செவ்வாய், 27 மார்ச், 2018

ஈகரை ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் கோவில்







ஆத்தங்கரை நாச்சியார் கோயிலுக்கு 12-08-2019 அன்று சென்று வந்தேன். இராச கோபுரம் உட்பட கோயிலின் புதிய பணிகள் நிறைவுபெறும் நிலையில் இருந்தன.

நாச்சியார், ஆதி நாச்சியார், உட்பட எல்லாத் திரு உருக்களும் தற்காலிகமாக ஒரு தகரக் குடிலில் வைக்கப் பட்டிருந்தன.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் இருந்து ஆறேழு கிலோமீட்டர் அருகில், ஈகரை கிராமத்தில், விரிசிலை ஆற்றின் வடகரையில் அருள் புரிகிறாள் நாச்சியார்.

சேது வள நாட்டின், காளையார்கோயில் கூற்றத்தின் நாற்பத்தெட்டு நாடுகளில் ஒன்று தென்னாலை நாடு.

தென்னாலை நாடு என்று சேதுபதிகள் செப்பேடுகளில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பெயர் பொருள்நிறைவோடும் கம்பீரத்தோடும் உள்ளது, ஆனால் இப்பகுதி மக்களோ "தென்னாலி நாடு "என்றே அழைக்கிறார்கள்.

தென்னாலை நாடு :-

  1. ஈகரை 
  2. நாகாடி
  3. பனந்தோப்பு
  4. எழுபொன்கோட்டை 
  5. வெட்டிவயல்
  6. அச்சணி
  7. வீரை
  8. கல்லங்குடி
  9. காரை
  10. திருமணவயல்
  11. சிறுவத்தி 

என பதினோரு சேர்க்கைகளைக் கொண்டது!

ஈகரைச் சேர்க்கை 

  1. ஈகரை 
  2. மேலக் காவணவயல் /  கீழக்காவணவயல்
  3. சிங்கத் திருமுகப்பட்டி
  4. கோட்டவயல்
  5. இடையன்வயல் (இது அரைக்கிராமம்) 
  6. புதுக்கோட்டை
  7. கள்ளிக்குடி
  8. பனங் காட்டான் வயல்
  9. கொங்கிவயல்
  10. ஆனையேரிவயல்
  11. பிரண்டைவயல் 
  12. கண்ணங்கோட்டை,

எனப் பதினொண்றரைக் கிராமங்களைக் கொண்டது!

இந்தப் பதினொண்றரைக் கிராமங்களுக்கும் தனித்தனியே கோயில் உண்டு.

ஆனால் பதினொண்றரைக் கிராமங்களுக்கும் (ஈகரைச் சேர்க்கைக்கு) சேர்த்து ஒரு கோயில் உண்டு, அதுவே ஆத்தங்கரை நாச்சியார் கோயில், ஆத்தங்கரை நாச்சிக்கு உரிமையுடைய சேர்க்கைக் குடிகள் இணைந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை மதுவெடுப்பு விழா எடுப்பதுண்டு, ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுவெடுப்பு நடக்கவில்லை!

புதிய கோயிலில் இரண்டு கருவறைகள்! ஒன்று 'நவ நாச்சியாருக்கு 'மற்றொன்று 'ஆதி நாச்சியாருக்கு! 

"இரண்டு மூலவர்கள் எப்படி? " பூசாரி சுப்புராமனிடம் கேட்டேன்,

"நாச்சியார், நாச்சி, நாச்சம்மை, நாச்சிமுத்து, நாச்சாயி,அழகுநாச்சி, வேலுநாச்சி, ராமுநாச்சி என்றெல்லாம் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையார் சாதியினர் தங்கள் பெண்களுக்கு பெயர் சூட்டுகின்றனர்!

கிராமக் கோயில்களில் பெரும்பாலும் வேளார்கள் தான் பூசாரிகளாக இருப்பார்கள், இந்த நாச்சியாருக்கு கள்ளராகிய நாங்கள் தான் பூசாரி!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர் எங்கிருந்தோ புலம் பெயர்ந்து இங்கே வந்து காடு திருத்தி நன்செய் புன்செய் கண்மாய் கரைகளைஉண்டாக்கி 'ஈகரை 'எனும் இந்த ஊரையும் உருவாக்கினார்கள்!

இந்த ஆறு (விரிசிலை ஆறு) முல்லைப் பெரியாறு விளங்கும் கம்பம் தேனி பகுதியில் உருவாகிறது, அதனால் இதை நாங்கள் பெரியாறு என்றே அழைக்கிறோம்,

ஆற்றின் வெள்ளப் பெருக்கில், வீரம் பொருந்திய,அழகிய ஐம்பொன் விக்கிரகம் ஒன்று இழுத்து வரப்பட்டு இந்த ஈகரையில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்து 'நாச்சியார் 'எனப் பெயரிட்டு, கூரை வீட்டில் முறைப்படி நிலைப்படுத்தி பூசைகள் செய்தார்கள் எங்கள் முன்னோர். அன்று தொடங்கி நாங்கள் பூசாரி வீட்டாரானோம். நாச்சியார் சேர்க்கைத் தெய்வமானாள்.

இடைக்காலத்தில் 'கப்பலூர் நாட்டு அம்பலம் குடும்பத்தினர் தங்கள் வாரிசாக ஈகரைப் பூசாரி வீட்டிலிருந்து ஒரு இளைஞரைத் தத்தெடுத்திருக்கிறார்கள் அந்த மகன் நாச்சியாரின் விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு மூவிலை வேல் ஒன்றை வணங்கியிருக்கிறார்கள்.

1800 ன் தொடக்கத்தில் தேவகோட்டை செட்டியார் ஒருவர் கல்லாலான நாச்சியார் சிலையை செய்து அளித்திருக்கிறார். அதுவே இன்று ஆதி நாச்சியார். அந்தச் சிலையும் புயல் வெள்ளப் பெருக்கில் ஆற்றில் புதையுண்டு போனது. மீண்டும் ஒரு புதிய சிவையைச் செய்து வழங்கினார் மற்றொறு வள்ளல். அதுவே 'நவ நாச்சியார் '

பத்தாண்டுக்கு முன்பு ஆற்றில் எந்திரத்தைப் பயன்படுத்தி மணல் அள்ளிய போது ஆதி நாச்சியாரும் அகப்பட்டார். 

ஈகரை ஆத்தங்கரை நாச்சியார் குடமுழுக்கு மற்றும் மதுவெடுப்பிற்காக காத்திருக்கிறார்.

ஆய்வு : திரு. ஆறாவயல் பெரியய்யா (14-08-2019 )

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்