திருவெறும்பூர், திருஎறும்பியூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. திருச்சிராப்பள்ளி மாநராட்சிக்குள் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. எறும்பீஸ்வரர் கோயிலின் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கவேல் முனையதரையர், முருகையா நாவலங்கியர்
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள கள்ளர் நாட்டின் வீரசிங்க மகாநாடு சேர்ந்தது நவல்பட்டு கிராமம் உள்ளது. இங்கு காடவராயர் பட்டமுடைய கள்ளர் மரபினரே அம்பலகாரர்களா உள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் கள்ளர் சமுதாயத்தினர், 300 தலைக்கட்டு உறவினர்கள், ஸ்ரீபொன்னலாண்டி அம்மன் என்ற கோவிலில் பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர்.
இது குலதெய்வமாகவும், அப்பகுதியினர் வழிபடும் முக்கிய தெய்வமாகவும் உள்ளது.
விஜயதசமியான கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கோவில் அம்பலத்தாருக்கு முதல் மரியாதை செலுத்தப்படும்.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி காடவராயர்
இங்கு உள்ள கள்ளர் மரபினரின் பட்டங்கள்
அயிரபிரியர்
காடவராயர்
காடுரார்
வளம்பர்
கவிராயர்
கருப்பட்டியார்
அய்யன் மழவராயன்
திருவெறும்பியூர்-உடையார் கோயிலில் திருவிழாவிற்காக களவழி நாட்டில் உள்ள எருமைக்குளம் கிராமத்தை, அய்யன் மழவராயனின் ஆலோசனையின் பேரில் அரசன் தேவதான-இறையிலி வழங்கினார்.
இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி
இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி கோயிலுக்கு நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த காரைகாச்சி (கள்ளரில் காரையாட்சி / காரைக்காச்சி பட்டம் உடையவர்கள் ) கரையினர் வணங்கி வருகின்றனர்.
நவல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நிலம் கொடுத்த கொடைவள்ளல் P.வைத்தியலிங்கம் காடுறார் ஆவார்.
திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு நவலி குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில், பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள், 450 வீரர்கள் மேலாக கலந்துகொள்வார்கள்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும், அதனைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்படும்.