உயர்ந்த தோற்றம், ஏரிய நெற்றி, நேரிய பார்வை, முழங்கை வரைக்கும் தொங்கும் அரைக்கை சட்டை, வென்பற்க்கள் சிந்தும் நளின சிரிப்பு இவற்றையே அணிகலன்களா கொண்டு நம் முன் காட்சி தந்தவர்தான் அய்யா அய்யணன் அம்பலம் அவர்கள்.
மதுரை ராஜகம்பிரம் கிராமத்தில் கள்ளர் குடியில் ஐயா. அண்ணாமலை அம்பலம், வேலாயு அம்மாள் அவர்களுக்கு 15.9.1924 ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தார்.
இளைய வயதில் அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் ஐக்கிய மாகாணசபை தேர்தலில் அவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக ஆனார். 1945 ஆம் ஆண்டில் பார்வர்ட் பிளாக் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஐயா முத்துராமலிங்க தேவரோடு தொடர்பு கொண்டார்.
25 ஆண்டு காலம் தொடர்ந்து மதுரை கிழக்கு ஊராட்சி மன்ற பெருந்தலைவர், தமிழக சட்டசபையின் மேலவை உறுப்பினர், இந்திய சோவியத் நட்புறவு கழகத்தின் தலைவர், முல்லைப் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர், அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் தேசிய அளவில் தலைவர், சோசலிச சிந்தனையாளர், பசும்பொன் தேவர் ஜெயந்தி அன்றே தம் மரணத்தை தேவர் ஐயாவிடம் கேட்டு பெற்றுவந்த தேவரின் திருத்தொண்டர்.
மதுரை கிழக்கு ஒன்றியத்தில் தொடர்ந்து 36 ஆண்டுகள் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு பெருந்தலைவராக இருந்தவர். ஐயா மூக்கையா தேவரின் உண்மை விசுவாசி.
தெய்வீகதிருமகன் தேவர் ஐயா மீது பொய் குற்றம் சாட்டி தனிமை சிறையில் அடைத்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து வேரொடும், வேரடி மண்ணேடும் வீழ்த்த சபதம் ஏற்றவர். காங்கிரஸ் எதிர்த்து மேலூரில் ஓ.பி.ராமன் என்பவரை வெற்றி பெற செய்து, தேவர் நினைவிடத்தில் வெண்கலமணியை காணிக்கை செலுத்தினார்.
தனது இராஜகம்பீரம் இல்லத்தில் தேவரை தங்கச் செய்து அடிக்கடி உரையாடி மகிழ்வர். 1980 ல் பசும்பொன் பார்வர்டு பிளாக்கை தொடங்கினார். 1984 ல் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் ரை எதிர்த்து ஆண்டிபட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக பி. என். வல்லரசை நிறுத்தினார்.
இஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization) அல்லது டெசோ (TESO) தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. வீரமணி, நெடுமாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர்.
1989 ல் உசிலம்பட்டியில் வல்லரசுக்கு ஒதுக்கி வெற்றி பெற செய்தார். 1989 ல் தம் கட்சியை அகில இந்திய பார்வர்ட் பிளாக் உடன் இணைத்தார். 1996ல் சந்தானம் அவர்களுக்கு சோழவந்தான் தொகுயையும், வல்லரசுக்கு உசிலம்பட்டி தொகுதியையும் ஒதுக்கி வெற்றி பெற செய்தார்.
1998 ல் அகில இந்திய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார். சாதி கலவரம் நடந்த காலத்தில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். உசிலம்பட்டி யில் தேவர் கல்லூரி நிறுவ மூக்கையா தேவருக்கு முக்கிய பங்காபங்காற்றினார். மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க இவர் பங்கு இன்றியமையாதது.
பூவந்தி.சீமைச்சாமி, பி.டி.ஆர். பாரதிரத்தினம், சோணைமுத்து சேர்வை. சுந்தர்ராஜன் சேர்வை என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.
ரவிச்சந்திரன் சுப்பையா 1987 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறார்:
திரு. அய்யணன் அம்பலம் அவர்கள் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். அவரிடம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் ஊராட்சி தலைவர் தங்களது ஊருக்கு பேருந்து வசதி பெற்றத்தர கோரிக்கை. ஐயா அவர்கள் அவருடன் நான் பணிபுரிந்த கிளை மேலாளரை சுமார் ஐந்தாறு முறை நேரில் வந்து சந்தித்து கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தார். சம்பந்தப்பட்ட எழுத்தரான நான், நெடுஞ்சாலையில் இருந்து 1.2 கிமீ தூரமே உள்ள இந்த தூரத்தை கிராம மக்கள் கடக்கலாமே. மதுரையின் உட்பகுதியில் உள்ள இடங்களுக்கு இதே அளவு தூரத்தை பல ஆயிரம் மக்கள் கடந்து செல்கிறார்கள் என்ற கூறி அவரது கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தேன்.
ஒரு நாள் வழக்கம் திரு அய்யணன் அம்பலம் அவர்கள் எனது கிளை மேலாளரை பார்க்க வந்த போது அவர் இல்லை. உடனே அவர் சம்பந்தப்பட்ட எழுத்தர் நான் என்பதை அறிந்து நேரடியாக எனது இருக்கைக்கு வந்தார். அவரது தோற்றம் கம்பீரமாக இருக்கும். நான் உடனே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி அருகில் உள்ள சிறு வட்ட வடிவ ஸ்டூலில் அமரக் கூறினேன். அவர் எனது தோள்பட்டைகளை அழுத்தி முதலில் நீங்கள் அமருங்கள் என்று கூறி என்னை அமர வைத்து விட்டு அவரும் ஸ்டூலில் அமர்ந்தார்.
அவர் என்னிடம், " தம்பி! என்னை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். பேருந்து வசதி கிடைத்து விடும் என்று. நானும் ஐந்தாறு முறை தங்கள் அலுவலகத்திற்கு வருவது தாங்கள் அறிந்ததே! எந்த ஒரு அலுவலகத்திலும் மேலே உள்ள அதிகாரிகள் செய்வதைக் காட்டிலும் கீழே உள்ள எழுத்தர்கள் நினைத்தால் பெரிய காரியம் கூட செய்து முடித்து விடுவர். எனது அலுவலகத்திலும் நான் தலைவர் ஆக இருந்தாலும் இதுதான் உண்மை! தாங்கள் எனக்காக உங்கள் மேலாளரிடம் கூறி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தடத்தில் பேருந்தை விட சொல்ல வேண்டும்" என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. மிக மதிக்கக் கூடிய ஒரு தலைவர் (அன்றைய முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய தலைவர்களில் அவரும் ஒருவர்) என்னிடம் கோரிக்கையை பொதுமக்களுக்காக தன் தகுதியை விட்டு இறங்கி மிகச் சாதாரணமான சிறுவயது என்னிடம் கேட்ட பாங்கு என்னை சிலிர்க்க வைத்து விட்டது.
அதன்பின்பு அலுவலகத்திற்கு வந்த கிளை மேலாளரிடம் நடந்த இந்த சம்பவத்தை கூறி அவரது வேண்டுகோள்படி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தட பேருந்து இயக்கப்பட்டது.
அன்றைய காலத்தில் பெரும் தலைவர்கள் பொது மக்களுக்காக எந்த அளவில் கீழிறங்கி சேவை செய்துள்ளனர். இன்றைய நாளில் இதனை எதிர்பார்க்க முடியுமா?
1993 ல் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் எழுதிய " முடிசூடா மன்னர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முதல் பதிப்பு வெளியீட்டுவிழா. அ.அய்யணன்அம்பலம் வாழ்த்துரை வழங்கினார்.மேடையில் ஏ.ஆர்.பெருமாள். பொதுச்செயலாளர் தோழர் சித்தபாசு, டாக்டர்.சேதுராமன், பி.என்.வல்லரசு.விழாவை மதுரை விக்டோரியாஎட்வர்ட்ஹால்
1993 ல் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் எழுதிய " முடிசூடா மன்னர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முதல் பதிப்பு வெளியீட்டுவிழா. அ.அய்யணன்அம்பலம் வாழ்த்துரை வழங்கினார்.மேடையில் ஏ.ஆர்.பெருமாள். பொதுச்செயலாளர் தோழர் சித்தபாசு, டாக்டர்.சேதுராமன், பி.என்.வல்லரசு.விழாவை மதுரை விக்டோரியாஎட்வர்ட்ஹால்
விமான நிலையத்திற்கு தேவர் பெயர் :
1992 ல் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக அய்யா ஏ.ஆர்.பெருமாள் அவர்களும்,தமிழக தலைவராக அய்யணன் அம்பலம் அவர்கள் இருந்தபோதும் கட்சியின் சார்பாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டப்படும் என தீர்மானம் போடப்பட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தபாசு எம்.பி.அவர்கள் பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் அவர்கள் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்தார்.
அக்டோபர் 30 -1998 பசும்பொன்னில் இறுதி உரை:
அகில இந்திய தேவர் பேரவை - முக்குலத்தோர் சங்கம் என்ற அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்குகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிகொள்வதெல்லாம் நமது இனத்தில் பிறந்திட்ட ஒப்பற்றதலைவர் தேசிய தலைவர் தேவர்மகனார் உருவாக்கிய அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி இருக்கும்போது வேறு ஒரு அரசியல் கட்சி தேவையில்லை மேலும் உறவினர்கள் சேதுராமனும் - பிரேம்குமார் வாண்டையாரும் தேவர் கட்சியான பார்வர்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த தேவர் ஜெயந்தி நாளென்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று உரையாற்றி விட்டு பசும்பொன்னில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுதுமதுரை தெப்பக்குளம் அருகே நடைபெற்ற விபத்தில் அய்யணன் அம்பலம் மறைகிறார் .
தேவர் ஜெயந்தி அன்றே அவர் பக்தரும் மறைகிறார்
பசும்பொன் தேவர் திருமகனை பின்பற்றி நடந்த அரசியல் தலைவர்களில் தேவர் ஜெயந்தி அன்றே தேவருடன் ஐக்கியமான தலைவர் அய்யணன் அம்பலம் என்ற பெருமையை பெறுகிறார்.
நன்றி.
உயர்திரு. வீ. எஸ். நவமணி ஐயா அவர்கள் - முக்குலத்தோர் எழுச்சி கழகம்
உயர்திரு. சுரேஷ் அம்பலம்