ஞாயிறு, 2 ஜூலை, 2023

உக்கடை தேவர்


அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் பள்ளி தந்த அருளாளர்

 
கல்கி இதழ் 10-10-1954






The first known zamindar of Ukkadai was Salya Thevar.

உக்கடை எஸ்டேட் என்று அழைக்கப்படும் ஊரானது தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம், பாபநாச வட்டத்திற்குட்பட்ட, அம்மாப்பேட்டை அருகில் அமைந்துள்ள கள்ளர் மரபினரின் "தேவர்" பட்டம் தாங்கிய, பாரம்பரிய உக்கடை ஜமீன் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்.

பாரம்பரியம் மிக்க ஜமீன் உக்கடைத் தேவர்களின் முன்னோர்களில் 17 ஆம் நூற்றாண்டில் சால்யா தேவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.  சால்யா தேவருக்கு பின்பு வந்தவர்கள் மத்தியில் வெங்கடாச்சல தேவரைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகவே கிடைக்கப் பெறுகிறது. 

கள்ளர் மரபை சேர்ந்த, தஞ்சாவூர் பாப்பா நாட்டை தலைமையாக கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னர்கள் "" விஜயத்தேவர் "" என்ற பட்டமுடையவர்கள். அதே போல தஞ்சையில் மற்றொரு பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த உக்கடை தேவர்களும் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தனர். சோழர்களுக்கு பிறகு தஞ்சையில் தேவர் பட்டம் தாங்கியவர்கள் சோழர்களின் வழி வந்த குறுநில மன்னர்களான பாப்பா நாடு விஐயதேவர்களும் மற்றும் உக்கடை தேவர்களும் ஆவர்.

கள்ளர் மரபை சேர்ந்த குறுநில மன்னர்களான கந்தர்வக்கோட்டை பாளையம் "பண்டாரத்தார்", கல்லாக்கோட்டை பாளையம். "சிங்கம்புலியார்",  மதுக்கூர் பாளையம் " கோபாலர் " பாப்பாநாடு பாளையம் "விஜயதேவர்", உக்கடை ஜமீன் "தேவர்", அய்யம்பேட்டை சாவடி ஜமீன் "நாயக்கர்", பூண்டி ஜமீன் "வாண்டையார்",  என்று தஞ்சையின் நான்குபுறமும் அரணாக இருந்தார்கள். 


கள்ளர் மரபினர் தஞ்சையில் சோழ மன்னர்களின் ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட நாயக்கர், மராட்டியருக்கு எதிராகவும் செயல்பட்டனர் மேலும் அவர்களது ஆட்சி காலத்திலும் தங்களது அதிகாரத்தையும், படைபலத்தையும் தக்க வைத்திருந்தனர். 



நாயக்கர்களும், மராட்டியர்களும் தஞ்சையை கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில், பல போர்களில் கள்ளர்களின் உதவியை நாடியே நின்றனர். நாயக்கர் ஆட்சியில் கள்ளர் மரபினரின் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்களும், மராட்டியர் ஆட்சியில் கள்ளர் மரபினரின் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.




இதைப்போல் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கிழங்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது தஞ்சை மராட்டிய அரசர்களிடம் இருந்தும், கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தும் கருவூலத்தை கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது என வாழ்ந்துவந்த கள்ளர் மரபை சேர்ந்த இராமலிங்க படையாட்ச்சியை பிடித்துக் கொண்டு வர உக்கடை தேவரிடம் உதவி கேட்கப்பட்டது.

(கருப்பட்டிப்பட்டி கள்ளரில் கருப்பையா படையாச்சி

படையாட்சி பட்டம் என்பதால், இவரை பள்ளி (வன்னியர்) சாதியாக நினைக்கின்றனர். தற்போது புதுக்கோட்டை ஆலங்குடி கந்தர்வகோட்டை பகுதியில் படையாச்சி பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்கின்றனர். 

படையாட்சி பட்டம் உள்ள சாதிகள்:

கள்ளர் பட்டம் – படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
பள்ளி பட்டம் – படையாட்சி
சவளைக்காரர் பட்டம் – படையாட்சி
இருளர் பட்டம் – தேன் படையாட்சி


Census of India 1951 தஞ்சையில் படையாச்சி கள்ளர் என்று கள்ளரில் படையாச்சி பட்டம் உடையவர்களை குறிப்பிட்டுள்ளார்கள்.




இந்த இராமலிங்க படையாட்ச்சியை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் தஞ்சை மராட்டிய அரசினராலும், கிழக்கிந்திய கம்பெனியாலும் எடுக்கப்பட்டது. ஆனால் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அப்போது அந்த வட்டாரத்தில் பெரும் செல்வாக்கோடு படையுடன் இருந்த உக்கடை வெங்கடாச்சல தேவரிடம் கிழக்கிந்திய கம்பெனி உதவியை நாடியது.

இராமலிங்க படையாட்ச்சியை பிடிக்கும் பொறுப்பை வெங்கடாச்சல தேவர் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய கள்ளர் படையை வைத்து இராமலிங்க படையாட்ச்சியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் வெங்கடாச்சல தேவரின் கள்ளர் படையின் சில கள்ளர்களே இராமலிங்க படையாட்ச்சியை சிறையிலிந்து மீட்டு தப்பிக்க வைக்கிறார்கள்.

வெங்கடாச்சல தேவர் மறுபடியும் பிடித்து அவரை சிறையில் அடைக்கிறார். இதன் மூலமாக கிழக்கிந்திய கம்பெனிக்கும் வெங்கடாச்சல தேவருக்கும் நட்பு ஏற்படுகிறது.


உக்கடைத்தேவர் குடும்பத்தின் உக்கடை ஜமீன் வி. ராஜேந்திரகுமார தேவரின் மகன் ரா. விஸ்வநாத தேவர், மருமகள் சுபாஸ்ரீ திருமண காணொலி வலம் வந்தது. அந்த காணொலியில் வயது, பாலினம், சாதி, மதம், பணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு ஜமீன் உக்கடைத்தேவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் காலில் விழுந்து வணங்கினார்கள் மேலும் மணமக்கள் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். இதனை காணொளியில் பார்த்த பலர் வியப்புடனும், ஆச்சரியத்துடனும் மற்றும் சிலர் தவறுதலாகவும் எண்ணிவிட்டார்கள். இந்த மரியாதை அதிகாரத்தின் மூலம் பெறப்பட்டதல்ல, 21 ஆம் நூற்றாண்டில் அதற்கான சாத்தியமும் இல்லை. அதற்கான காரணத்தை வரலாற்றின் 150 ஆண்டுகள் பின்னோக்கிச்  சென்றோமானால்

கும்பகோணத்தில் ஏழை எளிய மக்கள் வரி செலுத்தவில்லை என்று பெரும்பாலான நிலங்களை பிரிட்டிஸ் அரசு ஏலத்தில் விட்டது. அதனால் பெரும்பாலான ஏழை மக்களின் நிலங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் வெங்கடாச்சல தேவர் ஏலத்தில் வந்த அனைத்து ஏழைகளின் நிலங்களையும் அவரே வாங்குகிறார்.

ஏலத்தில் எடுத்த நிலங்களை மீண்டும் அதே ஏழை,எளிய மக்களிடமே கொடுத்து அவர்களின் நில உரிமையை பாதுகாத்தார்.

வெங்கடாச்சல தேவர் நேரடியாக ஏழைகளுக்கு உதவி செய்தார்.

உக்கடையில் உள்ள மக்கள் வெங்கடாச்சல தேவரை ஏழைகளின் இரட்சகராகவே பார்த்தனர் என்று ஆவணங்கள் கூறுகிறது.

இவருக்கு பின்பு குறிப்பிடத்தகுந்த நபராக வருபவர் அண்ணாசாமி தேவர், தஞ்சையில் உள்ள இராஜா மிராசுதார் மருத்துவமனையில் கிபி1893ல் புறநோயாளிக்களுக்காக மருந்தகத்தை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தஞ்சை இராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கு எண்ணற்ற கொடைகளை அளித்ததால் இராணி எலிசபெத் கையால் certificate of merit வாங்கியுள்ளார்.

டெல்லி தர்பாரில் மரியாதை செய்யப்பட்ட ஒரே மிராசுதாரர் அண்ணாசாமித் தேவர் மட்டுமே....!

மேலும் தன்னுடைய எஸ்டேட்டில் பொது மக்களுக்காக முழு விவசாய நிலமாக மாற்றினார். அதன் மூலமாக சில விவசாய சம்பந்தமான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

அப்போதைய விவசாயத்துறை மெட்ராஸ் மாகாணத்தின்
 இயக்குனர் மன்னார்குடிக்கு வந்தபோது விவாசாயம் சம்பந்தமான பல ஆய்வுகளை கொடுத்துள்ளார் அண்ணாசாமி தேவர் அவர்கள்.

கிபி1906ஆம் தஞ்சையில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் உக்கடைத் தேவரின் எஸ்டேட்டில் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பயிர்கள், காய்கறிகள் பல தங்கம் மற்றும் வெள்ளி பதங்களைப் பெற்றது.

நோயுற்றவர்களுக்கு மருத்துவ கிடையாக பல கொடைகளை அளித்துள்ளார், அதேபோல் ஏழை மக்களுக்கு தினந்தோறும் அன்னதானம் அளித்துள்ளார் என அன்னாசாமி தேவருக்கு இராவ் பகதூர் பட்டம் செனட் மூலமாக அறிவித்து அதனை வழங்கிய சர் அர்த்தூர் லாலே புகழாரம் சூட்டினார்.

கிபி1911ம் ஆண்டு பொது மக்களுக்காக அவருடைய சேவையை உணர்ந்த அன்றைய பிரிட்டிஸ் மன்னர் 5ஆம் ஜார்ஜ் அரசபிரதியாக அண்ணாசாமி தேவரை கெளரவித்தார்.

தன் வாழ் நாள் இறுதிவரை கொடைத்தன்மையில் சற்றும் சலைக்காமல் வாரி வழங்கிய வள்ளலாக வாழ்ந்தர் என்று அன்றைய அரசு புகழாரம் சூட்டியது.

உக்கடை அண்ணாசாமி தேவர் விருப்பப்படி மாரியம்மை பஞ்சரத்தினம் என்ற நூல் எழுதப்பட்டது.

ஏழைப்பங்காளனாகவே வாழ்ந்துள்ளார் என்பதே நிதர்சனம். இப்போது புரியும் ஏன் உக்கடையில் உள்ள மக்கள் ஏன் உக்கடைத் தேவரின் குடும்பத்தின் மேல் இவ்வளவு பற்றும், பாசத்துடன் உள்ளார்கள் என்று.


தஞ்சை மாவட்டடம், அம்மாபேட்டையில் இருந்து கோயில்வெண்ணி செல்லும் சாலையில் கோயில்வெண்ணிக்கு சற்று முன்னர் இடது புறம் ஒரு எரிபொருள் நிரப்பு மையம் (petrol bunk) ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் சாலையில் ஒரு மைல் சென்றால் உக்கடை அடையலாம். 



இங்கு வடகிழக்கு மூலையில் ஒரு சிவாலயம் உள்ளது. உக்கடை ஜாமீன் தேவர் குடும்பத்திற்கு சொந்தமான கோயில் இது, கிழக்கு நோக்கியது, பெரிய வளாகத்தின்உள்ளே சிவன் கோயில் மற்றும் ஒரு மாரியம்மன் கோயிலும் உள்ளது. காலை மாலை என இரு வேளை பூசை நடக்கிறது .

கோயில் வெண்ணி சிவாலயம் ; கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திருவெண்ணியுடையார், ஊர் பெயர் வெண்ணிநகரம் என்றிருக்கிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசு பாடல்பெற்றது. இங்கு உக்கடை தேவர் சத்திரமுண்டு.



தஞ்சை மாவட்டம் செம்மங்குடி கிராமத்தில் ஸ்ரீமடம் முகாம் செய்திருந்தபோது பெரியவாளுக்கு வைசூரி போடிருந்தது. உக்கடைத் தேவர் குடும்பம் பெரியவாளிடம் அளவிடமுடியாத பக்தியுடையது. பொருட்செல்வமும் குருபக்தியும் அந்தக் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. பெரியவாளுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு, (தஞ்சை) புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு நூற்றுக்கணக்கான இளநீர் அபிஷேகம் செய்தார்கள்.



தமிழ்நாட்டிற்கு காந்தியார் வந்த போது (16-9-1927), தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை ஹவுஸ்ஸில் தங்கியிருந்தார்கள். 

உமாமகேசுவரம்பிள்ளை, உக்கடைத் தேவர், ஆகியோருக்கு
 காந்தி பேட்டி அளித்தார் மற்றும் பாப்பநாடு அரையர் கே. நடராஜன் விஜயாத்தேவர் முதலிய பல பிரமுகர்களையும், காந்திஜி சந்தித்துப் பேசினார். அரசியலிலும் பல சாதனைகள் படைத்தனர்.

உக்கடை ஜமீன் ஏ. அப்பாவுத் தேவரின் மகன் அ. விஸ்வநாத தேவர் ஆவார்.

உக்கடை ஜமீன் அ. விஸ்வநாத தேவரின் மனைவி வி. ஜானகி அம்மாள், மகன் வி. ராஜேந்திரகுமார் தேவர்.

ஜானகி அம்மாள், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரிச் செயலரும்,  தாளாளருமான கி. துளசி அய்யா வாண்டையார், முன்னாள் அமைச்சர் கி. அய்யாறு வாண்டையாரின் அண்ணன் மகளாவார்.

உக்கடை ஜமீன் வி. ராஜேந்திரகுமார் மகன் ரா. விஸ்வநாத தேவர், மருமகள் சுபாஸ்ரீ.







Ukkadai estate is a zamindari estate in the Papanasam taluk of Thanjavur district in Tamil Nadu, India. It is administered by a family of the kallar caste and covered more than 6,000 acres. The administrative headquarters was the village of Ukkadai.

The most popular among the zamindars was Venkatachala Thevar who was known for his loyalty and support to the East India Company. In the eighteenth-century security of person and property was endangered by men of the robin hood type, but this enterprising benefactor assisted the east India company to bring these notorious characters within the grip of the law.

At that time there lived Ramalingam padayachi (Padayachi is the one of surname of the Kallar caste) , a notorious and desperate dacoit, who was a great menace to the safety of the public, and who, at the head of a gang of robbers as desperate as himself, openly defied the Government, and plundered the Government Treasury.

The East India Company sought the aid of Venkatchala Thevar, and the latter rendered willing service to the police in arresting the outlaw and in bringing him to justice. But, by the help of his gang, this desperado made his escape from goal, and the Government, Placing its trust in the ability of Venkatachala Thevar, specially deputed him to trace and arrest the runaway.

This successfully accomplished, and the Government, recognizing the services of the captor, determined to offer him a valuable bracelet set with rubies and diamonds. His Excellency, Lord Elphinstone, the then Governor of Madras, in response to an invitation, visited the village of Ukkadai in 1840, and he not only formally presented Mr. Thevar with the bracelet from the East India Company, but on his own behalf handed to him another jewel of similar value.

These two emblems of honour are still preserved in the family, and are worn on very important occasions.

Rao Bahadur Annasamy Thevar was known for his social activities. He helped construct a dispensary for outpatients at the Raja Mirasdar Hospital in Thanjavur in 1898. Thevar was awarded a Certificate of Merit during the Diamond Jubilee of Queen Victoria.

Appavoo Thevar, desired to develop education in his rural area. He started Ukkadai Appavoo Thevar Higher Secondary School in 1958.






நன்றி

Southern India by Somerset plane

Playne, Somerset; J. W. Bond; Arnold Wright (1914). Southern India: Its History, People, Commerce, and Industrial Resources. pp. 492–494.

அன்புடன்
சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்