தஞ்சை கள்ளர்களின் பூர்வீக பகுதியாய் கருதப்படும் 18 பட்டி கிராமங்களும், மூன்று நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன இவையாவும் செம்மண் கொண்ட மேட்டுநிலப்பகுதியாய் மற்றும் காடுகள் அடர்ந்த வறண்ட பகுதியாய் இன்றளவும் உள்ளவை. கொற்கை நாடு, கீழத்துவாக்குடி நாடு, வீரமநரசிங்கம்பேட்டை நாடு
கீழத்துவாக்குடிநாடு :
முத்துவீரகண்டியன்பட்டி, ஆவாரம்பட்டி, நந்தவனம்பட்டி, சடையம்பட்டி, புங்கனூர், வேலுப்பட்டி, மனையேரிப்பட்டி என்ற 7 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
தலைமை கிராமம்: முத்துவீரகண்டியன்பட்டி
பொதுகோவில் : ஆவாரம்பட்டியிலுள்ள பிடாரியம்மன்.
தலைமை வம்சாவளி : கண்டியர் பட்டம் தரித்தோர் நாட்டின் அம்பலங்களாக உள்ளனர்