திங்கள், 12 மார்ச், 2018

தேனி கள்ளர் நாடு



தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் என்ற ஊர்களிருக்கும் நாட்டுக்குச் சிலர் பூழி நாடெனப் பெயர் கூறுவராயினும், அங்குள்ள கல்வெட்டுகள் அப் பகுதியை அளநாடு எனக் குறிக்கின்றன.

தேனி பகுதியில் கள்ளர் நாடு அமைப்பாக இல்லை, கள்ளர் நாட்டிற்க்கு எல்லையாக ஆண்டிப்பட்டி தான் இருந்தது என்று சொல்வார்கள். அன்றைய காலத்தில் தேனி ஒரு அடர்ந்த காடாக இருந்தது. மேகமைலை, குரங்கனி போன்ற காடுகள் நிறைந்த பகுதி.

தொண்டைமான் வளநாடாக குறிக்கப்பட்டுள்ள தற்போதைய தேனி, வீரபாண்டி,- கம்பம் பகுதிகள்:-





உதாரணமாக தேனி பக்கத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு C. A. வெள்ளைய தேவருக்கு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரிக்கப்பட்டது. தேனி மக்களவை தொகுதி :- ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான்.

தேனி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர்கள்  "சொல்வேந்தன்" கம்பம் செல்வேந்திரன் தேவர், மக்கள்  செல்வர் டி. டி. வி. தினகரன் முனையதிரியார் மற்றும்  ஆர்.பார்த்தீபன் தேவர் 




தேனி மாவட்டத்தின் பெரும்பான்மையாக 65% கள்ளர்கள் உள்ளனர்.

அளநாடு என்று அழைக்கப்பட்ட நாட்டினை இராசசிங்கன் என்ற மதுரையை அரசாண்ட இராசேந்திர பாண்டிய மன்னனின் தம்பி இராசசிங்கனுக்கு ஆற்றுவளம் நிறைந்த அளநாட்டைக் கொடுத்து, ஆட்சி நடத்தச் சொன்னான். இராசசிங்கன், தனது தாத்தா வீரபாண்டியன் எழுப்பிய கௌமாரியம்மனையும், திருக்கண்ணீசுவரரையும் வழிபட்டு, கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தவன் மானியமாக நிலங்களையும் வழங்கினான்.






















திருக்கோயில் முன்பு காவல் தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். முன் மண்டபத்தை கடந்து கம்பத்தடி மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில்தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படும். மகா மண்டபத்தை அடுத்து கருவறையில் அன்னை கௌமாரியம்மன், பிராகாரத்தை சுற்றி விநாயகர், கன்னிமார் சந்நிதியும்,  நவகிரக மண்டபமும் அமைந்துள்ளன. அதன் அருகில் திருக்கண்ணீசுவரர் கோயில் அமைந்துள்ளது. 


சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோவிலும் உள்ளது.







கூடலுாரில் பழமையான கூடலழகிய பெருமாள் கோயில் உள்ளது. பூஞ்சோலை தம்பிரான் என்ற மன்னர் கட்டியது. அவர் தற்போது கேரளாவில் உள்ளார். மேலும் கூடலூரில் ஈஸ்வரன் கோயில், கம்பத்தில் கம்பராயர், மற்றும் கண்ணன் கோயில் பூஞ்சோலை தம்பிரான் கட்டியது தான். கூடலூர் அழகர் கோயிலுக்கு பேயத்தேவர் குடும்பத்திற்கு முதல் மரியாதை


சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படும் . கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து  அண்ணல் பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, உற்சவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவைகள் மூலம் அபிேஷகம் நடத்தப்பட்டம். கொசவபட்டி பங்காளிகள் கும்பு கோயில் மாடு பிடித்து வந்து சுவாமிக்கு மரியாதை செலுத்துவர். மங்கள வாத்தியம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், கோனை கொம்பு, பொம்மை ஆட்டம் மற்றும் மாடு ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் ண்ணல் பேயத்தேவர் வாரிசுகளால் வழங்கப்படும். கூடலூர் நகராட்சி இடம் பேயத்தேவர் தானமாக கொடுத்தது. (கூடலூர்) கூடல் அழகிய பெருமாள் கோயிலுக்கு 20 ஏக்கருக்கு மேல் தானம் வழங்கி உள்ளார். அன்னசத்திரம் கட்டி உள்ளார். பிராமணர்களுக்கு பிரமோதயம் வழங்கி உள்ளார். தலித்களுக்கு நிலம் மற்றும் கோயில் இடம் வழங்கி உள்ளார்.



அழகர் கோயில் பிராமணர்களுக்கு பூசாரிக்கு பேயத்தேவர் வழங்கிய வீடு. சுமார் இவர்களுக்கு மூன்று வீடும் நிலமும் வழங்கி உள்ளார்.


பேயத்தேவரின் அன்னசத்திரம்


கூடலூர் நகராட்சி பேயத்தேவர் பேரன் இலவசமாக வழங்கியது


பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தேனி கள்ளர்களும் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். அதனால், அவர்கள் எல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் நாலா திசைகளிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். 



பென்னிகுயிக் நண்பர் அண்ணல் பேயத்தேவர், கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர், மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLA,  இந்த மண்ணில் தோன்றிய கள்ளர் குல மாமணிகள்.



தேனி மாவட்டம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளின் சார்பாக 100,200 மீட்டர் ஓட்டத்தில் கழந்துகொண்டவர் மதிப்பனூர் சாமி கும்பிடும் குடும்பத்தார்,  அஜித் குமார் தேவர். இந்தியாவிற்காக 100மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியா சார்பில் துருக்கியில் நடைபெற்ற பந்தையத்தில், உலக அலவில் இந்தியாவிற்காக ஓடி வெங்களபதக்கத்தையும் வென்றவர் ஆவார்.

9ஆம் வகுப்பு வரை இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர்.




தேனி மாவட்டம் கூடலூரில் ஏழை எளிய மக்கள் படிப்பறிவு பெற காரணமாக அமைந்த திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளியை கட்டியவர், 1961-ல் பெரிய கருப்பன் தேவர் ( கருமாத்தூர் கோயில்) ஆவார்


சங்க கால நடுகல் (பொ.ஆ.மு 400 - பொ.ஆ.மு 300)

புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள சங்கத் தமிழ் எழுத்து பொறித்த கல்வெட்டுக்கள் எழுத்தமைதியுடன் கீழ் தரப்பெற்றுள்ளன

மேற்குறித்த மூன்றும் நடுகல் வகையைச் சார்ந்தவை. ''கல்'' என்ற தொடர் பெரும்பாலும் இறந்தவருக்காக எடுக்கப்பெறும் நடுகல்லையே குறிக்கும். மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுள் இரண்டு கல்வெட்டுக்கள் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை. ''ஆகோள் '' என்ற தொடர் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டு (எண்: 3) பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என இக்கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வெளியிட்ட ஆய்வறிஞர்களுள் ஒருவரான கா. ராஜன் அவர்கள் கருதுகிறார். 

முதல் கல்வெட்டின் முன் பகுதி உடைந்துள்ளது. முதல்வரியில் “..அன் ஊர் அதன்” என்றும் இரண்டாவது வரியில் “..ன் அன் கல்” என்றும் இடம்பெறுகிறது. இந்த ஊரைச்சேர்ந்த இவருக்காக எடுக்கப்பெற்றது என்று கூற வருகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளதால் ஊரின் முழுப்பெயரையும் வீரரின் முழுப்பெயரையும் பெற இயலவில்லை.

இரண்டாவது கல்வெட்டு ''வேள் ஊர் பதவன் அவ்வன்'' எனக் காணப்பெறுகிறது. வேள் ஊரைச்சேர்ந்த பதவனின் மகனாகிய அவ்வனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் இது. இதில் முதலில் “அவ்வன்” என்ற பெயர் எழுதப்பெற்றிருக்கவேண்டும் பின்னரே அவ்வனின் தந்தை பதவனின் பெயரும் ஊரின் பெயரும் சேர்க்கப்பெற்றிருக்கவேண்டும் என்று இது எழுதப்பெற்றிருக்கும் முறையைக் கொண்டு கா. ராஜன் கூறுகிறார்.


மூன்றாவதாகக் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டில் ''கல் பேடு தீயன் அந்தவன் கூடலூர் ஆகோள்'' என்று மூன்று வரியில் எழுத்துப்பொறிப்புகள் இடம்பெறுகின்றன. இக்கல்வெட்டு மிகவும் முக்கியமான கல்வெட்டாகும் . ஆநிரை கவரும் பொழுது இறந்த வீரனுக்காக எடுக்கப்பெற்ற கல் இதுவே. தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகோள் என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் நடந்த தொறுபூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவனுக்கான எடுக்கப்பெற்ற கல் ஆகும்.

சங்ககால தொட்டு இந்த பகுதி கள்ளர்கள் ஆநிரை கவர்தலை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.

ஓடைப்பட்டியில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களுக்கென்று தனி கோவில் கட்டி 1963-ல் தங்களுக்கென்று தனி தனி சாவடி ஒன்று ஏற்படுத்தி அதில் அனைத்து வழக்கங்களை ஏற்படுத்தி அன்று இருந்து இன்று வரை சாதி கட்டுப்பாடு நிலைநாட்டி வருபவர்கள் . தேசிய தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் -க்கும் 1991-ல் சிலை வைத்துள்ளனர்.







14 கும்பு பங்காளிகள் என்னும் நாட்டாக்கள்ளர் ஆகிய அம்பலகார்கள்
(கும்பு என்பது ஒரு பங்காளிகளின் கூட்டத்தை குறிக்கும்)





பிரிட்டீஷ் ஆட்சியில் கள்ளர்களுக்கு வழங்கப்பட்ட, கண்டிஷன் ஜாரி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்ததற்கு, பெரியகுளம் தாலுக்காவில் 800 ஏக்கர், தேனியில் 400 ஏக்கர், ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவைகளில் பெரும்பகுதி வேறு சமுதாயத்தினர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது'' என்கிறார்கள். 

தேனி சின்னமனூர் மூக்கையா தேவர் சிலை



கிளாங்குடி தேவர் தொண்டைமான் 
( ஆண்டிப்பட்டியில் பாண்டியர் கால கல்வெட்டு)


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. 

இச்சிலைகளுக்கு அப்பகுதிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர்கள் எஸ்.ராஜகோபால், ஆர்.பிறையா ஆகியோர் இணைந்து இப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பிராதுக்காரன்பட்டி மற்றும் ரோசனப்பட்டி கிராமங்களுக்கு இடையே 13 ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுப்பிடித்தனர்.



இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 

அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற கல்வெட்டுகள் அதிகளவில் இருக்கறது.

தேனி தொண்டைமான் நாடு என்று குறிப்பிடப்படுகிறது. 



பெரியகுளத்தில் கோவிந்த தொண்டைமான் பெரிய நிலக்கிழார். மிகப் பெரும் செல்வந்தர். ரொக்கப்புலி கோவிந்தன் தொண்டைமான் என்று சொல்வார்கள்.





பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மாளிகை உள்ளது. கோவிந்தன் தொண்டைமான் மகன் G. சந்தானம் தொண்டைமான் அவர்கள் தேமுதிக வின் வேட்பாளராக போட்டியிட்டார்.





பெரியகுளம் அதிமுக 17 வது வார்டு செயலாளர் விஜய் ஆனந்த் தொண்டைமான் இருக்கிறார்.

தேனி தொண்டைமான் - திருமணம் பத்திரிகை



மக்கள் தொகை கணக்கெடுப்பில் அங்கராயர்


அகராதியில்


நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா



இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே பழங்கால கற்சிலைகள் கேட்பாரின்றி கிடக்கிறது. இதில் சில தமிழ் கல்வெட்டுகளும் உள்ளது. 







ஆய்வு: அ. செந்தில் குமார் தேவர் - கூடலூர்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்