திங்கள், 12 மார்ச், 2018

விசாங்க நாடு


கள்ளர் நாடுகளில் இந்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் பரவியுள்ளது. விசங்கி நாடு என்று புதுக்கோட்டை பகுதியில் உள்ளது, அன்பில் பகுதி ஆனாது விசாங்க நாடு என்று அழைக்கப்படுகிறது. விசாங்கநாடு, தந்திநாடு என்ற இரண்டு கள்ளர் நாடுகளும், காவிரி ஆற்றின் வடகரையில் அமைத்துள்ளது.




விசாங்க நாட்டின் தலைகிராமம் - அன்பில்

தலைகிராமம் கீழ் அன்பில் ஆளுகைக்குட்பட்ட கிராமங்கள்

1.கோட்டைமேடு
2.மங்களபுரம்
3.மேல் அன்பில்
4.செங்கமராஜபுரம்
5.குறிச்சி
6.கட்டளை
7. கீழ அன்பில்
8. பொன்குடி
9. கூக்கூர்
10. ஆனந்திமேடு

இங்குள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில், முதலில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் திருச்சி, சமயபுரம் மாரியம்மனின் தங்கை என மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்கு ஆண்டிற்கு ஒரு முறை தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.


மாரியம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அன்பில் மாரியம்மன் கோயில், மிக முக்கியமான ஏழு மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். மீதி ஆறு மாரியம்மன் கோவில்கள் முறையே, சமயபுரம், நார்த்தாமலை, வீரசிங்கம்பேட்டை, கண்ணனூர், புன்னைநல்லூர் மற்றும் திருவேற்காடு போன்றவை ஆகும்.

இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. புராணங்களின்படி, கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இங்குள்ள அம்மன் இந்த கோவிலுக்கு அருகிலுள்ள வேப்பமரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தார் எனவும், அதன் பிறகு கோயில் கட்டப்பட்டது என்ற குறிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் இல்லாத பக்தர்கள் இந்த கோவிலுக்குச் சென்று குழந்தை வரம் பெறுவதற்காக வேண்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது. அதை அடுத்து, அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் என்கிற சிவன் கோவில் இங்கு உள்ளது. மேலும், சுந்தரராஜப் பெருமாள் கோயில் என்றறியப்படும் திருவடிவழகிய நம்பி பெருமாள் திருக்கோவில் இங்கு உள்ளது.



கோவில்களில் முதல் மரியாதை

அன்பில் கிராமத்து சோழங்க தேவ அம்பலகாரருக்கு மகமாயி கோயில் மற்றும்  சுந்தரராஜ பெருமாள் கோவில் (8 ம் நாள் வேடுபரி உற்சவத்தில்) முதல் மரியாதை , அன்பில் மகமாயி கோவிலில் பூச்சொரிதலில் முதல் மரியாதை. 
இக்கள்ளர்கள் யாவரும் வைணவ மரபினரே.





1.கன்னிச்சாமி சோழங்க தேவ அம்பலகாரர்

2.தர்மலிங்க சோழங்க தேவ அம்பலகாரர்

3.சுந்தர்ராஜன் சோழங்க தேவ அம்பலகாரர்


  (சுந்தரராஜன் சோழங்க தேவ அம்பலகாரர்)

அன்பில் பகுதியில் பெரும் புகழ் பெற்றவர்கள் அன்பில் தர்மலிங்கம் நாட்டார் அவர்கள்.  

பெரும் செல்வந்தர் மாமனிதர் மாணிக்கம் ஏற்றாண்டார் லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் கல்வி பயின்றார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கம் நாட்டாரும் ஒருவர். வருமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் அன்பில் தர்மலிங்கம் நாட்டாரும் அதிக ஆக்கமும் ஊக்கமும் உடையவர்.

வறுமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட இருவரும் ஒன்று சேர்ந்து வசதி இன்றி சிரமப்படும் மணவர்களுக்கு உணவு வழங்கும் செயல்களில் ஈடுபட்டனர். பின்நாட்களில் இருவருமினைந்து வசதியின்றி தவிக்கும் கள்ளர்  மரபினரின்  மாணவர்கள் தங்கிப்படிக்கும் கள்ளர் மாணவர் விடுதி ஒன்றினை லால்குடியில் ஆரம்பித்தனர். இக்கள்ளர்  மரபினரின் விடுதியே பின்நாளில் மிகவும் பிரசித்த பெற்ற விடுதியாக லால்குடியில் விளங்கியது. இவ்விடுதியில்தான் ராஜ ராஜன் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் திரு. சந்திரகாசன் ஐ.ஏ.ஏஸ் தங்கிப்படித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.


அன்பில் தர்மலிங்கம் நாட்டார் அவர்களுக்கு  ஊரின் நடுவே சிலை உள்ளது.





700 ஆண்டுகள் பழமையான விசாங்கநாட்டு நாட்டார்களின் கொற்றவை அன்பில் மாரியம்மன்




நாட்டார்களின் கொற்றவை ஆச்சிராமாவள்ளியம்மன் திருக்கோயில் மாசி கட்டுத்தேர் திருவிழாவை முன்னிட்டு கள்ளர் வேடம்.



மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா:





மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா



திருச்சி, அன்பில் விசாங்கநாட்டு நாட்டார்களின் அறப்பணிகள்.





அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்