கண்டரமாணிக்கம் வரலாறு
கண்டரமாணிக்கம் நாடு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ளது. கண்டரமாணிக்கம் கள்ளர் நாட்டின் மேற்கே பட்டமங்கல கள்ளர் நாட்டையும், கிழக்கே பாளைய கள்ளர் நாட்டையும், வடக்கே ஏழுர்பத்து கள்ளர் நாடு, தெற்கே பாகனேரி கள்ளர் நாடும் உள்ளன.
கண்டுகொண்ட மாணிக்க நாடு என்று நாட்டார் வழக்கியலில் அறியப்படுகிறது.
ஊர் நடுவில் மாணிக்க நாச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது.
13 1/2 கிராமங்களை உள்ளடக்கியது.
1) கண்டர் மாணிக்கம்
2) வெளியாத்தூர்
3) நடுவிக்கோட்டை மேலையூர்
4) நடுவிக்கோட்டை கீழையூர்
5) கூத்தங்குடி
6) மேல்குடி
7) பொன்னங்குடி
8) கொங்கரேத்தி
9) தெற்க்குப்பட்டு
10) கள்ளிப்பட்டு
11) பெரிச்சிக்கோயில்
12) செம்பனூர்
13) கருஞ்சி புதுப்பட்டி 1/2 கிராமம்
குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிற முருகன் கோயிலில் கள்ளர் அம்பலகாரர்களுக்கு பட்டு பரிவட்ட மரியாதையுடன் தேர் வெள்ளை வீசி வடம் இழுப்பது பராம்பரியமானது.
குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயில் பங்குனித்திருவிழாவில் கண்டரமாணிக்கம் நாட்டார்களின் 7 ஆம் நாள் மண்டகப்படி.
குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயில் பங்குனித்திருவிழாவில் கண்டரமாணிக்கம் நாட்டார்களின் 7 ஆம் நாள் மண்டகப்படி.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல லட்சங்களை செலவழித்து ஜல்லிக்கட்டிற்காக போராடி வருபவர் சக்குடி திரு . பி இராஜசேகரன் அம்பலம் அவர்கள், அதே போல் மஞ்சுவிரட்டு நடத்த பல ஆண்டுகளாக போராடி வருபவர் கண்டர்மாணிக்கம் நாட்டின் அம்பலகாரர், திராவிட இயக்க வரலாற்றை உருவாக்குவதற்கு பாடுபட்டவரும், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் பேராசிரியராகவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திரு.கரு. அம்பலத்தரசு.
கண்டரமாணிக்கம் அம்பலகாரர்
ஐயா. கரு. அம்பலத்தரசு
ஐயா. கரு. அம்பலத்தரசு
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாட்டில் வாழும் கள்ளர்கள் கண்டர்மாணிக்கநாட்டிலிருந்து வந்தோர்.
இங்கு இவர்கள் 32 கிராமங்களாக பரவி வாழ்கின்றனர் இது பழுவஞ்சி பெருமாநாடு என அழைக்கப்படுகிறது.
தந்தைவழியில் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
சோழ வகை,
சங்கட்டான் வகை,
ஆண்டிவகை,
நாட்டரசன் வகை,
வழங்கினான் வகை
எனப்பல வகைகள் பிரிவுகளாக உள்ளனர்.
ஒரே வகையைச் சார்ந்தவர்கள் பங்காளிகளாக கருதப்படுகின்றனர்.
தாய்வழிச்சமூகமாக இருந்த இவர்கள் மிகச்சமீபத்தில் கிளைகள் மறைந்து தந்தை வழிச் சமூகமாக மாறியுள்ளனர்.
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு
கண்டரமாணிக்கம் கொங்கரத்தி ஸ்ரீ வன்புகழ் நாராயணன்
கண்டரமணிக்கம் சந்தை
கண்டரமாணிக்கம் அம்பலகாரர் ஐயா. கரு. அம்பலத்தரசு
தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டாக போற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2007-ம் ஆண்டில் முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்பட்டோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதையும் மீறி வெளிப்படையாக, ஆதரவாக பேசியவர்களை ‘காட்டுப்பயலுக..', 'மாடு மேய்க்கிறவய்ங்க..' என்றெல்லாம் ஒரு கூட்டம் விமர்சித்தது. பதவியில் இருந்தவர்களும், படித்தவர்களும்கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேச தயங்கினர்.
அப்போதுதான் தெய்வம்போல வந்தார் அய்யா முனைவர் அம்பலத்தரசு. அதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டம் நடத்தி போராடிக் கொண்டிருந்தவர்களை ஒன்றுபடுத்தினார்.
ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும், கிராம மக்களையும் சந்தித்து ஜல்லிக்கட்டை மீட்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசுப் பதவியில் உள்ளவர்களைச் சந்தித்தும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அழுத்தம் கொடுக்க வழி வகுத்தார்.
சட்ட வல்லுநர் என்பதால் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வேண்டும், அரசிதழில் விடுபட்ட கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என கிராமத்துக்கு தகுந்தாற்போல டெபாசிட் கட்டுவதற்கு பதிலாக இன்சூரன்ஸ் செய்ய அனுமதிக்க வேண்டும், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 4 வழக்குகளும் தொடர்ந்து போராடினார்.
இதற்கெல்லாம் ஆரம்ப காலத்திலிருந்து முக்கிய காரணமாய், தொடக்கப் புள்ளியாய் இருந்த அய்யா அம்பலத்தரசு, 84 வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில்கூட, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு காளைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியவர். தனது 84 ம் வயதில் இம் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்.
கண்டரமாணிக்கம் அருள்மிகு மாணிக்க நாச்சியம்மன் திருவிழா
கண்டரமாணிக்க நாட்டின் வியாபாரிகள் தங்களது சொந்தச்செலவில் சித்திரை மாதம் முதல் தேதி இரவில் கூத்து நடத்தி அருள்மிகு மாணிக்க நாச்சியம்பாளை குதிரை வாகனத்தில் எழுத்தருளச் செய்து கோவிலிருந்து மகர்நோன்பு பொட்டல் வரை சென்று திரும்பி வரச்செய்வார்கள்.
அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு லிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் லிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, "சுகந்தவனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்.
இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது
முதலாம் நாள் சித்திரைத் திருவிழா அருள்மிகு மாணிக்க நாச்சி அம்மன் காப்பு கட்டு நிகழ்ச்சி
முதலாம் நாள் திருவிழா விநாயகரும் , பூதகி வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
2 ஆம் நாள் திருவிழா கள்ளர் நாட்டார் மண்டகப்படி. விநாயகரும் , சிம்ம வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
3 ஆம் நாள் திருவிழா இலுப்பக்குடி கோவில் நகரத்தார் மண்டகப்படி , விநாயகரும் , அன்ன வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
4 ஆம் நாள் திருவிழா காமதேனு வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்
5 ஆம் நாள் திருவிழா யானை வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
6 ஆம் நாள் திருவிழா ரிஷபம் வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
7 ஆம் நாள் திருவிழா குதிரை வாகனத்தில் மாணிக்க நாச்சியம்மன்.
8 ஆம் நாள் திருவிழா, தேரில் விநாயகரும் , மாணிக்க நாச்சியம்மன்.
9 ஆம் நாள் பால்குடம் திருவிழா
திருவிளக்குப் பூஜை
10 ஆம் நாள் பூபல்லாக்கில் பவனி
மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது.
அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு லிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் லிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, "சுகந்தவனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்.
இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது
சேதுபாஸ்கரா கல்வி நிறுவனங்கள்
கண்டரமாணிக்கம் சேது அம்பலம் அவரின் நினைவாக கண்டரமாணிக்கம் சேதுஐராணி மேல்நிலை பள்ளி, சேதுபாஸ்கரா ஐடிஐ , சேதுபாஸ்கரா வேளாண் சேவைமையம் மற்றும் இயற்கை உணவகம், சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி உள்ளது. நிறுவனர்கள் முனைவர் சேது குமணன் அம்பலம், திரு. விவேக் அம்பலம்