திங்கள், 12 மார்ச், 2018

தென்பொதிகை (அ) தென்பத்து கள்ளர் நாடு


திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடி தாலுக்காவை சேர்ந்த தென்பொதிகை (அ) தென்பத்து கள்ளர் நாடு

ஐயா வேங்கடசாமி நாட்டார் 1920 ல் எழுதிய கள்ளர் சரித்திரம் நூலில் தென்பத்து நாடு என்றும், முதல் கரை பேரையூர், பொதுத்தலம் அப்பராம்பேட்டை என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னார்குடி பகுதியில் உள்ள கள்ளர் நாடுகளாக ராஜவளநாடு (நடுவக்கோட்டை முதல் கரை), பைங்கநாடு ( பைங்கா நாடு முதற்கரை), தென்பத்து நாடு மற்றும் அருகிலுள்ள வடுகூர் நாடு ( தென்பாதி முதற்கரை) உள்ளன.

தென்பத்து நாட்டில் உள்ள ஊர்கள்

1) அப்பரம்பேட்டை
2) பேரையூர்
3) கட்டக்குடி
4) கருவாகுறிச்சி
5) முக்குளம்
6) சாத்தனூர்
7) மேலநேம்மேலி

தென்பத்து நாட்டில் உள்ள பட்டங்கள் மற்றும் கோயில்கள்

1) அப்பரம்பேட்டை 

வீரமுண்டார் பட்டம் உள்ள கள்ளர்கள் மட்டுமே உள்ளனர்

2) பேரையூர் 

வாண்டையார், 
மணியர், 
காளிங்கராயர், 
அங்கராயார் (தனி தெரு)
தொண்டார், 
களப்பாடியார், 
மண்கொண்டார்

3) கட்டக்குடி 

கண்டியர்
மழவராயர்
முண்டார்
அலங்காரபிரியர்
தென்கொண்டார்

4) கருவாகுறிச்சி 

மாளுசுத்தியார் (தனி தெரு)
தொண்டார்
கண்டியர், மதுரை வீரன் குலதெய்வமாக வாங்குகிறார்கள்.

5) முக்குளம் 

தாக்காளிக்கார், 
கண்டியர்

6) சாத்தனூர் 

களப்பாடியார்
வாண்டையார்
விக்கிரமத்தார்
அலங்காரபிரியர்

7) மேலநேம்மேலி 

களப்பாடியார்

தென்பொதிகை தாய் கிராமம் 

அப்பரம்பேட்டை 

கோயில்: ஆபத்காத்தேஸ்வரர் கோவில் , 1500 ஆண்டுகள் மிகவும் பழமையானது

அப்பரம்பேட்டை ஆபத்காத்தேஸ்வரர் கோவில் , மிகவும் பழமையான
இக்கோயிலின் மூலவராக ஆபத்சகாயேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். 

ஆபத்துக் காத்தார்,கோயில் கல்வெட்டு ஒன்று,விக்கரம பாண்டியதேவரின் ஆட்சி காலத்தில் நடந்த நிலக் கொடையை பதிவு செய்கிறது,


அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில்  
"நாடாழ்வாரும், தொண்டைமானாரும்,
அகம்படியாரும்" 











இக்கோயிலின் மூலவருக்குத் தலையில் வெட்டியது போல வடு அமைந்துள்ளது சிறப்பாகும். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். 

கோயிலின் நுழைவாயிலில் கொடிமரத்திற்கான பீடமும், அதன் முன் பலி பீடமும் உள்ளது. கோயிலின் வரலாறு பொ. ஆ 500 ல் ஒரு வணிகனை காக்க சிவன் தலையில் வெட்டு வாங்கியதாக குறிப்பிடுகிறது. கோயில் 1500 ஆண்டுகள் முந்தியதாக குறிப்பிட்டாலும், மூலவர் கோயில் கருங்கற்கள் கட்டுமானம் என்றாலும் மற்ற பகுதிகள் சுட்ட பட்டை செங்கற்கள் என்பதால் , அவை நாயக்கர் கட்டுமானம் என்று கூறப்படுகிறது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் 3 அடி அகலம், 12 அடி உயரத்தில் கோட்டை மதில் சுவர் போல் உயர்ந்துள்ளது.

அம்மன் சன்னதி அருகில் கால பைரவர் காணப்படுகிறார். சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, காவல் பணியில் காலபைரவர் ஆகியோர் இங்கு உள்ளனர்

பேரையூர்

பழைய பிடாரி அம்மன் கோயில் உள்ளது. 

பழமையான ஸ்ரீ கைலாசதாதர் கோயில் உள்ளது. MR பிச்சைகண்ணு வாண்டையாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ கைலாசதாதர் கோயிலில் ஒரே நெத்தில் விளைந்த மூன்று தென்னை மரங்கள், மூன்று மரங்களாக பிரித்துள்ளது மிகவும் சிறப்பு. மரத்தின் வயதினை 70 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். 









பேரையூர் ஊர்காவல் தெய்வம் ஸ்ரீ காரிகூத்தையனார் சாமியை ராஜ அலங்காரம் செய்து வருடத்தில் ஏழு நாள் மட்டும் ஊருக்குள் இருப்பார், மற்ற நாட்களில் எல்லைச்சாமியாக இருப்பார்.

பேரையூரில் சிறப்புவாய்ந்த ஸ்ரீ விஷம் தீர்த்த மகா மாரியம்மன் கோயில் உள்ளது. மாரியம்மன் சிலை செய்யும்போது, அதில் உள்ள பொன்னை திருடியதாகவும், அதை திருடியவரை பாம்பு தீண்டியதாகவும், அவர் மாரியம்மனிடமே சரணடைந்ததால் உயிர் பிழைத்தார். அவர் அந்த பொன்னை மாரியம்மன் கோயிலில் சேர்த்ததாகவும், அதனால் மாரியம்மன் சிலையில் தனியாக ஒரு பொன் கட்டியாக உள்ளது. 

தென்பத்து கள்ளர் நாட்டில் உள்ள ஏழு ஊரும் ஆவணி மாதம் கடைசி ஞாயிறு அம்மனுக்கு பூசை செய்து வழிபடுகின்றனர்.

கட்டக்குடி

கோயில் - ஸ்ரீ கரைமேல் அழகர் ஸ்ரீ தூண்டிகாரன் திருக்கோயில் சிறப்பு

சாத்தனூர்

இங்கே ஐந்து குளங்கள், ஐந்து கோயில் உள்ளன. 

1) அய்யனார் கோயில், 2) பிள்ளையார் கோயில், 3) காத்தாய் அம்மன் கோயில், 4) மண்டிவீரன் கோயில், 5) பட்டையா கோயில் . 

1) அய்யனார் குளம், 2) நொச்சி குளம், 3) புது குளம், 4) நல்லமா குளம், 5) குட்டை குளம்

தென்பத்து நாட்டினை சேர்ந்தவர்கள்
  
திரு. செங்குட்டுவன் வாண்டையார், நிறுவனர் - முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை

யா. S. பாண்டியன் மணியர், தலைவர் - கள்ளர் மகா சங்கம் 

திரு. சாத்தனூர் சரண்ராஜ் களப்பாடியார், சமுக சேவகர், முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை






நன்றி . திரு. சிவா வாண்டையார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்