புதன், 31 டிசம்பர், 2025

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste



ஆங்கிலேயர்கள், கள்ளர்களை சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தில் மற்ற பகுதி கள்ளர்களுக்கு விலக்கு அளித்து, அதில் பிறமலை கள்ளர், தஞ்சை பகுதியில் உள்ள ஈசநாட்டு கள்ளர்களில் சூரியூர் மற்றும கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்களை மட்டும் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். 

ஆங்கிலேயருக்கு பெரும் தலைவலியாகவும், தொல்லையாகவும் இருந்தவர்கள் கள்ளர்கள், அதுபோல் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் இருந்தவர்கள் கள்ளர்கள். 

கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் கள்ளர் மரபினர் சிற்றரசர்களாகவும், பெரும் நில உடைமையாளர்களாகவும் இருந்தனர். (சிற்றரசர்களாக இருந்த தமிழ் குடிகள்,  தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் விஜயநகர ஆட்சியில் பாளையகர்களாக ஒடுக்கப்பட்டனர், மேலும் ஆங்கிலேய ஆட்சியில் அதிகாரம் மற்றும் படைபலம் அற்ற ஜமீன்களாக ஒடுக்கப்பட்டனர்)

சோழமண்டலத்தில் பதிமூன்று சிற்றரசர்களில் 

பாப்பா நாடு அரையர் - விஜயதேவர்பட்டம் தாங்கியவர்கள் இவர்கள் கீழ் 36 கிராமங்கள் 23412 ஏக்கர் பரப்பளவோடு இருந்தது


கந்தர்வகோட்டை அரையர்  அச்சுதப்பண்டாரத்தார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 106 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 

கல்லாகோட்டை அரையர்  சிங்கப்புலியார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 106 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 

பாளையவனம் அரையர்  வணங்கமுடிப் பண்டாரத்தார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 52 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 

சிங்கவனம் அரையர்  மெய்க்கன் கோபாலர்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 26 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 

 

புனல்வாசல் அரையர்  மழவராய பண்டாரத்தார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 1 கிராமம் சொந்தமாக இருந்தன.  

நெடுவாசல் அரையர்  பன்றிகொண்டார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 15 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 


 

பாதரங்கோட்டை அரையர்  சிங்கப்புலியார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 7 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 

சில்லத்தூர் அரையர்  பணிபூண்டார்பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 10 கிராமங்கள் சொந்தமாக இருந்தன. 


மதுக்கூர் அரையர் கோபாலர், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 12 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.  



சேந்தங்குடி அரையர் வணங்காமுடி வகுவடையாரும் பட்டம்்தாங்கியவர்கள்இவர்கள் கீழ் 9 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.   




இவர்கள் அனைவரும் கள்ளர் மரபினரே, மேலும்  


தஞ்சாவூர் கள்ளர்கள் 

 தஞ்சாவூர் பூண்டி - வாண்டையார் பட்டம் தாங்கியவர்கள் 

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை முன் உள்ள கல்வெட்டில் 

 Founder:-K.வீரைய்யா வாண்டையார் (1879 வருடம்)

தமிழ் சங்கத்திற்கு உதவி 1910 ஆம்


தஞ்சாவூர் உக்கடை - தேவர், பட்டம் தாங்கியவர்கள்
 
தஞ்சையில் உள்ள இராஜா மிராசுதார் மருத்துவமனையில் கிபி1893ல் புறநோயாளிக்களுக்காக மருந்தகத்தை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தஞ்சை இராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கு எண்ணற்ற கொடைகளை அளித்ததால் இராணி எலிசபெத் கையால் certificate of merit வாங்கியுள்ளார் 


தஞ்சாவூர் சீராளூர் - நாட்டாழ்வார்,  பட்டம் தாங்கியவர்கள்

தஞ்சை, சீராளூர் (பெரம்புநாடு) அம்பலகாரர் ஶ்ரீமான், வள்ளல் ரா.இராமலிங்கசுவாமி நாட.டாழ்வார் (ICS) ( London Bar in Law ). ஏழை, எளியோருக்காக இயங்கும் செங்கிப்பட்டி (TB சானிடோரியத்திற்கு) 60 ஏக்கர் நிலத்தினை அளித்த கொடை வள்ளல் இன்றும் இவர் புகைப்படம் உள்ளது.


தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை - மண்ணையார்பட்டம் தாங்கியவர்கள்.

பள்ளிவாசல் நில தானம் ( கிபி 1550), திருப்பதியில் இருக்கும் நைனார் என்பவருக்கு வழங்கிய நிலம் ( கி.பி .1741), ஸ்ரீரங்க கோவில் தானம்  (கி.பி.1741)



தஞ்சாவூர் அரித்துவாரமங்கலம் - ராஜாளியார்பட்டம் தாங்கியவர்கள்

அரித்துவாரமங்கலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழைகளின் கல்வி கண்ணை திறந்தார். ஶ்ரீமான் ராசாளியாரால் (7.6.1909) அன்று  அரித்துவாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உருவாக்கப்பட்ட கோபுரம் அவருடைய பெயரையே இன்றும் சுமந்து நிற்கிறது. மறைமலையடிகளைத்‌ தம்மூருக்குப்‌ பேரன்புடன்‌ 18-1- 1912-ல்‌ வரவேற்றுப்‌ பெருங்களிகூர்ந்தார்‌.

தஞ்சாவூர் புத்தூர் - பாண்டியர், பட்டம் தாங்கியவர்கள்.

சோழவளநாட்டில் தஞ்சை பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை அருகில் உள்ள இராசேந்திர சோழர் காலத்தில் மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர் புத்தூர். அருள்மிகு சவுந்தரநாயகி அம்பாள் சமேத புற்றிடங் கொண்டீஸ்வரர் கோயில் திருப்பணிகள் செய்பவர்கள் பாண்டியகள் . தஞ்சாவூர் ராணி பாரடைஸ் திரையரங்கு உரிமையாளர் திரு. நந்தகுமார் பாண்டியர் ஆவார்.

தஞ்சாவூர் காங்கேயம்பட்டி - காங்கேயர் பட்டம் தாங்கியவர்கள்.

காங்கேய அம்பலகாரர்... காங்கேயம்பட்டியின் முதன்மை காங்கேயர் என்றும் நாளத்தொண்டு காங்கேயர் என்றும் அழைப்பர். காங்கேயன்பட்டி சமஸ்தான வித்வான் அப்பாவுபிள்ளை ஆவார். 

தஞ்சாவூர் சாவடி - நாயக்கர்பட்டம்தாங்கியவர்கள்

ராமசந்திரபுரம், ராமசொயிரபுரம், மனோஜியப்பா சாவடி, ஐயம்பேட்டை என்று பெயர் மாற்றம் பெற்ற  400 ஆண்டுகள் வரலாற்று பின்னணியில் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்கள் ஆயிரம் வேலி நிலம் உடையவர்கள்.

சாவடி நாயக்கர்களின் தற்போதைய வாரிசுதாரர் ஸ்ரீ கோதண்டராமர் ஆலய அறங்காவலர் 

கிருஷ்ணமூர்த்தி நாயக்கர்



தஞ்சாவூர் செங்கிப்பட்டி -கூனம்பட்டி அரையர் மேற்க்கொண்டார்பட்டம் தாங்கியவர்கள்.

ஆயிரம் வேலி நிலம் உடையவர்கள்.


 கள்ளர் மரபை சேர்ந்த பெரும் ஆயிரம் வேலிக்கு மேல் உள்ள நில உடைமையாளர்கள் பல நூறு பேர் இருந்தனர்.  


A .R . மாரியப்பர் மல்லிக்கொண்டார். 

ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது மனைவியின் பெயரில் 1927 ஆம் ஆண்டு சோழபாண்டி மீனாட்சி மாரியப்பர் மல்லிக்கொண்டார் தொடக்க பள்ளி ஒன்றை ஆரம்பித்தார்.


பட்டுக்கோட்டை சீனிவாச முடிபூண்டார் 
அவர்களால் 1943-ல் பட்டுக்கோட்டையில் அப்போதே நீச்சல்குளம் (Swimming pool), பூங்காக்களுடன்(park), கட்டப்பட்ட பிரம்மாண்ட பங்களா.

சீனிவாச முடிபூண்டார்


புதுக்கோட்டை கள்ளர்கள் 

தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர் ஆட்சியும், 


பெருங்களூர், போரம், வழுத்தூர் பல்லவராயர்கள்

பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது • இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)


புதுக்கோட்டை பெருங்களூர் பெருங்கொண்டார் வீடு - 1838 

இலங்கையில் 1800 களில் காணிகளை வாங்கிய இராமசாமி பெருங்கொண்டார் இலங்கை ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை நகரில் கதிர்வேலாயுத சுவாமி கோயிலை 1905 ம் ஆண்டளவில் கட்டி முடித்துள்ளார்.

காடுவெட்டியார், 

கூழியார், 

கடாரதலைவர், 

காடவராயர் 

தஞ்சாவூர் மாவட்டம் : -  1948 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நெல் உதவி செய்தவர்களில் கள்ளர் மரபை சேர்ந்த காடவராயர்கள்

P. தியாகராச காடவராயர், A. சந்திரகாசக் காடவராயர் ,A. ஏசைவராசுக் காடவராயர்



போன்ற கள்ளர் மரபை சேர்ந்த பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.  

தொண்டைமான், காடவராயன், பல்லவராயன், காடுவெட்டி ஆகிய பட்டங்கள் கள்ளர்களால் மட்டுமே இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது (Colas Vol.2. Prof.Sastri).



சிவகங்கை கள்ளர்கள்

சிவகங்கை பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த பட்டமங்கல தொண்டைமான்களும், அம்பலக்காரர்களும் பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.  

சிவகங்கை  மாவட்டம்,மூனாப்புதூர் ஊரில் உள்ள  இலங்கை  அமைச்சருமான திரு. சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் இல்லமான வயி. கரு.மாளிகை. பட்டமங்கல தொண்டைமான் மரபினரில் உதித்தவரே திரு.சௌமியமூர்த்தி தொண்டைமான்


பெரும் வள்ளல் பாகனேரி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் அவர்கள் இல்லம்.



முத்தூற்கூற்றத்து கப்பலூர் உடையான் கருமாணிக்க தொண்டையர் கோன் வழி வந்த  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கப்பலூர் நாட்டில் அம்பலக்காரர் கரு. இராமசாமி அம்பலம் என்ற நிலக்கிழாரின் மகனான கரிய மாணிக்கம் அம்பலம், இவரது மகன் கரு. ரா. இராமசாமி அம்பலம்.


முல்லைப்பெரியாறு அணைக்காக பென்னிகுக் அவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் 3 லட்சரூபாய் நிதிவசூலித்து கொடுத்து சிவகங்கை, மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தியவர் 
மாமனிதர் ராவ்பகதூர் வை.பு.வையாபுரி அம்பலம்.


மதுரை கள்ளர்கள் 

மதுரை பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த அம்பலக்காரர்களும், உசிலம்பட்டி தேவர்களும் பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.  ஆனால் உசிலம்பட்டி தேவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மதுரை காவல் உரிமையில் பல மோதல்கள் தொடர்ந்தன. அங்கிலேயர்களுக்கு உப்பு வணிகத்தில் தொல்லையாக இருந்த உப்பு குறவர்கள், காவல் பணியில் தொல்லையாக இருந்த பிறமலை கள்ளர்கள் மேல் குற்றப் பரம்பரைச் சட்டத்தினை கொண்டுவந்தனர்.

பிறமலை கள்ளர்கள் காவல் உரிமை 16 ஆம் நூற்றாண்டில்  திருமலை நாயகக்கர் காலத்திலேயே செப்புப்பட்டயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். அணை கட்டப் பெரும் பங்களிப்பு செய்த இவர்தான் அதன் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்களையும் திரட்டி அனுப்பினார். அவரே, கூடல் அழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார். பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் பென்னிகுவிக் உடன் பேயத்தேவர் இருப்பது போன்ற படம் உள்ளது. பொதுப் பணித்துறை ஆவணத்திலும் பேயத்தேவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 


கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்

1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கு வழங்கப்பட்டது.கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார்.


1) கள்ளர்கள் வாழும் பகுதிகள் 


குளித்தலை (குறைவாக), 

திருச்சிராப்பள்ளி (சராசரியாக)

திருவெறும்பூர் (அதிகமாக) 

லால்குடி (அதிகமாக) 

முசிறி (சராசரியாக)

மணப்பாறை (குறைவாக) 

ஸ்ரீரங்கம் (குறைவாக) 

மண்ணச்சநல்லூர் (குறைவாக) 

தஞ்சாவூர் (அதிகமாக) 

திருவையாறு (அதிகமாக) 

ஒரத்தநாடு (அதிகமாக) 

பட்டுக்கோட்டை  (சராசரியாக)

பேராவூரணி  (குறைவாக) 

கும்பகோணம்  (குறைவாக) 

பாபநாசம்   (குறைவாக) 

மன்னார்குடி (அதிகமாக) 

திருவாரூர்  (சராசரியாக)

நன்னிலம்  (குறைவாக) 

புதுக்கோட்டை (அதிகமாக) 

கந்தர்வக்கோட்டை  (அதிகமாக) 

விராலிமலை (அதிகமாக) 

திருமயம் (அதிகமாக) 

ஆலங்குடி  (சராசரியாக)

அறந்தாங்கி (சராசரியாக)

சிவகங்கை (அதிகமாக) 

காரைக்குடி  (சராசரியாக)

திருப்பத்தூர்  (குறைவாக) 

மானாமதுரை (குறைவாக) 

மேலூர் (அதிகமாக) 

உசிலம்பட்டி(அதிகமாக) 

மதுரை  (சராசரியாக) 

சோழவந்தான்  (சராசரியாக)

திருப்பரங்குன்றம்  (சராசரியாக) 

திருமங்கலம்   (சராசரியாக)

கம்பம் உசிலம்பட்டி(அதிகமாக) 

ஆண்டிபட்டி  (சராசரியாக)

பெரியகுளம்  (சராசரியாக)

போடிநாயக்கனூர்  (சராசரியாக)

திருச்செந்தூர்  (குறைவாக) 

ஸ்ரீவைகுண்டம்  (குறைவாக) 

திண்டுக்கல்  (சராசரியாக)

பழனி (குறைவாக) 

ஆத்தூர் (குறைவாக) 



கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்