ஞாயிறு, 8 மார்ச், 2020

அருள்மிகு ஸ்ரீ மாரநாடு கருப்புசாமி திருக்கோவில்.



மாற்நாடு / மார்நாடு கருப்பசாமினு சொன்னாலே மதுரையில் கள்ள வீட்டாலா என்று தான் கேட்பார்கள். 

சிவகங்​கை மாவட்டம், மானாமது​ரை வட்டம், திருப்பாச்சேத்தி, மார்நாடு கருப்பசாமி கள்ளர்களின் முதன்மையான குலதெய்வங்களில் ஒன்று.

தங்களச்சேரி தும்மக்குண்டு பக்கத்தில் உள்ள ஊரில் கள்ளர்கள் தங்கள் மார்நாடு கருப்பசாமி குலதெய்வம் பிடி மண் கொண்டுவந்து கோயில் கட்டி வணங்கி வருகிறார்கள்.

தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான். அதன் தலைநகர் தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது என்பது தவறாகும். திருப்பாச்சேத்தி ஊருக்குத் தெற்கே சுமார் 5கி.மீ. தூரத்தில் உள்ளது தஞ்சாக்கூர். மாறைநாட்டில் பழைமை சான்ற இவ்வூரில் இடிந்த நிலையில் விஷ்ணு ஆலயம் ஒன்று உள்ளது. 

பாண்டியனின் படைத்தலைவன் மாறை நாட்டை ஆண்டு வந்த தஞ்சைவாணன், பாண்டியன் கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்தான். பாண்டியனின் கண்போல இருந்து சேரநாட்டை வெற்றி பெறுவதற்கு இவன் உதவினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.

மாறைநாடு என்பது,  பாண்டிய நாட்டில் கொற்கை,  வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு. மானாமதுரை வட்டம் - மாரநாடு திருப்பாச்சேத்திக்கு கிழக்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் மாறை நாடு என அழைக்கப்பட்ட நிலையில் பிற்காலத்தில் மாரநாடு என அழைக்கப்படுகிறது.

"மாரநாடு அருள்மிகு கருப்பணசாமி ஆலயத்தின் 

பூசாரி, கோடாங்கி இருவருமே பள்ளர் சமூகம்.

வாத்தியம் பறையர் சமூகம்

பூசைமுறை மகன் வாரிசு.
கோடாங்கிமுறை மருமகன் வாரிசு

பரம்பரை வாரிசு முறை. யார் வேண்டுமானாலும் அருச்சகர் ஆகமுடியாது




2013 - 2014 இல்‌ மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில்‌ பல்வேறு தொல்லியல்‌ எச்சங்கள்‌ கொண்ட சுமார்‌ 293 ஊர்கள்‌ வைகை நதி பள்ளத்தாக்குப்‌ பகுதியில்‌ அடையாளம்‌ காணப்பட்டன. இதில்‌ வரலாற்றின்‌ வெளிச்சத்திற்கு வராத புதிய தொல்லியல்‌ சிறப்பு வாயந்த ஊர்களும்‌ பலபழங்கால ஊரிருக்கை மேடுகளும்‌ கண்டறியப்பட்டன. அவற்றில்‌ டொம்பிச்சேரி, சித்தர்நத்தம்‌, மாரநாடு, அல்லி நகரம்‌, கீழடி, ராஜகம்பீரம்‌, பாண்டிக்கண்மாய்‌. அரசநகரி ஆகிய ஊர்கள்‌ பரிசீலிக்கப்பட்டு அவற்றுள்‌ மதுரையருகில்‌ சிவகங்கை மாவட்டத்தில்‌ அமைந்துள்ள கீழடி தொல்லியல்‌ அகழாய்விற்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வூர்‌ மதுரையிலிருந்து 12 இ.மீ. தொலைவில்‌ தென்கிழக்கு திசையில்‌ ராமேசுவரம்‌ செல்லும்‌ பண்டைய வணிகப்‌ பாதையில்‌ வைகை நதியின்‌ தென்கரையில்‌ அமைந்துள்ளது.







தங்களாச்சேரி மாரநாடு சின்ன கருப்பசாமி கோயிலை குலக்கோயிலாக வணங்குபவர்கள் நல்லபிள்ளைபட்டி சுந்தத்தேவர் வாரிசுகள் ஆவார்கள்.

பங்குனித்திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடுஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுர அரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,

இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை,  மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர்.

இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடி குறிசொல்லி முடித்துவிடும்.  விடிந்தால், சாமியும் இருக்காது.  மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது. கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,

பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை இரவு மாரநாடு கருப்பணசாமி கோயிலில் திருவிழா, குறிகேட்க விளைவோர் எல்லாம் வந்து  சாமிக்கு மாலையணிவித்து மரியாதை செய்து வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.




















மாரநாடு அருள்மிகு ஆவுடைப் பிராட்டி உடனாய சங்கரேசுவரர் கோயில்





மாரநாடு கிராமம் தமறாக்கி ​சோலிவ​கையறாவில் பிறந்த நாராயணன் அம்பலத்தின் ​பேரனும், ராமசாமி அம்பலத்தின் மகன் காசிசீர், முனைவர், நா.ரா.கி. கா​ளைராசன் அவர்கள் குறிப்பிடத்தக்கது.









தஞ்சாக்கை என்ற தஞ்சாக்கூர் ஓலை சாசணம்














வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்