புதன், 28 மார்ச், 2018

போராளி மேலூர் சீமான் என்ற மீனாட்சி சுந்தரம் அம்பலம்.




முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசின் அக்கிரமச் செயலை முடிவுக்கு கொண்டுவர ஒரு விவசாயியாக 2002 ல் டெல்லி உச்சநீதிமன்றத்தில் அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தவேண்டும் என வழக்கு தொடுத்து 2006ல் 142 அடி உயர்த்தி கொள்ளலாம் என தீர்ப்பை பெற்றுதந்த மாமனிதர் மேலூர் சீமான் என்ற மீனாட்சி சுந்தரம் அம்பலம்.

இவ்வழக்கிற்காக தனது சொந்தபணத்தை இலட்சக்கணக்கில் செலவழித்தார்.

முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவராக இருந்து அணையின் உரிமைக்காக இவர்நடத்திய போராட்டங்கள் தான் எத்தனை. எத்தனை.

ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை ஒரு தனிமனிதனாக செய்துமுடித்த சாதனையாளர் சீமான் அம்பலம்.

2011 டிசம்பர் 20 ல் கேரள அரசுக்கெதிராக ஒரே நாளில் பலலட்சம் மக்களை திரட்டி மதுரையில் பிரமாண்ட பேரணியை நடத்திகாட்டியவர்.

மேலும் இந்த வெற்றி என்பது ஒரு நாளில் கிடைத்த வெற்றியா. முப்பத்தைந்து ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

விவசாயிகள் கூலி தொழிலாளிகள் பொதுமக்கள் வியாபாரிகள் வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் சமுதாய அமைப்புகள் மாணவர்கள் அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு.

முல்லைப்பெரியாறு உரிமை மீட்க முழு மூச்சுடன் போராடிய சீமான் அமபலத்தின் மூச்சு இந்த வெற்றி தீர்ப்புக்கு முன்னரே நின்று போனது.

2014 ஆம் ஆண்டு மதுரையில் முல்லைப்பெரியாறு அணையை 142 அடி உயர்த்தியதற்காக 5 மாவட்ட விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி பாராட்டி எடுக்கும் பிரமாண்ட விழா. நிச்சயம் இது நடத்தப்படவேண்டிய விழா தான் மாற்றுகருத்தில்லை. ஆனால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத்தர வித்திட்டவர் இன்று விலாசமே இல்லாமல் போனாரே .

நல்ல வேலை இந்த புறக்கணிப்பை காண இன்று அவர் உயிருடன் இல்லை. இருந்தால் மனம் நொந்துபோயிருப்பார்.

நவம்பர் 2 , 2011 முல்லை பெரியாறு உரிமை மீட்பு போராளி அய்யா சீமான் விண்ணுலகம் அடைந்தார்.







நிறுவனர் கணேஷ் திரையரங்கு




35 ஆண்டுகளுக்கு பின் தற்போது முல்லை பெரியாறுஅணை 137 அடியை எட்டியுள்ளதை தென்மாவட்ட விவசாய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் .ஆனால் இதற்காக உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுத்து இழந்த உரிமையை மீட்டுத்தந்த அய்யா சீமான் அம்பலம் இன்று நம்மிடையே இல்லை .

தேசத்திற்கு கொடுப்பவன் தேசியவாதி 
தேசத்திலிருந்து எடுப்பவன் அரசியல்வாதி 

என்ற பசும்பொன்னாரின் வாக்குகிணங்க வாழ்ந்து காட்டிய அய்யா சீமான் அம்பலத்தை இந்நாளில் போற்றி வணங்குவோம் .

தொகுப்பு : திரு. கலைமணி அம்பலம்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்