திங்கள், 12 மார்ச், 2018

சேலம் கள்ள(ர்)குறிச்சி - கள்ளர் நாடு


 

சேலம்- கீழ்நாடு, கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று மலைமீதுள்ள அவ்வையாரம்மன் கோயிலில் உள்ளது. அது படிக்க முடியாதபடி சிதைந்து காணப்படுகிறது. மற்றொன்று ஊரின் மத்தியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பலகை கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டின் மேற்புறம் பெருமாளின் சின்னமான சங்கு சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.




இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் விய வருடம் வைகாசி மாதம் 27ந்தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூசைகள் செய்ய கள்ளர் நாட்டை சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கரையப்பக்கவுண்டர், அன்னியப்ப கவுண்டர், ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது ஆகும். இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூசையும் கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள்.


இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இத்தானத்துக்கு அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இப்பகுதி கள்ளர் நாடு என கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் அருகே வணிக வழி பாதை ஒன்று இருந்திருக்க வேண்டும், இப்பகுதியில் காணப்படும் இந்த அரிய சான்றுகளை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் தொல்லியல்துறை ஆவண செய்ய வேண்டும்* இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் இவ்வாறு சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



கவுண்டர் என்ற சொல் சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும். கள்ளர் குடியில் கொமாரலிங்கத்தில் ராமலிங்க கவுண்டர், வெள்ளலூர் மணியக்காரன் திரு. கந்தசாமி கவுண்டர், இவர்கள் கவுண்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்

கல்ராயன் மலையை அரணாகக் கொண்ட காடுகள் நிறைந்த வட்டம் கள்ளர்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக விளங்கியதால் 'கள்ளர் குறிச்சி' பின்னர் கள்ளக்குறிச்சியாக மருவியது. ஒரு கல்வெட்டில் கல்லைகுறிச்சி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.





பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு என இப்போது அழைக்கப்படும் பகுதி 15ஆம் நூற்றாண்டில் கள்ளர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. கெராங்காடு என்ற ஊர் கருங்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அவ்வையார் கோயில்கள் உள்ளன. கெராங்காடு ஊருக்கு அருகே புதிய கோயிலும் 2 கி.மீ .தொலைவில் உள்ள குன்றில் பாழடைந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டசிதைந்த நிலையில் ஓர் அவ்வையார் கோயிலும் உள்ளது. பழைய கோயிலில் இப்போது அவ்வையார் சிலை இல்லை.பல வருடங்களுக்கு முன் இங்குள்ள சிலைகளை திருடர்கள் திருடி செல்ல முயற்சித்ததால் ஊர் மக்கள் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துள்ளனர். கார்த்திகை தீபம் அன்று மட்டும் அவ்வையார் சிலையை இங்கு கொண்டு வந்து வைத்து வழிபடுகின்றனர்.

கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் உள்ள கொப்பரை மூலம் மகாதீபம் ஏற்றி வழிபடுகின்றனர்..திருவண்ணாமலை தீபத்தை பார்த்த பின்னரே இங்கு தீபம் ஏற்றுவது நடைமுறையாக உள்ளது.

சேலம் அருகே உத்தமசோழபுரம் என்ற ஊரில் உள்ள கரபுரநாதர் கோயிலில் பழமையான ஓர் அவ்வையார் சிலை உள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பரப்பிப்பட்டி கிராமம். இவ்வூர் கல்வெட்டுகள் பொன் பரப்பி என்றே வழங்கப்பட்டு வருகின்றது. பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன. அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை, மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம்.

இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.

முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம். 

ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் ‘செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா’ எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். 


துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர்.


இங்கு சோழங்கதேவர், கூழாக்கியார் வாரிசுகள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கள்ளர் பெருங்குடிகளான சென்னன்டார், சோழங்கதேவர் அம்பலகாரர்,நாட்டார் ஆகியோருக்கு கோவில் மரியாதைகள்வழங்கப்பட்டு வருகிறது. 





கொழுமம்-குமரலிங்கம் ஐவர் மலை பக்கத்திலும் சோழங்கதேவர் பட்டம் உடையவர்கள் வாழ்ந்து  வருகின்றனர்.




கள்ளக் குறிச்சி கல்ராயன் மலை கூடுதலான வளமும், காட்டு வளமும் உடையது. திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு, சிறு மலைக் குன்றுகளும், காட்டுப் பகுதிகளும் உள்ளன. கல்ராயன் மலைத் தொடர்ச்சியே செஞ்சி மலையாகும். செஞ்சி வட்டத்திற்கு எல்லையாக அமைந்திருப்பதால் அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

பெரியகல்வராயன் மலையில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவால் மலையில் 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்திட்டைகள், கற்குவைகள், புதிய கற்கால கருவிகள், மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் பெருமாள், ஓமலூர் சீனிவாசன் ,மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரிய கல்வராயன் மலையில் உள்ள ஆத்தூர் வட்டம் கீழ்நாடு ஊராட்சி கெராங்காடு கிராமம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் கீழ்நாடு ஊராட்சி அடியனூர், சேம்பூர், போன்ற கிராமங்களில் மேற்புற கள ஆய்வை மேற்கொண்டது.

அப்போது அக்கிராமங்களில் 21 கல்திட்டைகள், 10 கற்குவைகள் , புதிய கற்கால கருவிகள் மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழுவில் முக்கியமான தலைவர்கள் , வீரர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக இது போன்ற கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. அவை மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. அது பிற்காலத்தில் மருவி பாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. இங்குள்ள மக்களால் இவை கல்பாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு, ,குள்ள பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது.

கெராங்காடு கிராமத்தின் அருகே உள்ள மலைக்குன்றின் அமைந்துள்ள பழமையான அவ்வையார் கோயில் அருகிலுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுகின்றன.

இறந்தவர்கள் நினைவாகவும், அவர்களை அடக்கம் செய்த இடங்களை அடையாளப்படுத்தவும் குத்துக்கற்கள் வைக்கப்பட்டன. இவை ஒரே கல்லில் கூம்பு கல்லாகவோ அல்லது பலகை கல்லாகவோ வைக்கப்பட்டன. கெராங்காடு கிராமத்தில் இருந்து குன்றின் மீதுள்ள அவ்வையார் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான குத்துக்கற்கள் காணப்படுகின்றன.
இவை ஒரே ஒரு பலகை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மலைப்பாதையில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை. இந்த குன்றை புனிதமாக கருதுகின்றனர்.

கெராங்காடு, சேம்பூர், அடியனூர் போன்ற மலைக்கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. ஒரு அடி உயமுள்ள கற்கோடாரிகளும் இங்கு காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.



வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்