திங்கள், 12 மார்ச், 2018

ஆறூர் வட்டகை கள்ளர் நாடு




சிவகங்கை சீமையின் தலைமை கிராமம் நாலுகோட்டை. இங்கு வசிக்கும் பெருவாரியான மக்கள் கள்ளர்களின் அம்பலம் பட்டம் உடைய கள்ளர்கள். 

சோழர் காலத்தில் ஆறூர் வட்டகை கள்ளர் நாட்டில் உள்ள சோழபுரம் சிறப்பு பெற்று விளங்கிய ஊர்.

பொன்நகர் துறைவனாம் வீரசோழன் என்ற பெயருடைய மன்னவன் நாடுகளை எல்லாம் வெற்றி கொள்ளும் படைத்திறம் படைத்தவன். அவன் ஆனைக்கா என்னும் நகர் சார்ந்து மனம் உவந்து அகிலாண்டநாயகியை வாழ்த்தித் தனது வலிமையை எதிர்க்க வல்லோர் யாரும் இல்லை என்று இருந்தான். மன்னர் பலரையும் வென்று அவர்களுடைய செல்வங்கள் எல்லாவற்றையும் கவர்ந்து, எதிர்த்த மன்னர்களைச் சிறையிலிட்டு அவனி முழுதும் தன்னுடையதாக ஆக்கினான் வீரசோழன்.



வரகுணபாண்டியனையும் வெல்வேன் என்றுகூறி மதுரையைச் சூழ்ந்தான். அங்கிருந்து புறப்பட்டு நால்வகைச் சேனையும் சூழ்ந்திடக் காளிபுரம் என்ற காளையார்கோயிலுக்கு இரண்டு யோசனை தூரத்தில் உள்ள நகரைச் சேர்ந்தான். 

இவ்வாறு சோழன் அங்கு வந்து தங்கிய காரணத்தினால் இந்த நகர்க்கு சோழபுரம் என்ற பெயர் வழங்கிற்று. இங்கு இருந்த மறையவர், பாரதி தீர்த்தத்து மேன்மையையும் சிவலிங்கத்தின் மேன்மையையும் சோழனுக்கு எடுத்துரைத்தனர். அவற்றைக் கேட்ட சோழன், அந்நகரின் புறத்தே உள்ள பாரதி தீர்த்தம் சென்று தீர்த்தமாடி, பூக்கொண்டு சிவலிங்கப் பூசை செய்து அன்பொடு கை தொழுது வணங்கினான்.



நான்கு கோட்டை என்றால் “கோட்டைகள் நான்கு “ என்று பொருள்.
நாலு -- நாலுதல் என்றால் தொங்குதல் என்ற பொருள்.



நாலு கோட்டை என்றால் “தொங்கும் கோட்டை” என்று பொருள். வீரசோழன் படைகளுடன் கோட்டைகட்டித் தங்கி இருந்து சோழபுரத்தில் வழிபாடு செய்துள்ளான் என்பது வரலாற்றுச் செய்தி. எனவே நாலுகோட்டை என்பது சோழனின் படைகள் கோட்டைகட்டித் தங்கியிருந்த ஊராக இருக்கலாம்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரை வென்று பாண்டிய மண்டலம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் வைத்து இருந்த சோழ பாண்டியர், இந்த ஊரை சோழர்களது ஆதிக்கத்தையும், பதுங்கி விட்ட பாண்டியரது வீரத்தையும் நினைவூட்ட நிர்மானித்தனர். இதே பெயரிலான ஊர்கள், கன்னியாகுமரி மாவட்டம், காமராசர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

இந்நாட்டு கள்ளர் தலைவர்களுக்குச் சோழபுறம் சிவன் கோயிலில் பட்டுப்பரிவட்டம் மறியாதைகள் உண்டு.



சிவன் கோவில் கட்டி தேரோட்டம் நடத்திய போது நாலுக்கோட்டை அம்பலக்காரர் அவர்களுக்கும் பட்டு பரிவட்டம் மரியாதை வழங்கபட்டுள்ளது. இது கிராம கும்மி பாடல் குறிப்பிட்டு உள்ளார்கள் 

"நாட்ட ஆண்ட ராஜா வந்தாலும் இழுபடாத தேர் நாலுக்கோட்டை அம்பலார் வந்தா இழுப்படும் தேர்" 

சிவகங்கை சீமையின் மன்னர்களுக்கு பட்டம் கட்டும் சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் அருள் மொழி நாதர் கோவில் ஆறூர் வட்டகை நாட்டின் நாட்டு கோவில். 

வடக்கு வட்டவகை தலைகிராமம் நாலுகோட்டை, தெற்கு வட்டவகை தலைகிராமம் ஒக்கூர்

மேலப்பூங்குடி கண்மாயில் சோழர் காலத்து வீரக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பூங்குடி அருகில் வெள்ளமலையில் சோழர் காலத்து சிதைந்த சிவன்சிலையும் பீடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இப்படி பல ஆதாரங்கள் உள்ளன. சோழர் வழி வந்த கள்ளர்கள் தன்னாட்சி முறையில் நாடுகள் வகுத்து கரை அமைத்து அம்பலம் (அம்பலக்காரர்) தலைமையில் நிர்வகித்து வந்திருக்கிறார்கள்.

ஆறூர் வட்டகை நாடு 22 1/2 கிராம நாட்டு அம்பலகாரர்கள், கிராம அம்பலகாரர்கள் மற்றும் அனைத்து கிராம பெரியோர்கள் ஒன்றுகூடி, நாலுக்கோட்டை நத்தமுடைய ஐய்யனார் கோவிலில் நாட்டுக்கூட்டம் போடுவார்கள்.

கீழப்பூங்குடி




ஆறூர் வட்டகை நாடு 22 1/2கிராமம்

1)நாலுகோட்டை 
2)ஒக்கூர் 
3)இடையமேலூர் 
4)பிரவலூர் 
5)ஈசணூர் 
6)ஒபுதூர் 
7)சாலூர்
8)காஞ்சிரங்கால் 
9)மேலமங்களம் 
10)மேலப்பூங்குடி 
11)கீழப்பூங்குடி 
12)கருங்காப்பட்டி 
13)சிலுவினிப்பட்டி 
14)குளக்கட்டப்பட்டி 15)கூவாணிப்பட்டி 
16)முத்துப்பட்டி 
17)புதுப்பட்டி 
18)வேம்பத்தூர் 
19)பச்சேரி 
20)தச்சம்பத்து 
21)ஆவனியாபுரம் 
22)ஆவாரம்பட்டி
22 1/2) பேரனிப்பட்டி
====================

இதில் வேம்பத்தூர், பச்சேரி, அவனியாபுரம், தச்சம்பத்து, ஆவாரம்பட்டி, ஆறூர் வட்டகை நாட்டின் சார்பாக உருவாக்கிய கிராமம்.

வேம்பத்தூர் பச்சேரி தற்போது மானாமதுரை ஒன்றியம். அவனியாபுரம் அன்று கிராமம் அதற்கு பின் நகராட்சி தற்போது மாநகராட்சி. தச்சம்பத்து, வாடிப்பட்டி ஒன்றியம். ஆவாரம்பட்டி, நிலக்கோட்டை ஒன்றியம். இந்த கிராமங்கள் ஒரு காலத்தில் ஆறூர் வட்டகை நாடு அம்பலக்காரர் தலைமையில் தன்னாட்சி முறை செயல்பட்டுள்ளது.

*ஆறூர் வட்டகை நாட்டு போர்வாளாக திகழ்ந்த நன்னி அம்பலம் வகையறா காவல் தெய்வமாக ஆறூர் வட்டகை நாட்டில்*🙏
நன்னியம்பலம்









ராக்கெட்_தாக்குதல்நடத்திய ஆறூர் வட்டகை_நாட்டார்கள்:

சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுபாண்டியரால் முன்னிறுத்தப்பட்ட தென்னிந்திய புரட்சி என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத இரத்த சரித்திதம், அச்சரித்திரத்தில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு 23 கள்ளர் நாடுகள் ஆதரவு தெரிவித்து 2ஆயுத தொழிற்சாலை கட்டி போரிட்டனர்.

அதில் திருப்பத்தூர் பகுதியின் ஆறூர்வட்டகை நாட்டின் தலைமை அம்பலகாரரான “மாவீரன் நன்னி அம்பலம்” அவர்களின் தலைமையிலான படையானது,  “Operation Sivagangaa”வின் தலைமை அதிகாரியான கர்னல் அக்னியூவின் நேரடி தாக்குதலை எதிர்த்து நின்று களமாடியது.

இதனை வரலாற்று ஆய்வாளர்கள் “War of Okkur” என தனித்த போராக குறிப்பிடுகிறார்கள்.

ஒக்கூர் என்பது ஆறூர் வட்டகை நாட்டின் தலைமை கிராமம் ஆகும். இந்த ஓக்கூரில் கிபி1801 சூலை 26ஆம் தேதி கர்னல் அக்னியூவின் அதி நவீன மற்றும் இன்ஃபேண்டரி படையை எதிர்கொள்ள ராக்கெட் வீசி தாக்குயுள்ளனர்.

3 நாட்கள் நடந்த இந்த தொடர் யுத்தத்தில் “ஆயிரக்கணக்கான நாட்டார்கள் வீழ்த்தப்பட்டு, தலைமை அம்பலகாரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒக்கூரை வீழ்த்திய பின்பே மருதிருவர்களின் தலைமை இராணுவ படைப்பற்றான “சிறுவயல் பற்று” கர்னல் அக்னியூவால் கிபி 1801 சூலை 30 கைப்பற்றப்பட்டது.

ராக்கெட் டெக்னாலஜியை முதன் முதலாக கிபி1755 மே 29ல் “ நத்தம் கணவாய் தாக்குதலில்” மத்தம் மேல் நாட்டு கள்ளர்கள் பயன்படுத்திய குறிப்பிற்கு பின்பு 1801ல் ஆறூர் வட்டகை நாடு பயன்படுத்திய குறிப்புகள் கிடைக்கப்பெற்றதில், தன்னரசு கள்ளர் நாடுகள் இராக்கெட் பயன்பாட்டை பயன்படுத்தியுள்ளது இங்கே உறுதிபடுகிறது.







இன்றும் அந்த அந்த பகுதியில் உள்ள கள்ளர்கள் ஊர் திருவிழா கிராம நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாரம்பிரியம் காப்பாற்றி வருகிறார்கள்
சிவகங்கை சீமை உருவான காலத்தில் ஜமீன்தார் சசிவர்ண உடையார் தேவர் நமது நாட்டைச் சேர்ந்த என்பதற்காக நாலுக்கோட்டை கிராம மக்கள் எல்லா வகையிலும் ஜமீன் தாரருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கி தெப்பகுளம் வெட்டி அரன்மனை அமைத்து சிவன் கோவில் கட்டி முடித்து தேரோட்டம் நடத்திய போது நாலுக்கோட்டை அம்பலக்காரர் அவர்களுக்கு பட்டு பரிவட்டம் மரியாதை தேர்திருவிழாவில் முதல் மரியாதை வெள்ளை வீசுவது எல்லாம் வழங்கி நாலுக்கோட்டை அம்பலக்காரர் அவர்களுக்கு மரியாதைகள் வழங்கியிருக்கிறார்கள்.

நாட்டு மக்களை கொள்ளையடித்து வழி பறிபோன்ற மிகப்பெரிய தொல்லைகளை மக்களுக்கு கொடுத்து கொண்டுயிருந்த வெள்ளமலை கொள்ளையர்களை பற்றி ஜமீன் சசிவர்ண உடையார் தேவர் அவர்களிடம் முறையிட்டார்கள். ஜமீன் சசிவர்ண உடையார் தேவர் அவர்கள் மாவீரர் மேலப்பூங்குடி அம்பலக்காரர் சேர்வை அவர்களிடம் கொள்ளையர்களை அடக்க ஆணையிடுகிறார் சேர்வை அம்பலம் அவர்கள் கள்ளர் படையுடன் சென்று அவர்களை அடக்கி பிடித்து கைது செய்து மன்னரிடம் ஒப்படைத்தார் அதன் பின் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வழிவகுத்த சேர்வை அம்பலம் அவர்களை பாராட்டி மேலப்பூங்குடி உள்ள எத்தனை கண்மாய் இருக்கிறதோ அத்தனை கண்மாய்யிலும் ஒரு கண்மாய்க்கு ஏழு ஏக்கர் வீதம் நிலம் தானம் வழங்கியிருக்கிறார். 

இப்படி மேலப்பூங்குடி கிராமத்திருக்கும் சிவகங்கை சமஸ்தானத்திர்கும் நெறுங்கிய தொடர்புகள் உள்ளது மேலும் மேலப்பூங்குடி கிராமத்தில் இன்று இருக்கும் பெருவாரியான மக்கள் சேர்வை அம்பலம் அவர்களின் வழி தோண்டல் தான் 
சிவகங்கை சீமை மீட்பு போரில் ராணி வேலுநாச்சியார் படைபிரிவுகளை நான்காக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வரை தலைமை தாங்க அறிவித்தார் பெரிய மருது சேர்வை தலைமையில் திருப்புவனம் பகுதி மணலூர் போரிலும், சின்ன மருது சேர்வை தலைமையில் காளையார் கோவில் பகுதி போரிலும், திருப்பத்தூர் பகுதி போரில் நாலுக்கோட்டை கள்ளர் நன்னி அம்பலம் தலைமையிலும் மேலூர் நுழைவு வாயில் போரில் ராணி வேலுநாச்சியார் தலைமையிலும் மேலூர் பகுதி கள்ளர் நாடுகளும், வெள்ளலூர் நாடு அம்பலக்காரர்களும் நாட்டார்களும் வெற்றிக்கு உதவியாக இருந்ததுள்ளார்கள்.

பரங்கியரது பரம எதிரியாக மாறிய சிவகங்கைப் பிரதானிகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை அரச மரபினரான படைமாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத் தேவரை, அறந்தாங்கி காட்டில் தேடிப் பிடித்து அழைத்து வந்தனர். புதுக்கோட்டைத் தொண்டைமான் மன்னரின் தொள்ளாயிரம் வீரர்கள் புடை சூழ சோழபுரத்தில் 3.9.1801-ம் தேதியன்று அவருக்கு சிவகங்கை ஜமீன்தார் என்ற புதிய பட்டத்தைச் சூட்டினர். அப்பொழுது சிவகங்கைச் சீமை மன்னர் சக்கந்தி வேங்கண் பெரிய உடையாத் தேவர் இருந்தார். கும்பெனியாரும் அவரை கி.பி.1790-ல் மன்னராக அங்கீகரித்து இருந்தனர். ஆனால், அவர் மருது சேர்வைக்காரர்களது அணியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

சிவகங்கை அரசர்கள் இங்கு முடி சூட்டிக்கொள்வது வழக்கம்.கௌரி பீடத்தின் மீது அமர்ந்து கௌரி வல்லப மன்னர்களுக்கு முடி சூட்டுவது வழக்கம். அதனால் இதை பட்டத்துக் கோவில் என்பர்.

கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும். அதன் பின்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, அவர் மகன் விஜய ரகுநாத சேதுபதி 1710-ல் 8-ஆவது அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதோடு அவரின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையத்தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவரையும் ஆயிரம் போர்வீரர்களுக்கு தளபதியாக நியமித்ததோடு பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம் ஆகிய கோட்டைகளையும் தொண்டி துறைமுகத்தையும் பாதுகாக்க உத்தரவிட்டார்.

கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும்.

கட்டையத்தேவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, மூன்று பகுதிகளைத்தனக்கும், 2 பகுதிகளை நாலு கோட்டை சசிவர்ணத் தேவருக்கும் பிரித்துக் கொடுத்தான். அதோடு சிவகங்கையைத் தலைநகராக்கி, சசிவர்ணத்தேவருக்கு "ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைத்தேவர்" என்ற பட்டம் கொடுத்து சுயமாக ஆட்சி செய்யும்படி செய்தார். அப்போது பிறந்ததுதான் சிவகங்கைச் சீமை. இவருடைய மகன்தான் முத்துவடுநாத தேவர் என்ற பெயரில் இரண்டாவது ராஜாவாக முடிசூட்டி 1750 முதல் 1772 வரை அரசாண்டார். இவரது மனைவிதான் ராணி வேலு நாச்சியார். 

ஆறூர் வட்டகை நாடு தளபதி நன்னி அம்பலம், இவரது வீரத்தை வெள்ளைய கவனர் அக்கினி யூவால் டைரி குறிப்பிட்டு உள்ளார்.

1772 -ல் ஆங்கிலேய இஸ்லாமிய நவாப் கூட்டு படை இராமநாதபுரம், சிவகங்கை போரை முடித்து விட்டு மேலநாடு உள்ளிட்ட தன்னரசு கள்ளர்நாடுகளின் பகுதிக்கு வந்தது வரி கொடுக்க மறுத்த கள்ளர்கள் 2 மாதம் இந்த மாபெரும் கூட்டு அன்னிய படைகளை எதிர்த்து வீரபோர் நிகழ்த்தினர் இதில் குறைந்தது 2000 கள்ளர்கள் வீரமரணம் அடைந்ததாக "கர்நாடக ராசாக்கள் சரித்திரம்" எனும் ஓலைசுவடி தொகுப்பின் மூலம் தெரியவருகிறது, இப்போரில் தீரத்துடன் போரிட்ட மாவீரர் சோலையப்பன் அம்பலம் அவர்களுக்கு அவரது வழி வந்த ஆருர்வட்டகை நாட்டு கள்ளர்கள் கோயில் எழுப்பி அதில் அவர் பயன்படுத்திய வளரி,ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாத்தும், திருவுருவ சிலை எழுப்பி வழிபட்டும் வருகிறார்கள்.







ஆறூர் வட்டகை நாடு 22 1/2 கிராமம் ஸ்ரீ அருள்மொழிநாதர் சமேதம் ஸ்ரீ அறம்வழர்த்த நாயகி அம்மன் திருக்கோவில் ஐந்தாம் நாள் நாட்டார்கள் மண்டகப்படி.









ஆறூர் வட்டகை நாடு கீழப்பூங்குடி-மேலப்பூங்குடி காவல் தெய்வம் ஶ்ரீ ஆதினமிளகி அய்யனார் கோவில்



ஆறூர் வட்டகை நாடு நாட்டார் கூட்டம்


ஆறூர் வட்டகை நாடு கீழப்பூங்குடி முளப்பாரி திருவிழா.




ஆறூர் வட்டகை நாடு மேலப்பூங்குடி கிராமத்தில் ஶ்ரீஏழைக்காத்த அம்மன் முளைப்பாரி திருவிழா .






ஆறூர் வட்டகை நாடு காஞ்சிரங்கால்
புரவி எடுப்பு







ஆறூர் வட்டகை நாடு மேலப்பூங்குடி கிராமத்தில் ஶ்ரீஏழைக்காத்த அம்மன் முளைப்பாரி திருவிழா

ஆறூர் வட்டகை நாடு தலை கிராமம் நாலுகோட்டை கோவில் காளை



ஆறூர் வட்டகை நாடு இடையமேலூ் கிராமம் ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் புரவிஎடுப்பு திருவிழா








ஆறூர் வட்டகை நாடு கீழப்பூங்குடி வட மஞ்சுவிரட்டு





ஆறூர் வட்டகை நாடு காஞ்சிரங்கால் முலக்கரை தர்ம முனியாண்டி கோவில் கும்பாபிஷேகம்








ஆறூர் வட்டகை கள்ளர் நாடு மேலப்பூங்குடி ஆதிரமிளகி அய்யனார் கோவில்





ஆறூர் வட்டகை நாடு மேலமங்களம் கபடி போட்டி





















நன்றி : அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு




வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்