திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தொண்டைமானின் மெய்கீர்த்தி


 அறந்தாங்கி தொண்டைமானின் மெய்கீர்த்தி
"சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்"
(சோழர்கள் சூரிய குலம்)


"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்"
(சோழரின் மகன்)


"புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்"
(புலிக்கொடி வேந்தன்)


"புறாவினுக்காகத் துலைபுகு பிரபலன்"
(புறாவிற்காக தன் சதையை கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி சோழன் மரபு)


"கிடாரத்து அரசன் தெய்விதம் அளித்தோன்"
(கடாரம் வென்ற இராஜேந்திர சோழ மரபு)


"கலிங்கம் திறக்கொண்டு பரணி புனைந்தோன்"
(கருணாகர தொண்டைமான் மரபு)


"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்"
(கம்பருக்கு பரிசளித்த அரச மரபு)


"ஓட்டக் கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்"
(ஓட்டக் கூத்தரால் புகழப்பட்ட அரச மரபு)


"கச்சியம் பதியான் கருணா கடாட்சன்"
(கஞ்சியை ஆண்ட அரச மரபு)


"இந்திரன் ஏழடி எதிர்கொளப் பெற்றான்"
(இந்திர குலத்தவன்)


********************************

புதுக்கோட்டை தொண்டைமானின் மெய்கீர்த்தி


“புலிக்கொடி முள்ளோன்”
(சோழர் கொடி தாங்கியவன்)


“வட்ட நீலக்குடை பூசுக்கின்ற வாளக்குடை முள்ளோன் யிட்ட பாதத்தி லணிந்தோன்”
(நீல மற்றும் வாளக் குடை உடைய மன்னர்களை தனது பாதத்தில் அணியாக அணிந்தவன்)

“வளர் யிந்திரகுல மேவிளங்கிய் சந்திர குலநேயன்”
(இந்திர குலம் வழி வந்து பாண்டியர் குலத்தை நேசிப்பவன்)

“சிஷ்ட பரிபாலன கொடியூரன்”
(தர்ம நீதியை காப்பவன்)

“சிங்கமனாதிப தியான் பாரில் செங்கோல் செலுத்த வந்தவங் காமதேனு துங்கன் விஜய ரகுநாத ராய தொண்டைமான் போற்றி”
(சிம்மாசனத்திற்குரிய பூவுலகில் தனது செங்கோலை செலுத்த வந்து இரப்பவர்களுக்கு இல்லை எனாத காமதேனு போன்ற இராஜன் விஜய ரகுநாத எனும் ராய தொண்டைமான் போற்றி)


அன்புடன் சோழபாண்டியன்

பெ.ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்மயன்மார், யங்கோன், பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்


பர்மாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுச் சங்கிலி இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது. சங்கத் தமிழனும், பிற்காலச் சோழர்களும் தடம் பதித்த மண் பர்மா. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இந்நாட்டிற்கு உரிமையுடன் தமிழர்கள் சென்று வந்தனர். பர்மாவில் ஈட்டிய செல்வத்தில் அரண்மனைகள் போல தமிழகத்தில் பல வீடுகள் எழுந்தன.

ஜெனரல் நிவின் தலைமையில் அதிரடியாக ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் விளைவாக, ஒரே நாளில் தமிழர்களின் வாழ்க்கை வரைபடம் சரிந்து பாதாளத்தில் வீழ்ந்தது.  அதிகார வர்க்கத்திற்கும் தம் வியர்வைத் துளிகளால் பதிவு செய்தனர். அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்காமல்,  பொருளாதாரப் பாதையில் முழுமையாகப் பயணிக்க முடிவெடுத்ததுதான்.

பண்பாட்டுத் தளத்தில் தமிழர்கள், தமிழ்த் தெய்வங்களுக்கான கோயில்கள்  அமைத்தனர். அதில் முதன்மையன கோவில் பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்.

மலேசியா முருகன் கோயில் போல பர்மா தமிழர்களோட அடையாளம் என்று சொல்லலாம், இக்கோயிலை பல வருடங்கள் பழமையான தமிழர் வழிப்பாடு குலதெய்வ கோயில் இது. பர்மாவில் அழகான ,செழிப்பான ஒரு விவசாய கிராம் தான் 'பிலிகான்" , கள்ளர்க அதிகம் வாழும் கிராமம் இது , விவசாயம் தான் மூலத்தொழில். 

குழந்தைகள் படிக்க அரசு பள்ளிக்கூடம் இல்ல , ஆனா சுய முயற்சி தமிழ் பள்ளி உண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துளியும் பிறமொழி கலப்பின்றி அழகான தமிழ் பேசுகிறார்கள்.

கோயிலை பற்றி சில சிறப்புகள் முணியான்டி கோயில் தமிழர்த்திரு " பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர் " அவர்களால் 1861 ஆண்டில் கட்டப்பட்டது.(மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கள்ளர்களில்  கடாரத் தலைவர் மற்றும் கடாரங்கொண்டான் என்ற பட்டம் உடையவர்கள் இன்றும் பெரும் சிறப்போடுவாழ்கின்றனர்)

அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு " விரையா மழவராயர் " அவர்களால் கட்டப்பட்டது.

முணியான்டி, அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளது. வருடத்தோரும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000  திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவார்கள்.  

தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு அமைச்சர்கள் வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவார்கள், பூக் குழி இறங்குவார்கள் , ஐயா வுக்கு பலிக்கொடுத்து வழிப்படுவாங்க , நம்பிக்கையோடு கேட்டால் வேண்டுதல்கள் கண்டிப்பா நிறைவேறும் என பேர் போகும் தெயவம் இது.  பர்மா அரசு அமைச்சர்களே எதாவது பிரச்சனைனா இங்க வந்து தேங்காய் உடைச்சுட்டு போவார்கள். 


திருவழா 10 நாட்கள் நடைப்பெறும், 365 நாளும் நீங்க எப்ப போனாலும் தலைவாழ இலைப்போட்டு உபசரிப்பாங்க, அது
இரவு 2 மணியானாலும் சரி , அந்த கிராமத்துக்கு போனாலே அவங்க கேட்கும் முதல் கேள்வி " சாப்பிடீங்களா? மொதல கை கழுவுங்க ,சாப்பிட்ட பிறகு பேசலாம் " இதுதான். ஒரே வரில சொல்லனும்னா பழங்கால தமிழரை நீங்க அங்கே காணலாம்.


தைமாசமானா பொங்கலை பெரிய விழாவா கொண்டாடுவார்கள், குறிப்பா மஞ்சவிரட்டு சிறப்பாக நடைபெறும். கோயில் நிர்வாகம் வெளியே சென்று நன்கொடை பெறுவதில்லை . அம்மனுக்கும் ஐயாவிற்கும் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து விளைந்த அரசியை வச்சிதான் வர பக்தர்களுக்கு பசியாத்துவாங்க. விருப்பமுள்ளவர்கள் கோயில் உண்டியில் போடலாம். 

வருசம் முழுவதும் 24×7 சாப்பாடு போடுற ஒரே கோயில் இது தான் .. நடுராத்திரி போனாலும் வந்துருக்கும் ஆள் எண்ணிக்கை மட்டும் சொல்லிட்டுங்க .. உடனே அடுப்புல அரசி பருப்பு வேகும் .. இதற்காகவே சமைக்க , பரிமார ஆட்களை ஊதியம் வழங்கி வச்சிருக்கு கோயில் நிர்வாகம்.

இங்கு கள்ளர்களின் கடாரம்கொண்டான் , கடாரத்தலைவர், சோழகர், சோழங்கதேவர், ஈழம்கொண்டான், கோபாலர், கண்டியர், மழவராயர், சேர்வை, வாண்டையார் மேலும் பல பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர். 


ஊதுவர்த்தி கம்பெனி உரிமையாளர் "திரு.மனோகரன் கோபாலர் " அவர்கள் .. உழைப்பால் உயர்ந்தவர். பர்மா போல ஒடுக்குமுறை அதிகமுள்ள நாட்டில் வணிகத்தில் வெற்றிபெற பலப்போராட்டங்களை சந்தித்துள்ளார்.

இதேபோல் சென்னையில் வாழ்கின்ற பர்மா தமிழர் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு மேல் கள்ளர் இனத்தவர்கள் சென்னை மாதாவரம் அருகில் அன்னை சிவகாமிந கரில் வசிக்கிறார்கள். அங்கு பர்மா பீலிக்கான் முனீசுவரர் கோவில் உள்ளது. அங்கும் மிகப்பெரிய அளவில் திருவிழா நடைபெறும் அதுமட்டுமின்றி சிறப்பு பெற்ற ஸ்ரீவல்லடிகாரன் கோவிலும் உள்ளது தமிழனத்தின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டை காப்பதற்க்கு கள்ளர் இனத்திற்க்கு நிகர் எவரும்மில்லை என்பது பெருமையாக இருக்கிறது.

ஆய்வு : திருமதி. சாரதாதேவி நாச்சியார்

நன்றி  :
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இரா. குறிஞ்சிவேந்தன்

இவர் தான் கோயில் தர்மகர்த்தா வின் கொள்ளு பேரன் திரு.குமரசாமி மழவராயர் அவர்களின் வாரிசு


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அமரர் திரு. M.M. சந்திரகாசன் காங்கேயர் . இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்)
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்நாடான தந்தி நாட்டிலிருந்து முதன் முதலில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான திரு.M.M.சந்திரகாசன் காங்கேயர்.  நத்தமாங்குடி என்ற சிறு கிராமம், கூழையாறும் நந்தையாறும் ஒன்று சேர்ந்து கொள்ளிடம் நதியில் சங்கமாகுமிடம். இங்கு திரு முத்துக்குமார் காங்கேயருக்கும் வள்ளிநாயகம் திருமட்டிக்கும் நன்மகனாய் 25/03/1922 ல் பிறந்தார் சந்திரகாசன் காங்கேயர் பிறந்தார். 

ஐந்து வயதில் தனது சிற்றூர்த் தொடக்கப் ப்ள்ளியில் கல்வி பயின்று, ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை ஓரத்தூர் டி.பி. செல்லசாமி அய்யர் பள்ளீயிலும், 10ம் வகுப்பினை லால்குடி கழக உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பினை (பி.ஏ) திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியிலும் பயின்றார்.

1943ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழக அரசுப்பணியாளர் தேர்வும் எழுதி அதிலும் தேர்வடைந்து 7/4/19944ல் இளநிலை உதவியாளர் எனும் அரசுப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உச்ச நிலை அடைந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலராகவும் பணியாற்றி 31/01/1980ல் ஓய்வு பெற்றார்.

தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்கள் முன்னாள் அமைச்சர் திரு புரவலர் அன்பில் தருமலிங்கம், திரு. ந.ப. மாணிக்கம் ஏற்றாண்டார், திரு கோதண்டபாணி மூவரையர் என்று தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.

மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள், இவர்களுக்கு இளங்கோவன் , டாக்டர் கருணாநிதி, மதிக்குமார் என்ற மூன்று மகன்களும் வாசுகி என்ற மகளும் உண்டு.

தனது அரசுப்பணி ஓய்வின்பின் சமூகத்தொண்டில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல் முண்ணேற்றத்திற்கு அரும்பாடு பட்டுள்ளார். இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டினை நாம் அனைவரும் உனர்ந்து அவர் வழியில் செயல் ஆற்றிட வேண்டும்.

இராசராசன் கல்விப் பன்பாட்டுக் கழகம் 16/03/1986ம் ஆண்டு நிருவப் பட்டு, 16/07/1986ல் பதிவு செய்யப்படது. 66 அங்கத்தினர்களை மட்டுமே கொண்டிருந்த இக் கழகத்தின் தலைவராக ஒருமனதாக 12/07/1987ம் ஆண்டு திரு சந்திரகாசன் காங்கேயர் தேர்வு செய்யப்பட்டார். இத் தேர்வுக்குபின் காங்கேயரின் முயற்ச்சியால் அங்கத்தினர்களின் என்னிக்கை வளர்ந்தது.

1986 - 1987 66 ஆக இருந்த அங்கத்தினர்களின் என்னிக்கை
1987 - 1988 266
1988 - 1989 682
1990 - 1991 1236 
1991 - 1992 1700
1992 - 1993 2130
1993 - 1994 2401 
1994 - 1995 2741 ஆக உயர்ந்தது.

உறுப்பினர்களின் சேர்க்கை விரிவடைந்து கழகத்தின் நிதி நிலையும் கணிசமாக உயர்ந்தது.

இராசராசன் கல்விப் பண்பாட்டு கழகத்தில் தனிக்குழுக்கள் அமைத்து சாதனை திரு சந்திரகாசன் காங்கேயர் எட்டு ஆண்டுகள் கழக மேம்பாட்டிற்காகவும், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவெற்றப்பட்ட தீர்மாணங்களை நடை முறைப்படுத்தி வெற்றியும் கண்டார்.

தான் தலைமையேற்ற காலகட்டத்தில் 

உறுப்பினர் சேர்க்கை குழு, 
திருமணத் தகவல் தொடர்புக் குழு, 
பண்பாட்டுக் குழு, 
இராசராசன் செய்தி மலர்க்குழு, 
நிதி மற்றும் கட்டக்குழு, 
மண்டலக் குழு, 
மகளீர் அணி போன்ற உள் அமைப்புகளை தோற்றுவித்து கழகத்தை நெறிபடுத்தினார். 

இதனுடன் 

உறுபினர் பட்டியலும், 
ஆறாவது ஆண்டு விழா மலர், 
இலவச மருத்துவ முகாம், 
நூலகத் திறப்பு விழ 

போன்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி ந்ம் குல மக்களுக்கு அரும்பெரும் சேவைகள் பல செய்துள்ளார்.

ஒரு வலுவான சமுதாய அமைப்பின் பின்னனி இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள குறைபாடுகளை அரசின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு அல்லது பரிகாரம் பெறமுடியும். நமது சமுதாயப் பெரியோர்களால் நிறுவப்பட்டு வந்த சங்கங்கள் எல்லாம் நகர, வட்டார, இடங்களில் தான் இயங்கி வந்தன. இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அமைப்பு சமுதாய நலன் காக்க வேண்டும் என்று 15/12/1990ல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

அதன் விளைவாக 14/04/1991 தமிழ் புத்தாண்டு நாள் அன்று தமிழ்நாடு கள்ளர் பேரவை தொடங்கப்பெற்றது. பின் இப் பேரவையை எல்லா மாவட்டங்க்களிலும் நிறுவ திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் தமிழ்நாடு கள்ளர் பேரவை 14/04/1991 முதல் 27/04/1997 வரை செயல்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி, புதுகை, போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் எம் இன மக்களை ஒன்று திறட்டி மாபெரும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது. 

பேரணிகளில் புரவலர் அன்பில் தர்மலிங்கம், திருவாளர்கள் அய்யாறு வாண்ைட்யார், தங்கமுத்து நாட்டார், துரை கோவிந்தவாசன், தியாகராச காடுவெட்டியார், காளிதாஸ் முடிபூண்டார், சோமசுந்தர தேவர், விஜயரெகுநாதப் பல்லவராயர் முதலாய சமுதாய பெரியோர்கள் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.

இவ்வாறு சிறப்புடன் செயல் பட்டுவந்த திரு சந்திரகாசன் காங்கேயர் 27/04/1997 நாளன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொருப்பில் இருந்து நிறுவனத் தலைவராகவும் திரு இராமச்சந்திரப் பல்லவராயர் மாநிலத் தலைவராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின் திரு சந்திரகாசன் காங்கேயர் நிறுவனத் தலைவராக செயல்பட்ட போதிலும் மாநில தலைவர்களின் கருத்து வேற்றுமையால் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் செயல்பாடுகள் தொய்வடைந்து விட்டது.

அளவற்ற அன்பு, மட்டற்ற மரியாதை ஆகிய பண்புகளை வளர்த்து விட்ட எம் குல மாமனிதனுக்கு ந்ன்றி சொல்லுவோம்
இத்திருவுருவ சிலையை நத்தமாங்குடியில் திறந்து வைத்தவர் கல்வி காவலர், பூண்டி சீமான் ஐயா.துளசி ஐயா வாண்டையார்

தமிழ்ப் பேரவைச் செம்மல், புலவர் பி. விருத்தாசலம் நாட்டார்
தஞ்சாவூர் என்றால் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருபவர் பி.விருத்தாசலம் நாட்டார். (மே 22, 1940- நவம்பர் 17, 2010) 

தஞ்சை, மேலத்திருப்பூந்துருத்தியில் பொ. பிச்சையா நாட்டார், தென்காவேரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிக எளிய விவசாயக் குடும்பம். தமிழ் மொழிக்காகப் பாடுபட்டார். தஞ்சை ’ந. மு வே. நாட்டார் திருவருள் கல்லூரி’யைத் தோற்றுவித்துத் தனித்தமிழ்ப் புலவர் கல்வியை 19 ஆண்டுகளாகக் கற்பித்து வந்தார். 

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராக இருந்து பல மாநாடுகளை நடத்தினார். தமிழியக்கம் என்னும் அமைப்பின் தலைவராக இருந்து மொழித் தொண்டு ஆற்றினார். "எல்லார்க்கும் கல்வி கொடு; எல்லாக் கல்வியும் தமிழில் கொடு" என்று முழங்கினார். 

தமிழீழத் தோழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சில முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார்.


திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி,பூண்டிப் புஷ்பம் கல்லூரியில் புகுமுக வகுப்பு, பின்னர் திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், தமிழாசிரியர் பயிற்சி, முதுகலையிலும் பட்டம் என தகுதிகளைப் பெற்று வளர்ந்தார். 

தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து, பின்பு தஞ்சையருகேயுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து சிறப்பித்துள்ளார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணித் தலைவராக இருந்து பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி தி.மு.க.தலைவர் களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார்.

70 நாடுகளை உள்ளடக்கிய உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தலைவராகப் பொறுப்பேற்றார்.

பணி கிடைக்காமல் வாடிய தமிழாசிரியர்களுக்காக இயக்கம் நடத்தி அவர்களுக்கு உதவினார்.

1980 ஆம் ஆண்டில் ந. மு. வே நாட்டார் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்தினார்.

2007 ஆம் ஆண்டில் சில தமிழ் அமைப்புகளை இணைத்து பேரணி நடத்தி பன்னிரு திருமுறைகள் பாதுகாப்பு மாநாட்டை கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடத்தினார்.

தம் 28 ஆண்டு ஓய்வூதிய நிதியை க்கொண்டு தஞ்சை வெண்ணாற்றங்கரையில் 7.5 ஏக்கர்நிலம் வாங்கிக் கட்டடம் கட்டி அங்கு தனித்தமிழ் புலவர் படிப்பும் தமிழாசிரியர் பயிற்சி வகுப்பும் நடத்தினார்.

தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தார்.

இவர் எழுதிய  நூல்கள்

  1. கண்ணகி சிலம்பீந்த காரணம் (1986)
  2. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் (1989)
  3. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும் (1989)
  4. சிந்தனைச்சுடர் (1993)
  5. தமிழ்க்குன்றம் (2007)
  6. சான்றோர் சிந்தனைகள் (2008)
  7. காவிரிக்கரை வேங்கடம் (2008)
  8. தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டரைய்யாவும் (2008) கனவும் கற்பனையும் (2008)பதிப்புப் பணி

தமிழ்ப்பொழில் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்

கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர்

தமிழவேள் நூற்றாண்டு விழா மலர்

கல்லூரி உயராய்வு மைய ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி (மருதம்)
ந. மு. வே நாட்டாரின் கட்டுரைகளை நூல்களாகப் பதிப்பித்தார்.

ந. மு. வே நாட்டார் எழுத்துக்கள் அனைத்தையும் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் 24 நூல்களில் வெளியிட பதிப்புக்குழுத் தலைவராக இருந்து உதவினார்.

இலக்கியப் பொழிவுகள்

திருச்சி வானொலியில் 1982 முதல் 2010 வரை பலமுறை பல்வேறு பொருண்மைகளில் பேசியுள்ளார்.

மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் ஆய்வுரைகள் நிகழ்த்தினார்.

தமிழகத்தின் பல இடங்களில் நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடுகளில் உரையாற்றினார்.

சிறப்புகள், விருதுகள்

தமிழக அரசின் உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவையில் இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் அமர்த்தம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது.தலைவர் கலைஞர் அறக்கட்டளை நாட்டார் கல்லூரியில் நிறுவப்பட்டது. இவ்வறக்கட்டளையின் தலைவர்.

நாமக்கல் தமிழகப் பெருவிழாவில் 'தமிழ்ச் சான்றோர்' விருது. (2001) 

தமிழவேள்' உமாமகேசுவரனார் விருது (2002)

குறள் நெறிக் காவலர்' திருக்குறள் கழகப் பொன்விழா, புதுகை (2004). 

தமிழ்ப் பேரவைச்செம்மல்' மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (2009)

மாமன்னன் இராசராசன் விருது, இராசராசசோழன் சதய விழா (2009)

'உலகப்பெருந்தமிழர்' ,உலகத்தமிழர் பேரமைப்பு (2009)

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...