புதன், 28 மார்ச், 2018

தெய்வத்திரு மேலூர் ஆர். சாமி அம்பலம்



மேலூர் தொகுதியின் நிரந்தர செல்லப்பிள்ளை என மக்களால் போற்றப்பட்ட தெய்வத்திரு. மேலூர் ஆர். சாமி அவர்களால் மேலூர் மண்ணுக்கு பெருமை.

விவசாய குடும்பத்தில்
பிறந்து உழைப்பால் உயர்ந்த உத்தமர்.

கிளை கழக செயலாளர்
நகர் கழக செயலாளர்
நகர்மன்ற உறுப்பினர்
மாநில இளைஞர் அணி செயலாளர்
பொதுக்குழு உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்
என படிப்படியாக பல பதவிகளை பெற்றவர்..

யாருடைய சிபாரிசும் இல்லாமல் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களால் நேர்காணலில் மாநில பதவியை தன் 33 வயதில் பெற்றவர்.
35 வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.

2001முதல் 2016 வரை 15 ஆண்டுகாலம் ஒரே தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி வாகை சூடிய நாயகர்.


தன் உயிர்க்கு டாக்டர்கள் நாள் குறித்த நிலையிலும், தன் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் 2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி முழுவதும் உயிரை பணயம் வைத்து பிரச்சாரம் செய்து தனது சொந்த செல்வாக்கை மீண்டும் நிரூபித்து 4வது முறையாக அதிமுகவை வெற்றி பெற செய்தவர்.

மேலூர் தொகுதியில் காங்கிரஸ், திமுக கோட்டையை உடைத்து அதிமுக கோட்டையாக மாற்ற அரும்பாடுபட்டவர்.

2008 இல் திருமங்கலம் இடைத்தேர்தல் பொய் வழக்கில் 15 நாள் மதுரை மத்திய சிறையில் இருந்தபோது
மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களும் மாண்புமிகு சசிகலா சாளுவர் அவர்களும் சிறைக்கே நேரில்வந்து ஆறுதல் கூறினார்கள். அந்தளவுக்கு மாண்புமிகு ஜெ.ஜெயலலிதாவின் தளபதியாக இருந்த மாவீரன்.

சாதி..மதம்..கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்த மனிதநேயர்.

மேலூர் தொகுதியில் உள்ள கடைசி குக்கிராமங்களில் கூட இவரது பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் இவரது மக்கள் பணிக்கு அடையாளம்..

தொகுதியில் உள்ள 70சதவீதம் மக்களின் அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை ஆல்பங்களும் வீடீயோக்களும் பேசும்.

மேலூர் தொகுதியில் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் பலருக்கும் அரசியலில் வாழ்வு கொடுத்த பண்பாளர். தீபாவளிக்கும் பொங்கலுக்கும்
அள்ளி கொடுத்த மேலூரின் கொடைவள்ளல்.

தன் கட்சியினருக்கு மட்டுமின்றி பலருக்கும் சாப்பாடு போட்டவர். தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு எதையும் எதிர்பார்க்காமல்
யாருக்கும் பயப்படாமல்
கடைசிவரை உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த போராளி..

விசுவாசத்தின் முன்உதாரணமாக
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
உருவாக தன்னையே அர்ப்பணித்தவர்.

1987 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர் 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு மேலூர் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக நகரச் செயலாளராக ஆனார். 2000 ஆம் ஆண்டு மாநில இளைஞர் அணி செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக  மேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், 2018, மே 11 அன்று மரணமடைந்தார்.


தெய்வத்திரு. மனிதநேய பண்பாளர் மேலூர் ஆர்.சாமி அவர்களின் புதல்வி S.சரண்யா B.E அவர்கள் 
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று 
மாவட்ட துணை ஆட்சியராக 
(பயிற்சி) பணியாற்றி வருகிறார்.



மேலூர் தொகுதி மண்ணுக்கும் 
அவரது தந்தையின் புகழுக்கும் மேன் மேலும் புகழ் சேர்த்து வருகிறார்.


தெய்வத்திரு. மனிதநேய பண்பாளர் மேலூர் ஆர்.சாமி அவர்களின் மகன் திரு.S.ஆசையன்,B.E.,MBA., ஆவார்.
















வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்