திங்கள், 12 மார்ச், 2018

கண்டி வள கள்ளர் நாடு | கண்டி வள நாடு | கண்டி வளநாடு


கள்ளர் நாட்டில் திருக்கண்டிவளநாடு (கண்டியூர்) 

முதற்கரை : நடுக்காவேரி 

பொதுத்தலம் : வளம்பகுடி நெட்டியூர்.

நடுக்காவேரி,
கண்டியூர்,
திருவையாறு,
செந்தலை,
வெள்ளம்பெரம்பூர்,
கருப்பூர்,
செங்கமேடு,
திருப்பூந்துருத்தி,
இரட்டைக்கோவில் ஆவிக்கரை,
நாலுசாமிமேடு,
வீரசிங்கம்பேட்டை




பெரும்புகழ் படைத்த நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார், நடுக்காவேரி ஊரில் பிறந்தவர். 

நாட்டார் ஐயாவின் 222 ஆண்டுகளாக பூட்டப்படாத வீடு, இந்த வீட்டில் முன் கதவு பின் கதவில் பூட்டுவதற்குரிய தாழ்ப்பாள் பொருத்தப்படவேயில்லை. வீடு தெரு மட்டத்திலிருந்து எட்டடி உயரத்தில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் வந்தாலும் வீட்டுக்குள் தண்ணீர் வரக்கூடாது என திட்டமிட்டு கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு தூணும், ஒன்பது அடி உயரமும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட கருங்காலி மரத்தினால் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்டியர் மரபினர், திருவையாறு நரகரில் ஸ்ரீ வாதலை அம்மன் கோவிலை கட்டி உள்ளனர் . அகிலாண்டபுரம் ஸ்ரீ வாதலை அம்மன் கோவில் நீடாமங்கலம் அய்யம்பேட்டை, கோயில்வெண்ணி பகுதியில் உள்ள கண்டியர்களின் குலதெய்வமாகவும் உள்ளது.








திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்களாக  கள்ளர் மரபினர். 

1957 - சுவாமிநாத மேல்கொண்டார்

1962 - கா.பா.பழனி

1967 - ஜி. முருகையா சேதுரார்

1971 - இளங்கோவன் பார்பொரட்டியார்

1977 - இளங்கோவன் பார்பொரட்டியார்

1980 - M.G.M. சுப்பிரமணியன் நாட்டார்

1984 - துரை.கோவிந்தராஜன் பாண்டுரார்

1989 - துரை சந்திரசேகரன் பாண்டுரார் 

1991 - பி.கலியபெருமாள்

1996 - துரை சந்திரசேகரன் பாண்டுரார் 

2001 - கி.அய்யாறுவாண்டையார்

2006 - துரை சந்திரசேகரன் பாண்டுரார் 

2011 - எம்.ரத்தினசாமி நாட்டார்



கண்டியூர்

இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். 




ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு. இத்தகைய பெருமை வாய்ந்த இராசகண்டியன் குடும்பத்தில்
இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளலும், முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கிய துரைராசா இராசகண்டியர் பிறந்தார். இவர் முன்னோரில் 1650 ஆண்டின் சுடலைமலை இராசகண்டியர் - பேச்சியம்மாள் வன்னியர் முதலில் அறியமுடிகிறது. 


கதிர்காமத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 30 அறைகள், நூலகம், உணவு அளிக்கும் அண்ணதானகூடம் உற்பட்ட தெய்வானை அம்மன் மடத்தையும் கட்டி நிர்வகித்த பெருமையும் கொண்டார். இவரை கதிர்காமக் கண்டியர் என்றே பலரும் அழைப்பர்.


ஹர சாப விமோசனப் பெருமாள்


மூலவர் : ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
உற்சவர் : கமல நாதன்
அம்மன்/தாயார் : கமலவல்லி நாச்சியார்
தல விருட்சம் : -
தீர்த்தம் : கபால மோட்ச புஷ்கரிணி.
ஆகமம்/பூஜை : வைகானசம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம்
ஊர் : கண்டியூர்
மாவட்டம் : தஞ்சாவூர்

இந்த வைணவ திவ்ய தேசம், திருவையாறிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஹர சாப விமோசனப் பெருமாள், பலிநாதர் மற்றும் பிருகுநாதர் என்றழைக்கப்படும் இக்கோயிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். உத்சவ மூர்த்தியின் திருநாமம் கமலநாதர். தாயார் கமலவல்லிக்கு தனி சன்னிதி உண்டு. தீர்த்தமும், விமானமும் முறையே கபால மோக்ஷ புஷ்கரிணி மற்றும் கமலாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. நரசிம்மர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோருக்கும் இங்கு தனி சன்னிதிகள் உள்ளன.


திருக்கரம்பனூரிலும், திருக்குறுங்குடியிலும் கூறப்படும் தல புராணமே, இங்கும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடமும், பெருமாளிடமும் அவ்வோட்டில் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும், அதனாலேயே தலப்பெருமாள் (சிவபெருமானின் சாபத்தையே நீக்கியதால்!) ஹர சாப விமோசனப் பெருமாள் என்று திருநாமம் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது.






இவ்வைணவ திருக்கோயில் இரண்டு பிரகாரங்களுடன் விஸ்தாரமாக காணப்படுகிறது. இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. பிரம்மோத்சவம் பங்குனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமங்கையாழ்வார் மட்டும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரே ஒரு பாசுரத்தில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்

"பிண்டியேர் மண்டையேந்திப் பிறர்மனை திரிந்துண்ணும் உண்டியான் சாபம் தீர்ந்த வொருவனூர் உலகமேத்தும் கண்டியூர ரங்கம் மெய்யம் கச்சிப்பேர் மல்லை என்று மண்டியனார் உய்யலால் மற்றையர்க் குய்யலாமே"" என கள்ளர் மரபினரின் திருமங்கையாழ்வாரால் புகழப்பட்ட வைணவத் திருத்தளம்.


பிரம்மசிரகண்டீசுவரர்



அமைவிடம்  : கண்டியூர்
இறைவன் பெயர் : பிரம்மசிர கண்டீசுவரர் (எ) வீரட்டானேசுவரர்.
இறைவி பெயர் : மங்களநாயகி. ஸ்தலவிருட்சம்  : வில்வம் .

இத்தல இறைவனின் பெயர் கல்வெட்டுப் படி, "வீரட்டானேஸ்வரர் " சிவபெருமான் நிகழ்த்திய எட்டு வீரச் செயல்கல்களில் முக்கிய நிகழ்வான பிரம்மன் சிரம் கொய்தல் நிகழ்த்தியது இத்தல இறைவன் என்பது ஐதீகம். பாடல் பெற்ற ஸ்தலம். அப்பர் மற்றும் சம்பந்தர் இங்கே தேவாரம் பாடியுள்ளனர்.



முக்கிய கல்வெட்டுகள் :
1.உத்தமசீலி கல்வெட்டு
2.ஆதித்த கரிகாலன் கல்வெட்டு.

முக்கிய கல்வெட்டு எனக் கூறுவதன் காரணம், முதலாம் பராந்தகரின் பிள்ளைகளில் நான்காவது பிள்ளை "உத்தமசீலி". இவரைத்தான் வீரபாண்டியன் கொன்று "சோழன் தலை கொண்ட பாண்டியன் " எனக் குறிப்பிட்டான் என்பது ஆய்வாளர்களின் கருத்து. உத்தமசீலி குறித்த கல்வெட்டுகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. அதில் இக்கோவில் காண்பதும் ஒன்று. இக்கோவிலில் நிவந்தம் கொடுத்துள்ளார். இதன் மறுபுறச்சுவற்றில் "பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி " கல்வெட்டு வருகிறது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகத் திகழ்கிறது கண்டியூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்பும், தலச் சிறப்பும் ஒருங்கே கொண்டுள்ள அழகிய கோவில். இதனருகிலேதான் திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, தில்லைஸ்தானம் கோவில்கள் உள்ளன. அக்காலத்தில் இப்பாதையே பழையாறையின் ராஜபாட்டை சாலையாகத் திகழ்ந்தது.

திருக்கண்டிவளநாடு (கண்டியூர்), அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் திருப்பணிக்குழுவில் கள்ளர் மரபினரின் பாண்டுராயர், வன்னியர் பட்டமுடையவர்கள்:-











திருக்கண்டியூர் கோயிலைப் பற்றி சமயக்குரவர்களாலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்றது.

“வினவினேனறி யாமையில்லுரை
செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
வையமாப்பலி தேர்ந்ததே”

தேவாரப்பாடல்

வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந்
திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத
தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய
பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர்
தொழுகின்றதே.

இங்கே காணப்படும் நிருபதுங்கவர்மன் கல்வெட்டு, இக்கோயில் பல்லவர் காலத்து பழமையை கொண்டது என்பதனையும், இங்கே காணப்படும் பல்வேறு காலகட்டத்தில் வெட்டப்பட்ட சோழர்கால கல்வெட்டுகள் வாயிலாக, சோழர் ஆட்சியில் இக்கோயில் பெற்றிருந்த மேன்மையையும் தெளிவாக விளக்குகிறது.

கிபி 13, 14 ம் நூற்றாண்டுகளில் கண்டியூரை மையமாக கொண்டு பாண்டியர்கள் அரசு மேற்கொண்டனர்.

"பாண்டியகுலபதி நாட்டு,
நித்த வினோத வளநாட்டு கண்டியூர் ஆயிரத்தளி பள்ளிப்பீடம் காளிங்கராயனில் வீற்றிருந்து" மாறவர்மன் வீரபாண்டியன் ஆணையிட்டதாக இது குறிப்பிடுகிறது.

தஞ்சையிலிருந்து 10 கல் தொலைவில் திருப்பூந்துருத்தி திருக்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டொன்று உள்ளது. இதில் சுந்தரபாண்டிய தேவரின் 7 ம் ஆட்சியாண்டில் அம்மண்டபம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு, தூண் ஒன்றில் சுந்தரபாண்டி தேவரின் சிற்பமும், எதிரே சேரமான் பெருமானின் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. இதில் சுந்தரபாண்டியன் தாடி, மீசைகள் திகழ, முடிந்த கொண்டையோடும், இடுப்பில் அரையாடையோடு வணங்கும் கோலத்தில் திகழ்கிறான்.

கண்டியூர் கல்வெட்டில் நிருபதுங்கர் காளாபிடாரிக்கு பொன் நிவந்தம் கொடுத்ததாக கூறுகிறார்.





செந்தலையில் உள்ள தூண்கல்வெட்டுகள் கூட நியமத்தில் உள்ள காளபிடாரி கோவிலின் எச்சமாகும்.

கண்டியூரில் குறிப்பிடப்படும் காளாபிடாரி இவரே என்பது குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் அனுமானம்.

இடம் : இரட்டைக்கோவில் கொல்லை,
கண்டியூர்.




வெள்ளாம்பெரம்பூர்



வீரசிங்கம்பேட்டை - நந்திபுரம்

கண்டியூர் கோவிலையொட்டி கிழக்கு நோக்கி சென்றால் வீரசிங்கம்பேட்டையை அடையலாம். இவ்வூர் பல்லவர் காலத்தில் நந்திபுரம் என அழைக்கப்பட்டது.

பன்னிரெண்டு வயதில் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் பல்லவ அரியணையில் ஏரிய நந்திவர்மன் (கிபி 1720) தனக்கு பாதுகாப்புமிக்க சோழநாட்டில் தங்கவேண்டியிருந்தது. அப்போது பல்லவர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சோழநாட்டில் தோற்றுவிக்கப்பட்ட கடிநகரமே நந்திபுரமாகும். நந்திபுரத்தில் தங்கியிருந்த நந்திவர்மனை பாண்டியர்களும், மற்ற குறுநில மன்னர்களும் முற்றுகையிட்டு சிறைப்படுத்தினர். பல்லவ மல்லனை தன்பேரரசாக ஏற்ற உதயசந்திரன் பெரும்படையோடு நந்திபுரத்தை சூழ்ந்து பகைவர்களுடன் போரிட்டு பல்லவ மன்னனை மீட்டான். உதயேந்திரம் செப்பேடுகள் இவற்றை நமக்கு உணர்த்துகின்றன.

இங்கு பல்லவர் காலம் தொட்டு அரண்மனையும், ஆயிரத்தளி என்னும் பேரில் கோவிலும் திகழ்ந்ததை வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தன்னுடைய நந்திபுரம் என்னும் நூலில் தெரிவித்துள்ளார்.

கி.பி.750-ல் பல்லவர் காலம் தொடங்கி, கி.பி.1,218-ல் ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம் வரை கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு மேலாக பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் வரலாற்றில் மிக சிறந்த பெருநகராக விளங்கியது நந்திபுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய வீரசிங்கம்பேட்டை என்னும் ஊராகும். இவ்வூரில் ஆயிரம் லிங்கங்களுடன் கூடிய பெரிய கோவில், மன்னர்களின் அரண்மனையும் இருந்தது.


ஆயிரந்தளி


ஆயிரந்தளி கோயிலிலேயே இருந்த லிங்கங்கள் பல திருவேதிகுடி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆயிரந்தளியில் ஓர் அரண்மனை இருந்தது. ஆனால் தற்போது பள்ளிப்படையோ, அரண்மனையோ இங்கில்லை. இங்கிருப்பது ஒற்றை லிங்கம். அதுவும் அங்கிருக்கும் ஒருவரின் தோட்டத்தில் இருந்ததை முன்புறமாக எடுத்து வைத்துள்ளனர். இதன் அருகிலேயே பல்லவர் காலத்து கொற்றவையும் இன்னம் சில சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன. மேலும் இங்கு மாமன்னர் ராஜராஜசோழரின் தாய் தந்தையரின் பள்ளிப்படை இருந்த இடம். இதனை திருக்கண்டியூர் கோயிலில் உள்ள அம்மன் சந்நிதியில் காணப்படும் “வானவன்மாதீச்சரம், பராந்தகஈச்சரம்” என்ற கல்வெட்டு வாசகங்கள் உறுதிப்படுத்துகின்றன.








பல்லவர் கால கொற்றவை

சிதிலமடைந்த கோயிலில் இருந்து கொண்டு சென்ற சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் திருக்கண்டியூரில் உள்ளது.





பல்லவனால் ஆயிரம் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆயிரத்தளியாக உருவாக்கப்பட்டு, அருகிலேயே சோழர்களால் பெரும் அரண்மனை கட்டப்பட்டு ஆயிரத்தளி அரண்மனை எனவும் புகழ் பெற்று, பல முக்கிய அரசாணைகள் அந்த அரண்மனையிலிருந்தே சோழ மன்னர்களால் பிறப்பிக்கப்பட்டு, அந்த அரண்மனை அருகிலேயே பராந்தக ஈச்சரம், வானவன் மாதேச்சரம் என இராஜராஜ சோழர் தன் தாய் தந்தையருக்குப் பள்ளிப்படையும் கட்டி வழிபட்டு, பிற்காலத்தில் சோழர்களை வென்ற மாறவர்மன் சுந்தர பாண்டியனால் பெருமையுடன் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமுமான நந்திபுரம் தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே உள்ளது. இன்று குக்கிராமமாகிப் போன இவ்வரவாற்றுச் சிறப்பு மிக்க இடத்தின் பெருமையை சொல்ல அந்த இடத்திலே ஓர் லிங்கமும் ஆங்காங்கே சில பல்லவர் கால சிலைகளுமே உள்ளன. அந்த ஆயிரத்தளியிலிருந்த ஆயிரம் லிங்கங்களில் ஒரு பகுதி அருகிலுள்ள நரசிங்கம்பேட்டை கோவிலிலும் மற்றொரு பகுதி பெரிய கோவிலும் மேலும் சில ஆங்காங்கே உள்ள சிறு கோவில்களிலும் உள்ளன.




வெகு காலம் முன்பே அங்கிருந்த சிதிலமடைந்த இரண்டு பள்ளிப்படைகளும் பிரிக்கப்பட்டு அருகிலுள்ள கண்டியூர் வீரட்டானேஸ்வரர் கோவிலிலேயே (துவாரபாலகர் சிலை உட்பட) பல சிலைகளும் கற்களும் தஞ்சமைடைந்துள்ளன...

காலம் எப்படி பெரும் சாம்ராஜ்ஜியங்களையும் புகழ் பெற்ற பெரும் நகரங்களையும் இருந்த இடம் தெரியாமல் புரட்டிப் போட்டு விடுகிறதென்பதற்கு சரியான உதாரணம் இந்த நந்திபுர ஆயரத்தளியும் அங்கிருந்த அரண்மனை மற்றும் பள்ளிப்படைகளே...!
 


பிற்காலத்தில் மாலிக்காபூர் படையெடுப்பால் தாக்குதலுக்கு ஆளாகி அழிந்துபோயிற்று. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் (கி.பி.731-795) பின்பற்றப்பட்ட சிவமரபுகளில் ஒன்று லகுலீசபாசுபதம் என்பதாகும். தமிழகத்தில் இச்சித்தாந்தத்தை பின்பற்றிய பகுதி இப்பகுதியாகும். இச்சிந்தாந்தத்தின் சிறந்த வழிபாடாக வணங்கப்பட்ட கடவுள் வாகீசசிவன் என்ற வடிவமேயாகும். கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளின் வரலாற்று பெருமையை பறைசாற்றும் வாகீசர் சிற்பம் இப்போது வீரசிங்கம்பேட்டையில் கண்டெடுக்கப்பட்டும் உள்ளது.

இச்சிற்பம் நான்கு முகங்கள், நாற்கரங்களுடன் தாமரை பீடத்தின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்த நிலையில் அழகே வடிவாக 5 அடி உயரத்தில் பல்லவ சிற்பிகளின் உயிரோட்டமான சிற்ப நுட்பத்தை பறைசாற்றும் விதத்தில் காணப்படுகிறது.


வாகீச சிற்பங்கள் இப்பகுதியை தவிர தமிழகத்தில் வேறெந்த பகுதியிலும் காண முடியாது. இவ்வூர் பின்னர் வீரசிங்கம்பேட்டை என்று பெயர் மாற்றம் பெற்றதை திருப்பூந்துருத்தி கல்வெட்டால் அறிய முடிகிறது.




வெகு காலம் முன்பே அங்கிருந்த சிதிலமடைந்த இரண்டு பள்ளிப்படைகளும் பிரிக்கப்பட்டு அருகிலுள்ள கண்டியூர் வீரட்டானேஸ்வரர் கோவிலிலேயே (துவாரபாலகர் சிலை உட்பட) பல சிலைகளும் கற்களும் தஞ்சமைடைந்துள்ளன.

'ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி' என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது. ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.

இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும்.இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார். நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார். நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும்.


சிவனை சதாசிவமூர்த்தமாக வழிபடுவது ஒருநெறி. பல்லவர்களும் சோழர்களும் சதாசிவ வடிவத்தை பல்வேறு விதங்களில் வடித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடும் சதாசிவ வணக்கம் கூறித்தான் ஆரம்பிக்கிறது. எனவே பெரும்பாலும் இச்சதாசிவ வழிபாடு நான்முகனாகவே வடிக்கப்பெறும்.

மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகிசர் குறிக்கப்படுகிறார்.

இவ்வறிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகிறார்.



திருவேதிகுடி

கிழார் கூற்றத்து நந்திபுர ஆயிரத்தளி ஊர்களில் ஒன்றான சோழவளநாடாம் திருவேதிகுடியில் தொடரும் தஞ்சைக்கோன் (தஞ்சிராயர்களின்) அறப்பணிகள்;-



















கோபுரத்தின் வலது மற்றும் இடது புறம் நின்றிருந்த துவாரபாலகர்கள். வலப்புறத்து துவாரபாலகர் அருகில் இருந்த நர்த்தனவிநாயகர் சிற்பமும், கோயிலுக்குள் நுழைந்ததும் கிழக்குபுறத்தில் உள்ள திருசுற்று மாளிகை தூணில் வடிக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதியின் புடைப்பு சிற்பம். விநாயகரின் இடதுபுறம் உள்ள அசுரர்களில் தாய் மாயாதேவி அசுரர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்க, அசுரர்களின் உற்பத்தியை தன் தும்பிக்கை கொண்டு தடுக்கும் கணபதி இவர் என்பதாகும்.

ஆயிரந்தளி லிங்கங்கள் அருகில் உள்ள கோயிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர் என்பது. முக மண்டபத்தின் வடக்கு தெற்கு இரு புறங்களிலும் லிங்கங்கள் அமைக்கப்பட்டிருகிறது. இக்கோயிலின் விமானத்தில், நந்தி, ஆண், பெண் படிவங்கள், தட்சிணாமூர்த்தி சிற்பம், ரிஷபவாகனர் சிற்பம், பிரம்மா சிற்பம் போன்றவை காணப்படுகிறது. கோபுரத்தின் கிரீவ பகுதியில் சிவனும் பார்வதியும் இருப்பதை போன்று சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்திலும், கோஷ்டங்களிலும் தட்சிணாமூர்த்தி மற்றும் பிரம்மாவின் சிற்பங்கள் அமைந்து காணப்படுவது ஆதித்த சோழர்கால கட்டிடக்கலையின் சிறப்பம்சம்.

இதனைத் தொடர்ந்து பராந்தகர் காலத்து குறுசிற்பங்கள். ஆணும் பெண்ணுமாய் காதல் கசிந்துருகும் சிற்பமும், பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணை, தோழியர் தாங்கிப்பிடித்து அழைத்து செல்லும் சிற்பம். பெண் சிலை கோஷ்ட தெய்வங்கள் வரிசையில் அமைந்துள்ள பெண் படிமங்கள் ஆகும். கருவறையின் தெற்கே வழக்கம் போல தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்க அவருக்கு இருபுறமும் இந்த அணங்குகள். கருவறையின் பின்புறம் இரு அணங்குகளுக்கு இடையே உமையவளுக்கு தன் வலப்புறத்தை தந்து அவளை அணைத்து அருள்பாலிக்கும் உமையொருபாகனாய் சிவபெருமான். கருவறையின் வடபுறமும் இரு அணங்குகளுக்கு இடையே பிரம்மா அருள்பாலிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ள துர்கையின் சிற்பம். கம்பீரமாய் நின்ற நிலையில் கொடியிடையுடன் காட்சிதரும் துர்கை. துர்கையின் மேல் உள்ள குறுஞ்சிற்பத்தில் துர்க்கைக்கு அருகில் உள்ள நவகண்ட வீரனின் சிற்பமும். இவர்கள் அனைவரும் கோஷ்டதெய்வங்கள். இவர்களைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் காணப்படுகிறார்.

மேலும் இக்கோயிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள சிற்பங்கள், தெற்கு பிரகாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட லிங்கங்களும், மேற்கு பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், இவருக்கு அடுத்ததாக சோமஸ்கந்தர் சந்நிதியும் உள்ளது. ஆனால் இந்த சந்நிதியில் சிற்பங்கள் எதுவும் இல்லை. இதே மேற்குப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கும் சந்நிதி அமைந்திருந்தது. மேலும், கஜலட்சுமி, லட்சுமி நாராயணார், அனுமார் சிற்பங்களும் மேற்கு பிரகாரத்தில் இடம்பெற்றிருந்தன.

வடக்கு பிரகாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட லிங்கங்களும், நடராஜர் சன்னதி அமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கு பிரகாரத்தில் சப்தஸ்தான தல லிங்கங்கள் ஏழும் இடம்பெற்றிருந்தன. இதன் அருகே பைரவர் மற்றும் சூரியன் சிற்பமும் மேற்கு நோக்கி அமைந்திருந்தது.


திருவையாறு

தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது ஆகையால், ஐயாறு என்று பெயர்பெற்றது என்பர்.



சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, (நந்திவாய்நுரை), நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிலர்.

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராசராச வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.

பார்புரட்டியார், 

கொல்லத்தரையன், 
பாண்டுரார் 

பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறில்  வாழுகின்றனர்.



இயற்கை வழி வேளாண் அறிஞர் பசுமை போராளி கோ.நம்மாழ்வார் பார்புரட்டியார்.

1. வையாபுரி நாட்டார்
2. தங்கமுத்து நாட்டார்
3. சின்னத்தம்பி நாட்டார்

தஞ்சையில் திமுக வளர்த்த திருவையாறு மாமனிதர்கள், கலைஞர் அவர்களால் பல முறை நினைவு கூறப்பட்டவர்கள். திரு. வையாபுரி நாட்டார் அவர்கள், காங்கிரஸ் கோட்டையாக இருந்த பகுதியை, திமுக கோட்டையாக மாற்றியவர். திரு தங்கமுத்துநாட்டார் தஞ்சை யூனியன் சேர்மனாக இருந்தார். ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தஞ்சையில் திமுக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.

சோமாஸ்கந்தர் திருக்கோயில் சோழமன்னருடைய திருப்பணியை உடையது. இக்கோயில் கொடுங்கைவேலைகள் போற்றற்குரியன. வீரசரவண உடையார் காலத்தில் (சகாப்தம் 1303 -கி.பி. 1381) பாண்டிகுலாசனி வளநாட்டுச் செந்தலை - கருப்பூர் கச்சிவீரப்பெருமான் மகன், நேர் குலைந்து இற்றுப் போன இத்திருக் கோயிற் திருமண்டப மதிலைக் கட்டியுள்ளான்.  

திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான் நூற்றெட்டு வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான். கோச்சடைய பன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியதேவர் காலத்தில் திருவையாறுடைய நாயனார்க்குச் சுத்தமல்லி வளநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டனான சேரகோன் ஆறேமாக்காணி சொச்சம் நிலத்தைத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான். பாம்புணி என்பது மன்னார்குடி பக்கத்தில் உள்ள பாமணி ஆகும். இங்கு கண்டியர் பட்டம் உடையவர்கள் உள்ளனர்.




ஒலோகமாதேவீச்சரம் திருக்கோயிலைக் கட்டியவர், தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழமண்டலத்தைக் கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை ஆண்ட முதல் இராஜராஜ மன்னனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமா தேவியாராவர். இவ்வம்மையாரால் கட்டப்பெற்றமையின் இது ஒலோகமா தேவீச்சரம் என்று பெயர்பெற்றது. இச்செய்தி `ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்தி சத்திவிடங்கியாரான ஒலோகமாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமா தேவீச்சரமுடையார்க்கு` என்னும் இக்கோயிற் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.


தென்கயிலைக்கோயில் கல்வெட்டுக்களுள் ஒன்று `திருமன்னி வளர இருநிலமடந்தையும்` எனத் தொடங்கப்பெறும் கோப்பரகேசரி ராசேந்திரசோழதேவரின் (கங்கைகொண்டசோழன்) முப்பத் தொன்றாம் ஆண்டில் பொறிக்கப்பெற்றதே பழமையான தாகும். அக்கல்வெட்டிலுள்ள ``வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவன் மாதேவி......யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்றளி தென் கயிலாயமுடையார் கோயில்`` என்னும் பகுதியால், முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் மனைவியாராகிய பஞ்சவன் மாதேவியாரால் இக்கோயில் கட்டப்பட்டது என்று தெரிகின்றது. அம் முதல் இராஜேந்திர சோழதேவர் கி.பி. 1014 முதல் 1042 வரை ஆண்டவராவார். அவரது ஆட்சியாண்டு முப்பத்தொன்றில் இக் கோயில் கட்டப் பெற்றதென்று பெறப்படுகின்றமையால் இக்கற்றளி எடுப்பிக்கப் பெற்று இற்றைக்கு 952 ஆண்டுகள் ஆகின்றன

ஐயாறப்பர் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் 'சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடி பல்லக்குகளில் அந்தந்தக் கோயில் மூர்த்திகள்  இக்கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.

இங்கு தான் சோழர்களின் இறுதி காலம் வரை வாழ்ந்தார்கள். இங்கே கள்ளர் குடியில் ஐக்கியாமாகி போனார்கள்.



திருப்பூந்துருத்தி


சோழ, பாண்டிய பேரரசுகளால் போற்றப்பட்ட திருப்பூந்துருத்தி சிவாலயத்தில் தொடரும் கள்ளர் மரபினர் தொண்டைமார்களின் அறப்பணிகள்




செந்தலை

சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ள செந்தலை. முத்தரையர் வரலாறு கூறும் கல்வெட்டுகள் உள்ள தலம். ஊரார் சிறப்பாக நித்திய வழிபாடு, விழாக்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் தேரும் காணாமற் போனது. தேர்முட்டி மண்டபமும் ஒரு வீடாகிப் போனது.












கருப்பூர்

கண்டியூர்... திருக்காட்டுப்பள்ளி சாலையில் கருப்பூர்.


ஆற்காட்டுக் கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என வரலாற்று காலத்தில் அறியப்பட்ட கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத அருள்மிகு விஜய விடங்கேஸ்வரர்.
















 மாத்தூர்

மாத்தூர் சிவாலயம், தாராசுரம் கோயில் போன்று குதிரைகள் பூட்டிய தேர்வடிவிலான சோழர் கால கோயில். சுந்தரபாண்டியன், வீர ராமநாதன் பெயர் கரைந்து போன சோழர் கல்வெட்டுக்கள், ஸ்வாமியின் பெயர்கல்வெட்டுக்களில் மருந்தாண்டார் நாயனார். ஔஷதபுரீஸ்வரர், இதை உறுதிபடுத்துவது போல் கோஷ்டங்களில் அகஸ்தியர், தன்வந்திரி சிலைகள், பிறமாண்டமான கோயில் கேட்பாரற்று கிடக்கிறது. இக்கோயில் ஒரு வைப்பு தலம், சுந்தரர் தேவாரம், கி.பி. ஏழாம் நூற்றாண்டகலாம்.









வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில்






கடம்பன்குடி மாரியம்மன் கோயிலிருந்து வீரசிங்கம்பேட்டை கோயிலுக்கு வீதியுலா


படங்கள் 




















வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்