திங்கள், 12 மார்ச், 2018

கூத்தாப்பல் நாடு


திருச்சி மண்டலத்தில் உள்ள கள்ளர் நாடுகளில் ஒன்று கூத்தப்பெருமாநல்லூர் என்று அழைக்கப்பட்ட கூத்தாப்பல் நாடு.

கல்வெட்டில் பாண்டிகுலாசினி வளநாட்டு மீகோழை நாட்டு கூத்தப்பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

இங்கே பிரமாண்டமாக பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகின்றன, ஆச்சர்யம் என்னவெனில் முரட்டுகாளைகள் சீரிப்பாய அதை 11-14 வயதுள்ள கள்ளர்நாட்டு சிறுவர்கள் சர்வ சாதாரணமாக காளைகளோடு விளையாடுகின்றனர். 

இவ்வூர்களில் கள்ளரை எதிர்ப்பதற்கு ஆளில்லை.



1915ம் ஆண்டு கூத்தாப்பல் கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்! இவர்கள் அனைவரும் தற்போது DNC கீழ் வருகின்றனர். DNT க்காக போராடுகிறார்கள்.

கூத்தாப்பல் கள்ளர்நாடு என்பது
அரசங்குடி, 
வேங்கூர் , 
திருவேங்கை நல்லூர்
கூத்தைப்பார் 

உள்ளடக்கியது.

நாடு: கூத்தாப்பல் நாடு
தலைமை கிராமம்: கூத்தைப்பார்

பொதுகோவில்: ஆனந்தவள்ளி உடனுறை மத்யாச்சுனேஸ்வரர் கோவில்

இறைவன்: 
மருந்தீஸர், மத்தியார்சுனேஸ்வரர், கூத்தபெருமான்.

இறைவி: ஆனந்தவல்லி.

மரம் - வன்னி, வில்வம்

பவளம் போன்ற நிறத்துடன் இருப்பதால் சிவனுக்கு பெயர் பவளநாதர், மருத மரங்கள் நடுவில் தோன்றியதால் மருதீசர், மத்யாணர்ச்சுனர்.

இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில் ஆகும். இராஜராஜ சோழன் திருப்பணி செய்த கோவில். அம்மனுக்கு முதல் மரியாதை. இது இன்றும் கள்ளர்களால் புதுப்பிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும், புதிய மண்டபங்கள் கட்டப்பட்டும், திருப்பணி செய்யப்படுகிறது.

கூத்தாப்பல் கள்ளர் நாட்டில்  கள்ளர் மரபினை சேர்ந்த ஐயா பெரியசாமி காரகாச்சியார் அவர்களால் கட்டப்பட்ட 61 உயர சிவலிங்கம் அமைந்த திருக்கோவில் கூத்தைப்பார். 

தகவல் : கூத்தைப்பார் முதல் கரை பாண்டுரார் வகையறா சேர்ந்த  சக்திமணி பாண்டுரார்


மொத்தம் ஐந்து கரைகள் உள்ளன!

முதல்கறை:
பாண்டுரார், அதியமார்

இரண்டாவது கறை:
நாட்டார், சேதுராயர்

மூன்றாவது கரை:
தொண்டைமான், சோமநாயக்கர், மழவராயர்

நான்காம் கரை:
முனையதிரியர், கார்கொண்டார்

ஐந்தாம் கரை:
முதல்கரையில் வந்த பாண்டுராரே இதிலும் வருகின்றனர்!

இது தவிற சேப்பிளையார், கண்டியர், தென்கொண்டோர் ஒரு சில குடும்பங்கள் உள்ளன.


இது திருவெறும்பூர் தொகுதியின் கீழ் வருகிறது. 

சிவந்தான்குலம், பெரியகுலம், சம்பங்குலம், சம்புதிகுலம் போன்ற ஏரிகள் உள்ளன.

மாமனிதர் மாணிக்கம் ஏற்றாண்டார், இந்திய விடுதலைக்கு முன்னர் கல்வி பயில வசதியற்ற மாணவர்களின் நிலை உணர்ந்து 1945ம் ஆண்டு திருவரும்பூரில் தனது உறவினர், நண்பர்கள், தன்னை அறிந்தவர்கள் மூலம் நிதி திரட்டி முக்குலத்தோர் பள்ளி என்று ஒரு கல்வி நிறுவணத்தையும் ஆரம்பித்தார். இப்பள்ளிக்கு நடிகர் திலகம் திரு சிவாஜிகணேசன் மன்றாயரும் நிதி அளித்தமை குறிப்படத்தக்கது. 


திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கள்ளர் மரபை சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டார் உள்ளார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாய் வழியில் ஏழு ஊர் அம்பலத்தில் அவரது தாய் அந்திலி அம்பலக்காரர் குடும்பம்.


கூத்தாப்பர் நாட்டு கள்ளர் மரபினரின் இறை பணிகள்











































கோவில் தல வரலாறு :

இங்கு கூடியிருக்கும் அடியார்கள், முனிவர்கள் அனைவரும் முக்தியடைவார்களா அல்லது வாழ்வின் சூழலில் சிக்கி மீண்டும் பிறப்பார்களா எனப் பார்வதி கேட்க, நான் என நினைத்தவர்கள் பேரின்ப பேற்றினை அடைய முடியாதவர்கள். மற்ற தலங்களில் ஆடிய நடனம் போலில்லாமல் எக்காலத்திலும் சிறந்த இத்தலத்தில் ஆடும் முக்தி தாண்டவத்தை பக்தியுடன் காண்பவர்கள் முக்தியடைவர் என்றார்.

தில்லையில் ஆடிய திருக்கூத்தை ஈசன் மீண்டும் ஆடிய தலம். அன்னைக்கு-ஆனந்த, பக்தர்களுக்கு-ஞானமுக்தி, எல்லா உயிர்களுக்கு-நிருத்த தாண்டவம்-பவளசபையில்.

நாகதோஷம் நீங்கும். திருமணம் விரைவில் நடைபெரும். வன்னி மரத்தடியில் நந்தி கேஸ்வரர் அம்மனை பார்த்தபடி. வடக்கே பத்ரகாளி. விச்சுவரசு கல்வி கேள்விகளிலும் ஆகமத்திலும் சிறந்து விளங்கினான்.

திருமணமாகி குழந்தைவேண்டி காசியில் வீரேசலிங்கத்தை நோக்கி ஓர் ஆண்டு தவம் செய்ய 8 வயது சிறுவனாக வீரேசர் தோன்றி ஆண் குழந்தை பிறக்க அருள். நாரதர் அந்த குழ்ந்தையின் 32 லட்சணங்களைப் பார்த்து 12வது வய்தில் ஆண் இடி தாக்கும் எனச் சொல்லியதால் வருந்திய பெற்றோரை பார்த்து கிரகபதி தான் சிவனை நோக்கித் தவமிருப்பதாக கூறி காசி சென்று தவமிருக்க இந்திரன் வடிவில் சிவன் வந்து என்ன வரம் வேண்டுமென கேட்க சிவனியன்றி யாரிடமும் தான் வரம் கேட்பதில்லை எனக் கூற இடிவிழ அதை இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தடுத்தான்.

கிரகபதி மயக்கம் தெளிந்த பின்னும் இந்திரனிடம் வரம் கேட்கவில்லை. அவன் மன உறுதியை சிலாகித்த சிவன் அவனுக்கு இடி தாக்காமலிருக்க வரமளித்தார். கிரகபதி தன்க்கு திக்கு பாலகர்கள் நிலையைக் கேட்க கூத்தைப்பாரில் நதிக்கரையில் தவம் செய் என அறிவுறை. இங்கு தவமிருந்து ஈசனிடம் அந்த வரத்தைப் பெற்றான்.

கூத்தைப்பார் காளி



கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு













தேர் திருவிழா


 











வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்