸ்வர் சுடுகாட்டுகாக விற்றார், பின் சில மாதங்களில் இறந்து விட்டார்.போராளிகள் இறந்த இடத்தில் அண்ணா பஸ் நிலையம், 


இரண்டு காவலர் இறந்த நினைவாக காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம் இன்றும் உள்ளது.

ஆய்வு : திரு. செந்தில் - கூடலூர் தேனி

திங்கள், 24 டிசம்பர், 2018

அண்ணல் பேயத்தேவர்கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது.


முல்லை ஆறு என்பது தமிழ்நாட்டில் உற்பத்தியாவது. பெரியாறு என்பது கேரளா மாநிலத் தில் சிவகிரி மலையின் சிகரத்தில் உற்பத்தியாவது. இந்த இரண்டு ஆறுகளும் இணைக்கப்பட்டதால், இது முல்லைபெரியாறு என்றழைக்கப்பட்டது. தேனிமாவட்டத்தை மாவட்டச் சேர்ந்த மக்கள் விவசாயம் செய்வதற்கு நீர் இல்லாமல் போனதால் பலர் பசி, பட்டியால் இறந்து போனார்கள். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்றார்கள். இந்த மக்களின் துயரத் தைப் போக்குவதற்கு 244 கீலோமீட்டர் தூரம் சமவெளியில் ஓடி வீணாகக் கடலி ல் கலக்கும் பெரியாறின் குறுக்கே இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இரவில் அரிக்கன் லைட்டுகளை வைத்துக் கொண்டு தொடர்ந்து அணையைக் கட்டினார். பெரியாறு ஒரு காட்டு ஆறு. ஒரு முரட்டு ஆறு. அதனால் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட அணை அவ்வப்போது உடைத்துக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.

சேதுபதி மன்னர் களுக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் பெரியாறின் குறுக்கே அணைக் கட்டும் பணி 1867-இல் தொடங்கியது.

முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர்.உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார். மனைவி இறந்த துயரத்துடன் கை குழந்தை பேயாதேவனாகிய தனது வாரிசை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அதுசமயம் அப்பகுதியில் இருந்த உற்றார் உறவினர் கை குழந்தையை வளர்க்க உதிவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்திக்கின்றனர். மொக்கயத்தேவர் சற்று வித்தியசமானவர். தனது மகன் மாற்றந் தாய் மடியில் வளர்வதை விரும்பவில்லை. ஊர் மக்களையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.கை குழந்தை பேயத்தேவனை தோளில் போட்டுக் கொண்டு ஊர் எல்லையை கடந்து கம்பம் பள்ளத்தாக்கு வந்தார். இப்பகுதி இவரை கவர்ந்துவிட, இப்பகுதில் தங்கினார். இவரது மகன் பேயத்தேவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்ததும், மகன் வெளியில் ஆங்காங்கே போய் வர குதிரை ஒன்று வாங்கி தருகிறார். இவர்கள் விவசாயம் செய்ய பூமி தேடுகிறார்கள். கூடலூர் பக்கத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன் பாட்டியை தேர்வு செய்து, காடுகளாக இருந்த இந்த பூமியை, தங்களது உழைப்பாலும், புத்தி சாதுர்யத்தாலும் வளமான விளை நிலங்களாக மாற்றினார்கள். பேயத்தேவர் ஒருமுறை மழை வேண்டி கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாளை வழிபட கூடலூர் வந்தவர், நிர்வாகம் மற்றும் போக்குவரத்துக்கு வசதிக்காக இவ்வூரையே தனது வசிப்பிடமாக மாற்றிக்கொண்டார்.அந்திமகாலம் வரை தனது மனைவி பார்வதியம்மாள் மற்றும் வாரிசுகளுடன் இங்கு வாழ்ந்து வந்தார். இங்கு வந்தடைந்தபின் இப்பகுதிலும் விளைநிலங்களில் நல்ல மகசூல் கண்டார்.


முல்லை பெரியாரின் நீரை தேக்க பெரியார் அணையை கட்டிய பென்னிகுக்கோடு நட்பை ஏற்படுத்தி கொண்டார். அவருக்கு தனது சொந்த பொறுப்பில் காடு வெட்டி கருத்த கண்ண தேவர், ஆனை விரட்டி ஆங்கத் தேவர் என்று இரு நபர்களை அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் பென்னி குக்கின் மெய்க்காப்பாளர்களாக நாட்டு துப்பாக்கியுடன் வலம் வருவார்கள். பலமுறை பென்னிகுக்கை காட்டு விலங்குகளிடம் இருந்து காத்தனர். பென்னிகுக் குதிரையில் இவர்கள் துணையுடனே ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இவ்விபரம் பென்னிகுக் நாட்குறிப்பில் உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த போது, பேயத்தேவர் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். பேயத்தேவர் மேற்பார்வையில் குறுவனத்தில் உள்ள சரலை கல்லை சுண்ணாம்பாக்கி அரைத்து அதன் கலவையை விஞ்ச் மூலம் குமுளிக்கு அனுப்பி பின் படகு மூலம் அணைக்கு கொண்டு செல்வார்களாம்.அவரது நட்பின் பலனாக இன்றும் கீழகூடலூரில் பெரியாற்றின் குறுக்கே பேயத்தேவர் கட்டிய அணையும் பேயத்தேவர் வாய்காலும் பெயர் சொல்லி விளங்கி வருகிறது.

இவ்வாறு உதவி புரிந்த பேயத்தேவர் பெயரில், ஒரு கால்வாய் அமைக்கவும், இக்கால்வாயில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் வகையில், கால்வாய் தலை மதகை மூடக்கூடாது, எனவும் பென்னிகுவிக் அறிவித்திருந்தார். இதன் காரணமாக இதுவரை, கூடலூர் காஞ்சிமரத்துறையில் உள்ள பேயத்தேவன் கால்வாயை இதுவரை மூடவில்லை. பேயத்தேவன் கால்வாயால் ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் விவசாயம் நடந்து வருகிறது. இக்கால்வாயின் தலைமதகை எப்போதும் மூடக்கூடாது என்ற அரசு ஆணை உள்ளது. கர்னல் பென்னிகுக் பேயத்தேவனிடம் நன்றி மறவாமல் இருந்தார்.

கூடலுாரில் பழமையான கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது, மாலையில் கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைக்கின்றனர். உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அண்ணல் பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். உற்சவருக்கு பால், தயிர் மூலம் அபிேஷகம் நடத்தப்படுகிறது.

கூடலூர் நகராட்சி இடம் பேயத்தேவர் தானமாக கொடுத்தது. (கூடலூர்) கூடல் அழகிய பெருமாள் கோயிலுக்கு 20 ஏக்கருக்கு மேல் தானம் வழங்கி உள்ளார். கூடலூர் அழகர் கோயிலில் இவரது குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை தரப்படுகிறது. அன்னசத்திரம் கட்டி உள்ளார். பிராமணர்களுக்கு பிரமோதயம் வழங்கி உள்ளார். தலித்களுக்கு நிலம் மற்றும் கோயில் இடம் வழங்கி உள்ளார்


மானூத்து கிராமத்தில் வாழ்ந்து வந்த எட்டுப்பட்டான் பங்காளிகள் மானூத்தில் கோயிலடியில் கூட்டம் போட்டு பேயத்தேவர் அவர்களிடம் ஓர் வேண்டுகோள் வைக்கின்றனர். குலதெய்வம் அருள்மிகு பெத்தனசுவாமி திருக்கோயில் கட்டி குடுக்க வேண்டுகின்றனர். இந்த வேண்டுகோளை ஏற்று தனது முழு செலவில் கட்டி கொடுத்தார். இந்த கோவில் 2014 ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது உள்ள கோவில் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவில் மூலஸ்தான நுழைவாயில் உள்ள கல்நிலை. தேக்குமர கதவு 126 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் பேயத்தேவர் நிறுவியது.முல்லை பெரியாற்றின் முதல் வாய்க்காலே பேயத்தேவர் வாய்க்கால் தான். இது தான் பேயத்தேவர் வாய்க்கால் பிரியும் இடம்.

இதன் கரையோரத்தில் இசைஜானி இளையராஜா பங்களா உள்ளது.

பேயத்தேவரின் பேரன் கோட்டை சாமி தேவர். இவரது தோட்டத்தில் இளையராஜாவின் அம்மா மற்றும் குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்தார்கள். வாழ்வில் உயர்ந்த பின் இளையராஜா அம்மா அவர் வேலை பார்த்த தோட்டத்தை வாங்கி அதில் ஒரு பங்களா கட்டி அவர் இறந்த பின் அங்கு புதைக்குமாறு வேண்டினார்.பின் கோட்டைசாமி மகன் சரவணனிடம் அந்த இடத்தில் ஒரு ஏக்கர் விலைக்கு வாங்கி அங்கு வீடு கட்டி பின் அவரது அம்மா இறந்த பின் அவரை புதைத்து அங்கு கோயில் கட்டினார். இளையராஜா மனைவியும் இங்கு தான் புதைக்கப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் வசிக்கும் கள்ளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டால் எதிர் தரப்பை "இவரு பெரிய பேயத்தேவர் பேரன்" என்று இவரை உதாரணம் கூறும் அளவிற்கு இவரது புகழ் உள்ளது.

இவரது கொள்ளு பேத்தியை, திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.பிரகாசம் திருமணம் செய்து உள்ளார். பட்டாம்பூச்சி, தலைபிரசவம், எச்சில் இரவுகள், சாதனை போன்ற படங்கள் இயக்கியவர். கமலை முதன் முதலாக பட்டாம் பூச்சியில் ஹீரோவாக போட்டார். அதுவரை கமல் இரண்டாம் கட்ட நடிகராக தான் இருந்தார்.

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...