ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சோழ மண்டலத்தில் கள்ளர்களுக்கு "தேவர்" பட்டம் உள்ளதா ?தேவர் என்ற பட்டம் முக்குலத்தோர்க்கும் பொதுவானது , இந்த பட்டம் மூவரில் யாருக்கு தொன்று தொட்டு உள்ளது என்று யாராலும் அறிதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.


கி.பி 1655 இல் திருமலை பின்னத்தேவர் தன்னரசாக மதுரை பகுதில் ஆட்சி செய்ததை நாம் அறிந்ததே ஆனால் சோழமண்டலத்தில் கள்ளர்களை தேவர் என்று அழைப்பதில்லை என்று சிலர் கூற்று.சோழமண்டலத்தில் கள்ளர்களை அந்த அந்த குடும்ப பெயரால் அழைக்கபடுவதால் தேவர் பட்டம் உடைய கள்ளர்களை மட்டுமே தேவர் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர். இதனை அறியாத சிலர் சோழமண்டலத்தில் தேவர் என்றால் கள்ளர் இல்லை என்று கூறிவருகின்றனர்.கிபி1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக  “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.


அவரை தொடர்ந்து அவருடன் கையெழுத்திட்ட மற்ற அதிகாரிகளும் தங்களை கள்ளன் என்றே கையொப்பம் இட்டுள்ளனர்.

“கள்ளன் பெரிய தேவன்”
“கள்ளன் பெருமாள்”

“கள்ளன் சீராளத் தேவன்”

கள்ளன் - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது இங்கு பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.


தஞ்சை பாப்பாநாடு பாளையக்காரர்கள் “விஜயதேவர்” என்ற பட்டம் உடையவர்கள். தஞ்சையின் பெரும் நிலப்பகுதிகள் இவர்களின் கீழ் இருந்தது. பாப்பாநாடு பாளையக்காரர் “விஜயதேவர்” சிலை மன்னார்குடி செயங்கொண்ட நாத கோவிலில் இன்றும் சிலையாக வழிப்பாட்டில் உள்ளது.

கள்ளர்களுக்கு தேவர் என்ற பட்டங்களை தவிர

" சோழங்கதேவர் , சோழகங்கதேவர் , சோழதேவர் , வள்ளாளதேவர், அச்சித்தேவர் , விசயத்தேவர், அம்பர்த்தேவர், அம்மாலைத்தேவர், அம்பானைத்தேவர், அம்மையத்தேவர், அரசதேவர், ஆஞ்சாததேவர், இராமலிங்கராயதேவர், இராயதேவர், கட்டத்தேவர், கண்டியத்தேவர், கலிங்கராயதேவர், கன்னதேவர், காலிங்கராயதேவர், கைலாயதேவர், சங்கரதேவர், சண்டப்பிரதேவர், சந்திரதேவர், சமயதேவர், சம்பிரத்தேவர், சாலியதேவர், சிவலிங்கதேவர், சோமதேவர், தெலிங்கதேவர், நரசிங்கதேவர், நரங்கியதேவர், நாகதேவர், நாரத்தேவர், நெல்லிதேவர், பருதிதேவர், பனையதேவர், பொய்ந்ததேவர், பொன்னதேவர், போசுதேவர், மங்கலதேவர், மங்கதேவர், மொங்கத்தேவர், மன்னதேவர், மெட்டத்தேவர், மேனாட்டுத்தேவர், வண்டதேவர், விசல்தேவர், வில்லதேவர், வீச்சாதேவர், வெண்டாதேவர், வெள்ளதேவர் "

என்ற பட்டங்களை உடைய கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்றும் சோழ மண்டலத்தில் வாழ்கின்றனர்.

இதில் சில பட்டங்களை மட்டும் பார்க்கும் போது அவை, சோழ கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

• சோழங்கதேவர், சோழகங்கதேவர் :

சோழகங்கன் என்னும் பட்டம், இராசராச சோழன் தன் தம்பி மதுராந்தகனுக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. 1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும், சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும், சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன், சோழ குச்சிராயன் என கூர்சரம், வேங்கியிலும் அமர்த்தியதாக தெரிகின்றது.

• சங்கரதேவர் :

சங்கர ராசேந்திர சோழன் உலா என்பது சோழர் குலத்தில், தோன்றிய மூன்ரும் குலோத்துங்கனுடைய தம்பியாகிய சங்கரசோழ னைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்டு பாடப் பெற்றது. சோழ அரசனை இந்தநூல், சங்கர சோழன் (காப்பு, 272) என்றும், சங்கர ராசன் (38, 115) என்றும், சங்கர வேந்தன் (114) என்றும், சங்கரன் (235, 337, 338) என்றும் கூறும்.

• நரசிங்கதேவர், நரங்கியதேவர்:

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர் கோவில்
கல்வெட்டு அரசு:வாணாதிராயர்; ஆண்டு: 14-ஆம் நூற்றாண்டு
செய்தி: செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........
மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......

• சிவலிங்க சோழன் (சிவலிங்க தேவர்) :

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் . இதில் சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான். இவன் பெயர் சிவலிங்க தேவர். சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

• அம்பர்த்தேவர்

கோச்செங்கட் சோழனுக்கு அம்பர்த்தேவர் என்றும் பெயர்.

• கண்டியத்தேவர் :

பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத்தேவர் வம்சத்தை சேர்ந்தவர்.

• கட்டத்தேவர் :

கட்டத்தேவர் என்ற பட்டம் சேதுபதி மன்னருக்கும் உள்ளது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர் சகம் 1692 (கி.பி.1770)ஆம் ஆண்டில் மக்களுக்கு உணவளிக்கவும் தண்ணீர்பந்தல் வைக்கவும் நிலக்கொடை வழங்கினார்.
திருவுடையாத் தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி கட்டத்தேவர்(கி.பி.1709-1723) அத்திïத்து என்ற ஊரில் 14 பிராம ணக்குடும்பங்களுக்கு வீடுகளும் நிலங்களும் அளித்தார். திருமலை ரகுநாத சேதுபதி கட்டத்தேவர் ( கி.பி. 1645-1670) கௌண்டினிய கோத்திரத்து அகோ பலையாவுக்கு நிலம் வழங்கனார்.
சேதுபதிகளின் அறப்பணிகளே செப்புப்பட்டயங்களில் பேசப்படுகின்றன. இதில் கட்டத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

• கன்னதேவர் , கன்ன(ர) தேவன்:

யாழ்ப்பாண அரசனான பரராசனின் உயிர்த்தோழன் கன்னதேவர் என்ற தொண்டை மண்டல அரசன் என வையாடல் (89,90) கூறுகிறது.

புதுச்சேரி, பாகூர் கல்வெட்டு ஒன்று கன்னர தேவன் (கி. பி. 962) பற்றிக் கூறுகிறது.

• சோழதேவர் :


சோழதேவர் என்பது சோழர்களின் பட்டமாகும்.

• சோமதேவர் :

திருக்காளத்தி இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இங்கே இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் ஒன்று உள்ளது.

• மேனாட்டுத்தேவர் :

சேரநாட்டின் ஒரு பகுதியாகிய வேணாடு என்னும் நாட்டை இராசராசசோழன் வெற்றி கொண்டு ஆண்டுள்ளான். ஒன்பதாம் திருமுறை பாடிய அருளாளருள் ஒருவர் வேணாட்டடிகள் என்பவராவார். வேணாட்டரையன் என்னும் பட்டமே மேனாட்டரையன் என்று திரிந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேனாட்டரையன் என்ற குறுநில மன்னன் நார்தாமலையில் மறைந்து கொண்டு முகமதிய அரசர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து பின்னர் நட்புரிமை கொண்டதாகவும் தஞ்சை ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட செப்பேட்டில் குறிப்பு காணப்படுகிறது. இப் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் தஞ்சை பூண்டி, புனவாசல் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

• வாசிதேவன் காலிங்கராயன் :

நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.

• அருமொழி தேவன்:

திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:
'ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது....... (தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2, பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது.வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ' அரையன் மகன்' என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் 'இவன்' உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்' என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.


பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன. அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை,மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம். இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.புதன், 7 பிப்ரவரி, 2018

சந்த்ராதித்ய குலதிலகன் கள்வனா இன சேரன் கோக்கண்டனிரவி
ஒருஅரசன் தன் பெயருக்கு முன்னர் உள்ள அவனது பெருமை, புகழ் பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும். முதலாம் இராசராசன் பெயருக்கு முன்பு சிறு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்திகள் எழுதப்பட்டது.

"மதுரை கொண்ட"
"மதுரையும் ஈழமும் கொண்ட "
"கச்சியும் தஞ்சையும் கொண்ட "
"வீரபாண்டியன் தலை கொண்ட "
"தொண்டை நாடு பாவின".....


என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது.

முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால் மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம்.

சி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார். இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி என்றும், சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி என்றும் உள்ளன.

அரசன் பெயர் "கோ" என்று சில கல்வெட்டுகளில் தொடங்கும். பிற்காலச்
சோழர் கல்வெட்டுகளில் "திரிபுவனச் சக்ரவர்த்திகள்" என்ற தொடர் அரசன் பெயருக்கு முன்னர் இருக்கும்.

பல்லவர்கள் கல்வெட்டு "பல்லவ குல திலக" என்றும்,
சேரர் கல்வெட்டுகள் "சந்திராதித்ய குல திலக" என்றும் அரசன் பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும்.

இதேபோன்றுதான் கோக்கண்டன்ரவியும் தன்னை "சந்திராதித்ய குல திலக" என்று தன்னைச்"சேரனாக" அடையாளம் காட்டுகிறான்.

கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் உள்ள ஒரு கல்வெட்டு கோயமுத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா
2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனா இன கோ 
3. க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி (ந) 
4. ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளிப் போ
5. ழி(யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்கு மணி 
6. யன் வயக்குக்குப் போந்த கவ (ரி) ன் மேக்கு நீர்மிணி வா
7. ய்க்(கா)லின் கிழக்கு செ(ங்)கந்(தி)டர்காக (க்) கவருபோழி உண்ணா
8. ழிகைப் புறமாக அட்டினேன் 
9. மணியன் வய............"
இந்த கல்வெட்டில் கொக்கண்டன் ரவி எனும் மன்னன் தன்னை சேரனின் குலத்தவனாக "சந்த்ராதித்ய குல திலகன்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டான்.

மேலும் "கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி" என்ற தொடரின் மூலம் தன்னை "கள்வர்" குலத்தினன் என்றும் தெரிவிக்கிறான்.

இந்த தொடரை வரலாற்றாய்வாளர் திரு. நடன .காசிநாதன் அவர்கள் " கலிநிருவ" என்ற வார்த்தையை வைத்து களப்பிரர் என்று சொன்னாலும் பழம்பெரும் கல்வெட்டு ஆய்வாளர் திரு. கே.வி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கோக்கண்டன்ரவியை சேரமன்னர்களில் ஒருவர் என்றுதான் சொல்கிறார். {ஆதாரம்☆ ஹிஸ்டோரிக்கல் ஸ்கெட்செஸ் ஆப் அன்சியெண்ட் டெக்கான், தொகுதி. 2}


கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் " கோக்கண்டன்" என்ற பெயரை முன்னொட்டாகக்கொண்ட இரண்டு மன்னர்கள் வருகிறார்கள். அவர்கள் கோக்கண்டன் வீரநாராயணன் மற்றும் கோக்கண்டன்ரவி ஆகியோர் ஆவர். சில கல்வெட்டுகளில் ரவிகண்டன் என்ற பெயரைக்கொண்டு காணமுடிகிறது. இவர்களை சேரமன்னர்கள் என்றுதான் திரு.கே.வி.சுப்பிரமணிய ஐயர் குறிப்பிடுகிறார்.

சோழர்களில் இரண்டு மன்னர்கள் கோக்கண்டன் என்று அழைக்கப்பட்டனர். தில்லைத்தானம் கல்வெட்டில் ஒரு சோழ மன்னர் "கோக்கண்டன்" என அழைக்கப்படுகிறான். இதேபோல இரண்டாம் ராஜராஜன் தக்கயாகப்பரணியில் கோக்கண்டன் என்று அழைக்கப்பெறுகிறான்.

உதாரணமாக சோழர்கள் கோக்கண்டன் என்ற பெயருடன் விளங்கும் ஒரு கல்வெட்டு உங்கள் பார்வைக்கு. ...

" ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்த மைப்ப ஒரு நிழல் வேண்டிங்கள் போலோங்கி ஒரு நிழல் போல் வாழியர் கோச்சோழன் வளங் காவிரிநாடன் கோழியர் கோக்கண்டன் குலம்".

இக்கல்வெட்டு சிறிது தமிழ் எழுத்திலும்பெரும்பாலான பகுதி வட்டெழுத்திலும் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த பெருவழிகளில் ஒன்றாக விளங்கிய "இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு " என்பது இதுவே ஆகும்.

இந்த ராஜகேசரிப் பெருவழிப்பாதை கல்வெட்டில் பயின்று வரும் "திரு நிழல்" என்பது ஆட்சி என்று பொருள் கொள்ளலாம் என மூத்த கல்வெட்டு அறிஞர். திரு.ஆர். பூங்குன்றன் ஐயா அவர்கள் சொல்கிறார். அவர் மேலும் இக்கல்வெட்டு பற்றி கூறும்போது.

"ஒரு நிழல் வேண்டிங் கள் போலோங்கி"
எனும் வார்த்தை" ஒப்பற்ற வெண்திங்களைப்போல புகழ் பெற்று விளங்குக".. என்றும்


" சந்திரகுலத்தைப்போல புகழ் பெற்று விளங்குக" என்றும் கூறுகிறார்.
இக்கல்வெட்டு சொல்லும் "நிழல்" என்பது நம்பிக்கைக்குரிய அணுக்கத்தொண்டர்களின் படைக்குழுவாகும்.


இச்சொல், காவல், ரக்ஷை, போன்ற சொற்களுடன் இணைந்து வருவதால் "நிழல்" என்பது பொருளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பணியினைச்செய்யும் பெருவழிப்பாதைகளில் பயணம் செய்த வணிகர்களின் பாதுகாப்புப்படை என்பது தெள்ளத்தெளிவு.

இப்படைப்பிரிவு பற்றிய கல்வெட்டு சான்றுகள் கேரளத்தில் மிகுதியாக கிடைக்கின்றன. மேலும் நிழல் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் வகையில் கேரள சாசனங்களில் சில சான்றுகள் கிடைத்துள்ளது {எம்.ஜி.எஸ்.நாராயணன். " த ஹண்ட்ரட் குரூப்ஸ் அண்ட் த ரைஸ் ஆப் நாயர் மிலிட்டியா இன் கேரளா" இண்டியன் ஹிஸ்டரி காங்கிரஸ், போர்ட்டி போர்த் செஸன், பர்ட்வென், 1983,பக்கம். 113-19}

இப்பெருவழிக்கல்வெட்டு கி.பி.10 ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு சொல்லும் கோக்கண்டன் முதலாம் ஆதித்தனே எனலாம். இதற்கு தஞ்சை மாவட்டம் தில்லைத்தானம் கல்வெட்டு சான்றளிக்கிறது.

அக்கல்வெட்டுத் தொடக்கத்தில்

" பல்யானை கோக் கண்டனாயின தொண்டை நாடு பாவிய ராஜகேசரியாலும் சேரமான் கோத்தாணுரவியாலும் "

என்ற பாடம்அமைந்துள்ளது.

இதிலிருந்து கோக்கண்டன் என்ற பெயருடன் சோழர்கள் மற்றும் சேரர்கள் இருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளதென்பதும் களப்பிரர்கட்கு எவ்வித சம்பந்தத்தையும் இந்த கல்வெட்டு தொடர் தரவில்லை என்பதும் தெளிவாகும்.

மேலும் தொண்டை நாடு பாவிய ராஜகேசரி யான முதலாம் ஆதித்தன் மீகொங்கில் ஆட்சி செய்த கோக்கண்டன் என்ற மன்னனை வென்றதால் அப்பெயரை தனக்கு சூட்டியுள்ளான்.

இதுபோக சேரமான் "கோத்தாணு ரவி"தான் " கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி " என்பது தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மீகொங்கில் சேரர்களும் சோழர்களுமே ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனரே தவிர அக்கால கட்டத்தில் களப்பிரர் இல்லை.

அங்கே அரசோச்சியவர்களாக
1. கண்டன்
2. கண்டன் வீரநாராயணன் 
3. கண்டன் ரவி
4. ரவி கண்டன் 
5. ரவிகோதை 
6. வரகுண பராந்தகன்


இவர்கள் யாவரும் தம்மை சந்த்ராதித்ய குலத்தவர்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர " களபோர குலம் " என்றோ "கலி" என்றோ சொல்லவில்லை.

மேலும் சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர் என்றும் அழைக்கப்பட்டது, சேரமன்னர்களின் இலச்சினை வில் ஆகும், வில்லவர் என்பது சேரனையும் குறிக்கும், வில்லவரை சோழன் வென்றதனால் வில்லவராயன் என்றும் வில்லவர்க்கு அரசன் என்றும் பொருள் படும்.

வில்லர், வில்லதேவர், வில்லவதரையர், வில்லவதரையனார், வில்லவராயர், வில்வராயர், சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர், கண்டன், கண்டராயன், கண்டவராயன் என்ற கள்ளர் பட்டங்கள் சேர மன்னர்களோடு தொடுர்பு உடையனவாக உள்ளன.

ஆய்வு : உயர்திரு. முனிராஜ் வாணாதிராயர்திங்கள், 5 பிப்ரவரி, 2018

சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளழகர் )
கள்ளர் நாட்டிலுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார். கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி, (கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்) 

சாட்டை போன்ற கம்பு, 
கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், 

காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) 


என அணிந்து மதுரை நோக்கி வருகிறார். (கள்ளழகர் கோயில் பார்ப்பனர்கள் கறுப்பானவர்களாக இருக்க என்ன காரணமோ)
.

மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.


கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அல்லது அழகர்மலை கள்ளர் அம்பலகாரரான நரசிங்கம்பட்டி திரு. இராமசாமி அம்பலகாரர் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்திற்குதான் முதலில் வருகிறார்


அங்குள்ள பதினெட்டாம்படி கோபுரத்திற்கு "தொண்டைமான்" கோபுரம் என்று பெயர் உள்ளது

கள்ளர் அழகர் கோவிலில் உள்ள ஓர் கோபுரத்தின் பெயர் தொண்டைமான் கோபுரம். கள்ளழகர் கோவிலின்‌ உள்ளே உள்ள ஒரே மண்டபம் மாங்குளம் கிராமத்தாருக்கு பாத்தியப்பட்டது. மாங்குளம் கிராமத்தார்கள் என்பவர்கள் மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர்கள். இவர்களுக்கே கோவிலும் பாத்தியப்பட்டது, முதல் மரியாதை,வடம் இழுப்பது அனைத்தும்.


அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது. அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு, தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது'.
.

இவனை மாயோன் என்றுதான் 'தொல்'காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே! கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர். அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர். பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.

சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.


கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.

திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று


இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் "கள்" ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை) அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார். 

அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை,

"சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று 
சோலை மலைநின்ற - பெருமாளே"
என்று திருப்புகழ் பாடிற்று.

சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர். மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர்.


அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; "மதில் சூழ் சோலைமலைக்கு அரசே" என்று பாடினார்.

.

இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சியளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும். 


கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர். அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும். கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர். 

முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.

"வஞ்சக் கள்வன் மாமாயன் 
மாயக் கவியாய் வந்துஎன் 
நெஞ்சம் உயிரும் அவையுண்டு 
தானே யாகி நிறைந்தானே"


என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.

இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, 'திருமால் இருஞ்சோலை' என்னும் பெயர் பெற்றது.

"அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை 
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை 
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை 
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை"


என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! --- * வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.
அழகர்கோவிலில் தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்
 
 

 
அழகர்கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாளான பௌர்ணமியன்றுநடைபெறும் “கள்ளழகர்“ தேரோட்டம் முடிகின்ற வரையில் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் இறைவனின் போர்கருவியான திருவாழியாழ்வார் (சக்கரத்தாழ்வார்) தேரோடும் வீதியில் வலம்வந்து திக்குத்தெய்வங்களுக்கு படையல் இடுகின்றார்.

கோவிலுக்கு வெளியே வரும் சக்கரத்தாழ்வார் ஆண்டுமுழுவதும் அடைக்கப்பெற்றுள்ள பதினெட்டாம்படிக்கோபுர வாசலைத்திறந்து அதன் வழியே வெளிவருவதும் அதே வழியில் திரும்பிச்செல்வதும் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

இத்தேரோட்ட திருவிழாவில் தேரினை இழுக்கும் பொறுப்பு மத்தம் மேலநாடு கிராமத்தவர்களின் பொறுப்பாக உள்ளது .

தேர் இழுப்பதனை மரியாதைக்குரிய உரிமையாகவே இவர்கள் கருதுகிறார்கள். தேரின் நான்குவடங்கள் முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தில் வாழும் கள்ளரினத்தவர்களும் 

அடுத்த இரண்டாவது வடத்தை “மேலத்தெரு” நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி ஆகிய கிராம கள்ளரினத்தவர்களும் 

தேரின் மூன்றாவது வடத்தை “வடக்குத்தெரு” வல்லாளபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, கள்ளந்திரி, ஆகிய கிராமத்தின் கள்ளரினத்தவர்களும், 

தேரின் நான்காவது வடத்தினை தெற்குத்தெரு கிராமத்தின் கள்ளரினத்தவர்களுக்கும் இழுக்கும் உரிமை பெற்றவர்கள்...

தேரோட்டம் துவங்குவதற்கு முன்னர் இம்மூன்று நாட்டவர்கள் அம்பலகாரர்கள் தலைமையில் தேருக்கு முன்பாக ஒன்றுகூடி மேளதாளங்களுடன் தாரை, கொம்பு முழக்கத்துடன் குலவையிட்டு ஆர்ப்பரிப்பர் பின்னர் நாட்டு அம்பலகார்களுக்கு 8 முழமுள்ள “நாகமடிப்பட்டு” கோயில் மரியாதை தரப்படுகிறது.

அப்போது 5 சீரகசம்பா தோசையும் 5 படி அரிசி பொங்கலும் பிரசாதமாக நாட்டார்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் தேய்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டவுடன் தேரின் மீது ஏறிய மத்தம் மேலநாட்டு அம்பலகாரர்கள் “வல்லம்” வீசியவுடன் கள்ளழகர் தேரோட்டம் தொடங்கும் .


அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பதற்கும் , அழகர் பற்றிய சில செவிவழி செய்திகளாக கூறுவது:

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது. 
.

அழகர் என்பவர் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்றும், இவர் கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி கொள்ளையடித்தும்; மாடுகளைக் கவர்ந்தும், மலையில் ஆட்சி நடத்தி வந்தார் என்றும்.

பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்-றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின. வடபகுதியில் இருந்து மீனாட்சி- சொக்கன் திருக்கல்யாணத்-திற்கு வருகின்ற பெருத்த சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது அழகரின் கள்ளர் படை வழக்கமும் ஆகும். கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவர் வழக்கமாயின!
.

பிற்காலத்திலும் அழகர் மலைக் கள்ளர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவர் அழகரின் பின் தோன்றல் ஆவார். பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்-கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை. திருமலை நாயக்க்கர் காலத்தில் கள்ளர்களுடன் இணக்கத்துடன் இருந்து பிறகு மதுரை காவல் கள்ளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 

சித்திரைத் திருவிழால இன்னும் பழைய மரபுகள் நிறைய இருக்கிறது. அன்று முதல் இன்றுவரை கள்ளந்திரி கிராமத்தினர்தான், கையில் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அழகர்கூடவே பாதுகாப்பாக வந்து செல்கின்றனர். இதுபோன்ற பல மரபுகள் இந்தத் திருவிழாவில் இன்னும் கடைபிடிக்கப்படுது

அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


கள்ளழகர் எட்கர் தர்ஸ்டசன் பார்வையில்


கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும் போது பதினெட்டாம் படி கருப்பர் கோவிலில் பதினெட்டாம்படியில் நின்று உறுமொழி சரியாக செயல்படுவேன் என பதினெட்டாம் படி கருப்பருக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும். பரிவட்டம் கட்டுபவர் பொய் கூறினால் சரியாக மூன்றாம் நாள் இறந்துவிடுவார். இதே நடைமுறையில் வேறுஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளர்களின் தலைமை கோவிலான கள்ளழகர் கோவிலில் கள்ளழகர் விஷ்ணுவாக பாளிக்கிறார் இவர் மீனாட்சியின் சகோதரர். மீன்களை போன்ற அழகிய கண்களை உடைய மீனாட்சி பாண்டிய மன்னனின் அழகிய மகள் சிவனை மணப்பதால் இங்கு பிராமணத்துவம், திராவிடமாக மாறுகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை அக்காலத்திலேயே சுமார் 3 லட்சம் பக்தர்கள் கண்டு களித்துள்ளனர் அம்மூன்று லட்சம் பேர்களில் கள்ளர்களே அதிகம்.

கள்ளர் அழகரை தூக்கிசெல்ல,வடம் பிடிப்பது முழுக்க முழுக்க கள்ளர்களே அதன்பின்பே மற்ற சாதியினர் இணைகின்றனர்.

கள்ளர்கள் தங்கள் தெய்வத்திற்கு இரத்த காணிக்கையாக கிடாய் வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

களரி ஆயுதமானது கள்ளர்களால் பயன்படுத்தப்படுகிறது. சில கள்ளர் திருவிழாக்களில் கள்ளர்கள் தங்கள் வளரிகளை பரிமாறிக்கொள்வதும் நடந்துள்ளது. இங்கே அழகரும் மதுரைக்கு வருகையில் கள்ளர்கள் பயன்படுத்தும் வளரிதடி, கடுக்கன், தடி, தலைப்பாகை போன்றவற்றை அணிந்தே வருகிறார்.

அழகர் கோவிலில் பலிகொடுக்கும் முன்பாக வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை போட்டு சிறுவர்களை அழைத்து எடுக்க வைக்கிறார்கள் அதில் வெள்ளையை எடுத்தால் வெற்றி என்பது அர்த்தம்.

ஆகவே அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பதை விட ககள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கள்ளர் திருவிழா என்பது சாலச்சிறந்தது.


வெள்ளியங்குன்றம் பாளையம் போலி செப்பேடு 
வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம். இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இடைக்காலத்தில் சில விசமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளன. வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670ஆம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம்,வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.

இதனால் கோவில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.

திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபரணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.

இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.

செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம்

போலி :1

சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.

சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.போலி :2ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர். திருமலை நாயக்கர் கிபி1659லே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர். இது இரண்டாவது திரிபு.


போலி: 3கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆனையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது. திருடியது வேடர்களா....? கள்ளர்களா .....?. இதில் கள்ளர் என சேர்ந்தததே கோவில் உரிமை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.போலி : 4இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது. திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும். அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள் ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்.


சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளர்களும் அழகர் கோவிளும் வடுக திருட்டும் புரட்டும்

வரலாற்றைக் கால நிரல் படுத்துவதில் ஏற்பட்ட காட்சிப் பிழையால் கொற்றக்குடியான கள்ளர் குடி குற்றக் குடியாகவே திராவிடம் பேசும் வஞ்சகர்களால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

வேல் போல நிமிர்ந்தும் வாளைப்போல கூராகவும் கோலோச்சி வாழ்ந்த குடி முக்குலத்தின் மூத்த குடி கள்ளர் குடி

நாட்டுப்புர வழக்கியல் ஆய்வாளரான வடுகர் தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலை மறுவாசிப்பு செய்த போது இரண்டு கட்டுரைகள் என் சிந்தையில் சிக்கிமுக்கி கற்களை உரசின.

1)அழகர் கோவில் அமைப்பும் தமிழக கோவில் அமைப்பும்

2)கள்ளரும்- அழகரும் - கள்ளழகரும்

இரண்டாவது கட்டுரையின் சாரம்சம் இதுதான் ஆதியில் அழகர் கோவிளுக்கும் கள்ளர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வடுக வந்தேரிகள் காலத்தில் அழகர் மதுரை வரும் போது கள்ளர்கள் அழகரை கொள்ளையிட்டனர் (நகைககள்- ஆபரணங்கள்). அதனால் பதறிய கோவில் நிர்வாகிகள் அழகர் உங்களுக்கும் பொதுவானவர் என உரைத்து சமரசம் செய்து கோவில் மரியாதை செய்தனர். பின்புதான் அழகர் கள்ளழகர் ஆனார்.

கொள்ளையிட்டதால்தான் கள்ளர்களும் அழகர் கோவிளுக்கும் தொடர்பு உண்டானது என்கிறார் தொ பா. (இவரின் முனைவர் பட்ட ஆய்வேடும் அழகர் கோவில் பற்றித்தான் - கள்ளர் என்ற தலைப்பில் இதே செய்திதான்)

வடுக திரவிட வாசிப்பின் தீட்டை மறு ஆய்வு செய்வோம்

அழகர் கோவில் கல்வெட்டுகளும் கள்ளர் சமூகமும்

1)பிற்காலப் பாண்டியர் 13 நூற்றாண்டு ஆண்டறிக்கை 270/192-30 விரத முடித்த பெருமாளான முனையதரையன் செய்வித்த தூண்.

2)நில விற்பனை ஆவணம் 13நூற்றாண்டு பாண்டியர் சிற்றூரூடையானான சோரன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் செய்த நிலதானம்.

இதில் வடதலை செம்பி நாட்டு கீழைக் கொடுமாளூரான மதுரோதைய நல்லூர் அரையன் சுந்தர பாண்டிய சேதிராயனுக்கும் காணி இருந்துள்ளது.

கையொப்பமிட்டோர்
செம்பிதரயன்
தொண்டைமான்,
விழுப்பராஜன்...

நில ஆவணத்தை ஒருங்கினைத்தவர் அமைச்சர் மழவராயர்

3) நில ஆவணம் 13 நூற்றாண்டு பாண்டியர் ..

மழவராயப் பேராறு குறிக்கப்பட்டுள்ளது

கையொப்பமிட்டவர்கள்.

உத்தம சோழ பாண்டிய விழுப்பரையன் .
ஆசி உலகமுண்ட தேவனான செம்பித்தரையன்.
கொங்கராயன்.
கோட்டூரூடையான் தொண்டைமான்

4) நில ஆவணம் ..ஊர்.க.எண்.54 ...
குலசேகர பாண்டிய தேவர்.
இராமன் கண்ணபிரானான கலிங்கடித்த பாண்டிய தேவர்.

5) நில ஆவணம் ஊர்.க.எண்.55
சடையவர்மர் குலசேகர பாண்டிய தேவர்

கையொப்பமிட்டோர்

பெருமண நல்லூர் மந்திரி ஆதித்த தேவனான பல்லவராயர்.
ஜெயங்கொண்ட சோழர் சீவல்ப தேவன்.
நாடாழ்வான் மழவராயர் நில ஆவணத்தை ஒருங்கினைத்துள்ளார்.

காடுவெட்டிக்கும் பல்லவராயனுக்கும் தனிக் காணி இருந்துள்ளது.

6)பாண்டியர்:13 நூற்றாண்டு .ஊர்.க.எண்.56

ஆதித்த தேவர் பல்லவராயனுக்கு விற்றுக்கொடுத்த நில ஆவணம் .

செம்பித்தரயனுக்கு தனி காணி இருந்துள்ளது

7) பாண்டியர்.13 நூற்றாண்டு. ஊர்.எண்.57-57A+பி௧ நில ஆவணம்.

இறைவனுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்பு செய்வோருக்கும் கொடுத்த நில தானம் (திருவாதிரை மார்கழி ஐப்பசி திங்கள் உணவுக்காக) முத்துக் கூற்றத்து கப்பலூரான மூன்று கரையார் கொடுத்தது ஆவணத்தை ஒருங்கினைத்தவர் முனையதரையன் .

கையொப்பமிட்டோர்.
பொன்னன் சூரியதேவனான
சேதிராயன்.
பல்லவராயன்.
தென்னவராயன்.
கண்காணி இராராஜ பல்லவராயன்.
விராடராயன்.

கப்பலூரூடையானான நம் இளை வித்தனான முனையதரையன்

புரவரி திணைக்கள நாயன் சோழதேன் பல்லவராயன்
பொத்தபிச் சோழன்

8) பாண்டியர் .13 நூற்றாண்டு .ஊர்.க.எண்.82

பாண்டிய மன்னன் மந்திரி இராமனான பல்லவராயன் செய்த நில தானம்.

கையொப்பமிட்டோர்
மீனவதரயன்
சொழபாண்டிய தேவன்

9) பாண்டியர்.13 நூற்றாண்டு.ஊர்.க.எண்.95

குன்னய தேவர் தன் தம்பி (வையசய தேவர்) பெயரில் செய்த நில தானம் . காணியுடையோர்.

பெருமாள் முனையதரயன்.
தென்னவன்
விழுப்பதரயன்.

10) பாண்டியர்..13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.100.

வல்லப தேவர் செய்த நில தானம்.

கையொப்பமிட்டோர்

நாராயண தமிழ் பல்லவராயன் பாண்டியதரையர்.
கண்ட நாடாழ்வான்.
வானாதிராயன்.
மழவராய சுந்தர பாண்டியன்

11) நில ஆவணம். பாண்டியர். 13 நூற்றாண்டு. ஊர்.க.எண். 116-122.

கையொப்பமிட்டவர்கள்
முனையதரையர்கள்.
வில்லவராயர்

12) நில ஆவணம்..பாண்டியர். 13நூற்றாண்டு.ஊர்.க.எண்.139 part 1

கள்ளிக்குடி(கள்ளர்?) கொண்ட விளாகமுள்ளிட்ட பற்றும். பாகனூர்(பாகனேறி) கூற்றத்துப் பற்றும்

13) நில ஆவணம் . குலசேகர பாண்டிய தேவர் 13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.139 iv v.

கையொப்பமிட்டோர் வில்லவதரயன் தொண்டைமான்.

14) நில ஆவணம். பாண்டியர் 13நூற்றாண்டு ஊர்.க.எண்.142.

திருவரங்க தேவனான ஈழத்தரையன்.
கப்பலூரூடையான் அரையன் இராமநான

15) பாண்டியர் 13நூற்றாண்டு.ஊர்.க.எண். 144

காலிங்கராயன் மகன் தொண்டைமான் எடுத்த கோபுரம் (இன்றும் அது தொண்டைமான் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது)

16) பாண்டியர்.13நூற்றாண்டு.ஊர்.க.எண். 147 தொண்டைமான் கோபுரம் .

மாவ லி வாணாதிராயன்

17) நில ஆவணம். விக்ரம பாண்டிய தேவர். ஊர்.க.எண்.150

களவழி நாடு மாவலி வாணாதிராயர்.
களவழி நாடாழ்வான் ..தமிழ்தரையன்

18) நில ஆவணம். பாண்டியர் 13-14. ஊர்.க.எண்.153-63 துண்டு கல்வெட்டுகள்.

மாவலி வாணதிராயன்.
பொத்தபி சோழன்.
திருவரங்க தேவனான விசயதரயன்.
வில்லவராயன்.
பள்ளனாற்(பள்ளன்?)குட்ட.
கப்பலூரான்.
மழவராயன்.

19) நில ஆவணம் பாண்டியர்(13நூ)ஊர்.க.எண்.188(போசாள மன்னன் பெயரில் சந்தி)

கையொப்பமிட்டோர்.
அழகிய பாண்டிய விழுப்பரையன்.
முடி வழங்கும் பெருமாளான விக்ரம பாணடிய விச்சாதரர்.
அரையன் விரதமுடித்தானான பல்லவராயன்.
மழவராயன்.
வில்லதரயன்.
திணைக்கள நாயகம் அழகனான கச்சிராயன்
கலிங்கத்தரையன்.
விசயராயன்
திணைக்கள நாகம் அழகிய தேவனான அரிந்தவன் விழுப்பரயன்.
திணைக்கள நாயகம் பழதீபரயன்.
திணைக்கள நாயன் சேணாவரயன்.
அழகன் நாராயண தேவனான விழுப்பதரயன்.
உலகுடைய தேவர் வழுதுங்கரயர்.
ஏனாதி கலிங்கத்தரயர்.
பல்லவராயர்.

20) நில ஆவணம். விக்ரம பாண்டிய தேவர்(13)ஊர்.க.எண்.189.

சோழவந்தான் இராஜேந்திர பல்லவராயன்

21)நில ஆவணம். பாண்டியர். 13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.190.

கையொப்பமிட்டோர்.

வில்லவதரையன்.
குருகுலராயன்.
கள்ளி(கள்ளர்)நாட்டு
காடுவெட்டியான்.
குலசேகர சேதிராயன்.
விழுப்பரயன்.
பொத்தப்பிச் சோழன்.
களவழி நாடாழ்வான்.
ஆதித்த தேவனான பூழித்தரையன்.
ஒருங்கினைத்தவர் காலிங்கராயத் தொண்டைமான்

22) நில ஆவணம் சடையவர்ம குலசேகர பாண்டியத் தேவர். 1203.ஊர்.க.எண்.192

கலிங்கராயர்.
சுந்தர தேவரான பல்லவராயன்

23) விஜய நகர அரசு 1535.ஊ.க.எ.197.செட்டியார் நில தானம்.

கையொப்பம் குலசேகர விழுப்பரயர்.

24) பச்சையப்ப முதலியார் (அகமுடையார்) 1 இலட்சம் வராகன்.

அதிகைமான்.
அணுக்கர்
பன்னாட்டான்.
திருமலைத் தேவர் என நீளும் கல்வெட்டுகள்.

கொடை கொடுத்தல். நில வற்பனை நில உடமை. நில ஆவணத்தில் கையெழுத்திடும் உரிமை. பாண்டிய மன்னருக்கு முடி வழங்கும் உரிமை. அமைச்சர் முதல் அணுக்கர் படை வரை. கள்ளர் குடியினர் அழகர் கோவில் கல்வெட்டு முழுதும் வியாபித்துள்ளனர். பின் எப்படி கொள்ளையிட்டதால் உரிமை பெற்றனர். வடுகர்கள் தங்களை மட்டுமே மன்னர்களாக காட்டிக் கொள்ள புரட்டுகளை கட்டமைத்து புனைவுகளை வரலாறாக்கி திராவிடம் வளர்க்கிறார்கள் திருடர்கள்

இன்றும் இதே பட்டங்கள் உடைய கள்ளர்கள் வாழ்ந்து வருவதும், தமிழ் அகராதி கள்ளர்கள் பட்டங்களாக குறிப்பதும் நாம் அறிந்ததே.

சேதிராயன்
செம்பிதரயன்
தொண்டைமான்,
மழவராயர்
கொங்கராயன்.
தேவர்.
நாடாழ்வான்
காடுவெட்டி
பல்லவராயன்.
தென்னவராயன்.
மீனவதரயன்
முனையதரயன்.
தென்னவன்
விழுப்பதரயன்.
பாண்டியதரையர்.
வானாதிராயன்.
வில்லவராயர்
ஈழத்தரையன்.
காலிங்கராயன்
கச்சிராயன்
கலிங்கத்தரையன்
விழுப்பரயன்
அதிகைமான்.

கள்ளிக்குடி(கள்ளர்)
பாகனூர்(பாகனேறி) கூற்றத்துப் பற்றும்

கள்ளர் அழகர்

.
நன்றி
திரு. முனிராஜ் வாணாதிராயர்
திரு : அநன் கார்த்திக்
தொகுப்பு: பா. விக்னேஸ்வர் மாள்சுத்தியார்  

தொண்டைமானின் மெய்கீர்த்தி

 அறந்தாங்கி  தொண்டைமானின் மெய்கீர்த்தி "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" ( சோழர்கள் சூரிய குலம் ) &qu...