புதன், 29 மே, 2019

கேப்டன் R . தமிழ்செல்வன் ராங்கியர் MLA



மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த தமிழ் செல்வன், பாஜக சார்பில் போட்டியிட்டு 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ளும் சிவசேனா கட்சியை சேர்ந்த வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட தமிழ்செல்வன் கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். 

தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி கிராமம், குடும்ப பட்டம் ராங்கியர். உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் என்ற பதவியிலுள்ள தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறார். 

தமிழர்கள் இடையே மட்டுமல்ல. மும்பையில் மிகவும் பிரபலமானவர், 57 வயதாகும் தமிழ்செல்வன். இவர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம், 2008 ல், மும்பையில் நடந்த பாக்., பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல். செல்வன்,ரயில்வேயில் பார்சல் கான்ட்ராக்டராக உள்ளார். கடந்த, 2008 ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சி.எஸ்.டி., எனப்படும் சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்தார் செல்வம். பாக்., பயங்கரவாதி, அஜ்மல் கசாப் மற்றும் அவர் கூட்டாளி,சராமரியாக சுட்டனர். யாரோ பட்டாசு வெடிக்கின்றனர் என,தனது ஊழியரை போய் பார்த்து வர சொன்னார்.

துப்பாக்கியால், சுடப்படும் தகவல் கிடைத்ததும், தன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பார்சல் அலுவலகத்துக்குள் பாதுகாத்தார். துப்பாக்கி சத்தம் ஓய்ந்ததும், பார்சல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் மரவண்டி மூலம், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அவருடைய ஊழியர்களும் இதில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, இந்த நடவடிக்கையால், குண்டடிப்பட்ட 40 பேர், உயிர் பிழைத்தனர். அதன் பிறகு தமிழ்செல்வன், தமிழர்கள் இடையேயும், மும்பைவாசிகளிடமும் ஹீரோவாகி விட்டார். 

மும்பையின் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காயமடைந்து உயிருக்கு போராடிய 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்த இவரது சேவைக்காக, மாநில ஆளுநர் பாராட்டையும், விருதையும்பெற்றுள்ளார். 

இவரது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 3 லட்சத்து 43 ஆயிரத்து 162 என்று அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின் பட்டியல் சொல்கிறது. 

மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர், பிரதிஷா நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகளும் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார கேடு ஏற்படுவது வழக்கம். எனவே அந்த தமிழ் மக்களுக்காக கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுக்கப்போவதாக வெற்ற பெற்ற பிறகு அளித்த பேட்டியில், தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். 

1980-90க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரசின் வி.சுப்பிரமணியன் என்பவர் மகாராஷ்டிர சட்டசபையின் தமிழ் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன்பிறகு, கால் நூற்றாண்டுக்கு பிறகு அந்த மாநிலத்தில் இருந்து ஒரு தமிழ் எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2018 ல் ஆசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்.



மும்பை மலாடு மேற்கில் உள்ள நியூ ஒர்லம் சர்ச் மைதானத்தில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி சார்பில் தமிழர் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு பா.ஜனதாவை சேர்ந்த சயான்கோலிவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார்.


அவர் பேசுகையில்,, 

கடற்படையை உருவாக்கிய தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை மும்பை துறைமுகத்தில் திறந்து வைத்து இருக்கிறோம். மும்பையில் கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தமிழ் மக்களுக்காக சேவை ஆற்றி வருகிறார். மராட்டியம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த போது, மராத்வாடா, விதர்பா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கொடுத்து மராட்டிய மக்களுக்கும் உதவினார். அவரது இந்த சேவையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.

என்னை சந்திக்கும்போதெல்லாம் அவர் மராட்டிய தமிழ் மக்களின் நலன் மற்றும் தேவை குறித்தே பேசுவார். 

வியாழன், 23 மே, 2019

கௌரி வல்லபத்தேவரை அரியணையில் அமர்த்திய தொண்டைமான்




" மருதுபாண்டியரிடம் இருந்து தப்பி வந்த கௌரி வல்லபத்தேவருக்கு அடைக்கலம் கொடுத்து, மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்றியவர் தொண்டைமான்! கௌரி வல்லபத்தேவர், தொண்டைமான் பாதுகாப்பில் அறந்தாங்கியில் இருந்தபோது சின்ன சுப்ப ஐயர் என்பவர் கௌரிவல்லபத்தேவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் கௌரி வல்லபத்தேவர் , மாணிக்காத்தாள் எனும் கள்ளரின பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.பிற்காலத்தில் சிவகங்கைக்கு திரும்பிய கௌரி வல்லபத்தேவர், சின்ன சுப்ப ஐயரை, தனது பிரதானியாக நியமித்தார்.கௌரி வல்லபத்தேவர்- மாணிக்காத்தாள் தம்பதிக்கு, குழந்தை பாண்டிய தேவர், நமச்சிவாய தேவர், ராமசாமித்தேவர் எனும் மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு சிறுவயல், முடிகண்டம், குருந்தம்பேட்டை ஆகிய கிராமங்கள் அளிக்கப்பட்டது.


தற்ப்போதைய சிருவயல் ஜமீன்தார் இந்த குடும்பத்தினரே. 1801ல் தொண்டமான் பட்டம் உள்ள ஈசநாட்டுகள்ளர்கள் 200 குடும்பங்களை கொரிவல்லபரின் உதவிக்காக தொண்டமான் அனுப்பியுள்ளார். அவர்கள் பெரும்பாலும் அரண்மனை பணியில் இருந்தவர்கள். சிவகங்கை -இளையான்குடி சாலையில் கூத்தான்டன் என்ற ஊரில் வசித்துவருகிறார்கள். சிலர் தங்களது மானிப நிலங்களில் சில கிராயங்களில் வாழ்கிறார்கள். பெரும்பாலும் தற்போது உயர் அரசு அதிகாரிகளாக உள்ளார்கள். காவல்பணிகளிலும் சிலர் உள்ளார்கள். 1960களிலேயே அவர்களில் ஒருவர் நாசாவில் விஞ்ஞானியாக பணிபுரிந்துள்ளார்.




சிவகங்கை மேதகு ராணி சாஹிபா கௌரிவல்லப D.S.K.மதுராந்தகி நாச்சியார் 

------sivaganga zemindary its origin and litigations (1899)

கள்ளர் கங்காணி




மலேசிய தோட்டங்களில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கங்காணிகள் மிகுந்த ஆளுமை செலுத்தினர். ஆண்டுதோறும் நடந்த விழாக்களின் போது 'துரைமார்கள் என்று அழைக்கப்பட்ட ஐரோப்பிய தோட்ட மேலாளர்கள் கங்காணிகள் முன்னாடி செல்வதற்கு பின்னாடி சென்றார்கள்.



அதே போல் பர்மாவில் போய் வட்டிக் கடை வைப்பது, இரண்டு எஸ்டேட் தொடர்பான வேலைகள் செய்வதில், முதலாவதில் செட்டியார்களும், இரண்டாவதில் கள்ளர் இன மக்களும் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கலந்தே இந்தத் தொழில்களைச் செய்தனர் என்றே சொல்லலாம். எப்படி என்றால், முதலில் போய் வட்டிக்குக்கொடுப்பது, பின் தொழிலைக் கற்றுக் கொண்டு தனியே கடை வைத்து, கணக்குத் தெரியாத  பர்மிய மக்களை ஏமாற்றி பொருள் சேர்த்து பின் அவர்களின் இடங்களை பெரும் அளவில் வாங்கிக் குவிப்பது/ ஆக்கிரமிப்பது. பின் அவர்களையே அடிமைகள் ஆக்கி வேலை செய்ய வைப்பது அல்லது இங்கே இருந்து அடிமைகளாக மக்களைக் (பெரும்பாலும் தலித்துகள்) கொண்டு சென்று வேலை வாங்குவது.  இந்த இடத்தில்தான் அடிமைகளை "மேய்க்கக்" கூடிய, சற்றும் இரக்கம் அற்ற, உடல் உரம் மிக்க கங்காணிகளின் தேவை ஏற்படுகிறது.  அதற்காக செட்டிநாட்டில் இருந்து பெரும் அளவில் ஆதிக்க சாதியினர் அனுப்பப்பட்டனர்.

எஸ்டேட் வைத்து இருந்தவர்கள் "முதலாளி வீடு" என்றும், இந்தக் கங்காணிகள் "சோக்ரா" என்றும் சொல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இன்றும் "சொக்கரா வீடு/ வகையறா" என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதை தவிர கணக்கு வழக்குப் பார்ப்பதற்காக என்று சிலர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கணக்கு பிள்ளை வீடு என்று அழைக்கப்பட்டனர்.



காவல் தெய்வம் மாவீரர் வங்காருதேவர்



16 ஆம் நூற்றாண்டில் பிறமலை நாட்டில் இருக்கும் பாப்பாபட்டி நாட்டில் பத்துதேவர் வகையாறவின் ஒன்பதாவது தேவா் கீரிதேவா் வகையாறவில் முத்த மகன் வங்காருதேவர்.

இன்றும் கீரிப்பட்டியில் கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள் அவரது வகைறாக்கள். இவர் வளரி வீசுவதில் வல்லவராக திகழ்ந்தவர். இவர் கன்னிவாடி சண்டையில் வளரி வீசியதாக வழக்கு கதைகள் கூறுகின்றன.

உத்தப்ப நாயக்கனூர் ஜமினில் கன்னிவாடி ஜமீன்தார் சம்பந்தம் செய்திருந்தார். ஒரு நாள் விருந்தின் போது கன்னிவாடியார் உத்தப்ப நாயக்கனூர் ஜமினிடம் தங்கள் ஊரில் ஒரு நாவிதன் வாள் வீச்சில் கெட்டி காரனாக இருப்பதாகவும், கத்தியை காட்டி வரி வசூல் செய்வதாகவும் , அவனை அடக்க நல்ல வீரன் யாரும் உண்டா எனக் கேட்டார்.


வங்காரத்தேவருக்காக வரையப்பட்ட பிரத்தியேகமான படம்


உத்தப்பநாயக்கனூர் ஜமீந்தார் தர்பாரை கூட்டி விசாரித்ததில் வங்கார தேவரை பற்றி கேள்வி பட்டு அவனை வரச் சொல்லி பனங்காய்க்கு குறி வைத்து வீச சொல்லி சோதித்தார். ஆனால் வங்கார தேவரோ ஜமீந்தார் தலைக்கு குறி வைத்து தலை பாகையை வளரியால் தாக்கி சோதனையில் வெற்றி பெற்றார் பின் ஜமினில் வேலைக்கு சேர்த்து, கன்னிவாடிக்கு அனுப்புகிறார்.

கன்னிவாடி ஜமின்தாருக்காக ஒரு நாவிதனை வளரி வீசி தலையை துண்டாக்கினார். முடிவில் அந்த நாவிதனின் தாயார் இவர் மீது விஷ மருந்து தடவி விட, உடல் வெந்து இறந்தார்.

ஐயா சுந்தரவந்தியதேவன் எழுதிய "பிறமலைகள்ளர் வாழ்வும் வரலாறும் நூலில் இவர் வரலாறு இருக்கிறது.



இவர் நடுகல் கீரிபட்டியில் உள்ளது. 1980 களில் இவர் வாரிசுகளால் கோயில் எழுப்பபட்டுள்ளது.

எனதருமை முக்குலத்து உறவுகளே நமது முன்னோர்களின் வரலாறு தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நாமும் அவர்களை போல் வாழ வேண்டும் .உடல் வலிமை, போர் பயிற்சி , அறிவியல் சார்ந்த ஆயுத நுணுக்கம், நாட்டு மருத்துவம் , மாந்திரிகம் , ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் தான் நம் முன்னோர்களை மன்னவரும் , மற்றவரும் மதித்தனரே அன்றி அற்ப பணத்தால் அல்ல.
எனவே நாம் மேற்சொன்னவற்றை பயில முயல வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து செல்ல வேண்டும். இது அடியேனின் வேண்டுகோள்.


மேலக்கால் சுளிமாயன், விராலிமாயன் கருவாட்டுப்பொட்டல் போரிலும், " ரெட்டை வீரத்தேவன்" என்பவரும் சிறந்த வளரி வீரர்கள் ஆவர்.
மன்னர் மருது பாண்டியர்கள் வளரி வீசுவதில் சிறந்தவர்கள் தான். ஆனால் மேற்சொன்னவர்கள் மருது பாண்டியர்களுக்கு 300 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்கள்.

பதிவு

அன்புடன்
ரா. கார்த்திக் ராஜா MBA .பொது செயலாளர்அகில இந்திய தமிழர் வளரி சங்கம்மாமன்னர் சிலம்ப கூடம்சென்னை.Mob. 9840329669

புதன், 22 மே, 2019

பொதுவுடைமை போராளி, தியாகி தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார்




பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) போராளி; கொண்ட கொள்கைக்காக உயிரைநீர்த்த உண்மையான தியாகி :-





மறைந்த. தியாகி தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார் அவர்களின் நினைவு தூண்:-

இடம்:- இராயமுண்டான்பட்டி (இராயமுண்டார்), பூதலூர் தாலுக்கா, தஞ்சை மாவட்டம்.

தோழர் தியாகி.என்.வெங்கடாச்சலம் அவர்கள் தஞ்சைவளநாட்டு கள்ளர் நாடுகளில் ஒன்றான ஏரிமங்கலநாட்டில் கொடும்புறார் பட்டந்தாங்கிய ஈசநாட்டுக்கள்ளர் குடும்பவழி தோன்றல்.

சிறுவயதிலேயே கம்யூனிச கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சாதி ஒழிப்பு, தீண்டாமை,ஏழை,எளிய தொழிலாளர்களுக்கான போராட்டம் என்று பொதுவுடைமைக்காக தன் வாழ்வை அர்பணித்தவர்.

1925ம் ஆண்டு தோன்றி 1977ம் ஆண்டில் தான்சார்ந்த கள்ளர் சமூகத்தினாராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனில் எந்த அளவு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து மறைந்திருப்பார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றும் தியாகியின் குடும்பம் ஆலமரமாய் பரந்து விரிந்து வாழ்கிறது



கால் நூற்றாண்டு காலம் தஞ்சைமண்ணில்மார்க்சிய லட்சியத்திற்காகதன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டமகத்தான மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் கொடும்புறார்.

விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், நகரப்பகுதிகளில் தொழிற்சங்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டதுடன் பல தலைசிறந்த ஊழியர்களையும் உருவாக்கிய தலைவர் தோழர் என்.வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினராக தஞ்சை மாவட்ட விவசாயி சங்க தலைவராக ஆற்றிய அரும்பணிகள் மிகச்சிறப்பானவைகளாகும்

தஞ்சைநகரில் கட்சிக்கு அலுவலகம் உருவாக்கியது, ஓட்டல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியது, டான்டெக்ஸ், தஞ்சை நூற்பாலை, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை போன்றஇடங்களில் தொழிற்சங்கத்தை உருவாக்கியதிலும், செயல்படுத்தியதிலும் அவரது பங்கு சிறப்பானவைகளாகும்

அவர் நடத்திய வர்க்கப் போராட்டங்களும், ஆதிக்க சாதிக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான போராட்டங்களும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

இரட்டை கிளாஸ் முறைக்கு முடிவு

நில உச்சவரம்பு சட்டத்திருத்தம் கோரி 1961ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய அறப்போரில் பங்கேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் 1965-66 ஆம் ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் அரசால்தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தோழர்என்.வி. அவர்களும் கடலூர் மத்திய சிறையில் இருந்தார்

அதன் பிறகு அவசர காலநிலையின் போதும் மிசா கைதியாக ஓராண்டுகாலம் திருச்சி மத்திய சிறையில் இருந்தார்.தலைமறைவாக இருந்தும் கட்சி பணியாற்றினார்

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் ஊழியராக தன் பணியைத் தொடங்கிய என். வெங்கடாசலம் தன் வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்காகவே குறிப்பாக அடித்தளத்தில் சமூகக் கொடுமையினால் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலைநிமிர வைப்பதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.

அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்கும், அவர்களின் கூலி உயர்விற்கும் கட்சியின் வழிகாட்டுதலுடன் ஏராளமான போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டவர்.தான் வாழ்ந்த மண்ணிலிருந்தே சமூகநீதிக்கான போராட்டத்தை தொடங்கினார் என்.வி.

அவரது ஊரான இராயமுண்டான்பட்டியில் ஒரே டீக்கடைதான் இருந்தது. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கடைக்குள் சமமாக அமர்ந்து எல்லோரையும் போல் டீ குடிக்க முடியாது. கடையில் ஓட்டை வழியாக அவர்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் குவளையில்தான் டீ குடிக்க வேண்டும்.

இக்கொடுமைக்கு முடிவுகட்டி அனைவரையும் சமமாக அமர்ந்து டீ குடிக்க வைத்தவர் தோழர் என்.வி. சாதி இந்துக்கள் தெருவில் செருப்பு அணியக்கூடாது என்ற வழக்கத்தை முறியடித்தவர். சுடுகாட்டில் கூட வேற்றுமையை அனுசரித்த கொடுமைக்கும் முற்றுப் புள்ளி வைத்தவர்.

சிறையில் இருந்தபடியே பஞ்சாயத்து தலைவர்

அவர் வாழ்ந்த இராயமுண்டான்பட்டி, வெண்டயம்பட்டி, சொரக்குடிப்பட்டி என்ற மூன்று வருவாய் கிராமங்கள் சேர்ந்தது வெண்டயம்பட்டி ஊராட்சி. இவ்வூராட்சியில் மூன்றுமுறை அவரை மக்கள் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். ஒரு முறை சிறையில் இருந்தபடியே பஞ்சாயத்து தலைவரானார்.

அந்தக்கிராமப் பஞ்சாயத்தில் அவர் தலைவரான பின்தான்பல மாற்றங்கள் நடந்தன. சுத்தமானகுடிநீர், நடுநிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, நூலகம், நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளித்தது போன்ற ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெற்றன.

இது போன்ற நடவடிக்கைகள் அங்கிருந்த ஆதிக்கசாதியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.தாழ்த்தப்பட்ட மக்கள், புழு பூச்சிகளைப் போல் நடத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் தலை நிமிர்ந்து நடப்பதையும் ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ளமுடியவில்லை

அதுவும் தங்களுடைய சமூகத்தை சேர்ந்த ஒருவரே இந்தமாற்றங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளத்தயாராய் இல்லை. தோழர் வெங்கடாசலத்தின் மீது ஆத்திரத்தை மட்டுமல்ல வெறுப்பையும் ஏற்படுத்தியது. இவரை தீர்த்துகட்டவேண்டுமென்ற வெறித்தனம் அவர்களிடம் உருக்கொள்ள ஆரம்பித்தது.

தஞ்சையின் சகாப்தம்

வெங்கடாசலம் மிகவும் துணிவு மிக்கவர்.ஏழை எளிய மக்களை கொடுமைப்படுத்துவதைக் கண்டு ஆத்திரப்படுவார். எதிர்த்துநின்று போராடும்படி கூறுவார். தானும் அதற்கு உதவுவார். மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அதிகாரிகளுடன் நேரடியாகமோதுவார். இயக்க ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார். சிறந்த பேச்சாளர். 

பிரச்சனைகளை தீர்வுகாணும்போது எதிரியின் வலிமையைப் பற்றி அறிந்து கொண்டு அதனை அச்சமின்றி எதிர்கொள்வார். தவறு செய்தவர்களை கடுமையாக சாடுவார். தோழர்களிடம் மென்மையாக நடந்து கொள்வார். 

தோழர் என்.வி தஞ்சை மாவட்டத்தின் ஓர் சகாப்தம்.தஞ்சைத்தரணி விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சி நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் போல் மேற்கு தஞ்சை மாவட்ட மக்களின் மகத்தான தலைவராக செயல்பட்டவர் 

தோழர் என்.வி.1977 செப்டம்பர் 21 ஆம் தேதியன்று செந்தலை கட்சி கிளையின் மாநாட்டை நடத்திவிட்டு வந்தவரை காணவில்லை என்கிற செய்தி காட்டுத் தீயாய் பரவியது. ஆயிரக்கணக்கானோர் பதறி அடித்து ஆவேசமாகத் தேடினர். ஈரமான இடத்தை எல்லாம் தோண்டிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரது உடலைக்கூட காணமுடியவில்லை.

இரக்கமற்ற ஆதிக்கக் கூட்டம் கடத்திச் சென்று அவரைக் கொலை செய்து உடலைக்கூட பார்க்க முடியாமல் செய்தது என்பது தெரிந்தது. அரசும், காவல்துறையும் வழக்கம்போல் மெத்தனம் காட்டின. வெங்கடாசலத்தைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கைக் கோரி தஞ்சையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆவேச ஊர்வலமும் திலகர் திடலில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

தோழர் என்.வி.யின் உடலைத்தான் அவர்களால் அழிக்க முடிந்தது; அவரது உணர்வுகளை ஆயிரமாயிரம் தோழர்கள் ஏந்தி நடைபோடுகின்றனர். தியாகிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டானார் என்.வி

.தோழர் என்.வியின் வீர காவியம் மக்களின் மனங்களில் மென்மேலும் விதைக்கப்பட வேண்டும். ஆதிக்க சக்திகளும் ஆளும் அரசுகளும் கூட்டுக் களவாணிகள் என்பதை உணர்த்திட தோழர் என்.வி.யின் வாழ்க்கை வரலாற்றை ‘வீரவேங்கை வெங்கடாசலம்’ என்ற புத்தகத்தை தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார். 

தோழர்என்.வி.யுடன் இயக்கப்பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் இன்றளவிலும் அவரின் நினைவுகளை எண்ணி பெருமிதத்துடன் பேசி வருகிறார்கள். 

தோழர் என்.வி. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்கிறார்.

தோழர் என்.வி.யின் தியாகத்தைப் போற்றுவோம். அவர் விட்டுச் சென்ற இலட்சியப் பயணத்தை தொடர்வோம்.


கட்டுரையாளர் : சிபிஎம், மாவட்டச் செயலாளர், தஞ்சை ஆர்.மனோகரன்

களஆய்வு :திரு. பரத் கூழாக்கியார்

சனி, 18 மே, 2019

கருப்பூர் கோனேரிராஜபுரம்


தஞ்சையில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் ரோட்டில் கருப்பூர் கிராமம் உள்ளது. இந்த ஊர் கோனேரிராஜபுரம் எனவும் அழைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டில், ஆர்க்காட்டு கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கிராமத்திலுள்ள சிவன் கோவில் சிதைவுற்ற நிலையில் தற்போது உள்ளது.

பல்லவர் காலத்தில் தஞ்சையிலுள்ள கருப்பூர் கிராமம் செழிப்புடன் திகழ்ந்தது. சோழ மண்டலத்தை கி.பி., 985ல் இருந்து கி.பி., 1014ம் ஆண்டு வரை முதலாம் ராஜராஜன் ஆண்டார். நிர்வாக வசதிக்காக, வளநாடு, நாடு, கூற்றம், ஊர் என, பிரித்தார். இதில், ஒரு வளநாடு தான் பாண்டிய குலாசனி.

இதற்குட்பட்ட ஆர்க்காட்டு கூற்றத்தில் அமைந்த ஊரே, மீபிரம்பில். இதுதான் தற்போது கருப்பூர் கிராமம். இக்கிராமத்தில், நெடுஞ்சாலையையொட்டி சிதைவுற்று அழியும் நிலையில், ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேசர் கோவில் உள்ளது.


தஞ்சாவூர், கோனேரிராஜபுரம், கருப்பூரில் கள்ளர் குடியினரின்
  • சோழதிரியர்
  • வாண்டையார்
  • நாட்டார்
  • மழவராயர்
  • தென்கொண்டார்
  • கண்டியர்
  • சேதிராயர்

பட்டமுடையவர்கள் உள்ளனர்.


சோழர் ஆட்சிக்கு பிறகு சோழமண்டலம், பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது பாண்டிய குலாசனி வளநாடு என, பெயர் மாற்றம் பெற்று, பாண்டிய குலபதி வளநாடு என ஆனது. கி.பி.,1,311ல் தமிழகம் நோக்கி படையுடன் டில்லி சுல்தான் தளபதி மாலிக்காபூர் வந்தார். இவரது படையினர், கோவில்களை தாக்கினர்.































தாக்குதலில் சிதைந்த கருப்பூர் அருகேயுள்ள செந்தலை சிவன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காக, அருகிலுள்ள கருப்பூர் சிவன் கோவில், நியமம் காளாபிடாரி கோவில், அமண்குடி சமணக்கோவில்களின் இடிபாட்டு பகுதிகள் எடுத்து வரப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், திருமதில், மண்டபம் எடுத்து கட்டப்பட்டது. புதுப்பித்த பகுதியில், மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாசனங்களை காணமுடிகிறது.

இவற்றில் ஒரு சாசனம், செந்தலை சுந்தரேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை ஒட்டிய திருமதிலில் உள்ளது. இதில், ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்பூரான மீபிரம்பில் என்னும் சொல் காணப்படுகிறது. மீ பிரம்பில் என்னும் ஊர் பெயர், பின்னர் கோனேரிராஜபுரமாக மாறியது.


இதற்கு, இப்பகுதி, கி.பி., 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசு ஆதிக்கத்தின் கீழ் வந்ததுதான் காரணம். சோழமண்டலம், தொண்டைமண்டலம் என, இரு பகுதியை ஆண்டவர் கோனேரி தேவமகாராயன் (ஆட்சிக்காலம் கி.பி., 1,485-1495). இம்மன்னன் பெயரால், கருப்பூர் மீபிரம்பில் கோனேரிராஜபுரம் என, ஆனது.

இங்குள்ள கற்றளி கோவிலான சிவன் கோவில், சோழர் காலத்தில் 8 பரிவாரங்களுடன் திகழ்ந்தது. ஆனால், சிவன் கோவில் தற்போது முழுவதும் சிதைந்துள்ளது. கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் விஜயநகர மன்னர் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் வீரன் சிற்பம், 12 செ.மீ., வட்டத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையில் சோழர் கால சிவலிங்கம், அருகே மற்றொரு சன்னதியில் அதே காலத்திய அம்மன் சிற்பம், உள்சுவரில் பிற்கால ஓவியம் உள்ளது. 

கோன்றி, 
கோனேரி 
கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார்

கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். 

ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. 

திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,

‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’

என்று பாடுவதால் அறியலாகும்.

இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா  என்றால் க
ள்ளரை  தவிர வேறு யாருக்கும் இல்லை.

கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்டமுடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும்.




கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.
 
கருப்பூர் மக்களின் சமயபுரம் பாதயாத்திரை 



கருப்பூரில் ராஜராஜேஸ்வரி கோவிலில் பால்குடம் திருவிழா




கருப்பூர் வெற்றிலை











வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்