திங்கள், 12 மார்ச், 2018

பெரிய சூரியூர் கள்ளர்நாடு




திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர் கள்ளர்நாடு

பெரியசூரியூர்,
சின்னசூரியூர், 
வீரம்பட்டி, 
பட்டவேலி, 
கும்பக்குடி, 
கண்டலூர்,
இலத்தப்பட்டி, 
பூலாங்குடி, 
பாலாண்டாம்பட்டி, 
தெண்திரையன்பட்டி மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது.

நாடு: பெரிய சூரியூர் கள்ளர்நாடு

தலைமை கிராமம்: பெரிய சூரியூர்

பொதுகோவில்: ஆதி மூர்த்தீஸ்வரர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில்.


கள்ளர் கோவில்: நற்கடல்குடி கருப்பர் கோவில்

மொத்தம் ஆறு கரைகள் உள்ளன.

முதல்கரை: இராங்கி பிரியர்

இரண்டாவது கரைமொட்டலார்

மூன்றாவது கரை: வல்லத்திரியர், சோழங்க தேவர், சோழதிரியர்

நான்காம் கரை: பாண்டுரார், குர்கண்டார், இராங்கிபிரியர்

ஐந்தாம் கரை: முதல்கரையில் வந்த இராங்கி பிரியர், பாண்டுரார், அழகு பிரியர், இதிலும் வருகின்றனர்!

ஆறாம் கரை : மழவராயர், காடுரார் , பாலாண்டார்

இது தவிற சேப்பிளையார், கண்டியர், தென்கொண்டோர், கருப்பட்டியார் ஆகியோரும் உள்ளனர்.




பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகின்றன. தை மாதம் 2ம் நாளில் மாட்டுப்பொங்கல் அன்று இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் இதுவும் ஓன்று.


இப்பகுதில் உள்ள எலந்தப்பட்டி சிவன் கோவில் செல்லும் வழியிலே மகாவீரர் சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. இவையனைத்தும் ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை ஓட்டு எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.

இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவ்வோட்டின் உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.

எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும், இன்று உள்ளூர் மக்கள் சிலரது முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன. லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார் நான்கடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின் பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக காணப்படுகிறன.

பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு.கரு.ராஜேந்திரன் அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான சுற்றுச்சுவரின் எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர் வழிபட்டு வருகின்றனர்.

சூரியூர் லெட்சுமணன் பட்டி அருகேயும் பழங்கால அய்யனார் சிலை மற்றும் சிதைவுற்ற பழைய கற்றளிகள் உள்ளன.







சூரியூர் கள்ளர்கள் நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு கட்டுப்படாமல் இருந்துள்ளனர்.

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் திருச்சியிலிருந்து கீரனூர் வழியாக இந்த பெரிய சூரியூர் கள்ளர்நாட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது பாதசாரிகள் அஞ்சுவர். அதுவும் வறட்சிகாலங்கள் என்றால் கள்ளர்கள் முழுவதுமாக வழிப்பறியில் ஈடுபடுவார்கள். வழிபறி என்றால் திருடி ஓடுவது அல்ல தாட்டியமாக அவர்களை மறித்து வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வார்கள். ஒரு முறை திருச்சி நாயக்க மன்னரின் அரச குரு கள்ளர்களால் வழிபறிக்கு ஆளாகியுள்ளார். சினம்கொண்ட நாயக்க மன்னர் செய்வதறியாது திகைத்தார். பெரிய சூரியூர் கள்ளர்களை நாயக்க மன்னர்களின் படைபிரிவில் உள்ளவர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அரச குரு நாயக்க மன்னரின் படைபரிவாளங்களோடுதான் வந்தார் ஆனால் அப்படைவீரர்களால் மூர்க்கதனம் கொண்ட பெரியூர் சூரியூர் கள்ளர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படைகள் கள்ளர்களால் சிதறடிக்கப்படுகிறது. அவர்களுடைய குதிரைகள் கவரப்படுகிறது.

வலிமைமிக்க பெரிய சூரியூர் கள்ளர்களை கட்டுப்படுத்த நாயக்கர் புதுக்கோட்டை தொண்டைமானிடம் உதவி கேட்கிறார். தொண்டைமானும் கள்ளர் நாடான அம்புநாட்டின் தலைவர் என்பதால் பின்பு தொண்டைமான் பெரிய சூரியூர் கள்ளர்களோடு இணக்கத்தை கடைபிடித்து அவர்களுக்கு உதவியாக நாயக்க மன்னர்களிடம் இருந்து படைபற்றில் பணியாற்ற பதவிகளை அவர்களுக்கு வாங்கி தருகிறார். இருந்தும் பெரிய சூரியூர் கள்ளர்களின் தாட்டியத்தை அவர்களால் இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவர்கள் ஆங்கிலேயருக்கும் பெரும் சவாலாகவே இருந்தனர். பெரிய சூரியூர் கள்ளர்நாட்டை பார்வையிட வந்த ஆங்கிலேயர் படைத்தளபதி, அவருடைய குதிரை மற்றும், அவருடைய மனைவி இரண்டையும் கவர்ந்து சென்றார்கள்.

1923 ஆம் ஆண்டு பெரிய சூரியூர் கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது DNC கீழ் வருகின்றனர். DNT க்காக போராடுகிறார்கள்.


பெரிய சூரியூர் கள்ளர் நாட்டின் மந்தையில் இருகற்கள் நடப்பட்டுள்ளது. பெரிய சூரியூர் கள்ளர்களுக்குள்ளேயே கடுமையான சண்டைகள் மூண்டுள்ளன. மீன்பிடிப்பதில் முன்னுரிமை கோரி ஒரே கரைக்குள்ளேயும், வெவ்வேறு பட்டத்திற்குள்ளேயும் சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.
நடப்பட்டிருக்கும் கற்களில் ஒரு வகையறாவும், மற்றொருபுறம் இன்னொரு வகையறாவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, சாமி கும்பிடுவது என முன்பு பிரித்துள்ளனர்

சூரியூர் நாடு, தற்போது திருவெறும்பூர் தொகுதியின் கீழ் வருகிறது.

1963 ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியில், ஐயா T. துளசி ராங்கிப்பிரியர் அவர்கள் பெரிய சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த போது கட்டப்பட்ட பழைய தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்ந ஊரின் மற்றொரு பெருமை ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற "காசி" மாடு.

இன்று சூரியூரில், துடிப்புள்ள மவுன சாட்சியாய், ஊரின் பிரதான சுவரில் இருந்து நம்மை உற்றுப் பார்க்கிறான் காசி. காசியின் முழுப்பெயர் ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி காசி. காசி பற்றிய நினைவுகளில் உருகுகிறார், காசியை வளர்த்தெடுத்த காசி குமார்.

காசி வருவதற்கு முன், சூரியூருக்கு கோவில் மாடு ஏதுமில்லை. காசி வந்தான். 'ஜல்லிக்கட்டு' எனும் போர்வையுடன் அத்தனை ஊர்களுக்கும் படையெடுத்தான்.

தன் வெற்றியின் வாயிலாக, அந்தந்த ஊர் மக்களின் மனங்களை வென்றான். சூரியூரின் வீரத்தையும் களம் கண்ட மண் அத்தனையிலும் பதித்தான். 'பொதுவா, இரண்டு வயசுல மாடுகளுக்கு பல் போடும். 5 - 6 வயசுல பருவம் வர்றப்போ, மொத்த, 16 பல்லும் சேர்ந்துடும். பல் சேர்ந்ததுல இருந்து, 10 வருஷத்துக்கு தான், மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம். காசி எங்ககிட்டே வர்றபோதே, பல் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருந்துச்சு! ஆனாலும், அதுக்கப்புறம் அவன் வாழ்ந்ததுல, 13 வருஷமும், அவன் யார்கிட்டேயும் தோத்ததில்லை. பெருமை பொங்கச் சொல்கின்றனர் சூரியூர் கிராமத்தினர்.

வாடிவாசலுக்கு அவன் போறதுக்கு முன்னாடி, பொங்கல் வைச்சு பூஜை பண்ணுவோம். வீட்டுக்கு வீடு, அவன் கால்களை மஞ்சத் தண்ணியில கழுவி, ஆசிர்வாதம் வாங்கி வழியனுப்புவோம். எங்க சாமிங்கய்யா அவன்!' ஓவியமாய் சிலிர்த்து நிற்கும் காசியை பார்த்தபடியே, முந்தானையால் கண்ணீர் துடைத்துக் கொள்கின்றனர் சூரியூர்ப் பெண்கள்.


ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.

சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்


















ஆய்வு  உயர் திரு. பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்