திங்கள், 12 மார்ச், 2018

தஞ்சை கோனூர் நாடு வரலாறு (கோனூர்நாடு) - கள்ளர் நாடு


அரசனுக்குரிய ஊர் கோனூர். அந்த கோனூர் நாட்டில் இருந்த கோட்டையில் தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னன் வந்து தங்கினார்.  சோழ ராசாவின் கோட்டை இங்கு இருந்ததால் கோட்டைதெரு என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. 

கோட்டைதெருவை தலைமை கிராமமாகக் கொண்டு நாடு உருவானது. சோழ ராசா காலத்தில் வழிபட்டு வந்த  சிவன், மாரியம்மன் மற்றும் அய்யனார் கோவில் இந்த கோட்டை தெருவில் அமைந்துள்ளன. 

இக்கொவில்களே இன்றும் நாட்டுத் தெய்வங்களாக கோனூர் நாட்டு மக்களால் வழிபட்டு வரப்படுகிறது. வளவண்ட சோழ ராசா கட்டியதாக கருதப்படும்  வளவண்ட அய்யனார் கோவில் கோனூர் நாட்டின் நாட்டு தெய்வமாக மக்களுக்கு  அருள் பாவிக்கிறார். இங்கு ஒரு வார காலத்துக்கு  நடைபெறும் திருவிழாக்களில்    காவடி திருவிழா, பந்தல் காட்சி திருவிழா மற்றும் பன்னிவேட்டை மிகவும் பிரசித்தம் பெற்றது.

கோனூர் நாட்டின் வடக்கே காசவள நாடும், கிழக்கே கீழ்வேங்கை நாடும், தெற்கே பின்னையூர் நாடும் மேற்கே  புதுக்கோட்டை சேர்ந்த குளத்தூர் நாடும் அமைத்துள்ளன. கோனூர்  நாட்டில் பதினெட்டு கிராமங்களும் அவற்றுக்கு உட்பட்ட சிறு கிராமங்களும் அமைந்துள்ளன.  கோனூர் நாடு மூன்று கரைகலாகப் பகுக்கப்பட்டு இன்று வரையிலும் அது நடைமுறையில் உள்ளது.

தஞ்சாவூரிலிருந்து  11  கிலோமீட்டரில் தொடங்கும் கோனூர் நாட்டின் வடக்கு எல்லை தெற்கே 22  கிலோமீட்டர் வரை உள்ளது. ஒரத்தநாட்டிலிருந்து 3 கிலோமீட்டரில் தொடங்கும் கோனூர் நாட்டின் கிழக்கு எல்லை மேற்கே 15 கிலோமீட்டர் வரை உள்ளது.

அமைவிடம்:

  1. ஆதனக்கோட்டை , 
  2. ஆயங்குடி , 
  3. சோழபுரம், 
  4. கக்கரைக்கோட்டை 
  5. கருக்காடிப்பட்டி,
  6. தெக்கூர்,
  7. பாச்சூர்,
  8. பொய்யுண்டார்கோட்டை 
  9. மண்டலக்கோட்டை, 
  10. வடக்கூர் வடக்கு
  11. வடக்கூர் தெற்கு  


ஆகிய 11 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய  கோனூர் நாடு இந்திய திருநாட்டின் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.


  1. தேவர்
  2. சோழகர்
  3. வாண்டையார்  (தெரு )
  4. மழவராயர்
  5. உப்புண்டார் (பட்டி)
  6. பொய்யுண்டார்  (தெரு )
  7. பழங்கொண்டார் (தெரு )
  8. ராஜாளியார்
  9. நல்லிப்பிரியர்
  10. கண்டியர்
  11. காலிங்கராயர்
  12. தொண்டமர்
  13. விசுலுண்டார்
  14. நந்தியர்


சோழ(கர்)புரம், வாண்டையார் தெரு, உப்புண்டார் பட்டி, பொய்யுண்டார் தெரு, பழங்கொண்டார் தெரு என்று தனியாகவும் உள்ளன.



கிபி 1850 ல் குத்தகை விடப்பட்ட நிலங்கள் சமந்தமுள்ள பாளையப்பட்டுகள் குறிக்கப்பட்டுள்ளது. அவையாவன:- அத்தவெட்டி, சேந்தங்குடி, கோனூர் , சிலட்டூர், கல்லாக்கோட்டை, புனல்வாசல், பாப்பாநாடு, நெடுவாசல், மதுகூர், கண்டர்க்கோட்டை ஆகியன. இந்த பாளையம் சமந்தமுள்ள கணக்காய்வு குறிப்புகள் தரப்பட்டுள்ளது.


கிபி 1798 ல் கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில் தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும் ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன் இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும் முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



கோனூர் கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே.

இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது அதன்படி தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து , ஆழிவாய்க்கால், ஒரத்தநாடு, பாப்பாநாடு, கோணக நாடு, (கோனூர் நாடு) , ஆதனகோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளின் வழியே புதுக்கோட்டை, விராலிமலை (புதுகை மாவட்டம்) சென்று, பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது.


விசங்கிநாட்டுக்கள்ளர்கள் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமானுக்கும் கட்டுப்படாமல் தன்னரசாக திகழ்ந்தவர்கள். விசங்கிநாட்டுக்கள்ளர்கள் கோனூர்நாடு என பரந்து விரிந்து வாழ்கிறார்கள்.

கள்ளர்கள் கோனூர் நாட்டிலிருந்து அருகில் உள்ள பின்னையூர் நாட்டிற்கே பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள் கோனூர் நாட்டிற்குள்ளேயேதான் பெண் கொடுத்தல்,எடுத்தல் அனைத்தும் நடக்கும்.


பாரம்பரியம் சொல்லும் தஞ்சையின் 'கோனூர் நாட்டுப் பொங்கல்'!






பழமை மாறாமல் தனித்துவத்தோடு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள கிராமங்களில் ஓர் ஆண்டுக்கு முன்பே, அதாவது ‘காணும் பொங்கல்’ அன்றே ஊரின் பொது இடத்தில் மக்கள் ஒன்றாக கூடி, ‘அடுத்த பொங்கலுக்கு இந்த குடும்பம்தான் மாட்டுமுறைக்காரங்க வீடு’ என்று அறிவித்து விடுவார்கள். அந்த ஊரில் நடைபெறும் ஒட்டுமொத்த பொங்கல் விழாவுக்கும் குடும்பம்தான் தலைமை ஏற்கும். ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுழற்சி முறையில் இந்த மரியாதை வழங்கப்படுகிறது.

‘மாட்டுமுறைக்காரங்க குடும்பம்’ என தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டில் பொங்கல் தினத்தன்று ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு நாதஸ்வர, மேளதாள இசை மற்றும் திரைப்பட பாடல்கள் ஊர் முழுவதும் ஒலிக்கும். மேலும் அந்த வீடு மாவிலைத் தோரணங்கள், வாழை மரங்கள், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்படும். சூரியப் பொங்கல் அன்று, அந்த வீட்டில் உள்ளவர்கள் நல்ல நேரம் பார்த்து, பொங்கலிட ஆயத்தமானதும், வீட்டு வாசலில் வெடி வெடிப்பார்கள். அதேகணம் ஊரில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளிலும் பொங்கலிடுவார்கள். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று, காலையிலேயே மாடுகளை குளுப்பாட்டி தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

அன்று மாலைப்பொழுதில் ஊரில் உள்ள பொதுக்குளத்துக்கு மாடுகளை அழைத்து வருவார்கள். குளக்கரை முழுவதும் மாடுகள் நிறைந்திருக்கும். ‘மாட்டுமுறைக்காரங்க’ வீட்டில் உள்ள பசு மாட்டின் வருகைக்காக, மற்ற மாடுகள் காத்திருக்கும். அந்த மாடு அங்கு வந்து சேர்ந்ததும், அதன் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்ட பிறகு, மற்ற மாடுகளின் முகங்களில் எல்லாம் தண்ணீர் தெளிக்கப்படும்.

பாரம்பரியம் சொல்லும் தஞ்சையின் 'கோனூர் நாட்டுப் பொங்கல்'!
அடுத்த நிகழ்வாக... சந்தனம், குங்குமம் இடுவதோடு, மருத்துவ குணம் நிறைந்த ஆவாரம்பூ, பிரண்டை, வேப்பிலை, மாவிலை, கண்ணுப்பூ உள்ளிட்ட மூலிகைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்படும். பிறகு திருஷ்டி சட்டியை கையில் ஏந்தி, "பொங்கலோ பொலி கோவிந்தா... பொங்கலோ பொலி கோவிந்தா" என பாடியவாறு அந்த வீட்டில் உள்ளவர்கள் மாடுகளைச் சுற்றி வருவார்கள்.

பாரம்பரியம் சொல்லும் தஞ்சையின் 'கோனூர் நாட்டுப் பொங்கல்'!
அடுத்து வீட்டின் உள்ளே முன்னோர்களுக்கு படையல் இடப்பட்டு அசைவ விருந்து நடைபெறும். பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மாடுகளை நோக்கி செல்வார்கள். ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ‘மந்தங்கா புல்லை’ மாடுகளுக்கு வயிறு நிறைய கொடுப்பார்கள்.

இதிலும் ஓர் அறிவுப்பூர்வமான அணுகுமுறை புதைந்து கிடக்கிறது. ‘மந்தங்கா புல்’ என்பது வயல்களிலும், வரப்பு ஓரங்களிலும் களைச்செடிகளாக மண்டிக்கிடப்பவை. இந்தப் புல் சத்தும், சுவையும் மிக்கது. மாடுகள் இதை விரும்பிச் சாப்பிடுவதால் இது தொடர்பான சுவாரஸ்யமான புனைவுகதை ஒன்றும் சொல்லப்படுகிறது. மாடுகள் குதுகலமாக பேசிக் கொள்ளுமாம். ‘‘தீஞ்சப்பய தீபாவளி வந்தா எனக்கென்ன... காஞ்சப்பய கார்த்திகை வந்த எனக்கென்ன... மகராசன் பொங்கல் வந்தா, மலை ஏறி மந்தங்கா புல்லு தின்பேன்’’ என்று சொல்லுமாம்.

பாரம்பரியம் சொல்லும் தஞ்சையின் 'கோனூர் நாட்டுப் பொங்கல்'!
மறுநாள் காணும் பொங்கல் அன்று ஊர் கோவில் முன்பு மக்கள் கூடுவார்கள். ஊரில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்னைகள், தனிநபர் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும். தீர்க்கப்படவில்லை என்றால், ஊரில் உள்ள எவருமே தங்கள் மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்கு போக முடியாது.

முத்தாய்ப்பான கூடுதல் தகவல்: இங்குள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலுமே, மண்ணில் பள்ளம் பறித்து, அதில் விறகு, சவுக்கு மிளாரிட்டு தீமூட்டி, அதன்மேல் மண்பானை வைத்துதான் பொங்கலிட்டு வருகிறார்கள்.



கோனூர் நாட்டின் முதன்மையான தொழில் வேளாண்மை செய்தல். யானை கட்டி போரடித்த சோழ நாடு அல்லவா இன்றும் நெல் பயிரிடுவது முதன்மை பெறுகின்றது. மேலும் கரும்பு, வாழை, கடலை மற்றும் பயறு வகைகள் கோனூர்  நாட்டின்  வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  காவிரி ஆற்று பாசனத்தை நம்பியிருந்த நிலைமாறி ஆழ்குழாய் கிணறு முக்கிய பங்கு  பெறுகிறது.  வேளாண்மையில் யானை கட்டி போரடித்த காலம் போய் எந்திரம் வைத்து போரடிக்க வேண்டிய சுழலில் உள்ளது.  கோனூர் நாட்டில் ஸ்டேட் பெங் ஆப் இந்தியா மற்றும் நான்கு தொடக்க வேளான் கூட்டுறவு வங்கிகளும் இது தவிர தஞ்சாவூர் ஐ.ஒ.பி, ஒரத்தநாடு ஸ்டேட் பேங் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கிகளும்   வேளான் தொழில் முன்னேற்றம் அடைய பேருதவியாக உள்ளது.


கோனூர் நாடு மக்கள் கூட்டமைப்பு







கோனூர் நாட்டில் கிராமத்திற்கு ஒரு அங்கன்வாடி பள்ளிகள், 16  தொடக்கப்பள்ளிகள்,  இரண்டு நடுநிலைப்பள்ளிகள்,  மூன்று உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் நான்கு மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு உயர் நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் அதிகப்பட்ச தொலைவு இரண்டு கிலோமீட்டர் என்று சொல்லும் அளவிற்கு கல்வி வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி நடைபோடுகின்றது.  பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், கோனூர் நாடு மக்கள் கூட்டமைப்பு, சென்னையில் கோனூர் பகுதியை சேர்ந்தவர்களால் செயல்படுத்தப்படுகின்ற  கோனூர் நாடு சென்னை மக்கள் கூட்டமைப்பு, சிங்கப்பூரில்   கோனூர் பகுதியை சேர்ந்தவர்களால் செயல்படுத்தப்படுகின்ற கோனூர் நாடு வழர்ச்சி  கூட்டமைப்பு மற்றும் ஒவ்வொரு ஊரிலும்  உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், தொண்டுள்ளம் கொண்டவர்களால் கோனூர் நாடு கல்வி வளர்ச்சியில் இந்த அளவிற்கு சாதிக்க முடிகின்றது. இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து  செயல்படும் விதமாக கோனூர் நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இது கல்வி சார்ந்த அணைத்து நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்துவதை நோக்கமாகவும் மற்ற அமைப்புகளுக்கு உறுதுணையாகவும் இருக்கிறது.

கோனூர்நாடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்











அருள்மிகு ஸ்ரீ வளவண்ட ஐயனார் திருக்கோவில் கோனூர் நாடு






















கிருஷ்ணன் கோவில் 





பொய்யுண்டார்கோட்டை









வடக்கூர் வடக்கு




கருக்காடிப்பட்டி








கோனூர்நாடு தேர்







கருக்காடிப்பட்டி முனியங்கோவில்



வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்