பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்காட்டு கூற்றத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சோழர், பல்லவர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இங்குள்ள செளந்தரநாயகி அம்மன் கோவிலை செம்பியன்(சோழ) பல்லவராயன் தோற்றுவித்துள்ளார். புதுகோட்டை தொண்டைமான் ஆளுகையின் கீழும் திருக்காட்டுப்பள்ளி இருந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.
முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில் பள்ளி என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.
1972-ம் ஆண்டில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் ஆலய இராசகோபுர திருப்பணி துவக்கவிழாவானது மன்னை நாராயணசாமி ஓந்திரியர் (MLC)அவர்கள் தலைமையிலும், இளங்காடு இளங்கோவன் பார்புரட்டியார், அப்போதைய திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் (இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பார்புரட்டியார் அவர்களின் அண்ணன்) முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது.
1982-ல் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சியின் விழாத்தலைவராக பூண்டி. திரு. அய்யாறு வாண்டையார் இருந்துள்ளார். தஞ்சை மாவட்ட தெய்வீகப்பேரவை தலைவராகவும், அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் தஞ்சை சீமையில் கோலுச்சியவர் பூண்டி சீமான் துளசிய்யா வாண்டையாரின் சகோதரர் ஆவார்.
காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி - குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான். திருக்காட்டுப்பள்ளி, கல்லனை அருகில் இருந்ததால் சோழமண்டலத்திற்கே நீர் தேவைக்கு (விவசாயம்,குடிநீர்) முக்கிய நகராக விளங்குகிறது விளங்கியுள்ளது.
மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)
உறையூரிலிருந்து ஆண்டு வந்த சோழ மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது.
கிபி 1700 ல் திருச்சி நாயக்கர்கள் தஞ்சையின் மேல் போர் தொடுத்தனர். இப்போரில் தஞ்சை மராத்தியருக்கு எதிராக இரகுநாத ராய தொண்டைமான் போரில் பங்கு கொண்டு மராத்தியரை வீழ்த்தினார். போரின் வெற்றியை அடுத்து தஞ்சையின் திருக்காட்டுப்பள்ளி பகுதியை, கைப்பற்றிக்கொண்டார்.
தஞ்சை மராத்திய மன்னர்கள் காலத்தில் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கோட்டையில் வீரர்கள் தங்கியிருந்ததாக (மராத்தியமோடி ஆவணங்களில் குறிப்புகள் உள்ளது).
கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள் மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல். சையது சாகிப் எனும் ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான் படைகளால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது. இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , " The officer commanding the troops had frequently been shamefully defeated by kullars of tondaiman and regular cavalry of tanjore " என விளக்கியுள்ளது.
(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)
குலோத்துங்க சோழன்:- (திருக்காட்டுப்பள்ளி, அக்னீஸ்வரர் ஆலயம்)

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கள்ளர் பெருங்குடிகளான சென்னன்டார், சோழங்கதேவர் அம்பலகாரர், நாட்டார் ஆகியோருக்கு கோவில் மரியாதைகள் பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகிறது.
லிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்து தான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். இலிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன.
இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவிற்கு தனி ஆலயமில்லை.
தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்னு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே மைந்துள்ளன.
மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், 3 பிரகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை வழிபட்டதால் கோயிலுக்கு ""அக்னீஸ்வரம்" என்பது பெயர். அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது.
லிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்து தான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். இலிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன.
இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவிற்கு தனி ஆலயமில்லை.
தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்னு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே மைந்துள்ளன.
இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரை 5 நெய்தீபம் ஏற்றி மூல்லைப் பூவால் வழிபட்டால் திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம்.
புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.
ஆய்வு : திரு . பரத் கூழாக்கியார்