ஜல்லிகட்டின் பாதுகாவலர் ஜல்லிகட்டு பேரவை தலைவர் ஐயா டாக்டர் சக்குடி பி. ராஐசேகர் அம்பலம்( PR)
தமிழகத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக 10 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தனது சொந்த செலவில் நடத்தி வருகிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் அம்பலம்.
மதுரை மாவட்டம், கருப் புக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ராஜசேகர் அம்பலம்(60). கிரானைட் அதிபர். இவர் கள்ளர் குடியில் பிறந்தவர். இவரது குடும்பம் பரம்பரை, பரம்பரையாக ஜல்லிக் கட்டில் பெரும் ஈடுபாடு கொண்டது. இன்றைக்கும் வீட்டில் 10 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், விழாவில் பங்கேற்போருக்கும் காப்பீடு உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்தவர். இவர், 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு களத்தில் எந்த வீரராலும் அடக்க முடியாத ‘சத்ரியன், ஆட்ட நாயகன்’ என்ற அடைமொழியைப் பெற்ற அப்பு காளைக்கு சொந்தக்காரர். அந்தக் காளை 2014-ம் ஆண்டு மரணமடைந்தது.
2006-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பெரும் சட்டப் போராட்டத்துக்கு இடையேதான் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. சவால்களை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்தியதில் அரசுக்கு அடுத்தபடியாக பெரும் பங்கு ராஜசேகர் அம்பலத்திற்க்கு உண்டு.
ஜல்லிக்கட்டுக்கான தனது பணிகள் குறித்து ராஜசேகர் அம்பலம் கூறியதாவது: கடந்த 2006-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜல்லிக்கட்டுக்கு முதல்முறையாக தடை விதித் தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே உத்தரவை பெற்று கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தினோம். இதற்கு 2007-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கை எதிர்கொள்ள மதுரையில் முதல்முறையாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு என்னையே தலைவராக நியமித்தனர். இந்த அமைப்பு சார்பிலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டோம். விலங்குகள் நல வாரியத்துக்கும், எங்களுக்கும் நீதிமன்றத்தில் தடை வாங்குவது, அதை நீக்குவதுமாக தொடர் சட்டப் போராட்டம் நடந்தது.
2009-ல் பெரும் சிக்கல் ஏற்பட்டதால், தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் இயற்றுவதே தீர்வு என முடிவானது. இதை வலியுறுத்த மதுரையில் 50 ஆயிரம் பேர் திரண்டு பேரணி நடத்தினோம். அப்போதைய முதல்வர் கருணாநிதி, எங்களின் கோரிக்கையை ஏற்று அவசர சட்டம் பிறப்பித்தார். இதன் அடிப் படையில் தடைகளை உடைத்து ஜல்லிக்கட்டு நடத்தினோம். இதில் கோபமடைந்த விலங்குகள் நலவாரியம் 2011-ல் காட்சிப் படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்து சட்டம் இயற்ற ஏற்பாடு செய்தது.
இதை எதிர்த்து வெற்றிகொள்ள தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி மதுரையில் பெரிய பேரணியை 2011-ல் நடத்தினோம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒத்துழைப்பால் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய சட்டத்தையும் மீறி தொடர்ந்து 3 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தினோம். ஆனாலும், தவறான தகவல்களைக் கூறி விலங்குகள் நலவாரியம் மீண்டும் தடை வாங்கியது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத வேதனையில் இருந்தோம். எனினும் எங்களின் தொடர் முயற்சியால், பாரம்பரிய, கலாச்சார விழாக்களின்போது காளைகளை காட்சிப்படுத் தும் வகையில் விதிவிலக்கு அளிக்கலாம் என மத்திய அரசு 2016-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கும் விலங்குகள் நலவாரியம் தடை வாங்கியது. இதை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த வழக்கில்தான் தீர்ப்புக்காக தற்போது காத்திருக்கிறோம்.
இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்களின் பெரும் எழுச்சி போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் எற்பட்டது. இதற்காக முதல்வருக்கு சட்ட ஆலோசனை வழங்கவும், 4 துறை அமைச்சர்களை சந்திக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ளேன்.
நமது பாரம்பரியத்தை காக்க 10 ஆண்டுகளாக எனது சொந்த செலவிலேயே சட்டப்போராட்டங் களை மேற்கொண்டு வருகிறேன். மாணவர்கள் போராட்டத்தால் நிரந்தரமாக சட்ட சிக்கலின்றி ஜல்லிக்கட்டு நடந்தால் மகிழ்ச்சி. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி ராஜசேகர் அவர்கள்
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த காவலன்
காளைகளின் காதலன் தமிழ்நாட்டில் தலைசிறந்த காளைகளின் உரிமையாளர்கள் இவர் சாதனையாளர் அல்ல சரித்திரநாயகன் ஐயா ராஜசேகரன் அம்பலம்.