திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தேவர் மரபினர் (அ) தேவர் சாதி (அ) கள்ளர் மரபு (அ) கள்ளர் சாதி (அ) முக்குலத்தோர் / Mukkulathor / Thevar Caste / Thevar Caste In Tamil / Kallar Caste Tamil / Kallar Caste

Tamil Studies
Or Essays on the History of the Tamil People, Language, Religion and Literature By Muttusvami Srinivasa Aiyangar · 1914

தேவர் என்றால் மன்னர்கள் பயன்படுத்தும் பட்டம்.  
தமிழகத்தில் இந்தப் பட்டம் முக்குலத்தோர் சாதியைக் குறிக்கிறது.




பராந்தகதேவர் என்ற சுந்தர சோழர் 

ஸ்ரீ ராஜராஜதேவர் 

ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழர்


(குலோ)த்துங்க சோழ தேவர்க்குயாண்டு

வல்லவரையன் வந்தியத்தேவன்
 ஸ்ரீ கண்டராதித்ததேவர் 


தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த முக்குலத்தோர் சமூதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை






தேவர் என்பது சாதியா ?

தமிழகத்தில் எந்த மரபினருக்கு “தேவர்” பட்டம் உள்ளது?

கள்ளரை எந்த பகுதியில் தேவமார் என்று அழைப்பார்கள்?

சோழ மண்டலத்தில் கள்ளர் மரபினருக்கு "தேவர்" பட்டம் உள்ளதா ?

மேலே உள்ள கேள்விகள் எல்லாம் பலரால் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள். 

தே < தேன் = இனிமை
தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்

இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும். தே+அர்=தேவர், எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது.


தேவர் என்பது சாதியா ?

தேவர் என்பது முக்குலத்தோரின் முதன்மையான பட்டங்களில் ஒன்றுமுக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என்பதே சாதி. தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும். 

தமிழ் அகராதி தரும் விளக்கம்


1883 ஆம் ஆண்டு Native life in Travancore என்ற நூலில் "The Kallar or robber caste of Tinnevelly add deva, " god," to their names as a caste title, as also did the Pandian kings" என்று குறிப்பிடுகிறார். கள்ளர் பாண்டிய மன்னர்களைப் போலவே, தங்கள் பெயர்களில் தேவர், "கடவுள்" என்று சேர்த்துக் கொள்கின்றனர்.

Book : Native life in Travancore, by Mateer, Samuel, Publication date : 1883, Publisher London, W.H. Allen & co.




மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன என்றால், மூன்று பிரிவுகளாக இருந்த கள்ளர், மறவர், அகம்படியர் ஒரு சாதியாக குறிக்கப்படுகின்றன. 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இராபர்டு கால்டுவெல் "கள்ளர்கள் மறவர்களின் உறவினர்கள்" என்று குறிப்பிடுகிறார்.    



தமிழகத்தில் எந்த மரபினருக்கு “தேவர்” பட்டம் உள்ளது?


தேவர் என்ற பட்டம் முக்குலத்தோர்க்கும் பொதுவானது, இந்த பட்டம் மூவரில் யாருக்கு தொன்று தொட்டு உள்ளது என்று யாராலும் அறிதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.






தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போர்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.


இலங்கை மகாவம்சம் நூல் குறிப்பிடும் பாண்டியதேவரின் கள்ளர் மறவர் 


பல மன்னர்களின் கல்வெட்டில் காணப்படும் தேவர் என்பது முக்குலத்தோர் சாதியாக குறிப்பிட்ட முடியாது. ஏன் என்றால் வட இந்திய மன்னர்களின் பின்னால் தேவ், தேவர் என்ற அடைமொழி சில கல்வெட்டில் வருகிறது. சோழ மற்றும் பாண்டிய நிலம் சார்ந்த பகுதியில் உள்ள கல்வெட்டுகள், அந்த பகுதி மக்களைக் குறிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் பட்டங்களில் குறிப்பிடுகின்றன. தேவர் என்று குறிப்பிடப்படுகின்ற கல்வெட்டுகள் உள்ள பகுதியில், தேவர் என்ற பட்டங்களையுடைய முக்குலத்தோர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அந்த கல்வெட்டுக்கு உள்ள ஊரில் கோயில்களில் முதல் மரியாதை பெறுபவர்களாகவும், அந்த ஊரின் தலைவர்களாவும் முக்குலத்தோர் உள்ளனர்.

தமிழகத்தில் சோழ பாண்டிய மன்னர்களின் பின்னால் தேவர் என்ற அடைமொழி வருகிறது. அவர்களின் ஆட்சிகள் முடிவுற்றாலும், அதன் தொடர்ச்சியாக தேவர் என்ற பட்டத்தினை தமிழகத்தில் மூவேந்தர்கள் வழிவந்த முக்குலத்தோர் மட்டுமே இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
   



கள்ளரை எந்த பகுதியில் தேவமார் என்று அழைப்பார்கள்?


மதுரை பகுதியில் தேவமார் என்றால் கள்ளரையும், ராமநாதபுரம் பகுதியில் தேவமார் என்றால் மறவரையும், தஞ்சாவூர் பகுதியில் தேவமார் என்றால் அகம்படியாரையும் அழைப்பார்கள். 


கள்ளர் மரபில் தேவர் பட்டத்தில்  புகழ்பெற்றவர்கள் 

தஞ்சாவூரில் புகழ் பெற்ற பாப்பாநாடு குறுநிலமன்னர் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்உக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.


மதுரையில் புகழ்பெற்ற 1659-ல் நடந்த மூக்கறு போரில் வெற்றியை தேடித்தந்தவர்களின் ஒருவரான பின்னத்தேவரும்,  (திருமலை நாயக்கர் பின்னத்தேவருக்கு மூக்குப்பரி என்கிற பட்டத்தை வழங்கினார்), ஆங்கிலேயர்களால் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட ஆண்டியப்ப தேவர், கொன்றி மாயத் தேவரும், முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்த அண்ணல் பேயத்தேவரும், தேவர் தந்த தேவர் 'உறங்காப்புலி' பா.கா. மூக்கைய்யாத்தேவரும், இரட்டை இலை சின்னத்தில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் முதல் எம்.பி ஆன கே. மாயத்தேவரும்,

சிவகங்கையில் புகழ்பெற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆர். விசுவாமிநாதன் தேவர் ஆவார்கள். 



சோழ மண்டலத்தில் கள்ளர் மரபினருக்கு "தேவர்" பட்டம் உள்ளதா ?


சோழமண்டலமான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள  ஈசநாட்டு கள்ளர் என அழைக்கப்படும் சோழமண்டல கள்ளர்கள் "தேவர்" பட்டத்தை விட தொண்டைமான் (புதுக்கோட்டை மன்னர்)வாண்டையார்  போன்ற பட்டங்களே அதிகமாக வெளியே தெரிவதால், ஈசநாட்டு கள்ளர்களுக்கு "தேவர்". பட்டம் பெரிதாக வெளியே தெரிவதில்லை,  ஆனால் நடைமுறையில் தஞ்சை பகுதியில்  "விஜயதேவர்", "தேவர்" பட்டங்களையுடைய ஜமீன்களைத் தவிர,    கள்ளர்களுக்கு சோழமண்டலத்தில் தேவர் என்ற குடும்ப பட்டங்களும், மேலும்  

"சோழங்கதேவர் , 
சோழகங்கதேவர் , 
சோழதேவர், 
வள்ளாளதேவர்
அச்சித்தேவர் , 
விசயத்தேவர், 
அம்பர்த்தேவர், 
அம்மாலைத்தேவர், 
அம்பானைத்தேவர், 
அம்மையத்தேவர்
அரசதேவர்
ஆஞ்சாததேவர், 
இராமலிங்கராயதேவர்
இராயதேவர், 
கட்டத்தேவர், 
கண்டியத்தேவர், 
கலிங்கராயதேவர்,
கன்னதேவர், 
காலிங்கராயதேவர்,
கைலாயதேவர், 
சங்கரதேவர்,
சண்டப்பிரதேவர், 
சந்திரதேவர், 
சமயதேவர்,
சம்பிரத்தேவர், 
சாலியதேவர்,
சிவலிங்கதேவர், 
சோமதேவர், 
தெலிங்கதேவர், 
நரசிங்கதேவர், 
நரங்கியதேவர்,
நாகதேவர், 
நாரத்தேவர், 
நெல்லிதேவர், 
பருதிதேவர்,
பனையதேவர், 
பொய்ந்ததேவர், 
பொன்னதேவர், 
போசுதேவர், 
மங்கலதேவர்,
மங்கதேவர், 
மொங்கத்தேவர், 
மன்னதேவர், 
மெட்டத்தேவர், 
மேனாட்டுத்தேவர், 
வண்டதேவர், 
விசல்தேவர், 
வில்லதேவர்
வீச்சாதேவர், 
வெண்டாதேவர், 
வெள்ளதேவர் "
வளத்தாதேவர்

என்ற பட்டங்களை உடைய கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்றும் சோழ மண்டலத்தில் வாழ்கின்றனர்.

சிலர் பாண்டிய மண்டலத்தில் கள்ளர்களுக்கு முத்துராமலிங்க தேவருக்கு பிறகு தேவர் பட்டம் வந்தாக அறியாமையால் கூறுவதும்,
 
சிவகங்கை பகுதியில் "அம்பலம்", "சேர்வை" பட்டம் அதிகமாக பயன் படுத்துவதால், "தேவர்" பட்டத்திற்க்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லை என்பதும் பலரின் அறியாமையே காட்டுகிறது. 


தஞ்சை பெரிய கோயில் சோழ கல்வெட்டில்
 தேவர் என்ற பட்டம் காணப்பட்டாலும், நேரடியாக கள்ளர் என்று நேரடியாக குறிப்பிட்டு தேவர் பட்டம் இருப்பதை, 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் வருகிறது. மேலும் 13 ஆம் நூற்றாண்டு கள்ளழகர் கல்வெட்டில், தஞ்சை பாப்பாநாடு குறுநில மன்னர் "விஜயதேவர்" பெயரும், 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டு செப்பேடுகள் மதுரை தேவர்களின்  பெருமையையும், திருமலைநாயக்க மன்னரின் தொடர்பையும் காட்டுகிறது. 





பாண்டிசேரியில் மட்டும்
தேவர் சாதி சான்றிதழ் 
(மேலூர் அம்பல கள்ளர்)




இந்திர குல தேவர் ஜாதி

இது 1919 ம் ஆண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் இந்திய பத்திரம்.



மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த, வேல் விருமத்தேவன் மகன் இந்திரகுல தேவர் ஜாதி, விவசாயம் ஜீவனம், விருமாண்டித் தேவனுக்கு, கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையாத் தேவன் எழுதிக் கொடுத்த பத்திரம்.

104 வருடங்களுக்கு முற்பட்ட இந்த முத்திரைத்தாள் ஆவணம் பிரமலைக் கள்ளர்களுக்குரியது.  


கல்வெட்டில் தேவர் - கள்ளர்

கிபி 1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் கல்வெட்டில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக
  “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.




அவரை தொடர்ந்து அவருடன் கையெழுத்திட்ட மற்ற அதிகாரிகளும் தங்களை கள்ளன் என்றே கையொப்பம் இட்டுள்ளனர்.

“கள்ளன் பெரிய தேவன்”
“கள்ளன் பெருமாள்”
“கள்ளன் சீராளத் தேவன்”






கள்ளன் - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது இங்கு பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.




மொழி ஒப்பியலும் வரலாறும்

மதுரை தேவர்கள்

மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் பகுதியில் வாழும் பிறமலை கள்ளர்களின் பட்டம் "தேவர்". பங்காளிகள், மாமன், மைத்துனன் எல்லோருக்கும் பொதுவான பட்டமே " தேவர் ". 

இவர்களின் திருமண முறை ஈசநாட்டு கள்ளர்கள் போல் பட்டம் பார்த்து அமைவதில்லை. பிறமலை கள்ளர்கள் கோயில் முறையில் திருமணம் செய்வதால், அவர்களின் கோயில் குலதெய்வத்தை வைத்தே பங்காளிகள், மாமன்களை அறியமுடிகிறது.
  



இவர்களின் வாழ்வியலை வைத்து எடுக்கப்பட்ட கிழக்குசீமை, பாரதி கண்ணம்மா, விருமாண்டி, சண்டைகோழி, மதயானை கூட்டம் திரைப்படங்களில், இவர்களின் தேவர் பட்டத்தின் பெருமையை உணரலாம்.

திருமலை பின்னத்தேவர் தன்னரசாக மதுரை பகுதில் ஆட்சி செய்ததை, திருமலை நாயக்கர் வழங்கிய செப்பேடு மூலம் நாம் அறியலாம்.

கி.பி 1645 இல் 
  கி.பி 1655 இல் 

தஞ்சை தேவர்கள்

சோழமண்டலத்தில் கள்ளர்களை தேவர் என்று அழைப்பதில்லை என்று சிலர் கூற்று. சோழமண்டலத்தில் கள்ளர்களை அந்த அந்த குடும்ப பெயரால் அழைக்கபடுவதால் தேவர் பட்டம் உடைய கள்ளர்களை மட்டுமே தேவர் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர். 





ஈசநாட்டு கள்ளர் ஒரே பட்டமுடையவர்கள் சகோதரர்கள் என்பதால் “தேவர்” பட்டமுடையவருக்கு “தேவர்” பட்டம் உடையவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள்.

இதனை அறியாத சிலர் சோழமண்டலத்தில் தேவர் என்றால் கள்ளர் இல்லை என்று கூறிவருகின்றனர். ஒரு வாண்டையார் பட்டமுடையவர் தன்னை தேவர் என்று சொல்லமுடியாது. அவர் தன்னை வாண்டையார் என்றே அடையாளப்படுத்துவார், அஞ்சாத்தேவர் என்ற பட்டமுடையவர் தன்னை அஞ்சாத்தேவர் என்றே அடையாளப்படுத்துவார். அதைபோல் தேவர் பட்டமுடைய கள்ளர் மரபினர் தங்களை தேவர் என்று அடையாளப்படுத்துவார். 

தேவர்” பட்டமுடைய கள்ளர்களும் “ அஞ்சாத்தேவர் “ பட்டமுடைய கள்ளர்களும் சகோதரர்கள் அல்ல. இரண்டும் வேறு வேறு பட்டங்கள்.



ஆனால் அகமுடையார் என்பவர்களுக்கு சோழமண்டலத்தில் தேவர், பிள்ளை என்ற பட்டங்களை தவிர வேறு பட்டங்கள் இல்லை. அதனால் இவர்கள் தங்களை தேவர் என்றே பொதுவாக அடையாளப்படுத்துவார்கள்.

அம்பலம் என்றால் பாண்டிய மண்டலத்தில் கள்ளர்களை  பொதுவாக குறித்தாலும், தஞ்சையில் அம்பலம் பட்டமுடைய கள்ளர்கள் மட்டுமே தங்களை அம்பலம் என்று அடையாளப்படுத்துவார். ஆனால் வலையர் என்பவர்கள் சோழமண்டலத்தில் அம்பலகாரர் என்றே தங்களை பொதுவாக அடையாளப்படுத்துவார்கள்.

ஈசநாட்டு கள்ளர்களின் வாழ்வியலை வைத்து எடுக்கப்பட்ட " களவாணி ", "மன்னர் வகையறா" போன்ற படங்களில் சோழங்கநாட்டர், வாண்டையார், மூரியர், தேவர் போன்ற பட்டங்களை  பயன்படுத்தியிள்ளார்கள். 

விஜயதேவர்
தஞ்சை பாப்பாநாடு பாளையக்காரர்கள் “விஜயதேவர்” என்ற பட்டம் உடையவர்கள். தஞ்சையின் பெரும் நிலப்பகுதிகள் இவர்களின் கீழ் இருந்தது. பாப்பாநாடு பாளையக்காரர் “விஜயதேவர்” சிலை மன்னார்குடி செயங்கொண்ட நாத கோவிலில் இன்றும் சிலையாக வழிப்பாட்டில் உள்ளது.


தேவர்

தஞ்சையில் உக்கடை ஜமீன்களின் பட்டம் "தேவர்". இவர்களின் கீழே பல கிராமங்கள் இன்றும் உள்ளன. உக்கடை எஸ்டேட் என்று அழைக்கப்படும்.





கொங்கு ஆய்வு மையம் வெளியீடு

(தஞ்சை குறுநில மன்னர் விசயதேவர்)

தஞ்சாவூர் உக்கடை தேவர்





எதற்கும் அஞ்சாத வாடிவாசல் வீரன் 
அழகாத் தேவன் 





குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயரின் துப்பாக்கிக்கு பலியான பெருங்காமநல்லூர் தியாகிகள்
(தேவர்கள்)



வெண்கலக்குரல் வித்தகர் ஓ ஏ கே தேவர் 
( ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்)


அஞ்சா நெஞ்சர் 
எஸ். ஆண்டித்தேவர்



மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு - எழுதிய 
முத்துத்தேவர்


கலைமாமணி பெரிய கருப்பு தேவர்


தஞ்சாவூர் பஞ்சு தேவர்




கள்ளர்களுக்கு சோழமண்டலத்தில் தேவர் என்ற பட்டங்களை தவிர 

"சோழங்கதேவர்,சோழகங்கதேவர் , சோழதேவர், வள்ளாளதேவர்அச்சித்தேவர் , விசயத்தேவர், அம்பர்த்தேவர், 
அம்மாலைத்தேவர், அம்பானைத்தேவர், அம்மையத்தேவர்அரசதேவர்ஆஞ்சாததேவர், இராமலிங்கராயதேவர்இராயதேவர், கட்டத்தேவர், கண்டியத்தேவர், கலிங்கராயதேவர்கன்னதேவர், காலிங்கராயதேவர்கைலாயதேவர், சங்கரதேவர்,சண்டப்பிரதேவர், சந்திரதேவர், சமயதேவர்,சம்பிரத்தேவர்சாலியதேவர்,சிவலிங்கதேவர், சோமதேவர், தெலிங்கதேவர், நரசிங்கதேவர், நரங்கியதேவர்நாகதேவர், நாரத்தேவர், நெல்லிதேவர், பருதிதேவர்பனையதேவர், பொய்ந்ததேவர், பொன்னதேவர், போசுதேவர், மங்கலதேவர்மங்கதேவர், மொங்கத்தேவர், மன்னதேவர், மெட்டத்தேவர், மேனாட்டுத்தேவர், வண்டதேவர், விசல்தேவர், வில்லதேவர்வீச்சாதேவர், வெண்டாதேவர், வெள்ளதேவர் " வளத்தாதேவர்

என்ற பட்டங்கள் , இதில் சில பட்டங்களை மட்டும் பார்க்கும் போது அவை, சோழ கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

• தேவர் :

தேவர்குடியிருப்பு :- தஞ்சாவூர் மாவட்டம்,   பேராவூரணி வட்டத்தில் அலிவலம் ஊராட்சியில்  உள்ள தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

தேவர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம்,வல்லவாரி ஊராட்சியில் தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

தேவர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், வேம்பங்குடி ஊராட்சியில் தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

அம்மானைத்தேவர் 



விசாத்தேவர்







• சோழங்கதேவர், சோழகங்கதேவர் :





சோழகங்கன் என்னும் பட்டம், இராசராச சோழன் தன் தம்பி மதுராந்தகனுக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. 1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும், சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும், சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன், சோழ குச்சிராயன் என கூர்சரம், வேங்கியிலும் அமர்த்தியதாக தெரிகின்றது.






• வளத்தாதேவர்



ஆஞ்சாததேவர்:




மொட்டத்தேவர்

ஏரிமங்கல கள்ளர் நாட்டில் அதிகமாக வாழ்கின்றனர். அந்த நாட்டில் இரண்டாம் கரைகாரர்கள்



• சங்கரதேவர் :
சங்கர ராசேந்திர சோழன் உலா என்பது சோழர் குலத்தில், தோன்றிய மூன்ரும் குலோத்துங்கனுடைய தம்பியாகிய சங்கரசோழ னைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்டு பாடப் பெற்றது. சோழ அரசனை இந்தநூல், சங்கர சோழன் (காப்பு, 272) என்றும், சங்கர ராசன் (38, 115) என்றும், சங்கர வேந்தன் (114) என்றும், சங்கரன் (235, 337, 338) என்றும் கூறும்.


சங்கரத்தேவன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் நல்லவன்னியகுடிகாடு ஊராட்சியில்  உள்ள சங்கரத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.



• நரசிங்கதேவர், நரங்கியதேவர்:

கல்வெட்டு : பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர் கோவில்
அரசு:வாணாதிராயர்; 
ஆண்டு: 14-ஆம் நூற்றாண்டு

செய்தி: செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........

செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......


• நார்த்தேவர்:

நார்த்தேவன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ராகவாம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள நார்த்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.




• மங்காத்தேவர் :

மங்காத்தேவன்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம்,  குன்றாண்டார் கோயில் வட்டத்தில் மங்காத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்


• வல்லாளதேவர் / வள்ளாளதேவர்



வல்லாளதேவர்  நிலப்பத்திரம் 




• சோமதேவர் :

திருக்காளத்தி இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இங்கே இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் ஒன்று உள்ளது.




• சிவலிங்க சோழன் (சிவலிங்க தேவர்) :

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் . இதில் சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான். இவன் பெயர் சிவலிங்க தேவர். சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

• வெள்ளத்தேவர்

வெள்ளத்தேவன்விடுதி:- தஞ்சாவூர் மாவட்டம்,  திருவோணம் வட்டத்தில் உஞ்சியவிடுதி ஊராட்சியில்  உள்ள வெள்ளத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

• அம்பர்த்தேவர்

கோச்செங்கட் சோழனுக்கு அம்பர்த்தேவர் என்றும் பெயர்.

• கண்டியத்தேவர் :

பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத்தேவர் வம்சத்தை சேர்ந்தவர்.


• கட்டத்தேவர் :


கட்டத்தேவர் என்ற பட்டம் சேதுபதி மன்னருக்கும் உள்ளது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர் சகம் 1692 (கி.பி.1770)ஆம் ஆண்டில் மக்களுக்கு உணவளிக்கவும் தண்ணீர்பந்தல் வைக்கவும் நிலக்கொடை வழங்கினார்.

திருவுடையாத் தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி கட்டத்தேவர்(கி.பி.1709-1723) அத்திïத்து என்ற ஊரில் 14 பிராம ணக்குடும்பங்களுக்கு வீடுகளும் நிலங்களும் அளித்தார். திருமலை ரகுநாத சேதுபதி கட்டத்தேவர் ( கி.பி. 1645-1670) கௌண்டினிய கோத்திரத்து அகோ பலையாவுக்கு நிலம் வழங்கனார்.

சேதுபதிகளின் அறப்பணிகளே செப்புப்பட்டயங்களில் பேசப்படுகின்றன. இதில் கட்டத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

• கன்னதேவர் , கன்ன(ர) தேவன்:

யாழ்ப்பாண அரசனான பரராசனின் உயிர்த்தோழன் கன்னதேவர் என்ற தொண்டை மண்டல அரசன் என வையாடல் (89,90) கூறுகிறது.

புதுச்சேரி, பாகூர் கல்வெட்டு ஒன்று கன்னர தேவன் (கி. பி. 962) பற்றிக் கூறுகிறது.


• சோழதேவர் :

சோழதேவர் என்பது சோழர்களின் பட்டமாகும்.
  
• மேனாட்டுத்தேவர் :

சேரநாட்டின் ஒரு பகுதியாகிய வேணாடு என்னும் நாட்டை இராசராசசோழன் வெற்றி கொண்டு ஆண்டுள்ளான். ஒன்பதாம் திருமுறை பாடிய அருளாளருள் ஒருவர் வேணாட்டடிகள் என்பவராவார். வேணாட்டரையன் என்னும் பட்டமே மேனாட்டரையன் என்று திரிந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேனாட்டரையன் என்ற குறுநில மன்னன் நார்தாமலையில் மறைந்து கொண்டு முகமதிய அரசர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து பின்னர் நட்புரிமை கொண்டதாகவும் தஞ்சை ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட செப்பேட்டில் குறிப்பு காணப்படுகிறது. இப் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் தஞ்சை பூண்டி, புனவாசல் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.




• வாசிதேவன் காலிங்கராயன் :

நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.


• அருமொழி தேவன்:

திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:
'ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது....... (தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2, பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது.வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ' அரையன் மகன்' என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் 'இவன்' உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்' என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.

பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன. அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை,மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம். இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.




முக்குலத்தோர் சுதந்திர போராட்ட வீரர்கள்





































வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்