திங்கள், 12 மார்ச், 2018

மணப்பாறை கள்ளர் நாடு ( கள்ளர் படைப்பற்று)


மணலால் ஆன பாறைகள் நிறைந்த பகுதி, மணற்பாறை என்பதுதான் காலப்போக்கில் மணப்பாறை என்றாகிவிட்டது. தமிழ் நிலத்தின் மையப் பகுதி மணப்பாறை. சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாக இது இருந்து இருக்கிறது. இப்போதைய அமைப்பின்படியும் அந்தப் பெருமை உண்டு. இது ஒரு பாலை நிலம், வானம் பார்த்த பூமி இது.


மன்னர் இராஜகோபால தொண்டைமான்


நீராதாரம் குறைவு என்பதால், மணப்பாறை மக்களிடம் இருந்து வறுமை அழிக்க முடியாததாக இருந்தது. ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் விஷயங்கள் இருக்கும், அப்படி இந்ந ஊரின் வரலாற்றைப் புரட்டிப்போட்டது தியாகேசர் நூற்பாலை. தொண்டைமான் மன்னர் புதுக்கோட்டையில் நூற்பாலை உருவாக்க ஆசைப்பட்டார், ஆனால், அங்கே ரயில் பாதை அமைந்ததால், அந்த ஆலையை அவருடைய அமைச்சர் கலிஃபுல்லா (1946–1948) மூலம் இங்கே கொண்டுவந்தார். வறுமையில் உழன்றுவந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றியது அந்த ஆலைதான்.

மணப்பாறையின் மிகப் பெரிய அடையாளங்கள் மாடுகளும் முறுக்கும்தான்மாடுகளின் வலுவும் முறுக்குகளின் சுவையும் வேறு எதனோடும் ஒப்பிட முடியாதது. மாடுகளைப் பூட்டிக்கொண்டு பாயும் வில் வண்டியை உலகத்துக்குத் தந்தவர்களும் மணப்பாறை ஊரார்தான். பொன்னணியாறும் மாமுண்டியாறும் ஊரின் நீராதாரங்கள். ஒருவகையான உப்பு ருசி இந்தத் தண்ணீரில் கலந்து இருக்கும்.



மணப்பாறை சுற்றுவட்டாரங்களில் சோழர் கால கலைப் பொருட்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட முற்கால சோழர்களின் கலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


மணப்பாறை மாரியம்மன் தெற்கு கரையிலும், சமயபுரம் மாரியம்மன் காவிரியின் வடகரையிலும் காவலாக அமைந்துள்ளது.

மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடைநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம்




மணப்பாறை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் “உத்தமசோழரின் ஆட்சியின்போது பராந்தகன்ரவியான ராசவிச்சாதிரப் பல்லவராயன், கோயில் அலுவலர் பல்லவராயர் தளிவண்ணக்கயண் பூதிபட்டன் ஆகியோரிடம் 10 கழஞ்சுப்பொன்னளித்து அதன் வழி வரும் வட்டி கொண்டு கோயிலில் விளக்கேற்றுமாறு செய்தனர். அப்பொன் கொண்டு 90 ஆடுகள் பெறப்பட்டன. மணப்பாறை முக்தீசுவரம் கோயில் பாண்டியர் கட்டமைப்புடன் விளங்குகிறது. பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மாறவர்மர் குலசேகரர், சடையவர்மர் சுந்தரபாண்டியர் ஆட்சிக்காலத்தே பொறிக்கப்பட்டுள்ளன.


தொண்டைமான்கள், பல்லவராயர்கள் அம்புநாட்டை ஒன்பது குப்பங்களாக பிரித்தனர். அதில் உள்ளது கறம்பக்குடி குப்பம் (பட்டங்கள் : மறவராயர், தென்னதிராயர், வளங்கொண்டார், நாராங்கியர்) மற்றும் நெய்வேலிக் குப்பம் (பட்டங்கள் : மன்னவேளார், காளிராயர், மதியபிலியார்).

இந்த கறம்பக்குடி, நெய்வேலிக் குப்பம் கள்ளர்களின் குலதெய்வம் மணப்பாறை ஆண்டவர்கோவில் பகுதில் உள்ளது. இவர்கள் மணப்பாறை பகுதில் இருந்தே அங்கே குடியேறியுள்ளனர். மணப்பாறை நல்லண்டவர் திருக்கோவிலில் மம்முட்டி கருப்புசாமி, ஏழு கருப்புசாமி இவர்கள் குலதெய்வமாக உள்ளது.
ஏழு கருப்புசாமி - நல்லாண்டார்கோயில்

சோழ, பாண்டிய படைப்பற்றாக இருந்த இந்த மணப்பாறை பகுதியில் ஒரு தன்னரசு நாடும் அவர்தம் இராணுவப்படைப்பற்றும் இங்கு தான் இருந்த்து.

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. 1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் , யூசுப்கான் (மருதநாயகம்) அனுப்பிவைக்கப்பட்டான் .

மருதநாயகம் தன்னுடைய தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி படை, ஆற்காடு நவாப் படையுடன் தெற்கத்திய பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெறும் முனைப்பில் இரத்தவெறியுடன் புறப்பட்டான்.

அப்படி மருதநாயகம், அவனுடைய படைகளும் தெற்குப்பகுதியில் செல்லும் போது தடையாக இருந்த்து மணப்பாறை கள்ளர் படைப்பற்றே. 1755ல் கான் சாஹிப் முதல் வரலாற்று சாதனையாக ஆய்வாளர்கள் கருதுவது “Storming of the Kallar Barrier அதாவது கிழக்கிந்திய படை மற்றும் நவாப் படையோடு கான் சாஹிப் மணப்பாறையில் உள்ள கப்பம் கட்ட மறுத்த தன்னரசு கள்ளர் நாட்டு படைப்பற்றை வென்றதே கருதப்படுகிறது.
மேலும் அந்த கள்ளர் படைப்பற்று திருச்சி எல்லையில் அரண் போல இருந்ததாகவும் குறிக்கிறார்கள்.

மேலும் அந்த படைப்பற்றின் அழிவை வைத்து மணப்பாறை தன்னரசு கள்ளர்களின் தலைவரை கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியுள்ளான்.

இந்த வெற்றிக்கு பின்னர் மருதநாயகம் மணப்பாறையில் தங்கி வரி பாக்கியை செலுத்துமாறு பாளையக்காரர்களுக்கு செய்தி அனுப்பினான். மணப்பாறை அருகில் இருந்த பாளையக்காரரான லட்சி நாயக்கர் வரி செலுத்த ஒப்புக்கொண்டான். பிறகு தெற்கத்திய பாளையக்காரர்களையும் வெற்றிபெற்றான்.

மேற்கோள் நூல்


Saints, goddesses and Kings

நன்றி : 

உயர்திரு. மணவை முஸ்தபா



ஆய்வு : உயர்திரு. சோழ பாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்