" இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரன் :- கிபி 1686 சேதுபதி மன்னரின் சிவகங்கை தெற்கத்தி கள்ளர் படையின் தலைவன்.
ஆம் கிபி1686 ஆண்டு சேது சீமையில் மன்னர் கிழவன் சேதுபதி அரியணை ஏறி 7வது ஆண்டில் அவரது கள்ளர் தளபதியான இளந்தாரி முத்து விஜய அம்பலத்திற்கு சிவந்தெழுந்த பல்லவராயரின் மீது என்ன விரோதமோ அவருக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்.
சேதுபதியிடம் சென்று மன்னா பல்லவராயர் உங்களை சந்திக்க மறுத்து அவமானப்படுத்திவிட்டர் என தவறான தகவலை அளிக்கிறார். இதனை கேட்டு சினம் அடைந்த சேதுபதி தனது மகனுடன் யானைப்படையுடன் ஒரு பெரும் படையை அனுப்புகிறார். கண்டதேவிக்கு வந்து அங்கே சிவ பூஜையில் இருந்த கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயரை கண்டதேவி குளத்தின் அருகிலே மரணத்தை ஏற்படுத்துகிறார்.
சேதுபதியின் கள்ளர் படையின் தலைவரான இளந்தாரி முத்து விஜய அம்பலக்காரர் மூலமாக தங்க பல்லக்கையும் வைர மோதிரத்தையும் தொண்டைமானுக்கு அளித்தார் கிழவனார்.
திருமயத்தில் இருந்த சேதுபதியின் அதிகாரி தர்ம பிள்ளை என்பவரிடம் தொண்டைமானை பல்லவராயரின் பகுதிகளுக்கு பொறுப்பேற்க ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார்.
பல்லவராயர் இறப்பிற்கு பிறகு அவரின் ஆட்சிப்பகுதியை இளந்தாரி அம்பலம் வரையறுத்து அங்கு அதே கள்ளர் குல மன்னரான விஜயரகு நாத தொண்டைமானரை அமர வைக்கிறார். பிற்காலங்களில் தொண்டைமானார் பல்லவராயரின் வகையறாக்களிடம் பெண் எடுத்துக்கொள்கிறார்.
கிபி 18 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கால முக்கிய படைபற்று தலைவர்களில் இளந்தாரி முத்து விசய அம்பலக்காரர்( திருமயம் பகுதி - வெள்ளாற்று தெற்கு) இருந்தார். இவர் சேதுபதி மன்னரின் தெற்கத்தி கள்ளர் படையின் தலைவன் இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரன் வாரிசுகள் அவர்கள்.