சனி, 9 டிசம்பர், 2017

வெள்ளளூர் நாட்டின் "நாட்டாழ்வான்" மற்றும் "அம்பலக்காரர்கள்"











மதுரை மாவட்டம், மேலூர் அருகே அமைந்துள்ளது 'வெள்ளளூர்' எனும் அழகிய கிராமம். இதனை 'வெள்ளளூர் நாடு' என அழைப்பர். 

வெள்ளலூர் என்பதன் பெயர்க்காரணம் வெள்ளிலையூர், வீரபாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் வெள்ளலூர் என்று அழைக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.

நாடுகட்டமைப்பு

1)வளவு (வளவு என்பது பகுதி என்பதாகும்).
2)கிராமம்
3)மாகாணம்
4)நாடு

சில பகுதிகள் (வளவு) இணைந்தது கிராமமாகவும் சில கிராமங்கள் இணந்தது மாகாணமாகவும் பல மாகாணங்கள் இணந்தது ஒரு நாடு என்று அழைக்கப்படுகிறது அந்த நாட்டை மனிதன் உடலில் பல அங்கங்கள் இருப்பதை போன்று

1)தெய்வங்கள்
2)பெரிய அம்பலகாரர்
(நாட்டுத்தலைவர்)
3)அம்பலகாரர்
(கரைக்கான தலைவர்)
4.இளங்கச்சி அம்பலங்கள் 
(கரைக்கான துணை தலைவர்)
5.குடிமக்கள்
6.தலைநகரம்
7.மாகாணம் தலைநகர்கள்

ஏழு அங்கங்களாக வெள்ளலூர் நாடு திகழ்கிறது.

இந்நாடு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அழிவிற்கு உள்ளாகி இருக்கிறது நாட்டில் உள்ள அனைவரும் சிதறி விட்டனர் வீரணன் அம்பலகாரர் என்பவர் இந்தப் பேரழிவில் இருந்து தப்பியவர்களை ஒன்று திரட்டி முறை படுத்தினார்.

இது

வெள்ளலூர் மாகாணம் 
அம்பலகாரன்பட்டி மாகாணம்
மலம்பட்டி மாகாணம்
உறங்கான்பட்டி மாகாணம் 
குறிச்சிப்பட்டி மாகாணம்

என ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .

இந்த ஐந்து மாகாணங்களில் பரவி வாழும் கள்ளர் இன மக்கள் தந்தை வழியில் 

வெள்ளளூர் நாட்டுக்கள்ளர்களின் பதினொரு கரை + கூட்டம்
முண்டவாசி கரை 
வேங்கைபுலி கரை 
சம்மட்டி கரை 
நய்க்கான் கரை 
சாயும்படை தாங்கிகரை 
வெக்காளி கரை 
சலுப்புலி கரை 
திருமான்+போக்கி கரை 
செம்புலி கரை 
நண்டான் + கோப்பன் கரை 
பூலான் + மழவராயன் கரை 

என 11 கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் இங்கு ஒவ்வொரு கரைக்கும் இரண்டு அம்பலம் என 24 அம்பலகாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு கரைக்கும் 2 இளங்கச்சிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்

இளங்கச்சிகள் என்பவர்கள் அம்பலகாரர்களுக்கு உதவியாளர்கள் ஆவர். இந்நாட்டின் பெரிய அம்பலகாரர் கரை அடிப்படையில் இந்த 11 கரைகாரர்களுக்குள் சுழற்சி முறையில்  செய்யப்படுகிறார். இவரே கரை அம்பலங்களின் கூட்டத்திற்கும் நாட்டுக்கூட்டத்திற்கும் தலைமை வகிக்கின்றார். இவரது முடிவே இறுதியானதாக கருதப்படுகின்றது 

வெள்ளலூர் நாடு சிதைவுற்று முறைபடுத்தப்பட்ட காலத்திற்கு பின்பு இதுவரை 10 பெரிய அம்பலகாரர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர் . 



ஏழை காத்த அம்மன் கோவிலும் வல்லடிகாரர் கோவிலும் இந்நாட்டின் பொது கோவிலாகும் இவற்றிக்கு முறையே புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் 10 நாள்கள் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர் .


மேலூர் தொகுதி வெள்ளளூர் நாட்டில் உள்ள ஊராட்சிகள்

1.கோட்டநத்தம்பட்டி
2.குறிஞ்சிப்பட்டி
3.மலம்பட்டி
4.உறங்கான்பட்டி
5.அம்பலகாரன்பட்டி
6.வெள்ளளூர்


வெள்ளலூர் மாகாணத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:

1 . வெள்ளலூர்
2 . கட்டசோலைபட்டி
3 . இடையகோவில்பட்டி
4 . மன்றமலை ஒத்தப்பட்டி
5 . மட்டங்கிபட்டி
6 . கண்ணபுரம்
7 . இடையவலசை
8 . வெள்ளநாயகம்பட்டி
9 . ஒத்தப்பட்டி
10 . மேலவலசை
11. மன்றமலைப்பட்டடி, 

உறங்கான்பட்டி மாகாணத்தில் உள்ள ஊர்கள் பின்வருமாறு.

1 . உறங்கான்பட்டி
2 . புலிமலைபட்டி
3 . கல்லம்பட்டி
4 .குப்பச்சிபட்டி
5 . அய்யமுத்தாம்பட்டி
6 . கொட்டாணிபட்டி
7 . கொட்டாணி அழக்சிபட்டி
8 . சூரத்துபட்டி
9. உ.புதுபட்டி
10 . தர்மாசனபட்டி

அம்பலகாரன்பட்டி மாகாணத்தில் உள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:

1 . அம்பலகாரன்பட்டி
2 . நாயத்தான்பட்டி
3 . வல்லவன்காலனி
4 . கோட்டநத்தம்பட்டி
5 . அ.புதுபட்டி
6 . முருகன்பட்டி
7 . பழையூர்பட்டி
8 . சுப்பிரமணியபுரம்
9 . சின்ன ஒக்குபட்டி
10 . கட்டகாளைபட்டி
11 . ஏழைகாத்த அம்மன் நகர்.

குறிச்சிபட்டி மாகாணத்தில் உள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:

1 . குறிச்சிபட்டி
2 . முத்தம்பட்டி
3 . கள்ளராதினிபட்டி
4 . கூலிபட்டி
5 . கோவில்பட்டி
6 . கோ.ஒத்தப்பட்டி
7 . ஆலம்பட்டி
8 . கம்மாய்பட்டி
9 . உச்சிரிச்சான்பட்டி

மலம்பட்டி மாகாணத்தில் அடங்கியுள்ள சிறிய ஊர்களின் விபரம் பின்வருமாறு:


1 . மலைப்பட்டி
2 . சோனைபட்டி
3 . அழக்சிபட்டி
4 . தேவன்கோட்டை
5 . மேட்டுப்பட்டி
6 . கன்னிமார்பட்டி
7 . தேவன்பெருமாள்பட்டி
8 . பெரிய ஒக்குபட்டி
9 . மாணிக்கம்பட்டி
10 . ஆவாரம்பட்டி
11 . கூட்டுறவுபட்டி
12 . சிவல்பட்டி
13 . உசிலம்பட்டி
14 . கண்டாங்கிபட்டி
15 .முனியாண்டிபட்டி
16 . சாணிபட்டி

கள்ளர் நாட்டின் பண்பாடும் கட்டமைப்பும்.

வைத்தியநாத ஐயர் வெள்ளளூர் நாட்டிற்கு வந்து கள்ளர் நாட்டு முறைபடி மேல்சட்டை அணியாமல் இடுப்பில் துண்டை கட்டி உரி வைத்து அம்பலகாரர்களை தரையில் விழுந்து வணக்கி அம்பலகாரர்களிடம், கள் ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்

அதை ஏற்ற அம்பலகாரர்கள் தங்கள் நாட்டிற்கு உட்பட்ட 62 கிராமங்களில் கள் இறக்கவோ விற்கவோ தடைவிதித்தனர், இதில் சிறப்பானது வைத்தியநாத ஐயர் மனுதர்மத்தை பின்பற்ற கூடியவர் ஐயர் முறைபடி கடவுளை தவிர மற்றவர்களை வணங்க மாட்டார்கள் ஆனால் வைத்தியநாத ஐயர் கள்ளர்நாடுகளின் கட்டுபாட்டை மதித்து வணங்கினார்.


வெள்ளளூர் நாட்டுக்கள்ளர்களின் பதினொரு கரைகளில் சலுப்புலி கரைக்கு மேலவளசை நடேசன் என்பவர் புதிய அம்பலகாரர் (தலைவர்) தேர்வு செய்து பட்டம் கட்டும் விழா.



வெள்ளளூர் நாட்டில் துவங்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அம்பலக்காரர்களின் நாட்டுக்கூட்டம்.



வெள்ளளூர்நாடு ஏழைகாத்தம்மன் திருவிழா ஆரம்பம் அதன் ஒரு பகுதியாக நாட்டுக்கூட்டம் நடத்தும் கள்ளர் நாட்டு அம்பலங்கள்




மதுரையைச் சுற்றியுள்ள 62 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு, வெள்ளளூர் கிராமத்தில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலில் திருவிழா எடுத்துச் சிறப்பிக்கின்றனர்.

குழந்தையே தெய்வம்















இத்திருவிழாவின்போது, தெய்வ பக்தியில் சிறந்துவிளங்கும் ஏழு சிறுமிகளை, அம்மனின் உத்தரவுப்படி கன்னி தெய்வங்களாக, அருள் வந்து தேர்வு செய்வார், வெள்ளளூர் ஏழைகாத்தம்மன் கோயில் பூசாரி. புரட்டாசியில் நடைபெறும் திருவிழாவின்போது, இந்தக் குழந்தைகளுக்கு நகைகளும் பட்டுப்பாவாடைகளும் அணிவித்து, தெய்வக் குழந்தைகளாக பாவித்து மரியாதை செலுத்துவர், இப்பகுதி கிராமத்து மக்கள்.

இப்படி தெய்வமாக பாவித்து வழிபடப்படும் குழந்தைகளின் திருவிழா இந்த ஆண்டு புரட்டாசியில் துவங்கியது. அந்தச் சிறுமிகள் ஏழு பேரும் கோயிலிலேயே தங்கி, அம்மனை வணங்கி, விரதமிருப்பர். பின்னர், இவர்களை திருவிழாவின் கடைசி நாளன்று மதுக்கலயங்களுடன் இவ்வூரிலிருந்து, அருகில் இருக்கும் 'கோயில்பட்டி' எனும் கிராமத்தில் உள்ள மற்றொரு ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். இவ்வாறு சிறுமிகள் வருவதை, ஏழைகாத்தம்மனே தங்கள் ஊருக்கு வருகைபுரிவதாக எண்ணி மெய்சிலிர்க்கின்றனர், கோயில்பட்டி கிராமத்து மக்கள்.

இப்படி, வெள்ளளூர் ஏழைகாத்தம்மன் கோயிலின் கடைசித் திருவிழா சமீபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்நாளில் சுற்றுப்பட்டு 62 கிராமங்களைச் சேர்ந்த 22 கள்ளர் குல அம்பலக்காரர்களுக்கும் கிராம மக்கள் மரியாதை செய்தனர்.

விநோத வழிபாடு




இது தவிர, திருமணமான பெண்கள், தென்னம்பாளையால் ஆன மதுக்கலயங்களை, மேல் சட்டை அணியாமல் ஏந்திச் சென்று, ஏழைகாத்தம்மன் கோயிலில் சென்று, சமர்ப்பித்து வேண்டுகின்றனர். இதனால் அவர்களின் குடும்ப வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் , களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலைகளையும் கையில் ஏந்தி, கோயிலில் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது மட்டுமல்லாது, இளைஞர்களும் சிறுவர்களும் வைக்கோல் பிரியில் பொம்மைகள் செய்து, இறுதி நாளன்று வேஷம்கட்டியும், வண்ணக்கொடிகள் தூக்கியும் ஊர்வலம் வந்து, கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.

இப்படி, விநோத நேர்த்திக்கடன் மற்றும் பிரார்த்தனைகளின் தொகுப்பாக நடக்கிறது பழைமை வாய்ந்த வெள்ளளூர், ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா.

பதிநாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் வெள்ளலூர் நாட்டின் பெரிய அம்பலகாரர் A.வெள்ளைச்சாமி அம்பலகாரர் என்ற அழகம்பலகாரர் காலம் : 15.7.1878 முதல் 14.1.1924




பதினாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் வெள்ளலூர் நாட்டின் அருள்மிகு வல்லடிகாரர் சாமி திருவிழாவில் துப்பாக்கி  ஏந்தி கள்ளர்குல தலைவர்களான நாட்டு அம்பலகாரர்கள் அணிவகுப்பு.





அருள்மிகு ஸ்ரீ வல்லடிகாரர்கோவில் திருவிழா 

வெள்ளலூர் நாட்டு மக்களின் காவல் தெய்வமான வல்லடிகாரர் வரலாறு.

மதுரை மாவட்டம். மேலூரிலிருந்து தென் கிழக்கில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் வல்லடிகாரர் குடிகொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் வெள்ளலூர் நாட்டார் கள்ளர் நாட்டு கிராமங்களில் அளவுக்கு அதிகமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. புயலாய் பறந்து வரும் குதிரையில் மாயாவி ஒருவர் தான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரு கட்டத்தில் மாயாவியின் அட்டூழியம் அதிகமாகவே அதை தாங்க முடியாத கிராம மக்கள் தங்களை வாழ வைக்கும் ஏழைகாத்த அம்மன் கோவிலில் மாயாவியின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டனர். 

அதற்கு மனமிறங்கிய ஏழை காத்த அம்மன் மாயாவி யை வழிமறித்து இனிமேல் இந்த மக்களை துன்புறுத்தக் கூடாது இதற்கு நீ கட்டுப்பட்டால் எனது எல்லைக்குள் உனக்கும் ஓர் இடம் உண்டு. என்னை பூஜிக்கும் இந்த மக்கள் உனக்கும் கோவில் கட்டி வழிபடுவார்கள் என்று சொன்னாராம். அம்மனின் பேச்சுக்கு கட்டுப்பட்ட மாயாவி அந்த இடத்திலேயே பூமிக்குள் புதைந்து போனார்.

அதன் பிறகு கிராம மக்கள் வழிப்பறி தொல்லையின்றி நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். பின்னொருநாளில் வயல் காட்டில் வேலை செய்யும் தன் கணவனுக்கு கஞ்சிப்பானை எடுத்துச் சென்ற பெண் ஒருத்தி மாயாவி புதையுண்ட இடத்தை கடக்கும் போது கல் தட்டி கால் இடறி கீழே விழுந்தாள். அதனால் பானை உடைந்து கஞ்சி கீழே கொட்டியது இதை பொருட்படுத்தாத அந்த பெண் மறு நாளும் தலையில் கஞ்சிப் பானையுடன் அந்த வழியில் வந்தாள் குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்த போது அன்றும் சொல்லி வைத்தது போல கல் தட்டி கால் இடறி கீழே விழுந்தாள் பானை உடைந்தது பிறகு இதுவே தொடர்கதையானது .

அதனால் கோவம் அடைந்த அவள் கணவன் மண்வெட்டியுடன் கிளம்பி தன் மனைவியின் காலை இடறி விடும் கல்லை பெயர்த்தெடுக்க முயன்றான் ஆனால் அவனால் அந்த கல்லை இம்மியளவும் அசைக்க முடியவில்லை. மட்டுமின்றி மண்வெட்டி வெட்டுப் பட்ட கல்லில் இருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது இதைக் கண்டு அலறி மயங்கி விழுந்தவன் படுத்த படுக்கையானான் இந்த நிலயைக் கண்டு என்னவோ ஏதோவொன்று பதறிய கிராம மக்கள் கோடாங்கிகாரனை அழைத்து வந்து குறி கேட்டனர் ஏழைகாத்த அம்மன் அடக்கி வைக்கப்பட்ட மாயாவி அங்கு புதையுண்டு இருப்பதாகவும் இது அவனது வேலை தான் அம்மன் அவனுக்கு வாக்கு கொடுத்தது போல நீங்கள் அவனுக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று சொன்னார் கோடாங்கி. 

கோடாங்கி சொன்ன படி மாயாவி புதையுண்ட இடத்தில் அவனுக்கு கோவில் கட்டிய ஊர் மக்கள் வாசலில் வெள்ளைக் குதிரையும் மண்ணால் செய்து வைத்தனர். அதற்கு சேமங்குதிரை எனப்பெயர். 

அந்த மாயாவி தான் வெள்ளலூர் நாட்டு மக்களுக்கு காவல் தெய்வமாக நின்று
ஊர் மக்களை வாழ வைக்கிறார்.

கம்பீரமாக நிற்கும் சேமங்குதிரைக்கு ஒரு சிறப்பு உண்டு. 

ஒரு முறை வல்லடிகாரர் கோவில் பக்கமாக குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை ஒருவர் இந்த சேமங்குதிரையை பார்த்து விட்டு இந்த குதிரை புல் தின்னுமா? கனைக்குமா என்று கேலியாக கேட்டார் .

அப்போது நாட்டு அம்பலகாரரான வீரணன் அம்பலம் இதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் அப்போதும் விடாத வெள்ளைக்கார துரை புல் தின்னாது கனைக்காது என்றால் இடித்து தள்ளி விடலாமே எதற்கு இதை வைத்துக் கொண்டு என்று எகத்தாளம் பேசினார். 

உடனே கோவிலுக்குள் ஓடிய வீரணன் அம்பலம் வல்லடிகாரர் சன்னதியில் நின்று கண்ணீர் மழ்க வேண்டினார் அப்போது கோவிலில் ஈசானிய மூலையில் கெவுளி குரல் கொடுத்தது அதை வல்லடிகாரரின் அருள் வாக்காக எடுத்துக் கொண்ட வீரணன் அம்பலம் துள்ளிக் குதித்து வெளியே ஓடி வந்து ஒரு கூடை நிறைய புல்லை கொண்டு வரச் சொல்லி அதை சேமங்குதிரைக்கு எதிரே வைத்தார் .அந்த புல் அப்படியே இருக்க துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை புல் தின்பதுபோல காட்சியளித்தது அதை பார்த்த துரை திகைத்துப்போனார் அது மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கனைக்கவும் செய்தது அதைக் கேட்டு மிரண்ட துரையின் குதிரை பிடறி தெறிக்க ஓடத்தொடங்கியது ஓடும் போது கோவிலுக்கு பக்கத்தில் உள்ள கண்மாயில் கால் இடறி கீழே விழுந்தது. அதனால் குதிரையின் மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார் அதன் பிறகு துரையும் குதிரையும் எழுந்திருக்கவே இல்லை துரையை பழி வாங்கிய கண்மாய் இன்றும் அது வெள்ளைக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. 

இந்த சம்பவத்திற்குப் பிறகு வல்லடிகாரருடன் அவரது குதிரையையும் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள்.


















































வெள்ளளூர் நாடு பெரிய திருவிழா 













உறங்கான் பட்டி மாகாணம் மண்டகப்படி




ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு ரதம் இழுக்க உறங்கான்பட்டி மாகானம் அழகிச்சிப்பட்டி மாடு.  அழகிச்சிபட்டியை திருமான் கரையை சேர்ந்த பெ.கிருஷ்ணன் காவேரி மணியண் அவர்களின் மாடு










வெள்ளளூர் நாட்டில் மது எடுத்தல்




































பர்மாவில் வாழும் வெள்ளலூர் கள்ளர்கள் விவரம் 


வெள்ளலூர் நாட்டு மன்னை சிறப்புடன் காக்க வென்று.

வெள்ளலூர்நாட்டை சேர்ந்திருக்கும் விதமுடைய அம்பலங்கள்.

மண்டலத்தில் மூண்டவாசி மகிழ்ந்திருக்கும் வேங்கைபுலி

அன்புடைய சமட்டியுடன் அடுத்திருக்கும் நய்க்கானும்

நாட்டிலுள்ள சாவடங்கி நல்ல தொரு வெக்காளியும்

தேட்டமுடன் சலுப்புலியும் திருமானும் செம்புலியும்

நன்டனும் கோப்பனுமே நல்லதொரு பூலான்மலவராயன்

தெள்ளுதமிழ் இளங்கட்சிகள் சேர்ந்ததொரு

பலகுடிகள் எல்லோரும் வாருமென்று தான் அழைத்து

வெள்ளூர் நாட்டார் வெக்காளி அம்பலம்
வீச்சறுவாளும் கையில் ஏந்தி

வேட்டு பரியவும் வெட்டு விழுகவும் (உச்சிகிடா)
வேடிக்கையாவுது வெள்ளலூர் நாட்டுக்குள்ளே.

நாடு செழிக்க நல்ல மழை பொழியவேண்டும்
ஊரு செழிக்க உள்ள மழை பொழியவேண்டும் என சொல்லி வேண்டுதலோடு திருவிழா நோக்கி.

மாதம் ஒரு திருவிழா என கொண்டாடும்
ஒரு தெய்வீக வரலாற்று பூமி எங்கள் பூமி















































































































































































































































































































வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்