திங்கள், 12 மார்ச், 2018

வாரைவளர் வாராப்பூர் கள்ளர் நாடு


புதுக்கோட்டை வட்டம், ஆலங்குடி வட்டம், கறம்பக்குடி வட்டம், கந்தர்வகோட்டை வட்டம் இந்த நான்கு வட்டத்தையும் உள்ளடக்கிய நாடே வாரைவளர் வாராப்பூர் நாடு.

அந்த வாராப்பூர் நாட்டில் உள்ள சிறு நாடுகள் மற்றும் அந்த நாடுகளை சேர்ந்த கிராமங்கள்

நாவல் நாடு;-

1)பாப்பான்விடுதி
2)பாச்சிக்கோட்டை
3)மேலவிடுதி
4)மாங்கோட்டை
4)சம்பட்டிவிடுதி
5)உஞ்சனிபட்டி
6)சேவுகம்பட்டி
7)மூக்கம்பட்டி
8)செட்டியாபட்டி

துரைப்புள்ள நாடு:-

1)தொண்டைமான் ஊரனி.
2) அதிரான்விடுதி 
3)புலவன்காடு
4)மஞ்சக்கரை
5)அரியாண்டி

வாரைவளர் நாடு:-

1)வாராப்பூர் கிராமம்
2)தெர்க்குதெரு கிராமம்
3)குருவிணாங்கோட்டை
4)தீத்தானிபட்டி

பெரம்பூர் நாடு -

1) வெள்ளாலவிடுதி

பனிசூல் நாடு;-

1) வலங்கொண்டான்விடுதி
2)சேவல்பட்டி
3)ஆயிப்பட்டி

மேலமடை கோட்டை நாடு;-

1)இடையபட்டி
2)கிருஷ்ணம்பட்டி
3)கருப்பட்டிபட்டி

பொன்னா பனிகுடி நாடு:-

1)பொன்னன்விடுதி
2)மழையூர்




இவை அனைத்து நாடுகளை சேர்ந்தவைதான் வாரைவளர் வாராப்பூர் நாடு.

வாராப்பூர் நாட்டில் இருக்கும் கள்ளர் மக்களின் பட்டபெயர்கள்:-

1)சம்பட்டியார்
2)தொண்டாம்பிரியர்
3)கிடாத்தரையர்
4)பாச்சுண்டார்
5)சவுளியார்
6)மாகாளியார்
7)ஓந்திரியர்
8)நெட்டையர்
9)கருப்பட்டியார்
10)கொத்தமுண்டார்
11)இரும்பர்
12)புலிக்கையார்
13)ஆலப்புரியர்
14)கோன்றி 
15)தம்புரார் 
16)சேதுரார்
17)படியர்
18) மண்டலார்
19)கும்மாயன்
20)வலங்கொண்டார்

வாராப்பூர் நாட்டின், பொது கோயிலான கருப்பர் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் வாராப்பூர் நாட்டின் 18 பட்டி மக்களும் பங்கேற்பர். 18 பட்டி கள்ளர் அம்பலக்காரர்களுக்கும் மரியாதை அளிக்கப்படும். நாட்டு அம்பலமாக தொண்டாம்பிரியர் (தொண்டைமான்) உள்ளனர்.


தொண்டாம்பிரியர் என்போர் நாட்டு அம்பலத்தில் தலைமை அம்பலம். ஒரு கரைக்கு ஒரு ஊர் அம்பலம் மற்றும் நாட்டு அம்பலம். நாட்டில் மொத்தம் 13 கரை. 13 கரைகளில் நாட்டின் முதல் கரையாக மேலவிடுதி சம்பட்டி கரைகளே உள்ளது. நாட்டை நிர்விக்கும் தொண்டாம்பிரியருக்கு கொடுக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை  மேலும் வாராப்பூரில் கருப்பருக்கான பள்ளிப்படை இருப்பது நாட்டுக்கான போர் சார்ந்த முக்கியத்துவம் அடையாளம் இருந்துள்ளதாக தெரிகிறது.








இவ்விழாவில் பாப்பான்விடுதி எனும் ஊரின் கள்ளரில் சம்பட்டியார் பட்டம் உடைய அம்பலக்காரருக்கு பட்டு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. வாராப்பூர் நாட்டு மாசிமகம் திருவிழாவிற்கான காப்புக்கட்டு நாட்டின் முதல் கரை சம்பட்டியார் பூ போட்டு திருவிழா தொடங்கும். வாராப்பூர் நாட்டை உருவாக்கிய தொண்டைமான் மன்னர் நாட்டு நிர்வாகத்தை தொண்டாம்பிரியருக்கு கொடுத்துவிட்டு மற்ற அனைத்தும் சம்பட்டியாருக்கே கொடுத்துள்ளனர்.



நாட்டின் முதல் கரை மேலவிடுதி , பாப்பான்விடுதி சம்பட்டியார்கள். பாப்பான்விடுதி சம்பட்டியார்கள் பூர்வீகம் மேலவிடுதியே, அங்கிருந்தே ஐந்து கரை இங்க வந்துவிட்டது மீதமுள்ள இரண்டு கரை சம்பட்டியார்கள் அங்குள்ளனர்.

கருப்பர் கோவிலில் மேலவிடுதி, பாப்பான்விடுதி சம்பட்டியார்களுக்கு முக்கியத்துவம் உள்ளதை காணமுடிகிறது. நாட்டு கோவிலில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் மேலவிடுதி அல்லது பாப்பான்விடுதி சம்பட்டியார்களே முதல் பூ எடுத்து போடவேண்டும். முதல் மண்டகப்படியும் இவர்களுக்கு உள்ளது. மேலும் இந்த இரு ஊர் பறையர்களும் அவர்களுக்குள் முக்கியஸ்தராக பார்க்கப்படுகிறார்கள்.







பாலையடிகருப்பருக்கு ( பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சங்கிலிக்கருப்பு, முத்துக்கருப்பு) சம்பட்டியார் முதல் மண்டகபடி நடக்கும். கருப்புக்கு பில்லிசோறு வீசுதல் நடைபெறும். இந்த கள்ளர் நாட்டிற்கே உள்ள தனித்தன்மை பில்லிச்சோறு வீசுதலில் மனித இரத்ததில் வீசப்படும். பூசாரி தன் தொடையை தானே கிழித்து இரத்தம் எடுப்பார்.









கடவுளுக்கு மனிதனை பழி கொடுக்கும் வினோத திருவிழா : வாரைவளர் வாராப்பூர் நாடு

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூரில் உள்ள அய்யனார்/ கருப்பர் கோவிலில் பில்லி திருவிழா (13-Mar-2020) அன்று நடந்தது. வாரைவளர் வாராப்பூர் நாட்டை சேர்ந்த 18 பட்டி மக்களும் திரலாக பங்கேற்றனர்.

பில்லி சோறு எறியும் விழா:-

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசிமக திருவிழாவின் ஒரு பகுதியாக மதியம் ஒரு மணிக்கு மேல், 3 சிறுவர்களின் அரைஞான் கயிறுகள் அறுக்கப்பட்டு சிறிய கொட்டகைக்குள் அமரவைக்கப்படுவர். சாங்கியங்கள் முடிந்த பின் அவர்களின் கழுத்தை அறுத்து நாட்டு தெய்வங்களுக்கு பலி கொடுப்பதை போல பாவனை செய்யப்படும். இதன்பின் பூசாரி ஒருவர் தனது தொடையை கிழித்து இரத்தத்தை சோற்றில் பிசைவார்.

மனித இரத்தம் கலந்த சோற்றை, நாட்டார்கள் மற்றும் பூசாரிகள் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு நான்கு திசைகளிலும் பில்லிகளை வேண்டி வீசப்படும். இந்த சோறு கடையில் வாங்கப்படாத அரிசியில்(விதை நெல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட அரிசி)செய்தது.

வீசப்படும் பில்லிசோறு மீண்டும் தரையில் விழாது என்பது ஐதீகம். பில்லி சோறு கீழே விழுந்தால் அந்த திசையில் பில்லிகளின் அருள் கிடைக்கவில்லையென்றும், அந்த திசையில் இந்த வருடம் விவசாயம் செழிக்காது என்பது நம்பிக்கை. பில்லிசோற்றை வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.

செவிவழிதகவல்:

200 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது.
அக்காலத்தில் திருவிழாவின் போது ஆண் குழந்தையை பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஒரு சமயம் திருவிழாவின் போது, பலி கொடுக்க வேண்டிய குடும்பத்தை சேர்ந்த தாய், தனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை தான் இருப்பதாகவும், பலி கொடுக்க விருப்பமில்லை என்றும் கடவுளிடம் மன்றாடியுள்ளார். பூசாரி மேல் இறங்கிய கடவுள், குழந்தையை பலி கொடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக குழந்தையின் தொடையினை கிழித்து அந்த இரத்தத்தை படையலாக படைக்கும்படி கூறி மறைந்தார். அந்த நிகழ்வில் இருந்து அந்த வம்சத்தை சார்ந்த ஆண்பிள்ளைகளே இன்றும் தொடையை கிழித்து இரத்தத்தை படையலாக அளிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். குழந்தைகளை பலியிடுவது நாளைடைவில் நின்றுவிட்டது.

பில்லிசோறை எறிந்துவிட்டு திரும்பியபின் பூசாரி மேல் வரும் சாமி, அருள்வாக்குகளை அளிப்பார்.

ஆதியில் கடைபிடிக்கப்பட்ட. இறைவனுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் இரணபலி எனும் சடங்கின் தொடர்ச்சியே இந்த பில்லி சோறு எறியும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பழமையான நடைமுறை வாரைவளர் வாராப்பூர் நாட்டில் மட்டுமே இன்றும் கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது.

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்



முனீஸ்வரர் 











வாராப்பூர் நாட்டில் சல்லிக்கட்டு விழா தொன்றுதொட்டு விளையாடுவோரும் நடத்துவோரும்  இந்த மேலவிடுதி சம்பட்டியார் வகையறாகவே உள்ளனர். மேலவிடுதியில் இருப்போர் சேவுகம்பட்டியில் சல்லிக்கட்டு நடத்துகிறார்கள். பாப்பான்விடுதியார் இங்கு சல்லிக்கட்டு நடத்துகிறார்கள.




பக்தர்களால் வேண்டுதலுக்கு பலியிடப்பட்ட ஆட்டுத்தலைகள் 18 பட்டி பணிவிடை சாதிகளுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது


கிபி 1735 ல் வாராப்பூர் பகுதியை ஜகந்நாத அய்யர் ஆட்சி செய்து வந்தார். தஞ்சை மராத்திய மன்னரால் அய்யங்காருக்கு வாராப்பூர் பகுதி அளிக்கப்பட்டிருந்தது­.



கிபி 1735 ல் ரகுநாதராய தொண்டைமானுடன் இணைந்து நமண தொண்டைமான் வாராப்பூர் பாளையக்காரர் கருவறுத்து வாராப்பூர் நாட்டை கைப்பற்றினார்.

அப்பகுதியை புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைத்து, போரில் உதவி செய்த, ராமசாமி தொண்டைமான் மற்றும் அவரின் உறவினரான குருந்தன் சம்பட்டியாரின் வகையாராக்கு மரியாதை அளிக்கும் விதமாக சம்பட்டியார்களுக்கு வாராப்பூர் நாட்டின் தலைமை அம்பலக்காரராக நியமித்து பட்டு பரிவட்ட முதல் மரியாதையை அளித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

குளத்தூர் மன்னர் நமண தொண்டைமான் குருந்தன் சம்பட்டியாரின், மகளை மணம் முடிக்கிறார். அவர்களுக்கு பிறந்தவரே ராமசாமி தொண்டைமான் குளத்தூரின் மன்னராக பொறுப்பேற்கிறார்.

சம்பட்டியார்

தொண்டைமான் சீமையிலுள்ள கள்ளர் நாடுகளில் வாராப்பூர் நாடு மற்றும் அம்புநாட்டை சேர்ந்தவர்கள் சம்பட்டியார்கள்.

இவர்கள் வாராப்பூர் நாட்டில் சம்பட்டிவிடுதி, மேலவிடுதி, பாப்பான்விடுதி ஆகிய ஊர்களிலும், அம்புநாட்டில் வடக்கலூர், தென்தெரு ஆகிய ஊர்களில் மிகுந்து வாழ்கின்றனர்.

அம்புநாட்டில் இருந்து வாரப்பூர் நாட்டில் குடியேறி இவர்கள் பிற்காலத்தில் பாப்பான்விடுதி, மேலவிடுதி, சம்பட்டிவிடுதி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.அம்புநாட­்டில் வடக்கலூர், தென்குப்பம் ஆகிய பகுதிகளிலும் சம்பட்டியார் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

சம்பட்டியார்கள் பெயர் காரணத்தை நொக்கும்போது, இது புதுக்கோட்டையில், குளத்தூர் பகுதியில் இருக்கும், சம்பட்டி மலை எனும் குன்றுடன் தொடர்பு படுகிறது.

இந்த குன்று இருந்த பகுதியை அரையர்களாக ஆட்சி செய்ததனால், சம்பட்டிராயர் என அழைக்கப்பட்டு, பின்னாலில் சம்பட்டியார் என திரிந்திருக்கும்.( எ.கா அண்ணவாணல்ராயர், கொடும்பாளூராயர்).

குளத்தூர் பகுதியில் இருந்து பிற்காலத்தில் அவர்கள் அம்புநாட்டில் குடியேறி தொண்டைமான்களின் குப்பத்திலும், அம்புநாட்டிலும் வாழ்ந்திருந்தனர்.

குளத்தூர் மற்றும் அம்புநாட்டு மக்களுக்கு உள்ள தொடர்பு மிகவும் தொன்மையானது. புதுக்கோட்டை கல்வெட்டு எண் 458 ல், குளத்தூர் நாட்டவர் அம்புக்கோயில் தொண்டைமான்களுடன் இணைந்து அம்புக்கோயிலில் உள்ள சிவன் கோயிலுக்கு கிபி 1100 ல் கொடை அளித்துள்ளனர்.

பிற்காலத்தில் தொண்டைமான்களுடன் இணைந்து அம்புகோயிலில் அரையர்களாக இருந்துள்ளனர்.



தாய் பிடாரி காளிக்கு நாட்டினர் அனைத்து 18  கிராம மக்களும் மது எடுத்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தாய்க்கு படையல் போட்டு திருவிழா நடைபெருகிறது.

மிக பழமையான கோவில், பழமை மாறாத உருவ வழிபாடற்ற கோவில்!இங்கு உள்ள சாமிகள் நடுக்கல்லுடனே காணப்படுகிறது கற்கோவிலாக இருந்தாலும் பழமையான கட்டிடக்கலையுடன் காணப்படுகிறது.










































இத்திருவிழாவின் குறிப்பிடதக்க விசயம் காளிக்கு படையல் போடப்படும் சோறுக்கு மது செல்லும்போதே அனைத்து ஊர் மக்களும் புதிய் நெல் எடுத்து செல்கிறார்கள் கோவிலிலே நெல்லை அவித்து, பிறகு குத்தி எடுக்கப்பட்ட அந்த அரிசியிலே சமைத்து படையல் போடுகிறார்கள்.




நன்றி : 

திரு. ராஜேஷ் வல்லாளதேவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சுதாகர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்