திங்கள், 12 மார்ச், 2018

கீழ்வேங்கை வளநாடு - கள்ளர் நாடுகள்



கீழ்வேங்கை வளநாடு என்பது தஞ்சை கள்ளர்நாடுகளில் ஒன்று. கீழ்வேங்கை  நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்:-

01 .பரிதியப்பர் கோவில்
02 .உப்பாங்கரை
03 .களிதீர்த்தால் குடிக்காடு
04 .கீழ உளூர்
05 .மேல உளூர்
06 .சூரக்கோட்டை
07 .சின்ன பருத்திக்கோட்டை
08 .பெரிய பருத்திக்கோட்டை
09 .தும்பதிக்கோட்டை
10 .சின்ன பொன்னாப்பூர்
11 .பெரிய பொன்னாப்பூர்
12 .தலையாமங்கலம்
13 .தாந்தோணி
14 .குலமங்கலம்
15 .கொடமாங்கொல்லை
16.மன்றாயர் தெரு
17 .மன்றாயன்குடிகாடு

இங்கு உள்ள கள்ளர்களின் பட்டங்கள்

1) ஆலத்தொண்டமார்
2)  மன்றாயர்
3) முதலியார்
4) ஓந்திரியர்
5) அண்ணுத்திப்பிரியர்
6) ஆர்சுத்தியார்
7) வன்னியர்
8) கண்டியர்
9) அரியபிள்ளை
10) பொன்னாப்பூண்டார்
11)  ராஜாப்பிரியர்
12) கடம்புரார்


கீழ்வேங்கை நாடு கல்வெட்டில்

சிற்றறையூர் என்னும் சித்தூர்
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் கோவில் கூடலூர் நாட்டின் கீழ் வருகிறது. இராஜகேசரிவர்மனின் 4 ம் ஆண்டு கல்வெட்டு (வடபுறச்சுவரிலுள்ள சாசனம்)  கிடைத்துள்ளது. இவரை கண்டராதித்தன் என அடையாளம் கண்டுள்ளனர். இவரது அதிகாரியான மஹிமாலய இருக்குவேள் என்னும் பராந்தக வீரசோழன் என்பவர் இக்கல்வெட்டில் காணப்படுகிறார்.





ராஜராஜர் கல்வெட்டு ஒன்று  கீழ்வேங்கை நாட்டை சேர்ந்த புலியூரைச் சேர்ந்த கிழவன்  வைத்த நுந்தாவிளக்கு தானம் மற்றும் அவ்விளக்கு எரிய நெய்தானத்திற்கு கொடுத்த காசுகள் பற்றிய குறிப்புள்ளது.
அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், 

பருத்தியப்பர் கோயில், மேலவுளூர், தஞ்சாவூர்.

மூலவர் :   பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்
உற்சவர்:   அம்மன்/தாயார்:  மங்களாம்பிகை,மங்களாம்பிகை
தல விருட்சம்:   அரசு 
தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம் 
பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர் :  பரிதிநியமம், திருப்பரிதி நியமம்
ஊர் :   பரிதியப்பர்கோவில்
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பதிகம்   :  திருஞானசம்பந்தர் - 1
நாடு :  கீழ்வேங்கை














சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.

குதிரைச்சேவகன் குதிரைக்கு புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.

லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் சிபி சக்கரவர்த்தி கோயில் கட்டினான். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம்  சூர்யா குளத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். ஆலயத்திற்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம் பின்பும் உள்ளது. தலமரம் அரசமரம்.

பொன்னாப்பூர் அருள்மிகு சீதுளிஅம்மன் செல்லியம்மன் சித்திரை பெளர்னமி திருவிழா




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்