திங்கள், 12 மார்ச், 2018

ஏரியூர் நாடு அல்லது ஏரிமங்கல நாடு

ஏரிமங்கலநாட்டு எட்டு கிராமங்களுக்கும் மாரனேரி உட்பட மொத்தம் ஆறு கரைகள் உள்ளன.

1.இராயமுண்டார்

2.மொட்டயத்தேவர் (வெண்டையம்பட்டி)

3.செம்பிய முத்தரசு

4.சோழங்கதேவ அம்பலகாரர்

5.தென்கொண்டார்

6.காங்கேயர்

முதற்கரை : இராயமுண்டான்பட்டி

பொதுத்தலம்: தான்தோன்றி ஈஸ்வரர் வெண்டையம்பட்டி.

நாட்டுக்கூட்டம் நடைபெறும் ஊர்: வெண்டையம்பட்டி

ஏரிமங்கலநாடு என்று வித்தியாசமாக பெயர் உள்ளதே என்று அங்கே சென்று பார்த்தால் அந்நாடு முழுவதும் ஏரிகளை உள்ளடக்கியுள்ளது நீரை சேமிக்க.

முதற்கரையார் :  இராயமுண்டார்
இரண்டாவதுகரையார் : மொட்டத்தேவர்
மூன்றாவதுகரையார் :  சோழகர் மற்றும்  செம்பிய முத்தரையர்

அதேபோல அவ்வூர் பெயர்கள் அனைத்தும் ஈசநாட்டுக் கள்ளர்களின் பட்டப்பெயர்களை உள்ளடக்கியதாக உள்ளது.

உள்ளடங்கிய கிராமங்கள் :

1.இராயமுண்டான்பட்டி : பட்டம் - இராயமுண்டார்
2.சோழகம்பட்டி : பட்டம் - சோழகர்
4.சுரக்குடிப்பட்டி : பட்டம் - செம்பிய முத்தரையர்
5.காங்கேயம்பட்டி : பட்டம் - காங்கேயர்
6.நாவலூர் : பட்டம் -
7.விண்ணனூர்பட்டி : பட்டம் -

வெண்டையம்பட்டியில் உள்ள சிவன்கோவிலை புனரமைக்கையில் 8 ஐம்பொன் சிலைகள் தொல்லியல் துறையால் கைப்பற்றப்பட்டன!

நாட்டில் காணப்படும் பட்டப்பெயர்கள்:

1.தெத்து வாண்டையார்
2.மாவடையார்
3.நாட்டார்
4.ஆர்சுத்தியார்
5.தேவர்
6.வன்னியர்
7.செம்பிய முத்தரையர்
8.முத்தரையர்
9.தென்கொண்டார்
10.பாலாண்டார்
11.இராயமுண்டார்
12.சோழையர்
13.களத்தண்டார்
14.காங்கேயர்
15.மொட்டத்தேவர்
16.மங்களார்
17.ஐயரப்பிரியர்
18.பிலியராயர்

ஏரிமங்கலம் இந்நாட்டுக்கள்ளர்கள் குதிரைகளை கடிவாளம் இல்லாமல் இயக்குவதில் வல்லவர்கள். மின்னல் தோன்றி மறைவதற்குள் ஒன்றிணையும் திறன் படைத்தவர்கள். 

தஞ்சைக்கள்ளர்களின் பூர்வீக நாடுகளில் கொற்கை நாட்டிற்கு அடுத்த படியாக ஏரிமங்கலநாடு உள்ளது. உய்யக்கொண்டான் ராஜராஜசோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும். உய்யக்கொண்டான்' என்பதற்கு பிழைக்குமாறு அருள் செய்தான் எனத் தமிழ்-தமிழ் அகரமுதலி குறிப்பிடுகிறது. 

மாமன்னன் ராஜராஜனின் மகத்தான சாதனைகளுள் ஒன்று காவிரியின் தென் கரையில், குளித்தலைக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலுள்ள மாயனூர் என்னுமிடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென் கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்தக் கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தது, அங்கு ராஜராஜன் உருவாக்கிய ஏரியூர் நாடு, பின்னர் ஏரிமங்கல நாடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தற்போது ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, வையாபுரிப்பட்டி, சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்ப்பட்டி, வேலிப்பட்டி, புதுப்பட்டி போன்ற ஊர்கள் அனைத்தும், உய்க்கொண்டான் வாய்க்காலின் பாசனத்தால் வளம் பெறுகின்றன. 

காவிரி நீர் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியே வந்து ராயமுண்டான்பட்டி ஏரியை முலில் நிரப்புகிறது. அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்து வெண்டையம்பட்டி பேரேரி நிரம்புகிறது






வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்