திங்கள், 12 மார்ச், 2018

பேரையூர் நாடு





புதுக்கோட்டைக்கு 15 கி.மீ தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது பேரையூர்.

பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.

இப்போது பேரையூர் எனப் பெயர்பெற்று விளங்கும் இந்த ஊர் நாகீசுவரம், திருப்பேரையூர், திருப்பேரை, பேரை என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட பேரையூர் நாகநாதசாமி கோயிலை கிபி 1878 ல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து இன்றைய பொலிவை ஊட்டியவர் புதுக்கோட்டை மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்.


பேரையூர் நாகநாதஸ்வாமி திருக்கோவில் இங்கு முதல் மரியாதை சித்திரை தேரோட்டத்தில் கவிநாட்டு கள்ளர் சமூகத்தை சார்ந்த தேக்காட்டூர் மக்களுக்கே கொடுக்கப்படுகிறது.

தேவர் குளம் விராச்சோலை மறவர்களுக்கு இரண்டாம் மரியாதை கொடுக்கப்படுகிறது.


இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க பேரையூர் சோழர், பாண்டியர், விசய நகர மன்னர்கள், பல்லவராயர், தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள் வரலாற்றுடனும் தொடர்புடையதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இப்போது பெரியநாயகி, பிரகதாம்பாள் எனப் பெயர்பெற்று விளங்கும் அம்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளில் "திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்' என்றே குறிக்கப்பெறுகிறாள். சிவனுடன் அமர்ந்த அம்மையைப் "பெரியநாயகி' என்றும், புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இட்ட தெய்வமாக "பிரகதாம்பாள்' விளங்கியதாலும் அம்மைக்கு இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். பனை ஓலை விசிறிகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றதாகும்.

பேரையூர் சிவபெருமான் நாகநாதர் வடிவில் அருள் புரியும் ஒரு கோவில். நாகநாத ஸ்வாமி அம்சத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிரதான சன்னதிக்கு நுழைவாயிலில் ஒரு உயரமான கல் நடராஜர் நடனமாடுகிறார். சிவன் மற்றும் பார்வதி அவர்களின் காளையின் சிற்பம் சிறப்பானதாகும்.

இந்த கோயிலின் மிகப்பழமையான பகுதி மேற்கு கோபுரத்தை சன்னதிக்கு பின்னால் உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டில் உள்ளது மற்றும் சோழ பாணியில் செய்யப்படுகிறது.

நாகநாத சுவாமி தற்போதுள்ள கர்ப்பகிரகம் 12 -13 ஆம் நூற்றாண்டின் பாண்டிய கட்டமைப்பாகும். இது மேல் ஒரு வியாழ-வரி மற்றும் நடுத்தர ஒரு வளைந்த குமுதம் போன்ற பீடம் நிற்கிறது. பைலஸ்டர்கள் செவ்வக அடித்தளத்துடன் அடுக்கு அடுக்காக இருக்கும், ஆனால் நாகபதம்-கள் இல்லாமல். பலகை பெரிய மற்றும் சதுரமாக உள்ளது, மேலும் பத்மம் நன்கு வரையறுக்கப்பட்ட இதழ்கள் உள்ளன. சுவரில் ஐயப்பர்கள, தட்சிணார்த்தி, லிங்கோத்பாவா மற்றும் பிரம்மாவின் படங்கள் உள்ளன. வைமானம் ஒரு நவீன செங்கல் கட்டுமானமாகும்.



பிரகதம்பாள் துணைத் தலங்கள் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததாகக் கூறப்படுவதுடன், விஜயநகர கட்டிடக்கலை பாணியில் உள்ளது.

கிழக்குப் பிரதான கோபுரம் ஒரு பாண்டிய கட்டமைப்பாகும், ஆனால் மேலே செங்கல் நவீனமானது. பிரகாரத்தில் மற்ற மண்டபங்கள் நவீனவை. இந்த கோவில் புதுப்பிப்புகளை கொண்டுள்ளது, இவற்றில் கட்டுமானம் கடைசியாக ராமச்சந்திர தொண்டமானின் (1834-1886) ஆட்சியின் போது நடந்தது.

வியாச மகரிஷி இயற்றிய, ‘சூத சம்ஹிதை’ என்ற நூலில், அகத்திய முனிவர் இந்தத் தலத்தின் பெருமையை கௌதம முனிவருக்குக் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.




நாகதோஷம் தீர்க்கும் அற்புதத் தலம் இது என்கிறார்கள் பக்தர்கள். நூற்றுக்கணக்கில் இங்கு நிறைந்திருக்கும் நாகர் சிலைகளும், நாக வடிவிலேயே வளைந்து நெளிந்து வளர்ந்து திகழும் தென்னைகளுமே அதற்கு சாட்சி!

‘‘திருநாகேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக நாக தோஷ நிவர்த்திக்கு உரிய தலமாக திகழ்கிறது இவ்வூர். பிரம்மன், இந்திரன் ஆகியோர் வழிபட்ட சிறப்பு இந்தத் தலத்துக்கு உண்டு.

திருமண வரம் வேண்டியும் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இங்கு வந்து அம்பாளையும் ஸ்வாமியையும் மனதாரப் பிரார்த்தித்து வழிபட்ட பிறகு, நாகர் சிலைகளின் மீதும் நந்தியாவட்டை மரத்தின் கிளையிலும் மஞ்சள் சரடுகளைக் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதனால், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம். பங்குனி மாதக் கடைசியில் இந்தக் கோயிலில் நடைபெறும் தேர்த் திருவிழா, இந்தப் பகுதியில் வெகுப் பிரசித்தம்.

நாகநாதர் திருக்கோயில் கிழக்குநோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்த முகமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நடராசர் சன்னதி உள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கருவறையின் வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், காட்சி கொடுத்த நாதர் சன்னதியும் அமைந்துள்ளன. இதன் முன்னே கோயில் தலத்தீர்த்தமான "பொன்முக' சுனை உள்ளது. நாகநாதர் கருவறையின் இடது புறத்தில் அம்மன் கருவறை உள்ளது. அம்மன் கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் பள்ளியறையும், மகா மண்டபத்தில் நவக்கிரகமும் உள்ளது. இறைவன், இறைவி கருவறைகளுக்கு இடையே சண்முகநாதன் சன்னதி அமைந்துள்ளது. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும் காண இயலாது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் திருவுருவ அமைதியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாகநாதர் திருக்கோயிலின் பரிவார தெய்வங்களாக விநாயகர், காசிவிசுவநாதர் விசாலாட்சி, தண்டாயுதபாணி, கெசலட்சுமி ஆகியோர் திகழ்கின்றனர்.




கருவறையின் முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது, போர்க்காலங் களில் கோவில் சிலைகளையும், சொத்துக்களையும் மறைத்து வைக்க தரைமட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட சிறிய அறையாக இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்