கள்ளர்களுக்குள் மோதல் கள்ளன் வீழ்த்தப்படுகிறான். வீழ்ந்த கள்ளனை வீழ்த்திய கள்ளனே குலசாமியாக வழிபடுகிறான்.
கத்தப்பட்டில் உள்ள வாளுக்குவேலி அம்பலகாரரின் நடுகல் அருகே கீழக்கோட்டை குப்பான் அம்பலகாரரின் நடுகல்லும் உள்ளது.
கீழக்கோட்டையில் இன்றும் இவரின் வம்சாவளிகள் 200 தலைக்கட்டுக்கு மேல் வாழ்கின்றனர்.
இடம்: கத்தப்பட்டு, சிவகங்கை மாவட்டம்.
13ம் நூற்றாண்டில் கத்தப்பட்டு எனும் ஊர் கற்றைப்பட்டு என வீரபாண்டியனின் பெரிச்சிகோயில் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.